பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாஜகவிற்கும் மோடிக்கும் முட்டு கொடுப்பவனை

உலகின் மோசமான பொருளாதார நெருக்கடி நாடுகளில் இந்தியா உட்பட 15 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன‌ இந்தியா, அர்ஜென்டினா, வெனிசுலா என பட்டியல் நீள்கின்றது பெரும் கடனை இந்தியா வாங்காவிட்டால் அது திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் உலக செய்திகள் சொல்கின்றன‌ டாலருக்கு நிகரான மதிப்பு கழுத்துவரை வந்தாயிற்று, இந்திய பொருளாதார மதிப்புபடி 75 ரூபாயினை தாண்டினால் மகா அபாயம் பெரும் அளவிலான கடனை இந்தியா வாங்கி ஆகவேண்டும், ஆனால் வாங்கிவிட்டால் அதற்கான வட்டி முதல் பல விஷயங்கள் வருங்காலத்தில் பாதிப்பினை […]

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் மறைக்கபட்டனர்

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் பல அரசியல் காரணங்களுக்காக மறைக்கபட்டனர் அல்லது மறக்கபட்டனர், வெகு சிலருக்கு சூரியன் வெளிச்சத்தில் விண்மீன்கள் தெரியாது என்பது போல விதி இருந்தது, ஆலமரத்தின் அடியில் புற்கள் முளைக்கமுடியாது என்பது போல அவர்கள் வாழ்வு இருந்தது அவர்களின் உயர்ந்த குணமும், நேர்மையும் வெளிதெரியவில்லை, இவ்வளவிற்கும் பல நல்ல விஷயங்களை நாட்டுக்கு செய்தவர்கள் அவர்கள், அவர்களில் ஒருவர்தான் பெரோஸ் காந்தே அல்லது பெரோஸ் காந்தி இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் […]

ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன்

ஊரே கலவரம் ஏற்படும் என அச்சப்படும் அசாதாரண நிலையில் ஒரு பழைய தாதா தன் கத்தியினை தீட்டிகொண்டும், கடப்பாரையினை சரிபார்த்துகொண்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி மிக பதற்றத்தில் இருக்கின்றது மேற்குலகம் , காரணம் மிஸ்டர் புட்டீன் ஆம், டிரம்ப் ஊரெல்லாம் வம்பிழுக்க , சீனாவுடன் தொடர்ந்து மோத, ஈரான் இன்னும் வலிந்து நிற்க‌ எங்கு எது எப்பொழுது நடக்குமோ என்ற பதற்றத்தில் உலகம் இருக்கும்பொழுது ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன் அது சாதாரண பயிற்சி […]

முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன்

தந்தையின் மறைவுக்கு பின் அவர் செய்த விவசாயத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் சுத்தமான நஷ்ட தொழில், கருப்பு பணத்தை வெள்ளையாக கூட ஆக்கமுடியாத தொழில் அது. கருப்பு பணம் இருந்தால் அதை புதைக்க அருமையான தொழில் விவசாயம் ஆனால் முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன் என்ற பழமொழி மனதை உறுத்துவதால் அதை விட முடியவில்லை விவசாயத்தில் இன்றைய ஒரே ஆறுதல் இலவச மின்சாரம், நிச்சயம் கலைஞரின் சாதனை அது, ஆறுதலும் அது ஆனால் அந்த இலவச மின்சாரம் டாஸ்மாக் வருமானத்தில் […]

தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல

பெட்ரோல் விலை உயர்வு அமித்ஷாவே அலறும் அளவு சென்றாயிற்று, அவரே களத்தில் குதித்து பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க வந்துவிட்டார் தமிழிசையோ இதுதான் எங்களால் முடிந்த அதிகபட்சம் என சொல்லிகொண்டிருக்கின்றார் இப்பொழுது ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழிசை அக்காவிற்கு பெட்ரோலிய துறையில் கவுரவ பதவி ஒன்று அளிக்கபட்டது பலருக்கு நினைவிருக்கலாம் அந்த பதவி அவருக்கு கிடைத்தபின்பே இந்த மாபெரும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கின்றது நிச்சயம் தமிழிசை விலை உயர்வுக்கு […]

2001 செப்டம்பர் 11 தாக்குதல்

2001 செப்டம்பர் 11 வழக்கம்போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது, அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து, டை எல்லாம் கட்டி ஏதோ பன்னாட்டு நிர்வாக கூட்டத்திற்கு செல்வது போலத்தான் சென்றார்கள், தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிகொண்டார்கள், காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுபாட்டு அறையுடன் தகவல் அறுந்தது, திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது […]

இம்மானுவேல் சேகரன்

அந்த சம்பவமும் அதை தொடர்ந்த கலவரமும் தமிழகத்தின் இருண்ட நாட்கள், தமிழகம் முழுக்க அக்கலவரம் பரவி விடுமோ என அஞ்சிய நாட்கள் சாதி ஒழிப்பு போராளிகளான‌ அண்ணாவோ, கலைஞரோ ஏன் கம்யூனிஸ்டுகள் கூட அந்த கலவரத்தை கண்டிக்க தயங்கினர், அவ்வளவு பெரிய வெறியாட்டம் அது பெரியார் ஒருவர் மட்டும் தைரியமாக முழங்கி கொண்டிருந்தார், “அந்த‌ முத்துராமலிங்கம் எனும் பயலை பிடித்து உள்ளே போடாமல் கலவரம் அடங்காது, சர்க்கார் அதை உடனே செய்யட்டும்” என தைரியமாக சொன்ன ஒரே […]

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பந்த்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இன்று மிகபெரிய பந்த் இந்தியாவில் நடக்கின்றது இந்த கடும் உயர்வுக்கும் அரசின் அந்த பிடிவாத கொள்கைக்கும் காரணம் என்னவென்றால் விஷயம் வித்தியாசமானது ஸ்டான்டர்ட் ஆயில் என இந்திய ஆயில் கார்பரேஷன் இருந்தபொழுது இங்கு பெட்ரோல் பயன்பாடு பணக்காரரிடம் மட்டும் இருந்தது, டீசல், லாரி போன்றவற்றில் இயங்கும் பேருந்துகள் பணக்காரர்களிடமே இருந்தது (பின்பு தொழில்முறையில் பயன்படுத்தும் மீனவர்கள் போன்றவர்களுக்கு மானியம் எல்லாம் வழங்கபட்டது) பெட்ரோலை அதிகம் பயன்படுத்தியது அன்று வரிகட்டும் பணக்காரர்கள், வெளிநாட்டில் […]

வடகொரியா தேசியவிழா

இந்த வடகொரியா சத்தமே இல்லை என்றாலும் இப்பொழுது தான் மிக மிக அதிகமாக பதுங்குவதை பரிதாபமாக உலகிற்கு காட்டுகின்றது அந்நாட்டின் தேசியவிழா கொண்டாடபட்டது, வழக்கமாக இந்த விழாவில் பிராதனமாக அவர்கள் ராணுவ அணிவகுப்பும் அதில் அவர்களின் நேடாங் ரக பாலிஸ்டிக் ரக ஏவுகனைகளும் இருக்கும் அந்த பவனியினை கம்பீரமாக பார்க்கும் வடகொரிய அதிபர் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் சவால் விடுவார் இந்த விழாவில் அந்த ஏவுகனைகளையும் காணவில்லை, அதிபரின் சவுடாலையும் காணவில்லை, அந்த நெடுந்தூர ஏவுகனைகள் காணபடாதது உலகில் […]

இலங்கை யுத்தம்

ஏராளமுறை எழுதியாயிற்று ஆயினும் இப்பொழுதும் சொல்லலாம் இலங்கை யுத்தத்தில் ஈழமக்களை காக்க புலிகளாலும் இன்னபிற போராளி குழுக்களாலும் முடியவில்லை அகதிகளாக இந்தியாவிற்குத்தான் வந்தனர், இந்நாடும் அடைக்கலம் கொடுத்தது புலிகளோ யுத்தம் தொடர்ந்தனர், மக்கள் அகதிகளாக வந்து கொண்டே இருந்தனர், சில இடங்களில் சிங்களனிடமும் சிக்கினர் அதுவும் வடமாரட்சி முற்றுகையில் பிரபாகரனை மண்டையில் போட இருந்த நிலையில்தான் இந்தியா களமிறங்கி அமைதி படையினை அனுப்பியது அதை வம்பிழுத்து மோதியது புலிகள் எந்த சிங்களனிடமிருந்து தமிழரை காக்க அமைதிபடை அனுப்பபட்டதோ […]