பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மராத்தா போராட்டம்

மராத்தா என்பது மகராஷ்டிரத்தின் குறிப்பிட்ட சாதி கிட்டதட்ட 30% அகள் அம்மாநிலத்தில் வசிக்கின்றார்கள் சக்கதவர்த்தி வீர சிவாஜி முதல், அன்னா ஹசாரே வரை பெரும் பிம்மபங்களை கொடுத்த சாதி அது. மராட்டியம் என்பது எங்கள் பூமி என சொல்லி கொள்வார்கள் அவர்களிலும் எம்.எல்.ஏக்கள் எல்லாம் உண்டு, முன்னாள் முதல்வர்களே உண்டு எனினும் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டுமாம் கிட்டதட்ட 1980களில் தமிழகத்து ராமதாஸ் வன்னியர் சங்கம் மூலம் முன்னெடுத்த போராட்டத்தின் சாயல் […]

திருட்டு அரசியல் தமிழகம்

துணை முதலமைச்சரே சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய பின்னும் இந்த ஊழல் ஆட்சியினை கலைக்க வேண்டும் என யாரும் குரல் எழுப்பவில்லை ஏன் என்றால் இதுதான் திருட்டு அரசியல் தமிழகம். அப்படி செய்யும் பட்சத்தில் திமுக வளர்ந்துவிடும் என்பது பாஜக கணக்கு, அதனால் அது கள்ள அமைதி. தமிழிசை தாண்டவமாடாமல் இருப்பதற்கும், எச்.ராசா மவுன விரதம் இருக்கவும் இதுதான் காரணம் சரி திமுக சொன்னால் என்ன? அதற்கும் வேறு கணக்கு இருக்கின்றது, இந்த ஆட்சி சரியும் பட்சத்தில் பாஜகவினை […]

பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு

பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு பதிவாகிவிட்டது, அந்த கட்சி கலாச்சாரம் அது. ஜெயா வழியில் கட்சி ஆட்சி என அவர் சொன்னபொழுதே இப்படி சிக்குவார் என உறுதியாயிற்று கட்சி கொள்கைபடி செயல்பட்டிருக்கின்றார் இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை ஆச்சரியம் என்னவென்றால் ஒரு துணை முதலமைச்சர் மேல் சொத்துகுவிப்பு வழக்கு தொடரபட்டிருக்கின்றது. அவர் நிச்சயம் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல‌ அவரை பதவி விலக சொல்லவோ இல்லை அவரை நீக்கு என பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் […]

நகைக் கொள்ளை

நகை கொள்ளை தொடர்பான விசாரணையில் தமிழகத்தில் திருட்டு நகைகளை வாங்கிய பிரபலநகைகடை முதலாளி கைதுசெய்யபட்டிருக்கின்றார் விசாரித்ததில் அவருக்கு 15 வருடமாக திருடி கொடுத்தவர் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதியாம் அந்த திருடன் இன்னும் அகபடவில்லை என்பதால் போலிசார் கடும் வேகத்தில் தேடி வருகின்றனர் இது ஒரு செய்தி அவ்வளவுதான் நீங்கள் அங்கிள் சைமனின் கழுத்தில் கிடக்கும் பெரும் தங்க சங்கிலியினை பார்த்து புன்னகைத்தால் சங்கம் பொறுப்பல்ல‌

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் : ஓ.பி.எஸ்

பன்னீரை நிர்மலா விரட்டியது விஷயம் அல்ல, விரட்டபடுவது பன்னீருக்கு புதிதும் அல்ல‌ ஜெயா அப்படி பன்னீரை குட்டிகரணம் அடிக்க வைத்திருந்தார், சசிகலா கோஷ்டி பன்னீரை காதை திருகி தலைகீழாக தொங்க விட்டிருந்தகாலமும் இருந்தது மன்னார்குடி குடும்பம் இருமினாலே தலையால் நடந்தவர் பன்னீர் அவமானத்திற்கே அவமானம் கொடுத்தவர் பன்னீர் என்பது கடந்த வரலாறு விஷயம் அந்த விரட்டல் அல்ல மாறாக பன்னீரின் சகோதரருக்கு கொடுக்கபட்ட விமான உதவி பன்னீரின் சகோதரருக்கு உடல்நல தேவைக்காக ராணுவ விமானத்தை நிர்மலா ஒதுக்கினார் […]

நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார் ராகுல்

மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயார்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு அதாவது டெல்லியில் வெட்டியாக‌ முகாமிட்டிருக்கும் 36 எம்பிக்களுக்கு முடிவு கட்ட போவதாக சொல்லி கொள்கின்றார் பழனிச்சாமி நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார்: ராகுல் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, பெரும் கலவரங்கள் என அந்த கோஷ்டி செய்யும்பொழுது கெடாத கவுரவம் ராகுலால் கெட்டுவிட்டதாம் சொத்து வரி உயர்வை கண்டித்து 27ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் : மு.க‌ ஸ்டாலின் அறிவிப்பு ஸ்டாலினுக்கு சொத்து […]

ஆபிரிக்கா நாடுகளுக்கு மோடி பயணம்

உகாண்டா செல்கின்றாராம் மோடி , அங்கு எண்டபே நகருக்கும் செல்கின்றாராம் எண்டபே நகரில்தான் இஸ்ரேலின் மிக புகழ்பெற்ற மீட்பு நடவடிக்கையான ஆப்பரேஷன் என்டபே நடந்த விமான நிலையம் இருக்கின்றது அதை பார்க்கும்பொழுது காந்தகாரில் ஏர் இந்திய விமானம் கடத்தபட்டிருந்தபொழுது, லஷ்கர் தீவிரவாதியினை கொடுத்து விமானத்தை ஜஸ்வந்த் சிங் மீட்டுவந்த காட்சி மோடி மனதில் வந்து போகாமல் இருக்காது. எண்டபே இஸ்ரேலின் தீரத்தை சொல்லி நிற்கும் விமான நிலையம், காந்தகார் இந்திய உளவுதுறையின் தவறை சுட்டி காட்டி நிற்கும் […]

காவேரியில் கடும் வெள்ளம் : செய்தி

காவேரியில் கடும் வெள்ளம் : செய்தி “இப்போதைக்கு சைலன்ட் மோடுக்கு போயிரணும், இப்போ போய் கன்னடனே, தமிழனுக்கு நீர் விடுன்னு கத்தினா மொத்த அணையினையும் குமாரசாமி தொறப்பான், தமிழகமே பாதிக்கபடும் இப்போ சத்தமே காட்ட கூடாது, தொலைச்சு புடுவானுக” நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி செலுத்த டெல்லிவரை சென்றாராம் பன்னீர் செல்வம், தமிழனின் நன்றிகடன் என்றால் சும்மாவா? ஆனால் பன்னீருக்கு அப்படி என்ன செய்தார் நிர்மலா என்றால், அவரின் சகோதரர் சிகிச்சைக்கு விமானம் அனுப்பினாராம் ஜெயாவின் மேல் சிகிச்சைக்கு […]

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு அதானே, நாட்டை கெடுக்க ஒருவர் பிறந்த நாளில் சமூகத்தை கெடுத்த எல்லா கைதிகளும் மகிழ்வாக இருப்பதுதானே முறை, அரசு அதனைத்தான் செய்கின்றது இனி மீதமிருக்கும் கைதிகள் ஜெயா பிறந்தநாளில் விடுதலை செய்யபடுவார்கள் ஏதும் குற்றம் செய்து சிறை செல்ல அவசியமிருப்பவர்கள் உடனே செய்துவிட்டு சிறை செல்லலாம் நிச்சயம் ராமசந்திரனின் அடுத்த பிறந்தநாளில் வந்துவிடலாம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது ஜெயா பிறந்த நாள் இந்த தைரியத்தில் தங்க […]

நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது

நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது, நீர் வரத்து அதையும் தாண்டி வருவதால் காவேரியில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது இந்நிலையில் தண்ணீரை கடலுக்கு விடாமல் இருக்க தமிழகம் கூடுதல் அணை கட்ட வேண்டும் என பல திடீர் புவியியல் நிபுணர்கள் கருத்து சொல்ல தொடங்கியாகிவிட்டது உண்மையில் காவேரியில் இருக்கும் அணைகளில் மேட்டூரே மிக பெரிது, தமிழக பாசன பரப்புகளை கருத்தில் கொண்டு அன்றே அப்படி கட்டபட்டிருக்கின்றது, வெள்ளையன் அப்படித்தான் கட்டி இருக்கின்றான் அதனை ஒப்பிடும் […]