பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அய்யாகண்ணு கோஷ்டியினை காணவில்லை

கல்லணை திறந்தாச்சிங்கிறதுக்காக நான் போய் விவசாயம் எல்லாம் பாக்க முடியாது ஹாஹாஹாஹா இஸ்ஸு காரும், ஏசி வீடும், ஊர்பட்ட பணமுமாய் வாழ்க்கை போய்கிட்டு இருக்கு இப்ப போய் அப்பா அப்பத்தா, முப்பாட்டன் முப்பாட்டி மாதிரி விவசாயம் பாருண்ணா எப்படி தம்பி, சுத்த பைத்தியகார தனமா இல்ல‌ ஹிஹிஹிஹிஹி…. அர்ரே தமிநாட்டு பிஜேபிஸ் இந்த மீடியா கார்த்திகை செல்வன் ஏதோ சொல்லிட்டாருன்னு நம்ம கட்சிக்காரன் சிலபேர் ஆள் யார்னு தெரியாம அவசரத்துல‌ சிவ கார்த்திகேயன் வீட்டுக்கு போறாங்களாம், ஒடி […]

தாழ்த்தபட்ட பெண் சமைத்தால் உண்ணமாட்டோம்

தாழ்த்தபட்ட பெண் சமைத்தால் உண்ணமாட்டோம் என எங்கோ அரசு பள்ளியில் அடம் பிடிகின்றார்களாம் உடனே கருப்புசட்டைக்காரர் சென்று நாங்கள் உண்போம் என அமர்ந்துகொண்டார்களாம் அப்பள்ளி நடப்பது அரசின் வரிபணத்தில், இந்த தீண்டாமைக்கு எதிராக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? சாதி பார்க்கும் ஊரில் பள்ளியே தேவையில்லை என மிரட்டி இருக்க வேண்டாமா? அதனை செய்யவில்லை, இம்மாதிரி விஷயங்களில் அரசை மிரட்டும் சக்திகளும் தமிழகத்தில் இல்லை இப்போதைக்கு தமிழகத்தில் மகா ஜாலியான மனிதர் பழனிச்சாமிதான். காரணம் அவர் செய்ய […]

கமல் , ரஜினி முதல்வராவதை விட எடப்பாடி அரசே நீடிக்கலாம் : சாருஹாசன்

டிரைவர் இல்லாத பஸ் சீனாவில் அறிமுகம் டயரே இல்லாத பஸ், இன்னும் பல பாகங்கள் இல்லாத பஸ்ஸை எல்லாம் தமிழக அரசு எப்பொழுதோ அறிமுகபடுத்தி ஆயிற்று. ஜி.எஸ்.டி., வரி குறைப்பு தேர்தலுக்காக அல்ல: தமிழிசை வரி குறைப்பு என்பது ஜி.எஸ்.டியினால் மிக கடுமையாக பாதிக்கபட்ட‌ தமிழிசை போன்ற பாஜகவினரின் வாழ்க்கை செலவினை குறைப்பதற்காக‌ என்பதை இனியாவது இந்தியா உணர்ந்துகொள்ளட்டும் கமல் , ரஜினி முதல்வராவதை விட எடப்பாடி அரசே நீடிக்கலாம் : சாருஹாசன் மூத்த அனுபவம் என்றால் […]

மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு 1484 கோடி

மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு இதுநாள்வரை 1484 கோடி : செய்தி இது விமான செலவு மட்டுமா என்றால் இல்லை, பிரத்யோக சமையலர்கள், பாதுகாவல் மகா முக்கியமாக உடைகள் என எல்லா விஷயங்களும் கலந்த செலவு காமராஜர் என்றொருவர் முன்பு இருந்தார், அவர் மிக சில நாடுகளுக்கே சென்றிருக்கின்றார், அப்படி சோவியத் ரஷ்யாவிற்கு பயணமானார் ஏன் காமராஜர் செல்கின்றார் என கேட்டார்கள், “நான் ஊர் சுற்ற போகலைண்ணேன், உல்லாச பயணம் போகலைண்ணென். பொதுவுடமை அரசு எப்படி மக்களுக்கு […]

ராகுல்காந்தி பார்லிமென்டில் செய்தது

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை கவனித்தவர்களுக்கு புரியும், பிரான்ஸ் அட்டகாசமான யுத்தியினை வைத்திருந்தது அதாவது ஆட்டத்தின் பெரும்பான்மையான நேரங்களில் குரோஷியா வீரர்களிடமே பந்து இருந்தது, பல வியூகங்கள், பாஸ்கள் என அவர்களே பந்தினை கட்டுபடுத்தினார்கள், ஓடி ஓடி அலுத்தும் போனார்கள் பிரான்ஸ் அணி அவர்கள் அசந்த நேரத்தில் மிக நேர்த்தியாக புகுந்து தூள்பறத்தியது, பெரும்பாலும் அவர்கள் சக்தியினை வீணடிக்கவில்லை, குரோஷியா வீரர்கள் ஓடி ஓடி களைத்த வேளையில் அட்டகாசமாக கிர்ஸ்மேனும், மாப்பியும் நொறுக்கி […]

கெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு

  டெல்லியில் ஆளுநரின் அதிகார‌ எல்லை குறித்து ஜெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு வந்திருக்கின்றது அந்த தீர்ப்பில் ஒன்றும் ஆச்சரியமில்லை, வெள்ளையன் காலத்தில் கவர்னர, ஜெனரல் என நியமிக்கபட்டவர்களுக்கு அதிகாரம் இருந்திருக்கலாம் மக்களாட்சி மலந்தபின் ஜனநாயக இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவருக்கே அதிகாரம் அதிகம் ஜனாதிபதி பிரதமரை விட அதிகமாக‌ ஆளும் அதிகாரம் கொண்டவர் அல்ல என்பது போல முதல்வரை விட ஆளுநர் ஆளும் அதிகாரம் கொண்டவர் அல்ல என்பதுதான் இங்கு சட்டம் இந்த […]

ஆமாம் முதல்வர் நிச்சயம் நதிதான்

ஆமாம் முதல்வர் நிச்சயம் நதிதான் மோடி எனும் காட்டாறோடு சேர்ந்து மொத்த தமிழகத்தையும் அடித்து செல்லும் நதி, அதில் வெள்ளம் இப்பொழுது கரைபுரண்டு ஓடுகின்றது அதில் தமிழகம் பெரும் அழிவினை சந்தித்து கொண்டிருக்கின்றது. தமிழக மக்கள் இப்பொழுதே பாஜக ஆட்சியை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் – தமிழிசை.   அவ்வப்போது இப்படி சொல்லி தமிழக மக்களை சிரிக்க வைத்து பார்ப்பதில் அக்காவிற்கு ஒரு ஆனந்தம், இந்த நல்ல மனது யாருக்கு வரும்? ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் […]

கட்சி அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி

நிர்வாகிகள் மீது தொடர் புகார்: தலைமை அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி “இவனுகள நம்பி ஒரு படம் எடுக்க முடியல, பெரும் நஷ்டமாகின்றது. காலா படம் கவிழ்த்தே விட்டது ரசிகர் மீட்டிங்க்னா எவ்ளோ பேர் வந்தான்,கட்சி தொடங்கு நாங்க இருக்கோம்னாண் ஆனால் தியேட்டர்ல ஒரு பய இல்லை, இவ்வளவுதான் இவனுக ஹா ஹா ஹா இந்த லட்சணத்துல இவனுள நம்பி கட்சியா? தலை எல்லாம் சுத்துது, வேணாம்பா எல்லாத்தையும் மூடுங்க.”    

மோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…

ஈரானின் பெட்ரோல் ஏற்றுமதியினை 0 அளவிற்கு குறைத்தால் அது ஓடிவந்து காலில் விழும் என பகிரங்கமாக சொல்கின்றது அமெரிக்கா “சார் பெட்ரோல்ன்னு இல்ல, தண்ணி இல்லண்ணா கூட பொழைச்சிக்குவான் இந்த ஈரான், ரொம்ப கெட்ட பய சார் அவன்” என சவால் விடுகின்றது ஈரான் அரபுலகில் அது ஷியா நாடு என ஒதுக்கபட்டாலும் உலகளவில் அதற்கான ஆதரவு இருக்கின்றது ஐரோப்பிய நாடுகள் பல ஈரான் பக்கம் நிற்கின்றது, ரஷ்யா பகிரங்கமாக ஆதரிக்கின்றது துருக்கி ஈரான் எம் சகோதரன் […]

பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது

எல்லா நாடுகளிலும் ஜிஎஸ்டி என்பது எல்லா பொருளுக்கும் ஒரே அளவுதான் அங்கெல்லாம் உணவு மற்றும் மருந்து பொருளுக்கு ஜிஎஸ்டி விதிவிலக்கு, அப்படித்தான் உலக யதார்த்தம் இங்கே பாலுக்கும் மெர்சிடஸ் பென்சுக்கும் ஒரே ஜிஎஸ்டியா என கேட்பது அபத்தத்தின் உச்சம் முதலில் பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது, அது உணவு பொருள் ஏன் மிஸ்டர் மோடி? உலகிலே எங்குமே பாலும் மெர்ஸிடஸ் பென்சும் ஒரே நாட்டில் கிடைப்பதே இல்லையா? அங்கெல்லாம் ஒரே ஜிஎஸ்டி இல்லையா மிக அபூர்வமாக […]