பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி?

காவேரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி கூடியிருக்கின்றார்கள் கன்னடமோ உங்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய நீரை கொடுத்தாகிவிட்டது என்றிருக்கின்றது, இவர்களும் ஆமாம் என சொல்லிவிட்டு இப்படியே இந்தமாத நீரையும் கொடுத்துவிட வேண்டும் என சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள் அதுவும் கன்னடம் உங்களுக்கு ஜூன் மாதமே நிறைய கொடுத்துவிட்டதால் ஜூலையில் குறைத்துதான் கொடுப்போம் என்றாலும் “நீங்கள் நியாஸ்தன்..” என சொல்லி வணங்கிவிட்டு வந்தாயிற்று பழனிச்சாமி இது மாபெரும் வெற்றி வெற்றி என குதித்துகொண்டிருக்கின்றார் வந்தது கபினியின் உபரி நீர், இந்த […]

செயல்படாத தலைவர், அடிமை முதல்வர் இரண்டுமே ஒன்றுதான்

செயல்படாத தலைவர் என்றால் அவரால் என்ன ஆகபோகின்றது? அடிமை முதல்வர் எப்படி உபயோகமில்லையோ அப்படி செயல்படாத டம்மியும் ஒன்றுக்கும் உதவாதவர் ஆக செயல்படாத தலைவர், அடிமை முதல்வர் இரண்டுமே ஒன்றுதான் தேர்தலில் நோட்டா ஆப்ஷன் என்பது தேவையில்லாத ஒன்று: தமிழிசை நோட்டாவினை விட குறைவாக வோட்டு வாங்கும் அல்லது நோட்டாவோடு போட்டி போடும் கட்சிகள் மட்டும் தேவையா அக்கா?    

கடவுள் நம்பிக்கையினை தாண்டி, மனசாட்சிபடி அரசியல் என்பது இதுதான்

ஈரோடு நகராட்சி தலைவராக பெரியார் இருந்தபொழுது கோவில் கணக்கு அவரிடம்தான் இருந்தது துளியும் சந்தேகமோ, எதிர் கேள்வியோ வராத வண்ணம் மிக சுத்தமான கணக்கு வழக்குகளை வைத்திருந்தார் பெரியார் இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை, தன்னை நம்பி ஒப்படைத்த கோவிலின் நிர்வாகத்தை காக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு நிறைந்திருந்தது தன் பதவிகாலம் முடியுமட்டும் ஒரு குறையினை அவர்மேல் சுமத்தயாராலும் முடியவில்லை. ஒரு பைசா காணவில்லை என்றோ, ஒரு குண்டுமணி தங்கம் குறைந்தது என்றோ யாராலும் […]

மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு

https://youtu.be/gTR8B0s1g78   மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு காற்றில் உயர பறக்கும் துரும்பு கோபுரத்தை விட உயர பறக்கலாம் ஆனால் கோபுரத்திற்கு ஈடாகாது நொடியில் வீழும் துரும்பி, ஆனால் கோபுர கலசமோ எந்நாளும் நிலைத்து நிற்கும். பக்தர்கள் பணிந்து வணங்குவார்கள் இந்த இந்திய அழகி, உலக அழகி எல்லாம் அப்படி துரும்புகள், தலைவி ஒருவரே நிலைத்து நிற்கும் கோபுரம்    

சிலைகடத்தல் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம்

கொஞ்சநாள்தான் சிலைகடத்தல் வழக்கினை விசாரித்தார் பொன் மாணிக்கவேல் ஆனால் அவர் சொல்லும் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம் பெரும் தலைகள் சிக்கி இருக்கின்றன, உச்சமாக 7 ஆயிரம் கோவில்களில் போலி சிலை இருக்கின்றது என சொல்லி அதிர வைக்கின்றார் இது மிக மிக சீரியசான விஷயம் ஆலயங்களும், சிலை கடத்தல் விஷயமும் மத்திய அரசு கட்டுபாடுக்கு செல்ல வேண்டிய நேரமிது இதில் மாநில சுயாட்சி மண்ணாங்கட்டி எல்லாம் சொல்ல முடியாது, மாநில உரிமையில்தான் இவ்வளவு அழிவு நடந்திருக்கின்றது […]

மதுரையில் இருந்து மிரட்டும் சீமான்

சென்னையில் இருந்து மிரட்ட மாட்டாராம், மதுரையில் இருந்து மிரட்டுவாராம் முன் ஜாமின் வாங்க கோர்ட்டில் கெஞ்சிகொண்டிருப்பதன் பெயர் மிரட்டலாம் இனி நெல்லையிலிருந்து மிரட்டல், கன்னியாகுமரியிலிருந்து மிரட்டல் என சொல்லி அப்படியே அங்கிள் வன்னிகாட்டுக்கு ஓடிவிடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது அவரின் போஸை பாருங்கள் அங்கிள் கைதுக்கு பயந்து ஓடிகொண்டிருக்கும்பொழுது , ஏதோ உலககோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடிக்க போவது போல தமிழக பத்திரிகையில்  ஒரு ஸ்டைல் பத்திரிகை மோசடி என்றால் இதுதான்.    

திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்ததா?

திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்தது போல பேசிகொண்டிருக்கின்றார்கள் திகவிலிருந்து வெளியேற அண்ணா கோஷ்டிக்கு ஏகபட்ட தயக்கம் இருந்தது, பெரியார் இல்லாத இயக்கம் என்னாகும் என்ற அச்சமும் இருந்தது, ஆயினும் பெரியார் இருக்கும் வரை அரசியலுக்கு வரமுடியாது என எண்ணிய அண்ணா கோஷ்டி மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து பிரிந்தது அண்ணா பிரிந்தவுடன் கலைஞர் ஓடி சென்று சேர்ந்தவர் அல்ல, தடுமாறினார். பெரியாரை மீறி எப்படி வெல்லமுடியும் என்ற தயக்கம் இருந்தது “அய்யா ஆணையிடுகின்றார், அண்ணா ஊழையிடுகின்றார்..” […]

ஜெருசலேம் புனித பயணத்திற்கு தமிழக அரசு 20 ஆயிரம் மானியம் : செய்தி

ஜெருசலேம் புனித பயணத்திற்கு தமிழக அரசு 20 ஆயிரம் மானியம் : செய்தி இதெல்லாம் தேவையே இல்லாத மோசடி விஷயங்கள் இஸ்லாமியருக்கு இருப்பது போல கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் பயணம் ஒன்றும் கட்டளை அல்ல, அது யூதர்களுக்கானது கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்கு வரவேண்டும் என பைபிளில் எங்கு சொல்லபட்டிருக்கின்றது?? இதனை உடனடியாக நிறுத்த வேண்டும், மக்களின் வரிபணம் இப்படி வீணாக கூடாது.

என்னை பாதித்த நூல், பூனூல் : : கமலஹாசன்

என்னை பாதித்த நூல், பூனூல் அதனால் அதைதவிர்த்துவிட்டேன் : கமலஹாசன் படத்தை பார்த்தீர்களா? இவர் சம்பாதிக்க மட்டும் பூனூல் வேண்டுமாம், ஆனால் மற்றபடி இவருக்கு அது அலர்ஜியாம் ஏம்பா கமலஹாசா, இந்துவாக நடிக்க பூனூல் போடுறேள், விஸ்வருபம் நடிக்கும்பொழுது சுன்னத் செய்தீரா? பாஜக கூட்டத்தில் நாய் மட்டும்தான் இருந்தது என சிலர் சொல்லி சிரித்துகொண்டிருக்கின்றார்கள் உண்மையில் 1950களில் திமுக தொடங்கபட்டு அது பேசிகொண்டிருந்தபொழுது நாயும் முன்னால் இல்லை இங்காவது நாயாவது இருக்கின்றது அப்படித்தான் திமுகவின் நிலை இருந்தது, […]

எம்.ஜி ராமசந்திரனின் தாய்வழி வீட்டினை சீரமைக்கின்றனர்

கேரளாவில் எம்.ஜி ராமசந்திரனின் தாய்வழி வீட்டினை அதிமுகவினர் பலலட்சம் செலவில் சீரமைக்கின்றனர் ராமசந்திரன் பிறந்தது இலங்கையில், வளர்ந்தது கும்பகோணத்தில். அந்த கும்பகோணத்தில் இன்னும் அந்த வீடு உண்டு. ராமசந்திரனே வாங்கி “அம்மாடா.. தெய்வம்டா…, சத்ய பாமாடா ” என சொல்லிகொண்டிருந்தார் இப்பொழுது அவர் அன்னையின் அம்மா வீட்டையும் புணரமைக்கின்றார்களாம் அப்படியே ராமசந்திரனின் முதல் மனைவி சதானந்தவதியின் கல்லறை பாலக்காட்டில் உண்டு, அதில் தாஜ்மஹால் போல ஏதும் கட்டுவார்களோ என்னமோ? பிடல் காஸ்ட்ரோவும், சிங்கப்பூரை உருவாக்கிய லீகுவானும் தங்கள் […]