பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

  இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு

  இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு பற்றி விவாதிக்க போகின்றார்களாம் அதை அந்த மே11லே செய்திருக்கலாம் ஏன் ஒருவாரம் கழித்து வெடிக்கின்றார்கள் என தெரியவில்லை சிலர் அழைத்து விளம்பரத்தில் உங்கள் பதிவின் சாயல் என்றார்கள், அப்படி எல்லாம் இருக்கமுடியாது. அவர்கள் தனி தகவல் திரட்டி ஒளிபரப்பலாம் இங்கு அச்சேனல் வராது, வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்து விஷயத்தை சொன்னால் ஜெயாவிற்கு பன்னீர்செல்வம் இருந்தது போல, கலைஞருக்கு அன்பழகன் இருப்பது போல, மோடிக்கு பழனிச்சாமி இருப்பது […]

கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ முதல்வர் பழனிச்சாமி

கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ என்னமோ முதல்வர் பழனிச்சாமி திருப்பதிக்கு போயிருக்கின்றார் அவர் மகா பக்தியாக சாமி தரிசனம் செய்திருக்கின்றார், ஜெயலலிதா இல்லாத காலங்களில் அவரால் நிம்மதியாக சாமி கும்பிட முடிகின்றது, இல்லாவிட்டால் ஜெயாவினை மட்டுமே வணங்க வேண்டும் அப்படி கும்பிட்டுகொண்டிருக்கும் பொழுது ஒரு பூசாரிக்கு சாமி வந்திருக்கின்றது உரத்த குரலில் கத்தியபடி சாமியாடிய அவர் ,”ஏய்ய் எடப்பாடிய வந்து என்னை பாக்க சொல்லு, தமிழ்நாடு சீரழந்து போய் கிடக்கு அவன் ஒரு மாயயில் இருக்கிறான் அவனுக்கு […]

திருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக‌ காங்கிரஸ் தலைவராக ஆக்கினார்?

காங்கிரஸ் இப்போது 3 மாநிலத்தில்தான் ஆளுகின்றதாம், இது இன்னும் குறைந்து காங்கிரசை செவ்வாய் கிரகத்தில் தேடும் காலம் வரலாம் ஏன் என்றால் இதுதான் காரணம் இந்த தெருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக‌ காங்கிரஸ் தலைவராக்கினாராம் என்றால் அக்காரணம் படு பயங்கரமானது “தெருநாவுக்கரசர் அதிமுகவில் எம்ஜிஆர் பக்கத்திலே இருந்தவர் இதனால் எம்ஜிஆர் வோட்டு எல்லாம் வரும், பாஜகவில் இருந்திருக்கின்றார் இதனால் பாஜகவோட்டு வரும் சினிமாவில் நடித்திருப்பதால் பெரும் மக்கள் அபிமானம் உண்டு பலகாலம் அரசியலில் இருப்பதால் பழுத்த அனுபவம் […]

கொள்ளை அடி அணை கட்டு..

கஜினி முகமது சோமநாதபுரத்தில் கொள்ளையிட்ட செல்வத்தில் அவன் சொந்த ஊரான கஜினியில் அணைகட்டினான் ராஜராஜ சோழன் ஈழவெற்றியின் அடையாளமாக, அனுராதபுரத்தை கொள்ளையடித்து வந்து பெரியகோவிலை கட்டினான் இதில் கஜினி என்பவன் கொள்ளையன் , ராஜராஜன் என்பவன் மாமன்னமா? சாதரண மனிதன் செய்தால் கொள்ளை, அதை அரசன் படையோடு செய்தால் போர் அலெக்ஸாண்டர் முதல் கிழக்கிந்திய கம்பெனிவரை இந்த கொள்ளையினைத்தான் செய்தது, இப்போது அமெரிக்கா எண்ணெய்க்காக செய்கின்றது ஆனாலும் கொள்ளையில் கோவில் கட்டியதை விட, கோவிலில் அடித்த கொள்ளையில் […]

நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

  நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு “ஒரு வாரம் கூட நான் முதல்வராக‌ இருந்திர கூடாதுல்ல, இதில் உங்களுக்கு ஒரு சந்தோஷம்”  பாஜகவோடு கூட்டணி ஒருநாளும் இனி இல்லை : குமாரசாமி ஆம், முதல்வர் பதவி தராத கட்சியோடு என்ன கூட்டணி வேண்டியிருக்கின்றது? எடியூரப்பா அரசு நிலைக்காது , கலையும் : திருமா தமிழக அரசை தவிர எல்லா அரசும் கலைவதில் இவருக்கொரு தனி ஆனந்தம் கன்னட ஆளுநர் பாஜகவின் வேலைக்காரர் : […]

இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது

இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது ஹிட்லர் அதனை செய்தான் அதன் பின் கொஞ்ச வருடம் முன்பு யூகேஸ்லேவியாவில் நடந்தது, ஆப்ரிக்காவில் அடிக்கடி நடக்கும் முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்தது இனபடுகொலை ஆகாது, யாழ்பாணத்தில் தமிழர் இயல்பு வாழ்க்கை வாழ்ந்தனர், மட்டகிளப்பு அமைதியாக இருந்தது கொழும்பு தமிழர் மீது ஒரு குண்டூசி கூட விழவில்லை சிக்கல் புலிகள் பிடித்து வைத்த முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் மூலமாக வந்தது, அவர்களை கிளிநொச்சியில் இருந்தே மிரட்டி கூட […]

மகனை பெற்ற தந்தை பிரதமராக இருந்தால்தான் இந்த தசரத வலி தெரியும்…

85ம் பிறந்தநாளை மகனை முதல்வராக பார்த்து கொண்டாடலாம் என்றால் விடுகின்றார்களா? மகனை பெற்ற தந்தை பிரதமராக இருந்தால்தான் இந்த தசரத வலி தெரியும்…  

கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் : ஸ்டாலின்

கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் : ஸ்டாலின் மிக மூத்த கட்சியான திமுக கமலஹாசனின் கூட்டத்திற்கு எல்லாம் அஞ்சுவது வேதனை பொது இடத்தில் கூடுவோம், அதில் திமுக சாதனையினை விளக்குவோம், என கிளம்பும் சாதுர்யமில்லை எவனாவது ஏதும் கேட்கமாட்டானா? அவனை பிடித்து வைத்து கதற கதற திமுகவின் சாதனையினை விளக்க வாய்ப்பு கிடைக்காதா என அரசியல் செய்தவர் கலைஞர் ஒரு கேள்வியினையோ, ஒரு வாய்ப்பினையோ அவர் தவறவிட்டதில்லை ஒருவனும் கேள்வி கேட்காவிட்டால், தானே […]

கல்வி வளர்த்த தமிழகத்தில் திராவிட ஆட்சி வந்தபின் கல்வி விற்பனை

காமராஜர் எவ்வளவோ கல்விசாலைகளை திறந்தார், அவர் குடும்பத்தாருக்கு இன்று சொந்தமாக பள்ளி கல்லூரி உண்டா? ஆங்கில வழி கல்வி நிறுவணம் உண்டா? காமராஜரின் வம்சாவழிகள் எத்தனை கல்விநிலையங்களை நடத்துகின்றார்கள்?, ராஜாஜி குடும்பம் எவ்வளவு பள்ளிகளை நடத்துகின்றது என கேட்டால் நாம் திராவிட விரோதி  இந்த “உபி பிளஸ் டூ தேர்வில் பலர் தோல்வி, தமிழக பிளஸ்டூவில் பலர் தேர்ச்சி” இச்செய்தி கேள்விபட்டவுடன் மரத்தடியில் கட்டைபீடி குடித்துகொண்டிருந்தவன் எல்லாம் ஏ திராவிட சாதனை பாரீர் என குதிக்க ஆரம்பித்தாயிற்று […]

காங்கிரசுக்கு இறுதிசடங்கு

இந்த தெருநாவு அரசர் என்பவர் காங்கிரசுக்கு இறுதிசடங்கு செய்யும் காரியத்தில் இறங்கி இருக்கின்றார் கோஷ்டிகளுக்கு பஞ்சமே இல்லா தமிழக காங்கிரசில் தெருநாவு அரசருக்கும் ஒரு கோஷ்டி உருவாகி அது அவர் அடுத்த முதல்வர் என்ற அளவில் கதைவிட்டு கொண்டிருகின்றது சைமன் பிரதமர் ஆனாலும் தெருநாவு முதல்வராகுமா? ஒரு நாளும் நடக்காது, எனினும் தான் அடுத்த முதல்வர் எனும் கனவோடு அலைகின்றார் தெருநாவு அரசர், இன்னும் தமிழக காங்கிரசின் நிரந்தர தலைவர் எனும் நினைப்பும் இருக்கின்றது இந்நிலையில் தெருநாவு […]