பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டால்மியா கோட்டை

டால்மியா என்பவர் மிகபெரும் சக்தி, அவர்குழுமம் தமிழ்நாட்டில் கல்லகுடியினை டால்மியாபுரம் என மாற்றியபொழுது தன்மானத்தோடு பொங்கி எழுந்தது தமிழகம், உபயம் திமுக‌ இன்று டெல்லி செங்கோட்டையின் பராமரிப்பு பொறுப்பை டால்மியாவிடம் மோடி அரசு கொடுக்கின்றதாம், பிண்ணணி காரணம் அந்த டால்மியா விஸ்வ ஹிந்து பரிஷத் அனுதாபியாம் கல்லகுடியில் டால்மியாவினை விரட்டிய திமுக எங்கே? பெரும் பாரம்பரியமிக்க செங்கோட்டையினை இனி டால்மியா கோட்டை என மாற்ற துடிக்கும் பாஜக எங்கே? இனி செங்கோட்டையினை விற்ற கட்சி என்ற அவப்பெயரை சுமக்க […]

சொன்னபடி வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன்

வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன் என ஆர்.கே நகரில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள் இந்த மாபெரும் அவமானத்தை கண்டும் காணாமல் இருக்கின்றது தேர்தல் ஆணையம் அதன் பணி தேர்தலை நடத்துவதோடு சரி என நினைத்துவிட்டது போல, இப்படி ஆம் பணம் தருவதாக சொன்னார் அதனால் வாக்களித்தோம் என பகிரங்கமாக சொன்னபின்னும் , ஆதாரங்களோடு வந்து நின்றபின்னும் ஏன் தேர்தல் கமிஷன் தூங்குகின்றது நல்ல நாடாக இருந்தால் இந்நேரம் தினகரனின் எம்.எல்.ஏ பதவி முடக்கபட்டிருக்க வேண்டாமா? ராமர்கோவில் […]

ஸ்ரீ லங்கா வில் புடவையை ஆபாச உடை என்று போராட்டம்

இலங்கை சேலை எதிர்ப்பு என்பது விஷயம் என்பது சாதாரண விஷயம் அல்ல, இது பல பின்னணிகளை கொண்டது விஷயம் கொஞ்சம் ஆழநோக்க வேண்டியது, எவ்வளவு ஆழம் என்றால் 100 ஆண்டுகளுக்கு முன்பானது அன்று தமிழகமும் இலங்கையும் சைவ பூமியாக இருந்து கிறிஸ்துவ மத இன்ன பிற சக்திகளை எதிர்த்து போராடிகொண்டிருந்தது, அவர்களுக்கு கத்தோலிக்கமும் இங்கு பிரிவினை கிறிஸ்தவமும் சவால்கள் சைவ பூமி என்றால் சாதி வன்மங்கள் உட்பட எல்லாம் இருந்தன‌ இதனால் இந்து கல்லூரிகளும் உடை கட்டுப்பாடுகளும் […]

செம்மொழி விருது தமிழுக்கு இல்லை

மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் ஜனாதிபதி விருதுகளை அறிவித்திருக்கின்றது, இதில் செம்மொழி தகுதி பெற்ற தமிழர்களுக்கும் விருது முறைப்படி உண்டு இதி செம்மொழி என சொல்லபட்டுள்ள சமஸ்கிருதம், பாலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என சில மொழி விற்பனருக்கு விருது அறிவிக்கபட்டாயிற்று ஆனால் தமிழில் யார் பெறுவார் என அறிவிப்பே இல்லை, சுருக்கமாக சொன்னால் தமிழில் விருது இல்லை சும்மாவே அதிகாலை சேவலுக்கு முன்பாகவே எழுந்து இன்று எதிலாவது மத்திய அரசு சிக்காதா என வாசலில் காத்த்திருப்பவர்களுக்கு […]

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காவேரி இல்லை

  கன்னட தேர்தலில் ராகுல் தலமையில் காங்கிரஸ் கோஷ்டி கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது பாஜக தரப்பு மோடி, அமித்ஷா, யோகி என களமிறங்குகின்றது. யோகிக்கும் கன்னடத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. உபி அரசினை போட்டுவிட்டு அந்த சாமியாரும் வந்திருக்கின்றார்   இப்படி இருதேசிய கட்சிகளும் வரிந்து கட்டி கன்னடத்தில் பிரச்சாரத்தில் நிற்கும்பொழுது ஒரு விஷயத்தை அப்படியே இருவரும் மறைக்கின்றார்கள் அது காவேரி விவகாரம். தொட்டால் அவ்வளவுதான் என்பதால் இருவருமே அதை மறைத்து வேறு என்னமோ அணல் பிரச்சாரம் […]

அக்கடா இக்கடா செய்திகள்

பதிவு ஏதும் தாமதமானால் பேப்பர் போடும் பையனை மிரட்டுவதை போல அதட்டுகின்றார்கள் இனி தாமதிக்கும் நேரமெல்லாம் பதிவினை போடுகின்றாயா இல்லையா என கல், உருட்டுகட்டை எல்லாம் எடுத்துவிடுவார்கள் என்பது தெரிகின்றது. எதற்க்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் காவேரி விவகாரம் தொடர்பாக மோடியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை : முதல்வர் பழனிச்சாமி மோடி எந்த காலத்தில் அய்யா காவேரி வரும் என சொன்னார்? நீதிமன்றத்தில் மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்டது மோடி குரலா? […]

கலைஞரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர்

“என்னய்யா டெல்லிகாரனுகள நம்பி தனிமாநிலம் வாங்கின, இப்போ என்னாச்சி? இதுக்குதான்யா காங்கிரஸை இங்க நான் காலடியில வச்சிருந்தேன். நான் இருந்தவரை தமிழக பாஜக ஒரு வார்த்தை பேசிச்ச்சா, இல்ல பேச விட்ருவேனா? எங்க சுத்தினாலும் டெல்லிய எதிர்க்கணும்னா இங்க வந்துதான் ஆகணும், இதை இன்னும் 4 பேர் கிட்ட போய் சொல்லுய்யா”

பாண்டிய நெடுஞ்செழியன் இன துரோகி இல்லையா?

கண்ணகி பிறந்த பூம்புகார் பற்றி 4 வார்த்தை தெரியாது, சிலப்பதிகாரத்தின் 1 வரி கூட உருப்படியாக தெரியாது தமிழச்சியாக பிறந்து, தமிழனால் கணவனை இழந்த தமிழச்சிக்கு எப்படி விழா எடுப்பார்கள்? இன்னொரு இனத்தான் கொன்றால்தானே இவர்களுக்க்கு உணர்ச்சி வரும்? பாண்டிய நெடுஞ்செழியன் இன துரோகி இல்லையா? எப்படியோ போகட்டும், ஆனால் இந்த பெரும்பாட்டியின் சிலையினை முன்பு ஜெயா தூக்கி எறிந்தபொழுது இந்த பேரப்பிள்ளை வங்க கடலுக்குள் மூழ்கி கிடந்தது என்பதுதான் சோகம்  

அதிமுக கட்டுகோப்பினை கலைஞர்தான் காத்திருக்கின்றார்

எவ்வளவு பெரும் படையாக இருந்தாலும் பொது எதிரி இருக்கும் வரைதான் ஒன்றாய் இருக்கும், வெற்றி கிடைத்தால் தங்களுக்குள் மோதுவார்கள் இது அலெக்ஸாண்டர் காலத்திலே இருந்து அவனும் தன் அரசை எல்லாம் பிரித்துகொடுத்துவிட்டுத்தான் செத்தான், வரலாறெங்கும் இந்நிகழ்வு காண கிடக்கின்றது ஈழப்போரில் கூட சமாதான காலத்தில் புலிதளபதிகளுக்குள் சண்டை வருகின்றது, போர்தொடங்காமல் இந்த சண்டை தீராது என்றுதான் அவசரபட்டு பிரபாகரன் சண்டை தொடங்கி புலிகள் அழிந்தனர் இந்த இந்தியா கூட முன்பு பிரிட்டனுக்கு எதிராக பொங்கி அவன் சென்றதும் […]

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?, பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம் இந்த நிம்மி ஆண்டி சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யபடுகின்றனர், அப்படி நிம்மிக்கு உதவினார் என இன்னொரு பேராசிரியரும் கைதாகி இருக்கின்றார் அவர் பெயர் முருகன் முருகன் மாணவிகளுக்கு போன் எல்லாம் செய்யவில்லை என்றாலும், நிம்மிக்கு உதவினார் என விசாரிக்கின்றார்கள் முருகனின் மனைவி கொதிக்க தொடங்கிவிட்டார், யாரையோ பாதுகாக்க தன் கணவனை பலிகொடுக்கின்றார்கள் விடமாட்டேன் என பொங்கிவிட்டார் கண்ணகி பிறந்த மண் என்றால் சும்மாவா? […]