பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிஸ்டர் பழனியப்பன், ஹிஹிஹி என சமாளித்தால் உம் மீது பெட்ரோல்தான் ஊற்றுவோம்

முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் உற்றியது தவிர வேறு என்ன சாதனை செய்தார். கரு.பழனியப்பன் அதானே , எங்கோ எவளோ வம்பில் மாட்டும்பொழுது “அய்யய்யோ அவளுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை” என சத்தியம் செய்தாரா? இல்லை கன்னத்தில் தட்டினாரா? அவர் தன் சொந்தபந்தம் எல்லோரையும் ராஷ்டிரபதி பவனில் வைத்து ரசம் ஊற்றினால்தான் தவறு, அப்படி எல்லாம் செய்யாமல் ரோஜாக்களுக்கு தண்ணீர் ஊற்றியது நல்ல விஷயம் அவர் எப்பொழுது ரோஜாவிற்கு நீர் […]

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்

ஆமா பூரா பணமும் போக வேண்டிய இடத்திற்கு போயாயிற்று, அதற்குத்தான் விசாரணை.. குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம் காவல்துறைக்கு குட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்த வழக்கு இது, காவல்துறைக்கு அமைச்சர் யார்? சாட்சாத் எடப்பாடி சுவாமிகள் லஞ்சம் கொடுத்த குற்றசாட்டில் இன்னும் சில அமைச்சர்களும் உண்டு நிச்சயம் அந்த சுவாமிகள் ஆட்சி எனும் கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு விசாரணையினை சந்திக்க வேண்டும் ஆக இந்த குற்றசாட்டில் அவர் பெயருக்குத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் ஜெயலலிதா […]

ஆளுநரை சந்திக்கின்றார் எச்.ராசா : செய்தி

ஆளுநரை சந்திக்கின்றார் எச்.ராசா : செய்தி எச்.ராசா அமைச்சரும் அல்ல, தேர்தலில் நின்று 4 வாக்கு வாங்கியவரும் அல்ல. சர்ச்சைகளின் மொத்த உருவான ஒருவரை ஆளுநர் ஏன் சந்திக்க வேண்டும்? அவர் நிம்மி ஆண்டி தவிர எல்லோரையும் சந்திப்பார் போல‌ இருவரும் சந்திக்கும்பொழுது அங்கே ஆளுநர் மாளிகை வளாகத்தில் எஸ்கேப் சேகர் மாறுவேடத்தில் பார்த்து சிரித்தாலும் ஆச்சரியமில்லை அப்படி இந்த இருவரும் சந்தித்து பேச என்ன இருக்கின்றது? என்ன அவசியம் வந்தது? ஒன்றுமில்லை ஆளுநர் மாளிகை என்பது […]

அரசியல் என்பது சிரமாமனது

 “திராவிட கொம்பன்” திவாகரன்…  “திராவிட செல்வன்” தினகரன் “பொன்மன கம்மல்” விவேக்,  “வத்தியார்” ஜெயந்தன் இப்படி எல்லாம் பட்டத்தோடு அவர்கள் மோதிகொள்வதை பார்க்க கண் கோடி வேண்டும். இந்த மோதலை பார்த்து புன்னகைப்பதால் பழனிச்சாமி “புன்னகை போராளி” ஆகிவிட்டார் எப்படிபட்ட பயங்கர மோதல்? நாஞ்சில் சம்பத்தே இருக்க முடியாமல் ஓடிவந்துவிட்டார் என்றால் சும்மாவா? இந்த ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பில்லை. மறு தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும்” : ராமதாஸ் மருத்துவமனையில் இருக்கும் […]

குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம்

குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம் : செய்தி இந்த செய்தி தமிழக மீடியாக்களில் வரவில்லை, காரணம் இப்பொழுது பினாமி ஆட்சி, பிற்காலத்தில் நேரடி ஆட்சி(!) அது இல்லாவிட்டால் இதே பினாமி ஆட்சி என முடிவில் இருக்கும் பாஜகவின் கரங்களுக்கு மீடியாக்களும் கட்டுபடுகின்றன‌ நிம்மி ஆண்டி விஷயத்திலே அது தெரிகின்றது குஜராத்தில் இந்த விவசாயிகளுக்கு என்ன சிக்கல் என்றால் , நீர் பிரச்சினை கடன் பிரச்சினை அல்ல மாறாக நிலமே பிரச்சினை அவர்களின் நிலங்களை […]

ஒரு பெண்கவிஞர் கிடைத்த நாள் இன்று..

மனுஷ்யபுத்திரர்க்கு இன்னும் பிரபலமாக என்ன செய்யலாம் என யோசித்திருகின்றார் மோடியினை பற்றி அவர் என்ன எழுதினாலும் பதில் இல்லை, மோடிக்கு தமிழ் தெரியாது தெரிந்தாலும் இவர் கவிதை புரியாது யாரை பற்றி எழுதினாலும் கண்டுகொள்ளவில்லை இதனால் மனிதர் “கருத்து கஸ்தூரி” பக்கம் சாடிவிட்டார், அந்த அம்மணியும் மனுஷ்யபுத்திரன் போல யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என வருத்தத்தில் இருந்ததால் கடும் உற்சாகம் இருவரும் கவிதையாக எழுதி தள்ளுகின்றார்கள், ஆச்சரியமாக கஸ்தூரியின் கவிதை மனுஷ்யபுத்திரன் கவிதையினை விட நன்றாக இருப்பதாக […]

பல குட்டிசாத்தான்கள் தறிகெட்டு ஓடுகின்றன

மாந்ரீக தொடர்புடையவர்களை கேட்டால் சில விஷயங்களை சொல்வார்கள், அதாவது மந்திரவாதி சில குட்டிசாத்தானை வைத்து விளையாடுவானாம், அவற்றிற்கு வேலை கொடுத்து கொண்டே இருப்பானாம் மந்திரவாதி திடீரென செத்துவிட்டால் குட்டி சாத்தான்களுக்கு வேலை கொடுக்க ஆளிருக்காது. குட்டி சாத்தான்கள் சும்மா இருந்து பழக்கபட்டவை அல்ல என்பதால் அது பாட்டுக்கு எங்காவது சென்று அடிவாங்குமாம், சில நேரம் அதுகளே அவற்றிற்குள் முட்டிகொள்ளுமாம் இப்படி அரசியலில் ஏகபட்ட குட்டிசாத்தான்களை வைத்திருந்தவர் நடராசனும் சசிகலாவும். மந்திரக்கோல் ஜெயா மரித்ததும், இன்னொரு மந்திரவாதி நடராசன் […]

காவேரிக்காக உண்ணாவிரதம் இருக்க தொடங்கிவிட்டார் சரத் குமார்

சென்னை மாநகரத்து மக்கள் தயவு செய்து கவனமாக இருக்கவும், சென்னை அதிர்ந்து உலகமே திரும்பி பார்த்து, டிரம்பே ஓடிவந்து சமரசம் பேசும் பெரும் அச்சுறுத்தல் ஒன்று தொடங்கிவிட்டது மத்திய அரசு இனி அவசர ஆலோசனையில் ஈடுபடலாம், முப்படைகளும் தயாராகலாம் ஆம், சரத்குமார் தன் மாபெரும் கட்சியினருடன் காவேரிக்காக உண்ணாவிரதம் இருக்க தொடங்கிவிட்டார் முன்பு காவேரிக்காக டெல்லி வரை நடப்பேன் என்றார், பின் டெல்லி வெகு தொலைவு, நீர் சென்று சேர்வதற்குள் மோடி அரசே முடிந்து தேர்தல் வந்துவிடும் […]

பத்திரிகை பணி எளிய மக்களின் மேல் மட்டும்தான்

அழகி, உல்லாசம், இன்பம், செக்ஸ் டாக்டர், வெறி என புது புது தமிழ்வார்த்தைகளை எல்லாம் தமிழருக்கு கொடுத்தது தினதந்தி ஆனால் பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் அதன் வழக்கமான அடைமொழிகளை எல்லாம் காணவே இல்லை இதுவே வேறு இடத்தில் நடந்தால் புலனாய்வு, பொயாய்வு என இட்டுகட்டி , ஸ்கூப் அடிக்கும் பத்திரிகைகள் எல்லாம் ராமதாஸ் பகிரங்கமாக நிர்மலா ஏன் பல்கலை கழக விழாவில் விலை உயர்ந்த சூட் அறையில் தங்கினார் என கேட்ட பின்னும் அமைதி காக்கின்றன‌. இதுவே […]

தமிழறிந்த தமிழர்தான் தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும் : வைரமுத்து

தமிழறிந்த தமிழர்தான் தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும் : வைரமுத்து இதுகாலம் ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களா தமிழக முதல்வராக இருந்தார்கள்? மனிதரை ஆண்டாள் கனவில் வந்து மண்டையில் போட்டுவிட்டார் போல என்றால் மனிதர் முன்பே இப்படித்தான் சில பாடல்களை கவனித்தால் முன்பே அப்படித்தான் இருந்திருக்கின்றார் “அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுபாலுங்க” என்றொரு பாடல் “ஆட்டுபாலு குடிச்சா அறிவழிஞ்சி போகுமுண்ணு” என இன்னொரு பாடல் இரண்டையும் எழுதியவர் நம்ம வைரமுத்து, என்னது ஆட்டுபாலு குடிச்சா அறிவு அழிவும் […]