பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மே 3ம் தேதிவரை ஒரு பயலும் பேசகூடாது என்பது மறைமுக கட்டளை

” ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தோம். காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே மாதம் 3-ம் தேதி விசாரிக்கப்படும்”: உச்ச நீதிமன்றம் இந்த வரிகள் தமிழகத்தில் எப்படி எடுத்துகொள்ளபடுமென தெரியவில்லை, ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கும் விஷயம் திமுகவிற்கு சாதகம் ஆம் காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு கொடுத்தோம் என சொல்லியிருக்கின்றார்கள். […]

இதில் ஏன் பச்சைகொடி?

மிசா கொடுமையினையே உண்மையான ஜனநாயகம் என வரவேற்ற ராமசந்திரனின் கட்சி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும், இப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் ஏற்கனவே வெள்ளைகொடியினை ரகசியமாக‌ காட்டி மோடியிடம் சரணடைந்தாயிற்று, இதில் ஏன் பச்சைகொடி? அந்த வெள்ளை கொடியினை பகிரங்கமாக காட்டி அந்த இம்சை அரசன் பாணியில் “வல்லவராயரே நான் வாழவேண்டும் அய்யா” என விழுந்தால்தான் என்ன?  

போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது : வேல்முருகன்

என்னது? “புதிய இந்தியா” அடுத்து எப்போ பிறக்கும்னு பப்ளிக் போன் பண்ணி கேக்குறாங்களா? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இத சொல்லுவீங்க?? போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது-வேல்முருகன் பிராடுகளின் கள்ளதனமும், குறுக்கு புத்தியும் முட்டாள்களுக்கு புரியாததுதான் மிஸ்டர் வேல்முருகன், அதனை கண்டுபிடிக்க கொஞ்சம் அறிவு வேண்டும். ஆனால் உங்களின் சில போராளி வேடம் முட்டாளுக்கும் புரியும் இப்பொழுது உங்கள் லைக்கா எதிர்ப்பினையே பாருங்கள் வேல்முருகன், கத்தி படத்தை எதிர்தீர்கள், இப்பொழுது லைக்காவின் எந்திரன் படத்தை கண்டுகொள்ளமாட்டீர்கள், […]

மகனை வாரிசாக காட்டுவேன் : ஸ்டாலின்

கல்லகுடி போராட்டத்திலோ இல்லை இந்தி எதிர்ப்பிலோ மு.க முத்துவினை இது போல கலைஞர் அழைத்து திரிந்திருந்தால் திமுக வளர்ந்திருக்காது வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் திமுக தன்னை நிரூபிக்கவேண்டுமே தவிர, கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மகனை வாரிசாக காட்டுவேன் என்பதெல்லாம் பெரும் சரிவினையே கொண்டுவரும் இப்படி இவர்களாக கட்சியினை கெடுக்க வேண்டியது , அதன் பின் மோடி சதி, டெல்லியின் பில்லி, ஆரிய மிதி என சொல்லிகொண்டே இருக்க வேண்டியது  

மவுன சாமியாராக வேடம் தரித்து அமர்ந்தனர் நடிகர்கள்

ஏதும் பேசினால் பெங்களூரில் படம் ஓடாது, வாட்டாள் நாகராஜ் பொங்கிவிடுவார் ஆனால் காவேரி விவகாரத்தில் ஏதும் செய்ததாக செய்திவரவேண்டும் என யோசித்த நடிகர்களுக்கு கன்னடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்ற சிந்தனையில் “மவுன போராட்டம்” உதித்திருக்கின்றது ஈழம் என்றாலோ இன்ன பிற சிக்கல் என்றாலோ குதிப்பவர்கள் இப்பொழுது பேசா மடந்தை அல்லது மடந்தன் ஆகிவிட்டார்கள் இதில் இன்னமும் கவனித்தால் கன்னடரான பிரகாஷ்ராஜ் , முரளி மகன் அதர்வா , பிரபுதேவா குடும்பம் என பலரை காணவில்லை […]

காங்கிரஸ் கர்நாடகாவில் வென்றால் காவேரியில் தீர்வு கிடைக்கும் : குஷ்பூ

காங்கிரஸ் கர்நாடகாவில் வென்றால் காவேரியில் தீர்வு கிடைக்கும் என சொல்லியிருக்கின்றார் தலைவி இதற்கு பலர் கொதிக்கின்றார்கள், உண்மையில் தலைவி சொல்லியிருப்பது சரியான வாதம் மிக உயர்ந்த இடத்திலிருந்து அவர் இந்தியாவினை பார்த்துகொண்டிருப்பதால் சில உண்மைகளை சொல்ல முடிகின்றது. காவேரியில் நிச்சயம் நியாயம் கிடைக்காமல் போகாது, தேர்தல் ஒன்றிற்காகவே வாரியம் அமைப்பது தள்ளிபோகின்றது, இனி கன்னட தேர்தல் முடிந்தால் ஏதாவது ஒரு முடிவுக்கு அம்மாநில அரசு வந்தே தீரவேண்டும் அது காங்கிரஸ் அரசாக இருந்தால் கூடுதல் வசதி என்பதுதான் […]

இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் – பாபா ராம்தேவ்

இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் – பாபா ராம்தேவ் மோடியே பிரதமரான இந்தியாவில் நமக்கென்ன தகுதி குறைவு என நினைத்துவிட்டார் போல‌ காவி சாமியார்களுக்கெல்லாம் பிரதமர் ஆசை வந்திருப்பது நல்ல அறிகுறி அல்ல, அடுத்த தேர்தலில் அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால் அடுத்து பிரதர் பதவிக்கு சாமியார்கள்தான் வரிசையில் நிற்பாற்கள். இப்போது நினைத்தாலும் ராம்தேவ் பிரதமர் ஆகிவிடுவாராம், யார் செய்த புண்ணியமோ அவர் இன்னும் அப்படி நினைக்கவிலை என்பதால் பாரதம் தப்பித்துகொண்டிருக்கின்றது

அங்காவது இடுப்பு கிள்ளல் , இங்கே நேராக “புரட்சி”

இடுப்பை கிள்றது எல்லாம் இவர் ஸ்டைல் இல்லை, இடுப்பை பிடித்து தூக்கி புரட்சி செய்வதுதான் இவர் ஸ்டைல் இதெல்லாம் நடந்த நாட்டில், இடுப்பை கிள்ளிவிட்டு ஓடியது பெரும் சிக்கலாம் அங்காவது இடுப்பு கிள்ளல் , இங்கே நேராக “புரட்சி”    

தமிழிசை இல்லை என்றால் இந்தியாவில் பாஜகவே அழிந்துவிடும்

காவேரி என்றால் என்ன? குடகு எங்கிருக்கின்றது? தலைகாவேரி என்றால் என்ன என தெரியாதவன் எல்லாம் போராட வந்துவிட்டான் ஊட்டிபக்கம் மேயாறில் அணைகட்டினால் கன்னடம் நம்மிடம் கை ஏந்துமாம், கன்னடம் அல்ல அங்கிருக்கும் குரங்கு கூட கை ஏந்தாது மேயாற்று நீரை மறித்து கபினியினை முடக்கினால் காவேரி நிற்கும் என்பது, ஆற்காடு வீராசாமியினை முடக்கிவிட்டால் திமுகவே இல்லை என்பது போன்றது இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் அக்கா தமிழிசை இல்லை என்றால் இந்தியாவில் பாஜகவே அழிந்துவிடும் என்பது போன்றது

காவேரிக்காக தமிழக நடிகர் நடிகைகள் இன்று போராட்டம்

காவேரிக்காக தமிழக நடிகர் நடிகைகள் இன்று போராட்டம் அதாவது தமிழ் திரையுலகில் ஸ்ட்ரைக் நடக்கின்றது, படபிடிப்புகள் இல்ல்லாமல் எல்லோரும் கொட்டாவி விட்டுகொண்டிருக்கின்றார்கள். இதனால் போராடிவிட்டாவது வருவோமே என கிளம்புகின்றார்கள் பொதுவாக திரையுலகம் போராட வரும்பொழுது நரி வளையினை விட்டு வருவது போல வரும், அரசின் நிலைப்பாடு இன்னபிற சிக்கல்கள், இங்கே போராடினால் கன்னட ரியாக்சன் எப்படி? சிலர் நாம் கன்னடராயிற்றே? வரலாமா? என மெல்ல நிதானித்துத்தான் வருவார்கள் இப்பொழுது அப்படி வந்தாயிற்று ஆனால் கவனியுங்கள், சங்கத்து பெயர் […]