பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உணவு சரியில்லை – கார்த்தி சிதம்பரம் புகார்…

நேற்று இரவும், இன்று காலையும் சிபிஐ அளித்த உணவு சரியில்லை – கார்த்தி சிதம்பரம் புகார். மனிதர் அவர் வீட்டு சமையல்காரரை உள்ளே இழுக்க நினைக்கின்றார், செட்டியார் வீட்டு சமையல்காரர் தலைமறைவாகி விடுவது நல்லது

அராபத் பற்றி ஒரு வார்த்தை சொல்வாரா , அங்கிள் ?

எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம்; சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் இப்பொழுது இந்திய தமிழனை யார் கொத்தாக அழித்தார்கள்? அப்பொழுதே சொன்னோம் உலகெல்லாம் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் விசுவாசிகள் அந்தந்த நாட்டில் கொடிபிடிப்பார்கள் என்று. பல நாட்டில் ஆரம்பித்தாயிற்று, இனி தமிழகத்திலும் தொடங்கும் இதோ அங்கிள் வந்துவிட்டார் அல்லவா? பொறுத்து பாருங்கள் திருமுருகன் காந்தி, உதயகுமார் என வரிசையாக வருவார்கள் வந்து ரஷ்யா தாக்குதலை நிறுத்தவேண்டும், அது காட்டுமிராண்டி […]

ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்?

“தமிழன் தமிழகத்தில்தான் சாக வேண்டும், தமிழச்சியான ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்? அவள் மானமுள்ள தமிழச்சி அல்ல மானமுள்ள தமிழன் , தமிழச்சி தமிழகத்தில்தான் சாக வேண்டும் , நல்ல தமிழன், இனத்தை விட்டு ஓடிய ஓட்டக்காரி ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த கூடாது” —————- : நாம் தமிழர் தும்பிகள் நமக்கு கைதட்டும் போதே யோசிக்கனும் இவனுக ஒரு மாதிரின்னு, இப்படி எல்லாம் பேசி தொலைச்சா இவனுகள வச்சி என்ன செய்ய? டேய் […]

சென்னையிலும் நீர் பஞ்சம் வரலாம்… விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கலாம்….

உலகில் சில எச்சரிக்கைகள் ஒலிக்கதொடங்கிவிட்டது. அதாவது நகர விரிவாக்கம் ஏரிகள் ஆறுகளை விழுங்கி தள்ளியதன் விளைவாக, மழை என்றால் வெள்ளமும் கோடை என்றால் பெரும் வறட்சியும் ஏற்படுகின்றன‌ இப்பொழுது தென்னாப்ரிக்காவின் கேப் டவுன் நகரம் அந்த சவாலை சந்திக்கின்றது, அரசு கையினை பிசைகின்றது. விரைவில் பெரும் குடிநீர் தட்டுபாட்டினை அந்நகரம் சந்திக்கலாம் என பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது முதலில் தூங்கிய அரசு வறட்சி ஏற்பட்டதும் விழித்தது, ஆனாலும் நிலமை எல்லை மீறி சென்றுகொண்டிருப்பதால் அரசு திகைக்கின்றது. நகரம் […]

கலைஞர் பேரனுடன் கிரிக்கெட் விளையாடினார்

கலைஞர் பேரனுடன் கிரிக்கெட் விளையாடினார் : செய்தி “அய்யா நல்லா இருப்பீக, பேரன் கிட்ட மட்டும் விளையாடுங்க. எங்களுக்கு நீங்க பந்துபோட்டா ஒரே பந்துல 2 விக்கெட்டும் போயிரும் சாமி இன்னும் கொஞ்சநாளைல நாங்களே போயிருவோம். அதுவரைக்கும் எங்க பக்கம் வாராம இருங்க அய்யா..”  

மு.க ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிச்சயம் கலைஞரின் அரசியல் வாரிசாக முரசொலி மாறனே அறியபட்டிருந்தார். அவருக்கு அடுத்து உருவாகி அல்லது உருவாக்கபட்டு வந்தவர் ஸ்டாலின் ஸ்டாலினும் கட்சிக்கு பெரும் பணி ஆற்றியிருக்கின்றார், மிசா காலத்தில் அவர் சந்தித்த சோதனைகள் மிக கடுமையானவை அதனை எல்லாம் எந்த திமுகவினரும் மறுக்க முடியாது. பல இடங்களில் அவரின் கட்சிப்பணி கோடி காட்டவேண்டிய விஷயம், பாராட்டுகுரிய விஷயம் கலைஞரும், முரசொலி மாறனும் இல்லா நிலையில் திமுகவின் தலமையாக அவர் அறியபடுகின்றார் நிச்சயம் கலைஞரின் எழுத்தாற்றலை, சாணக்கியதனத்தை அவரிடம் […]

தாயின் மணிக்கொடி பாரீர்

ஸ்ரீதேவி என்பவர் திறமையான நடிகை, எல்லோராலும் அறியபட்டவர் பலரால் விரும்பட்டவர், சந்தேகமில்லை நல்ல நடிகை அதற்காக அவர் உடலில் தேசியகொடி போர்த்தி அரசு மரியாதை செய்வது என்ன நியாயமோ தெரியவில்லை நாட்டிற்கு அவர் செய்ததென்ன? மக்களுக்கு பணி செய்தாரா? எல்லையில் துப்பாக்கி பிடித்தாரா? இல்லை மக்களுக்காக போராட்டம்தான் செய்தாரா? நடிப்பு அவர் தொழில், அதனை செய்தார் அவ்வளவுதான், அதில் சம்பாதித்தார். வருமானத்தில் அரசுக்கு சரியாக வரிகட்டினாரா என்பது கூட தெரியாது ஏதோ அவர் லால்பகதூர் சாஸ்திரி போல […]

சங்கரமடத்திற்கு வீரமணி அஞ்சலி செலுத்துவது சால பொருந்தும் விஷயம்

கருப்பு பணங்கள் புழங்குகின்றன, பெரும் புள்ளிகள் பணம் பதுக்குமிடமே சங்கரமடமும், வீரமணியின் அறக்கட்டளையும் என்ற சர்ச்சை பெருங்காலம் உண்டு பக்தி கும்பல் சங்கராச்சாரியரிடமும், பகுத்தறிவு கும்பல் வீரமணியிடமும் பல விஷயங்களுக்கு பாதுகாப்பும் ஆலோசனையும் கேட்பது ஒன்றும் ரகசியமல்ல‌ இரண்டும் பல காரியங்களில் மர்ம மடங்களே, அந்த ஒற்றுமை உண்டு அவ்வகையில் சங்கரமடத்திற்கு வீரமணி அஞ்சலி செலுத்துவது சால பொருந்தும் விஷயம்  

1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார்

1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார். ராமசந்திரன் என்பவரின் மறுபக்கம் மிக இறுக்கமானது என்ற பேச்சுக்கள் வந்த நேரம் அது கங்கை அமரனை மிரட்டியது , ரஜினியினை சீண்டியது என திரையுலகத்தை மிரட்டி ஒடுக்கி வைத்து தமிழகத்தை மகா இறுக்கமாக வைத்திருந்தார் ராமசந்திரன் அப்பொழுது டி.ஆர் மிக துடிப்பாக பேசினார். உண்மையில் மகா தைரியமான பேச்சுகளாக அப்பொழுது கருதபட்டது. அதிரடி கேள்விகளை எழுப்பினார். திமுகவின் தொண்டராக குதித்துகொண்டிருந்தார் டி.ஆர் அவரை பற்றி அதிமுகவின் முக்கிய கூட்டமுடிவில் அவர்களிடம் கேட்டார்கள், […]

கார்த்தி சிதம்பரம் கைது …

என்னதான் படித்திருந்தாலும் , அரசியல் அனுபவமிருந்தாலும் நடப்பு யதார்த்தம் என்பது சிதம்பரம் குடும்பத்திற்கு தெரியவில்லை போலிருக்கின்றது குறி வைத்த உடனே லண்டனுக்கோ, பாரிஸ்க்கோ, சிங்கப்பூருக்கோ சென்றிருக்க வேண்டாமா? மல்லையாவும், லலித்மோடியும், நீரவ்மோடியும் வந்தபின் சீனியாரிட்டிபடி நான் கடைசியாக வருகின்றேன், என் உயிருக்கு ஆபத்து என ஒரு அறிக்கை விட்டிருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா? தப்பு கணக்கு போட்டிருக்கின்றார் கார்த்தி சிதம்பரம். யாரை பிடித்தால் எங்கு வலிக்கும் என்பது அறியா கூட்டமா? மத்தியில் இருக்கின்றது கனிமொழி போன்ற அரசியல் […]