பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம் எஸ்.ஏ சந்திரசேகர்

ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டு போனவர்களில் ரஜினி, கமல் வரிசையில் எஸ்.ஏ சந்திரசேகரும் வந்துவிட்டார். சினிமாவில் அரசியலும் புரட்சியும் பேசிவிட்டு தியேட்டருக்கு வெளியே மகனை முதல்வராக்குவது பற்றிய சிந்தனையிலே இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகர், அவர் இப்பொழுது டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம் அவரே டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிப்பாராம். அரசியல் படமென்பதால் அவருக்கு வினோத ஆசை வந்திருக்கின்றது. அதாவது அரசியலில் பிசியாக இருக்கும் நடிகர்களை நடிக்க அழைத்திருக்கின்றார் அதில் தலைவி குஷ்புவினை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றார், […]

துர்கா ஸ்டாலினின் ‘அவரும் நானும்’ நூல்

முன்பெல்லாம் திமுகவில் அண்ணா, பெரியார், திராவிடம் என நூல் வெளியிடுவார்கள் கலைஞர் தானே எழுதிய இலக்கிய‌ நூலை வெளியிடுவார், நெஞ்சுக்கு நீதி போன்றவை எழுதினாலும் அதிலும் கட்சியும் தானும் கடந்துவந்த பாதையினை ஆவணம் போல் சொல்லியிருப்பாரே தவிர சுயபுகழ்ச்சி இருக்காது அனுதினமும் முரசொலியில் எழுதிகொண்டே இருந்ததால் தனிபட்ட முறையில் அவரை பற்றி எழுத அவசியமும் இல்லை முரசொலி மாறன் போன்றவர்கள் கூட திராவிட கொள்கை புத்தகம்தான் எழுதினார்கள் இப்பொழுது திமுக மாறிவிட்டது, உதயநிதி ஸ்டாலின் கோஷ்டிகளின் அழிச்சாட்டியம் […]

காவேரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போதைக்கு முடியாது என பேசியிருக்கின்றார் நிதின் கட்காரி அதுவும் சென்னையிலே பேசியிருக்கின்றார் காவேரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்கபட வேண்டும் என்று சொல்லி கதவினை சாத்திகொண்டது உச்சநீதிமன்றம், இன்னும் 4 வாரங்களே மீதமிருக்கின்றன‌ இதில் இவர் இப்படி சொல்வது நீதிமன்ற அவமதிப்பன்றி வேறல்ல, ஒரு அமைச்சர் இப்படி சொல்வது அபத்தமான சட்ட மீறல் காவேரி விவகாரத்தில் காங்கிரஸ் ஏமாற்றியது, எதற்காக என்றால் கன்னட வாக்கு வங்கியினை இழக்க அது விரும்பவில்லை, […]

பிப்ரவரி 2018 ……

உலகம் மகா பரபரபாயிற்று டிரம்ப் எப்பொழுது பிப்ரவரி 28ம் தேதி ஆகும் என காத்துகொண்டிருக்கின்றார். புட்டீன் அணு ஆயுத பட்டனில் கைவைத்துகொண்டிருக்கின்றார் பிரிட்டனும் , பிரான்சும் கடும் ஆலோசனையில் உள்ளது, சீனாவின் ஜின்பெங் ஆலோசனை குழுவினை கூட்டியுள்ளார். வடகொரிய அதிபர் கூட ராக்கெட் சோதனையினை நிறுத்த உத்தவிட்டாயிற்று மகிந்த ராஜபக்சே முதல் நவாஸ் ஷெரிப் வரை எல்லோரும் அவரின் அந்த மகா முக்கிய முடிவினை நோக்கியே பார்த்துகொண்டிருக்கின்றார்கள், சிரியாவில் கூட சண்டை போடும் எல்லோருக்கும் மகா ஆர்வம் அந்த […]

எந்த ராக்கெட் ராஜா?

நெல்லை பகுதிகள் சாதிய கொலைகள், கலவரங்களுக்கு பெயர் பெற்றது. உண்மையில் சாதிவெறியால் கொலை நடக்குமா என்றால் இல்லை யாராவது இருவர் வியாபார விஷயமாக மோதுவார்கள், அவர்களுக்கு கூலிபடையாக சிலர் வருவர் அவர்கள் வெட்டிகொள்வது சாதிகொலை என அறியபட்டு அது கலவரமாகும் கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார், முத்துலிங்கம், ஜாண் பாண்டியன், பசுபதி பாண்டியன், கட்டதுரை போன்ற பிரபல ரவுடிகள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள், அவர்கள் தெரிவார்களே தவிர அவர்கள் பின்னால் இருப்பவர்கள் தெரியமாட்டார்கள் அப்படிபட்ட நெல்லையில் நேற்றும் […]

கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம்

இதனை உஷா ராஜேந்தர் சொல்லியிருந்தால் எவ்வளவு செலவு அனாலும் பரவாயில்லை என ராம்ஜெத்மலானியினை ஜாமீனுக்கு வாதாட‌ தயாராக இருக்க சொல்லலாம்.. தமிழகத்தில் பகுத்தறிவு ஊன்றபட்டு வளர்க்கபட்டு அது மரமாயிற்று என்றார்கள், பெரியார் மண் இது என்றார்கள், இந்தியாவில் கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம் இது என்றேல்லாம் ஏக பெருமை பேசும் தமிழ்நாடு இது அப்படிபட்ட மாநிலத்தில் ஒரு மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது, நம்புங்கள் அப்படி ஒரு செய்தி இதுவரை ஆப்கானினும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான், வர்சிஸ்தானிலும்தான் […]

திருப்பதியில் ராஜபக்சே !

என்னதான் மதம் மாறினாலும் அவன் அடிமனதில் தன் மூதாதையர் மதம் பற்றிய அச்சம் இருக்கும் என்பார்கள் , அது சிங்கள அரசியல்வாதிகள் விஷயத்தில் சரியாக இருக்கின்றது பொதுவாக சிங்கள அரசியல்பீடத்தின் உச்சிக்கு வருபவர்கள் யாரென்றால் கிறிஸ்தவர்கள், காரணம் சிங்களரில் நன்கு படித்தவர்கள் அந்த கிறிஸ்தவர்களாக இருப்பார்கள் ஆனால் சிங்கள சட்டபடி பவுத்த சிங்களனே அதிபராக முடியும் என்பதால் அவர்கள் மதம் மாறி ஆட்சியில் அமர்வார்கள் தமிழகத்தில் கொள்கைமாறி பதவிக்கு வருவார்கள் அங்கே மதம்மாறி வருவார்கள் அவ்வளவுதான் சாலமன் […]

மக்களே எல்லா தீர்ப்பும் அளிக்க நீதிமன்றம் எதற்கு?

ஆதார் அட்டை வந்ததினால் ரேஷன் கடை முதல் பல இடங்களில் போலி முகவரிகள் தடுக்கபட்டன, இதனால் அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் என்கின்றது செய்தி இதனால்தான் சொன்னோம், ஆதார் அட்டைகள் நாட்டின் நிர்வாகத்திற்கும், திட்டமிடலுக்கும் மிக அவசியம் என்றோம் இதோ நடந்திருக்கின்றது. ஏதும் ஊழல், மோசடி என்றால் வரிந்துகட்டி வருபவர்கள், ஊடகத்தார் எல்லாம் மக்கள் பணம் சேமிக்கபட்டிருக்கும் இச்செய்தியினை சொல்லவே மாட்டார்கள் இதுவே 17 ஆயிரம் கோடி ஊழல் என சொன்னால் பொங்கிகொண்டு வருவார்கள், […]

பாவம் கமல் கட்சிக்காரர்கள்…

கமலஹாசனுக்கும் சில தும்பிகள் இருக்கின்றார்கள், அவர் நாட்டிற்கு நல்லது செய்வது உனக்கு ஏன் பொறுக்கவில்லை என பலர் கொதிக்கின்றார்கள். நம்மவர், கம்மவர், கம்மாய்க்காரர் , கடலைமிட்டாய்க்காரர் என பல அடைமொழியோடெல்லாம் குதிக்கின்றார்கள் குதிக்கட்டும், அவர்கள் விருப்பம் ஆனால் கமலஹாசனிடம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் உண்டு. கமல் தும்பிகள் அதை கேட்டால் கேட்கட்டும் இல்லாவிட்டால் ஒழியட்டும் கமலஹாசன் அறிவாளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லோரும் தன்னைபோல் அறிவாளியாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், தனக்கு தலையாட்டுபவர்களை மட்டும் அருகில் […]

ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கின்றார் கமலஹாசன்

பொதுவாக இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளமாட்டேன் அதனால் கலாம் அஞ்சலிக்கு செல்லவில்லை : போனவாரம் கமலஹாசன் ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கின்றார் கமலஹாசன் : தற்போதைய செய்தி நடிகையின் “மய்ய”த்திற்காக மும்பை பறக்கும் கமல், கலாமுக்காக மதுரைக்கு வரமாட்டாராம் அவர் கொள்கை தடுக்குமாம் இனி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இந்த மனிதர் பச்சை பொய் பேசுவதனால் அரசியலுக்கு சரி என்றோ, இல்லை இப்படி பேசிவிட்டு தலைகீழாக நடப்பதால் அரசியலுக்கு சரி இல்லை என்றோ எந்த […]