பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மகராசனா இருப்பீங்க, எங்கள விட்டுருங்க பிளீஸ்

இங்க பாருங்க, சசிகலாவினை தைரியமாக எதிர்த்தோம் என்பதால் தமிழக மக்களிடம் எங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது ஆனால் உங்களோடு நாங்கள் சேருவதை அறிந்த தமிழகம், உங்களுக்கு சசிகலாவே பரவாயில்லை என எண்ண ஆரம்பித்துவிட்டது எசமான் உங்களுக்கு தமிழ்நாட்டில அவ்வளவு நல்ல பெயருங்கோ… அய்யா எங்கள விட்டுருங்க.. உங்க கட்சியினை அந்த தமிழிசை பொன்னார் வளக்கட்டும், நாங்க உங்க பின்னாலே வந்தா அவ்வளவுதான் ராசா மகராசனா இருப்பீங்க, எங்கள விட்டுருங்க பிளீஸ்  

திமுகவிற்கு ஏன் ஆர்.கே நகரில் டெப்பாசிட் போனது

திமுகவிற்கு ஏன் ஆர்.கே நகரில் டெப்பாசிட் போனது: அரசியல் நிபுணர்கள் அலசல் இதில் அலச என்ன இருக்கின்றது? என்று எங்கள் தங்க தலைவியினை, குணவதி குஷ்புவினை இந்த திமுக அல்லக்கைகள் விரட்டியதோ, என்று அவர் வீட்டின் மேல் கல் எறியும் அளவு சென்றார்களோ அன்றே திமுக சரிவு ஆரம்பமாயிற்று தலைவியின் மனதினை வேதனைபடுத்திய‌ யாரும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை. தலைவியின் கண்ணீருக்கு பரிகாரம் செய்யாதவரை திமுக உருப்படாது. காவல்துறையினை நினைத்தால் அசிங்கமாக உள்ளது : தினகரன் சீற்றம் […]

அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க : விஷால்

“பிராமாணம் கொடுக்காமல் ஓடிய இரண்டு பேரால் நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்க முடியாமல் போனது, அந்த இரண்டு பேரும் என்னை காத்த‌ தெய்வங்க, என் டெப்பாசிட்டை காத்த காவல் சாமிகள் அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க”

ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட வோட்டு

சும்மாவே ஆடு சாமிக்கு, கிடா வெட்டி சாராயம் ஊற்றினால் எப்படி ஆடும், பெரும் ரணகளம் செய்யாதா? ஜெயாடிவி அதனைத்தான் செய்கின்றது. ஏதோ மாபெரும் அணுகுண்டு சோதனையினை செய்த விஞ்ஞானிகள் போல பெரும் ஆரவாரம் ஏதோ மிகபெரும் ராக்கெட்டை மிக சரியாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளை போலவும், மானிடனுக்கு செயற்கை உயிர் கண்டுபிடித்ததை போலவும் கடும் கொண்டாட்டம் அவர்கள் நேரம் அப்படி. ஆடத்தான் செய்வார்கள் ஆடட்டும் என சொல்லிவிட்டு அடுத்தசேனலுக்கு சென்றால் சந்திரபாபு அட்டகாசமான சிட்டிவேஷன் சாங் பாடிகொண்டிருந்தார் […]

சில நேரங்களில் பெரும் சோகம் மனதை கவ்வுகின்றது

தேர்தல் முடிவு போரடித்துவிட்டது, சுவாரஸ்யமே இல்லை. மசூசூதனன் கோஷ்டி அடிதடி செய்கின்றதாம். உண்மையில் அது பன்னீருக்கும் ஓபிஎஸ்க்கும் பாஜக‌ அடிக்க வேண்டிய அடி. இவ்வளவு செய்தும் வெற்றிபெற முடியவில்லை என்றால் சக்தி அவ்வளவுதான் திமுக தரப்ப்பு இன்னும் வாய்திறக்கவில்லை. ராமசந்திரன் கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வென்றபொழுது இரண்டாம் இடத்தை காமராஜர் கட்சிதான் பிடித்திருந்தது, மூன்றாம் இடமே திமுகவிற்கு இருந்தது கலைஞர் அதிர்ந்தார் அதன் பின் என்னவெல்லாமோ செய்து கட்சியினை நிமிர்த்தினார், அதெல்லாம் இனி திரும்புமா என்பதை காலம்தான் […]

மாவோ செய்த புரட்சியினை நான் செய்கிறேன் : சீமான்

‘சீனாவில் மாவோ செய்த புரட்சியினைத்தான் நான் இங்கு என் தம்பிகளுடன் களத்தில் செய்கின்றேன், இது தெரிந்துதான் கடந்த தேர்தல் முடிவிலே கம்யூனிஸ்ட் கட்சி கூட எங்களை அவர்களோடு இணைய அழைத்தது அய்யா அருணன் கூட அழைத்திருந்தார் இனி அவர்களுடன் இணையலாமா என தம்பிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யபடும், இப்படி டெப்பாசிட்டும் போயி, அதுக்கும் மேலே பைன் எல்லாம் போடும் அளவு வொட்டு வாங்குனா எப்படி ஹிஹிஹிஹிஹி”

தமிழிசைக்கே சிரிப்பு வந்துவிட்டது

“நாம நம்பின மாதிரியே 200 வோட்டு கூட வாங்கவில்லை, இப்போழுது போய் எப்படி தமிழகத்தில் காவிகொடி பறக்கும், பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லமுடியும்? ஆனால் அப்படி சொல்லுங்கள் என டெல்லியிலிருந்து ஒரே போன்கால், இதை கேட்டு தமிழிசைக்கே சிரிப்பு வந்துவிட்டது தமாசு… தமாசு..”  

ஆயிரம் சமாதானம் காரணம் சொன்னாலும் ஒரு விஷயம் மகா உண்மை

ஆயிரம் சமாதானம் காரணம் சொன்னாலும் ஒரு விஷயம் மகா உண்மை உண்மையில் பெரும்பான்மை தமிழர்களுக்கு என்ன காரணத்தினாலோ கலைஞர் திமுகவின் மேல் பெரும் அபிமானமில்லை, அது காமராஜரை தோற்கடித்த விதமா இல்லை வேறு வகையான விஷயமா என இன்றுவரை பதில் இல்லை கலைஞரின் திமுகவினை எதிர்த்தார் என்பதற்காக பின் ராமசந்திரனை விழுந்து விழுந்து ஆதரித்தார்கள், பின் ஜெயா என அது தொடர்ந்தது, ஜெயா மீது ஊழல் வழக்குகள் வந்தாலும் கலைஞர் பின் தமிழகம் திரளவில்லை இது கலைஞருக்கு […]

தினகரன் ஆர்கே நகரில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றார்…

நினைத்தது போலவே, எல்லோரும் பயந்தது போலவே தினகரன் ஆர்,கே நகரில் ஜெயித்துகொண்டிருக்கின்றார் ஆக நாங்கள்தான் அதிமுகவினை நடத்தியவர்கள், எப்படி வாக்குகளை வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என செவிட்டில் அடித்து நிரூபித்திருக்கின்றது சசிகலா கோஷ்டி இரட்டை இலை இல்லாவிட்டாலும் எங்களால் வெல்லமுடியும் என யார் முகத்தில் எல்லாமோ கரிபூசுகின்றது அக்கோஷ்டி ஜெயாவிற்கு பின் அவர் தொகுதியினை கூட விடமாட்டோம் என வந்து நிற்கின்றார்கள் சசிகலா அணியினர் இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். […]

காலத்தில் வந்த கலகக்காரன் அவர்.

காலத்தில் வந்த கலகக்காரன் அவர். கால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள். இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார். புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை […]