பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயா உடல் நிலை பற்றி உண்மை அறிக்கை வெளியிடவில்லை : அப்பல்லோ அதிபர்

“ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மக்கள் அச்சப்பட கூடாது , சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் என்று அறிக்கை தரப்பட்டது. உண்மை அறிக்கை வெளியிடவில்லை” : அப்பல்லோ அதிபர் பிரதாப் ரெட்டி அதாவது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை தொடங்கி, ஒவ்வொருவராக சென்று தங்கள் அப்பல்லொ அனுபவத்தை பகிர்வதால் விரைவில் இந்த ரெட்டியும் செல்ல வேண்டும் அதற்கு முன்பு தன் பாதுகாப்பிற்காக இப்பொழுதே சில விஷயங்களை கசியவிடுகின்றார் சட்டம் ஒழுங்கு […]

மனம் உருகி தாயினை பாசமுத்தமிடுகின்றார் ராகுல்

கிட்டதட்ட 23 ஆண்டுகாலம் கட்சியினை காப்பாற்றிவிட்டு , இன்று அதில் சிறு கீறலும் விழாமல் அதற்கொரு தலைவனையும் கொடுத்துவிட்டு செல்லும் பெருமித உணர்வு சோனியா முகத்தில் தெரிகின்றது பெரும் கட்சிக்கு தலைவன் என்றாலும், தன் தாய் பொறுப்பிலிருந்து விலகும்பொழுது, அரசியலுக்கு முழுக்கு என சொல்லி செல்லும்பொழுது மனம் உருகி தாயினை பாசமுத்தமிடுகின்றார் ராகுல் எவண்டா சொன்னது? இந்திராவும் சஞ்சயும் ராஜிவும் இல்லை என்றால் காங்கிரஸ் அழிந்துவிடும் என்றது? அது ஆயிரம்காலத்து பயிர், எந்நாளும் ஆலமரமாய் நிலைத்திருக்கும் அது […]

ஆர்.கே நகர் இடைதேர்தலில் சுவாரஸ்யமான காட்சிகள்

இந்த ஆர்.கே நகர் இடைதேர்தலில் சுவாரஸ்யமான காட்சி காண கிடக்கின்றது நாஞ்சில் சம்பத் தன் பலாப்பழ தலையினை அசைத்து என் தலைவன் தினகரன் என முழங்கிகொண்டிருக்கின்றார். இப்பக்கம் வைகோ ஸ்டாலின் முதல்வர் ஆவார் என பிரச்சாரம். வைகோவின் பேச்சு ஆர்.கே நகரில் திமுக வெல்ல வேண்டும் என்பதைவிட திமுகவிடன் நான் சரணடைந்துவிட்டேன் எனும் பொருளையே மறைமுகமாக சொல்கின்றது இந்த இருவரும் திமுகவில் எப்படி இருந்தவர்கள்? கலைஞரே தலைவர் என சொல்லிகொண்டிருந்தார்கள் பின் வைகோ தலைவர் என நாஞ்சில் […]

மலேசியாவில் இருந்து இறக்குமதியான மண் தரம் இல்லை : தமிழக சர்ச்சை

மலேசியாவில் இருந்து இறக்குமதியான மண் தரம் இல்லை : தமிழக சர்ச்சை எது தரமில்லை? உலகின் மிக உயர்ந்த இரட்டை கோபுரங்கள், அசால்ட்டாக 50 மாடி தாண்டும் குடியிருபுகள் முதல் எந்த மழைக்கும் வெள்ளத்திற்கு அசராத பாலங்கள் வரை அந்த மணலில்தான் இங்கு கட்டபட்டிருக்கின்றது, அது தரமில்லா மணல் என்றால் எப்படி சாத்தியம்? அந்த மண் கடல்தாண்டி அக்கரை சென்றால் தரமற்றதாகிவிடுமா? மலேசிய மண் தரமாகத்தான் இருக்கின்றது, தமிழக ஆட்சி தரம்தான் சரியில்லை

ஒரு வருடம் கழித்து அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி

ஒரு வருடம் கழித்து அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி இளம் வயதில் இருந்தே அந்தமனிதருக்கு எல்லாமே போராட்டம். விபத்தில் சிக்குவார் அதோ முடிந்தான் கருணாநிதி என்பார்கள் அவரோ எழுந்து வருவார் அடித்து உதைத்து உயிர் போய்விட்டது என சாக்கடையில் போட்டுவிட்டு செல்வார்கள், கொஞ்சநாளில் வந்து நிற்பார் அவர் அண்ணா போய்விட்டார், ராமசந்திரன் போய்விட்டான் இனி கட்சி அவ்வளவுதான், கலைஞரும் அவ்வளவுதான் என்பார்கள் ஆனால் அவர் அசால்ட்டாக அரசியலில் நிற்பார் வந்துவிட்டது சர்காரியா கமிஷன் இனி கலைஞர் உள்ளே […]

அந்த விஷயத்தை பேசாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது

ஆளுநரை விமர்சியுங்கள், அவரின் சோதனையினை எதிர்த்து பேசுங்கள் அது வேறு விஷயம் ஆனால் இப்படி கீழ்தரமாக விமர்சிக்கும்பொழுது அந்த பெண்ணையும் கொஞ்சம் நினைத்துபாருங்கள், செய்திகளுக்காக இங்கிலாந்து இளவரசி டயானாவினையே விரட்டிகொன்ற உலகம் இது, அந்த ஏழைபெண்ணை விடுமா? எவ்வளவு வறுமையான குடும்பமாக இருந்தால் தென்னங்கீற்றுக்கு பின்னால் நின்று குளித்திருக்க வேண்டும், அந்த வறுமையினையும் அப்பெண்ணின் இயலாமையினையும் இப்படி பகிரங்கமாக சொல்ல வேண்டுமா? அப்பெண் ஒன்றும் ஜடம் அல்ல, அவளுக்கும் மான அவமானங்கள் உண்டு, அவளுக்கும் ஒரு குடும்பம் […]

ஆய்வுக்கு சென்ற ஆளுநர் மீது பரபரப்பான குற்றசாட்டு

“என்னது கைய பிடிச்சி இழுத்தியா? என்னது வாய்க்கா பிரச்சினை? திரும்ப திரும்ப பேசுறீர் நீர்..” ஆய்வு சென்ற ஆளுநர் மீது பரபரப்பான குற்றசாட்டு வந்திருக்கின்றது ஏற்கனவே சென்னா ரெட்டி என்றொரு ஆளுநர் சந்தித்த அவமானம் கொஞ்சமல்ல, மிக அபாண்டமான குற்றசாட்டு அது இவர் இரண்டாவது குற்றசாட்டினை சுமக்கின்றார், நிச்சயம் இதுவும் அபாண்டமே. இதற்காக ஒரு ஆளுநர் அவ்வளவு தூரம் செல்வாரா? திமுகவும், விசிகவும் போராட்டம் நடத்தும் வேளையில் இப்படி குற்ற்சாட்டு வந்திருப்பது யாருக்கு பாதகம் என சொல்லி […]

இந்த திராவிட கும்பல்கள் தங்களை அறியாமல் ஒரு விபரீத காரியத்தில் இறங்கி இருக்கின்றன‌

இந்த திராவிட கும்பல்கள் தங்களை அறியாமல் ஒரு விபரீத காரியத்தில் இறங்கி இருக்கின்றன‌ அதாவது தமிழகத்தில் புத்த, சமண ஆலயம் நிறைய இருந்ததாகவும் பின் அது இந்து ஆலயமாக மாற்றபட்டதாகவும் பல குரல்கள் எழுகின்றன‌ பாஜக போன்ற கட்சிகள் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க இவர்கள் இப்படி எல்லாம் கிளம்புகின்றார்களாம், இது வலுக்குமானால் நாங்கள் எல்லாம் முன்னாள் பவுத்தர்கள் இந்த ஆலயங்கள் எல்லாம் எங்கள் புத்த ஆலயம் என்றொரு கூட்டம் கிளம்பும் கிளம்பினால் என்னாகும்? பெரும்பான்மையாக இங்கு இருக்கும் […]

பணம் கொடுப்பதை தடுக்க திடீர் சோதனை நடத்துவோம்: தேர்தல் அதிகாரி பேட்டி

பணம் கொடுப்பதை தடுக்க திடீர் சோதனை நடத்துவோம்: தேர்தல் அதிகாரி பேட்டி அவர்கள் என்ன குழாயில் நீர் வருவது போலவா எப்பொழுதும் கொடுத்துகொண்டிருப்பார்கள்? அவர்களே திடீர் என்றுதான் கொடுப்பார்கள், அதனை இவர் திடீர் என சென்று தடுப்பாராம். இணையம் முதல் இன்னும் பல இணைப்புகள் வரை பணம் கொடுக்க ஏகபட்ட வழிகள் இருக்கின்றன, கேஷ்லெஸ் இன்டியா என்பது தேர்தலில் பணம் கொடுக்கும் வகையிலும் வந்தாயிற்று வோட்டுக்கு இணையத்தில் “பிட் காய்ன்” கொடுக்கும் அளவிற்கு அவர்கள் சென்றாயிற்று, இதில் […]

திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அதாவது கவர்ணர் மாநில சுயாட்சியினை மீறுகின்றாராம், இது ஸ்டாலினுக்கும் திருமாவிற்கும் பொறுக்காதாம் நிச்சயமாக இங்கு நடப்பது பழனிச்சாமி ஆட்சி என்றுதான் நம்பபடுகின்றது, எங்கள் சுயாட்சியில் நீங்கள் எப்படி தலையிடமுடியும் என அவர்தான் பொங்க வேண்டும் ஆனால் அவரோ மகா அமைதி ஆட்சியிலே இல்லாமல் மாநில சுயாட்சி என திருமாவும் ஸ்டாலினும் போராடுகின்றார்களாம். பழனிச்சாமி செய்ய வேண்டிய போராட்டத்தை இவர்கள் ஏன் செய்கின்றார்கள்? ஒருவேளை இருவருமே பழனிச்சாமியின் […]