பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும்…

அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும், அதனை கையில் இருக்கும் எல்லா ஆவணத்தோடும் இணைத்தாக வேண்டும் என ஒரே அறிவிப்புகள் சரி வெளிநாட்டில் இருப்பவன் என்ன செய்ய என தூதரகத்தில் விசாரித்தால் அதெல்லாம் இங்கு முடியாது என்றொரு பதில் மட்டும் வருகின்றது. என்ன செய்யலாம் என கேட்டால், தெரியாது உன் ஊருக்கு போ என்ற ரீதியில் பதில்வருகின்றது, விமான டிக்கெட் தருவீர்களா என்றால் சத்தமே இல்லை ஆக வெளிநாட்டுவாசி எல்லாம் இந்தியனே அல்ல என்றொரு முடிவுக்கு இந்த […]

திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம்

இந்த திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம், அதாவது புத்த ஆலயங்கள் எல்லாம் இந்து ஆலயமாக மாறிற்றாம் அதனால் அவர் அதனை எல்லாம் இடிப்பாராம் ஈழத்தின் அனுராதாபுர புத்த விகாரையிலும் , நாகபட்டினத்தில் இருந்த விகாரையிலும் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துத்தான் ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான் என்கின்றது வரலாறு மிஸ்டர் திருமா? அதனையும் உடைத்துவிடலாமா? ஏதோ ஒரு பொறுப்பற்ற கூட்டம் வட இந்தியாவில் தகாத செயலை செய்தால், அதனையும் இங்கே செய்வேன் என கிளம்புவதா புரட்சி? […]

பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு பழனிசாமி கடிதம் முன்பெல்லாம் அடிக்கடி மாதம் இருமுறை ஓடி சென்று மோடிக்கு வணக்கம் சொன்ன பழனிச்சாமிதான் இப்பொழுது கடிதம் எழுதுகின்றாராம் எப்படி எல்லாம் இவரும் பன்னீரும் ஓடினார்கள்?, டெல்லி செல்லும் விமானங்கள் எல்லாவற்றிலும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே இருந்தார்கள் என்பது உலகறிந்த விஷயம் ஆனால் மிக முக்கிய பிரச்சினையில் இவர் கடிதம் மட்டும் எழுதுவாராம், ஏன் என்றால் ஜெருசலேம் பிரச்சினை தொடர்பாக டிரம்பை சந்தித்து […]

அழிவில் இருக்கும்பொழுதெல்லாம் சாதி தெரியாது

காமராஜர் கன்னியாகுமரியினை தமிழகத்துடன் சேர்த்தபொழுது இது நாடாருக்கான செயல். நாடார்களை ஒரு நாடார் சேர்க்கின்றார் என பொங்கிவர்களையும் நாடார்கள் மிகுந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இருப்பதே சரி என சொன்ன நாடார் சங்கங்களையும் இப்பொழுது பழனிச்சாமி அரசு கன்னியாகுமரியினை ஒதுக்கி வைக்கும்பொழுது காணவில்லை அட அவர்களை விடுங்கள், நாடார் சங்கங்களையும் காணவே இல்லை எவனாவது ஒருத்தன் கன்னியாகுமரி நாடார்கள் நிரம்பியது என்பதால் பழனிச்சாமி அரசு கண்டுகொள்ளவில்லை என கிளம்புகின்றானா என்றால் இல்லை அவனுக்கு தெரியுமா என்றால் தெரியும் , […]

மணிசங்கர அய்யர் விவகாரம்

ராஜிவின் தோழர், கேம்பிரிட்ஜ் படிப்பு என மிகசிறந்த தகுதிகளை கொண்டிருந்தவர் மணிசங்கர அய்யர் அவரின் ஆங்கிலம் அவ்வளவு அழகானது, பாராளுமன்றத்தில் இதுவரை பேசிய பேச்சுக்களில் மிக அழகான பேச்சு எனும் வரிசையில் நிச்சயம் மணிசங்கர அய்யர் பேச்சும் வரும் மகா ஆச்சரியமான ஆங்கில பேச்சு அவருடையது, 1960களிலே IFS தேறியவர். இந்திரா ராஜிவின் மரியாதைகுரியவராக இருந்தவர் அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் திறமை இல்லாதோர் அல்ல, மணிசங்கர் அய்யர் அந்த வகை. அவரின் ஆங்கில‌ எழுத்துக்களின் கட்டுரைகள் பல […]

ஆளுநரே வந்தபின்னும் அங்கு வராத முதல்வர் எதற்கு?

குமரி மாவட்டமே கதறி அழுதுகொண்டிருக்கும் பொழுது இங்கே முதல்வர் கண்டுகொள்ளாமல் இருந்தால் மக்களுக்கு கோபம் வரத்தான் செய்யும் ஆச்சரியமாக மத்திய அரசும், ஆளுநரும் அங்கே சென்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கும்பொழுது தமிழக முதல்வரை காணவில்லை இதில் மத்திய அரசின் நிலை குறைசொல்லமுடியாதது, தன் உரிமையினை கேட்டு பெறவேண்டிய மாநில அரசு மீதே சர்ச்சை குமரிமாவட்டத்தில் சில பாதிரிகள் ஊர்வலம் சென்றதாக தகவல்கள் வந்தது புயல் பொதுவான அழிவு, இதில் கிறிஸ்தவர்கள் மட்டும் பாதிக்கபட்டார்கள் என அந்த […]

குக்காக இருந்தவர்களுக்கு குக்கர் சின்னம்

“அக்கா சாப்பிட்டீங்களா அக்கா.. அக்கா மதியத்திற்கு என்ன சமைக்கணும் அக்கா. அக்கா நான் சமையல்காரி அக்கா” என ஊர் பார்க்க அழுதால் என்ன சின்னம் கொடுப்பார்கள்? குக்கர் சின்னம்தான் கொடுப்பார்கள் ஆக ஆர்.கே நகர் மக்களே குக்கர் சின்னம் என்பது சசிகலா ஜெயலலிதாவிற்கு சமைத்துபோட்டு கவனித்துகொண்ட “தியாகத்தை” குறிக்கும் சின்னம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் இனி ஜெயா வீட்டில் இருந்த குக்கர் இதுதான் என அதோடு தினகரன் கிளம்புவார்கள், அட்டகாசமான வாய்ப்பு அவர்களுக்கு கலைஞர் நலமாக இருந்திருதால் […]

பிரம்மா எனும் குஷ்பு படம்

இப்பொழுதெல்லாம் நமது மரியாதைகுரிய டிவி ஜெயா டிவி தான். ஆம் அடிக்கடி குஷ்பு படமாக ஓளிபரப்பி நம் மகிழ்சி குறையாமல் பார்த்துகொள்கின்றார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் இனி ஜெயா டிவி முதலிடத்தில் வர வாய்பிருக்கின்றது இன்று பிரம்மா எனும் குஷ்பு படம் ஓடிகொண்டிருக்கின்றது, சத்யராஜ் என்பவர் சைடு ஆட்டிர்ஸ்ட்டாக நடித்திருக்கின்றார் இந்த உலகிலே இதுவரை பிறந்த அழகிகளில் தலைசிறந்தவராக படத்தில் தெரிகின்றார் குஷ்பு, அதுவும் டென்னிஸ் விளையாடும் ஸ்டைலே தனி கொஞ்சம் உயரமாக இல்லாமல் போயிவிட்டார் தலைவி, […]

கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள்

கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அங்கு சென்றனர் : செய்தி ஏற்கனவே குமரி மாவட்டம் கடும் அதிருப்தியில் இருக்கின்றது, இப்பொழுது தூத்துகுடியும் சேர்ந்தாயிற்று இது தமிழக அரசுக்கு மிகபெரும் தலைகுனிவு என்பதில் சந்தேகமில்லை, பாரதிராஜா பாணியில் சொல்வதென்றால் “தகப்பன் இருக்கும்பொழுது அடுத்தவீட்டுகாரனிடம் உதவிக்கு செல்வது அந்த தகப்பன் செத்ததற்கு சமானம்” தலைகுனிவு, அவமானம் பற்றியெல்லாம் இந்த அரசு மிகவும் பழகியிருக்கும் போல முன்பு கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைய பெரும் […]

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில அப்படி இல்லண்ணே…

அண்ணே நீங்க நினைக்கிற மாதிரி ஸ்பெக்ரம் வழக்கில் உள்நோக்கம் எல்லாம் இல்லை, சட்டம் புரியாமல் பேசாதீர்கள். நீதிதுறையில் அரசு தலையிட முடியாதுண்ணே அப்படியா? ஆமாண்ணே அது ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்போ ஜெயா சாகும்வரை தீர்ப்பே வரலியே ஏன்? நீதிபதி அவ்வளவு கவனமா படிச்சாருண்ணே சசிகலாவுக்கு உடனே தீர்ப்பு வந்துச்சே எப்படி? அவங்க குற்றவாளிண்ணே, குன்ஹாவே சொல்லிட்டாரு அதாண்டா சொல்லிட்டாருல்ல, உடனே பிடிச்சு உள்ளே ஜெயா கூட போட்டிருக்கலாமே? சட்டம் எல்லோருக்கும் அவகாசம் கொடுக்கும்ணே அதே சட்டம் சசிகலா […]