பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று

இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று, “கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..” என பாடல் பாடினார்களா என தெரியவில்லை சந்தடி சாக்கில் கி.வீரமணி வந்து கலந்துகொண்டால் கூட தெரியாது, சொல்லமுடியாது அவரும் நடுவில் கலந்திருக்கலாம் பெரியார் நினைவுநாளில் கூட அணியாத அந்த கருப்பு சட்டை அடையாளத்தை ஜெயா நினைவுநாளில் அணிந்திருகின்றார்கள். ஒருபக்கம் வீரமணி கருப்பு சட்டையோடு அலைகின்றார், இன்னொரு பக்கம் இவர்கள். இதுதான் பெரியார் கண்ட கருப்பு சட்டை புரட்சி போலிருக்கின்றது. எதற்கு கருப்பு சட்டை? துக்க […]

நெப்போலியன் என்றொரு நடிகர் இருந்தார்

நெப்போலியன் என்றொரு நடிகர் இருந்தார், முன்பு திமுகவில் மத்திய அமைச்சராக எல்லாம் இருந்தார் திமுக ஆட்சிகட்டிலில் இருந்து இறங்கியபின் அவர் ஓடோடி சென்று பிஜேபியில் இணைந்தார், எத்தனையோ பெரும் பிரிவுகளை கண்ட திமுக அவரை கண்டுகொள்ளவுமில்லை ஆனால் ஆச்சரியமாக பாஜகவும் கண்டுகொள்ளவில்லை இப்பொழுது என்ன செய்கின்றார் என்றே தெரியவில்லை. தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த தொகுதி என விஷாலை எல்லாம் நிறுத்துகின்றார்கள் ஆனால் பாஜகவிற்கு நெப்போலியனை நிறுத்தும் வித்தை கூட தெரியவில்லை, அவரும் தெலுங்கு பேசும் வம்சம் […]

2ஜி வழக்கில் டிசம்பர் 21 அன்று தீர்ப்பு

2ஜி வழக்கில், டிசம்பர் 21 அன்று தீர்ப்பு. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு ஒருவழியாக தீர்ப்பு தேதியினை அறிவித்துவிட்டார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலும் அன்றுதான் பெரியார் மறைவு, ராமசந்திரன் மறைவு ,ஜெயா மறைவு என பொதுவாக தமிழக்திற்கு சென்டிமென்ட் சரியில்லா டிசம்பர் மாதத்தில் வரும் தீர்ப்பு எப்படி இருக்குமோ?? இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாது, மிக சரியாக டிசம்பர் 21 அன்று தீர்ப்பு என கூட்டி கழித்து பார்த்தால் ஏதோ சரியென படவில்லை.

காமெடியன் மயில்சாமியின் கருத்து 100% உண்மை

காமெடியனாக இருந்தாலும் மிக சரியான கருத்தினை சொல்லியிருக்கின்றார் மயில்சாமி அவரது கருத்து 100% உண்மை. திமுகவின் தொண்டர்பலம் அப்படி. உண்மையில் தியாகம் நிறை தொண்டர்களை அங்குதான் பார்க்கமுடியும். பெரியார், அண்ணா கலைஞர் என எல்லோரின் பாதிப்பிலும் உருவான உணர்ச்சி பிழம்புகள் அவர்கள் அதிமுக தேர்தலில் வெல்வது இன்றுவரை ஆச்சரியமே, ஜெயா காலத்தில் அது மகா ஆச்சரியம். முன்பொருமுறை தோற்றுவிட்டு வோட்டு மெஷினில் கோளாறு என்றார் ஜெயா, உண்மையில் அவர்கள் வென்றிருக்கும்போதுதான் அக்கேள்வி வந்திருக்க வேண்டும் திமுக தொண்டர்களின் […]

தீபா யார்….

“நான் யார்? எங்க அப்பா யார் ? அதிமுக கட்சிக்கு நாங்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கின்றோம்? தமிழக மக்களுக்காக நாங்கள் செய்திருக்கும் தியாகங்கள் எல்லாம் பற்றி நீங்கள்தான் சொல்லவேண்டும், நான் ஏன் சொல்ல வேண்டும்???? என் இலட்சிய பாதையினை தடுக்காதீர்கள்…….”

மாட்டுகறி தடை வாபஸ்

ஏம்பா, இந்த மாட்டுகறி தடை விவகாரத்தை வாபஸ் வாங்குனமாதிரி பாபர் மசூதி பக்கம் இருந்தும் ஓடிருவோமா? 4 வோட்டு கிடைக்கும்ல.. என்னய்யா நீ, இப்போவே ஓடினா எப்படி?, இன்னும் காலம் இருக்கு , போக போக‌ நம்ம ஆட்சி பற்றி படு மோசமா பேசுவாங்க, நிலமை இன்னும் மோசமாகும், அந்த நேரம் பார்த்து பாபர் மசூதியில் தலையிடமாட்டோம்னு சொல்லிரலாம், இப்பவே சொன்னா பலன் இருக்காது. நேரம் பார்த்து சொல்வோம்.  

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் விஷால் மரியாதை

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் விஷால் மரியாதை ஒரு ஈரானிய பெண் ஏஞ்சலினா ஜோலிபோல ஆகவேண்டும் என பேராசை கொண்டு 50 முறை அறுவை சிகிச்சை செய்து இப்பொழுது எகிப்து மம்மிபோல் ஆகிவிட்டாராம் அப்படி இந்த விஷாலும் யாரை போலவோ ஆக எண்ணி என்னமோ ஆக போகின்றார் ஏம்பா விஷால், சும்மாவே தினகரனிடம் பணம் வாங்கிகொண்டு நீர் வந்திருப்பதாக செய்தி இதி இப்படி சென்று பகிரங்கமாக ஜெயா சமாதிமுன் நின்றால் எப்படி? அரசியலில் நடிக்க வேண்டாம் என சொன்னது […]

அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல…

அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல, புரிஞ்சிட்டா கண்டிப்பா எங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க‌ சரி சொல்லு பார்க்கலாம் அண்ணே தமிழ்நாடு பல வகையில பாதிக்கபட்டிருக்கு, இந்த திராவிட கட்சிகள் எல்லாம் சீரழிச்சிட்டு, அதனால தமிழ்நாட்டை தமிழரே ஆளனும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அதுதான் எங்க லட்சியம் சரி திமுக அரசியல் என்ன தேசிய அரசியலா அதுவும் தமிழ் தேசிய அரசியல்தான்டா? இல்லண்ணே அது திராவிடம்ணு சொல்லி நம்மள ஏமாத்திட்டு டேய் இந்திய எதிர்த்தது முதல் தமிழ்நாடு […]

அது எவன்டா மறுபடி தந்தி டிவியில் புதிதாக?

அது எவன்டா மறுபடி தந்தி டிவியில் புதிதாக? அந்த அம்ருதா அம்மா ஜெயலலிதாண்ணு சொல்லிட்டே இருக்கு, இவன் திரும்ப திரும்ப “மிஸ் ஜெயலலிதா” என சொல்லிகொண்டே இருக்கின்றான்? என்ன யழவு கதையடா இது? மெரீனாவில் நிறைய கள்ளக்காதல் ஜோடி அமரும் என்பார்கள், அந்த கல்லறைகளும் அந்த வகையறாதான் போல‌ இடம்பார்த்துதான் காதலர்கள் அமர்கின்றார்களா? இல்லை கட்டுமரங்களுக்கு பின்னால் காதலர்கள் அமர்வதால் அந்த கல்லறைகள் அமைக்கபட்டதா என்பது தெரியவில்லை ஆனாலும் மகா பொருத்தமான இடம் என்பதில் சந்தேகமே இல்லை […]