பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான் ?

இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான் ஆளுநர் நடவடிக்கையினை விமர்சிக்கின்றேன் என சொல்லிவிட்டு, தமிழகத்தில் சீரான நிர்வாகம் இருப்பதை ஒப்புகொள்கின்றாராம் உருப்படுமா? இப்படி சொல்லிவிட்டு எங்கிருந்து அரசியல் செய்வது? பழனிச்சாமியும் சரியில்லை, இதனை கவனித்திருந்தால் எங்கள் ஆட்சியினை ஸ்டாலின் பாராட்டிவிட்டார் , வெற்றி வெற்றி என கிளம்பியிருக்கமாட்டாரா? அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சசிகலா தரப்பு சிக்கலில் சிக்கியிருக்கும்பொழுது அவர்கள் யாரை, […]

பிரபாகரனை தேசிய தலைவர் ஆக்கியவர்…

டேய் நான் வந்துதான் தீவிரவாதி என சொல்லபட்ட பிரபாகரனை தேசிய தலைவர் ஆக்கினேன் அட போங்கண்ணே, ராஜிவ் கொலையில் சிக்கினாலும் அந்த ஆள் மேல ஒரு பரிதாபமும் மரியாதையும் இருந்திச்சி. நீர் அள்ளிவிட்டதுக்கு பதில் சொல்றோம்ணு எல்லா பயலும் பிரபாகரன கிழிச்சி எறிஞ்சிட்டாங்க, உங்களால இருந்த மரியாதையும் போச்சிண்ணே, ஆட்டோ சங்கர் லெவலுக்கு கொண்டு போயிட்டீங்க‌ அப்படியாடா ஆமாண்ணே, முடிஞ்சா யாழ்பாணம் பக்கம் போயிட்டு வாங்க தெரியும், மண்டையிலே கொத்துவாங்க‌”

பேரரிவாளன் விவகாரம்

இந்த பேரரிவாளன் விவகாரம் தொடர்பாக வரும் சில கருத்துக்கள் சரியல்ல‌ சோனியா குற்றவாளிகள் குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் யார் கொடுத்தது? பின் ஏன் நீதிமன்றங்கள்? அப்படியும் ராஜிவ் தனியாக சாகவில்லை 17 பேரோடுதான் செய்த்தார், சோனியா மட்டும் முடிவெடுக்கலாம் என்றால் மீதி 16 பேர் குடும்பத்தார் எல்லாம் பாதிக்கபடவில்லையா? அவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? இந்த அற்புதம்மாள் பேச்சும் நியாயம் இல்லாதது, ஒரு விஷயம் அவரும் மறைகின்றார் அல்லது மறைக்கபடுகின்றது. ஒரு தாய்க்கு தன் பிள்ளை […]

சவுதி அரேபியா யோகாவை ஏற்றுக்கொண்டது

சவுதி அரேபியா யோகாவை ஒரு விளையாட்டு நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டது பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதம் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் சவுதியும் இணைந்து கொண்டது இனி என்ன? 2 மணி நேரத்திற்கு எங்காவது ஓடிவிட வேண்டியதுதான், மோடியின் சாதனை பாரீர் என அந்த‌ கும்பல் பறந்து வந்து அழிச்சாட்டியம் செய்யும். எப்படி எல்லாமோ குதித்து கொண்டாடும், […]

எகிப்து பாலைவனம் பக்கம் ஓணான் கூட செல்லாது

எகிப்து பாலைவனம் பக்கம் ஓணான் கூட செல்லாது, அங்கு எகிப்தும் சூடானும் எட்டிபார்க்காத நிலம் கொஞ்சம் உண்டு, அங்கு சென்ற இந்தியர் ஒருவர் இது என்நாடு என்றே அறித்துவிட்டார். எகிப்தும் சூடானும் அதை பார்த்து சிரித்து தலையில் அடித்துகொண்டு சிரிக்கின்றன‌ மிக வறண்ட அந்த இந்தியர் என்ன செய்வாரோ தெரியாது, அவரோ தனி கொடி, என் நாடு என சொல்லிகொண்டிருக்கின்றார், யாரும் சீண்டவில்லை இப்பொழுது இந்த செய்தி ஏன் என கேட்டால், நீங்கள் எம்மை பின் தொடர்வதில் […]

தேசிய பத்திரிகை தினம்மோ : டி வாழ்த்து

தேசிய பத்திரிகை தினம், பத்திரிகையாளர்களுக்கு மோடி வாழ்த்து : செய்தி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா எனும் அமைப்பு இந்த நவம்பர் 16ல்தான் 1966ல் தொடங்கபட்டது. அது தேசிய பத்திரிகை தினம் ஆனது நாட்டின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் பத்திரிகையாளர்கள் கடினமான உழைப்பதாக மோடி வாழ்த்தியுள்ளார். கொளரி போல உயிர்கொடுத்த பத்திரிகையாளர்களின் தியாகம் எவ்வளவு பெரியது? அதனால் அப்படியே வானத்தை நோக்கி அங்கிருக்கும் கவுரி லங்கேஷையும் பிரதமர் வாழ்த்தியிருப்பார் என நம்புவோம். கொசுறு  3 அணைகளில் நீர் திறக்க […]

நாச்சியார் பட டிரைலரிலேயே….

அப்படி ஜோதிகா அந்த டீசரில் என்ன சொல்லிவிட்டார்? தேவனுக்கு அடியவள் மகனே என்பதை வேகமாக‌ சொல்லிவிட்டார், ஆனால் எந்த தெய்வத்திற்கு என சொல்லவில்லை.. எல்லா தெய்வத்திற்கும் ஒவ்வொரு அடியாள் இருந்தார்கள், களவெடுக்க போகின்றவர் கூட ஒரு தேவனை வணங்கித்தான் தொழிலுக்கு சென்றதாக இலக்கியங்கள் சொல்கின்றது அப்படி ஒரு தேவனின் அடியவள் மகள் உன் அம்மா என சொல்லி கன்னத்தில் அடிக்கும் ஜோதிகா பாத்திரம்  ஒரு நாத்திகராகவே இருக்க முடியும். அக்காலத்தில் சூத்திரரை எல்லாம் அவ்வார்த்தையில் இழித்து பேசும் […]

சுவாதிக்காக கிளம்பிய பரபரப்பு இப்பொழுது ஏன் இல்லை

சுவாதி கொல்லபட்டபோது இதுதானா பெண்கள் பாதுகாப்பு என பொங்கிய ஊடகங்கள், அதே சென்னையில் இந்துஜா என்ற பெண் அதனைவிட கொடூரமாக கொல்லபட்டிருக்கும் பொழுது சத்தமே இல்லை சுவாதிக்காக கிளம்பிய பரபரப்பு இப்பொழுது கொஞ்சமும் இல்லை ஏன்? என்றால் அதுதான் இங்குள்ள மறைமுக அரசியல் அதிகாரம் அந்த சுவாதி பிராமணர், அன்று இருந்த முதல்வர் ஜெயாவும் பிராமணர் ஒரு பிரமாணத்தி ஆட்சியில் பிராமணபெண் கொல்லபட்டதும் ஏதோ பெரும் தலைவர் கொல்லபட்டது போல கொதித்தெழுந்தார்கள், அதை இந்து இஸ்லாம் கலவரமாக்க […]

நயன் பற்றி எழுதுவியா?

நயன் தாரா தற்கொலை + புரட்சி+காவல் + இன்னபிற படைகளை நிறுவி வழிநடத்திகொண்டிருந்த Babu Rao என்பவர் “Got Engaged” என்றொரு நிலையினை சுட்டியிருந்தார் அதாவது அவருக்கு திருமண நாள் குறித்தாயிற்று என பொருள் ஆச்சரியமாக அதன் பின் நயன் பற்றிய எந்த பதிவினையும் காணோம், ஆக நிச்சயத்து அன்றே அடி பலமாக விழுந்திருக்கின்றது. திருமணம் நிச்சயம் ஆன உடனே, இனி “நயன் பற்றி எழுதுவியா?” என போட்டு அடித்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றது ஆக எங்கள் சங்கத்திற்கு எதிரான சங்கத்தை […]

ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்

ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம், எல்லை மீறுகின்றார் என கொதிப்பு : செய்தி இதுதான் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசம் கலைஞராக இருந்தால் இப்படித்தான் சொல்வார் “கவர்ணர் தமிழ்நாட்டின் மீது கொண்டிருக்கும் அக்கறையினை பாராட்டுகின்றேன், தான் ஆளுநராக இருக்கும் தமிழகத்தில் எல்லாம் முறையாக இருக்கின்றதா என அவர் அறிந்துகொள்ள துடிப்பது வரவேற்கதக்கது. அதே நேரம் அவரே களமிறங்கும் அவசியம் வந்த பின், அந்த ஆட்சியினை ரத்து செய்துவிட்டு இந்த ஆய்வுகளை நடத்தினால் திமுக என்ன, மொத்த தமிழகமே வரவேற்கும் […]