பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி கோபுரம், நயன் ஒரு துரும்பு

தம்பி Babu Rao , Chandran Kannan காற்றில் பறக்கும் துரும்பு ஒரு நாளும் கோபுரத்தினை விட உயர்வானது ஆகாது அப்படி அறம் படம் ஓடிவிட்டால் நயன் ஒன்றும் குஷ்பு ஆகிவிடமாட்டார் தலைவி கோபுரம், நயன் ஒரு துரும்பு அதனால் நீர் இப்படி குதிப்பது அறம் ஆகாது. ரைடுகளை குறித்து இந்த அம்மணியிடம் யாரும் கேட்கவுமில்லை, அம்மணி கருத்து சொல்லவுமில்லை என்னாச்சி அம்மணி உங்களுக்கு? ஒருவேளை இவரை பற்றிய ரகசிய ஆவணங்களும் அதிகாரிகளிடம் சிக்கியிருக்குமோ?  

டிரம்ப் பாஜகவினருக்கு கொடுத்த இனிப்பான செய்தி

கொஞ்சகாலமாக இந்தியாவோடு நெருக்கம் பாராட்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ,பாஜகவினருக்கு இனிப்பான செய்தி கொடுத்துள்ளார் மோடி தலமையில் இந்தியா வேகமாக வளர்ச்சிபெற்று வருவதாகவும், இந்தியா புதுவடிவம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்னார் இப்பொழுது முன்பு அமெரிக்கா பகிரங்கமாக தோற்ற வியட்நாமில் சுற்றுபயணத்தில் இருக்கின்றார். வியட்நாம் இந்தியா உறவு பலம்பெற்று வரும் நிலையில் , சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் முறுகல் வலுக்கும் நிலையில் டிரம்ப் இப்படி பேசியிருக்கின்றார் இது சீனாவிற்கு எதிராக இந்தியாவினையும் வியட்நாமினையும் கொம்பு சீவும் […]

நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்?

“நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்? காஷ்மீர் 370 சட்டத்த ரத்து செஞ்சோமா இல்ல ராமர் கோவிலைத்தான் கட்டினோமா இல்ல பாகிஸ்தானோட சண்டைக்கு போனோமா? இல்ல பசுமாட்டைத்தான் காப்பாத்திட்டோமா? கருப்பு பணத்தை முழுக்க ஒழிச்சோமா, ஆளுக்கு 15 லட்சம் கொடுத்தோமா? ஒண்ணுமில்ல‌ இப்ப கூட பாருங்க குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி குறைச்சிருக்கோம், இனி பார்லிமெண்ட் தேர்தல் வரும்போது இன்னும் குறைப்போம் நாம அப்படித்தான் பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மெண்ட் வீக்கு இது தெரியாம நம்மள பார்த்து எல்லோரும் பயபடுறாங்க. So Funny” […]

ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி…

இந்திய அளவில் புகழ்பெற்றவர் ரகோத்தமன். ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்து மிக துல்லியமான முடிவினை கொடுத்தது அவர்தான் அவர் கரங்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டிருக்குமானால் ராஜிவ் கொலையில் இருந்து வைகோ, சந்திராசாமி உட்பட பலர் தப்பியிருக்க முடியாது திமுகவே தீரா சிக்கலில் மாட்டியிருக்கும் அப்படிபட்ட ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி மிக அழகான கருத்துக்களை சொல்லியிருக்கின்றார் “ஜெயா சாகும்பொழுது அருகிலே இருந்தது வெங்கைய நாயுடு, பன்னீரை முதல்வராக்கும் அளவிற்கு அங்கு மிக நெருக்கமாக இருந்தவர் பாஜக அப்பொழுது அதிமுகவோடு […]

அட்லிக்கு குருநாதர் அந்த திருமுருகன் என்பவர்தான்

“மாணிக்க தொட்டில்” எனும் ஜெமினி கணேசன் படம் ஓடிகொண்டிருகின்றது, சிவகுமார் அக்கால சூர்யா போல திருதிருவென முழித்துகொண்டிருக்கின்றார் படத்தின் கதை 5 பெண்களை பெற்று படாதபாடு படும் குடும்பம், எங்கோ இடிக்கின்றது அல்லவா? சந்தேகமில்லை, இந்த கதைதான் பின்னாளில் மெட்டி ஒலி என சில மாற்றங்களுடன் தமிழகம் கொண்டாடிய மிகபெரும் சின்னதிரை தொடரானது. ஆக அட்லிக்கு குருநாதர் அந்த திருமுருகன் என்பவர்தான். ரெய்டில் அள்ளி செல்வது நகையும், ஆவணமாக இருக்காது ஜெயா சாவு மர்ம ஆதாரமும், இன்னும் […]

கண்ணதாசனின் “மேய்பனும் ஏய்பனும்” எனும் கட்டுரை

வாய்ப்பிருந்தால் கண்ணதாசனின் “மேய்பனும் ஏய்பனும்” எனும் கட்டுரையினை படித்துபாருங்கள் இந்த சொத்துகுவிப்புகளை அன்றே கணித்து சொன்ன அறிஞன் அவர் மிக மிக பிரமாதமான கட்டுரை அது, இணையத்தில் அது இல்லை என்பதால் பதிவேற்றமுடியவில்லை அதன் சுருக்கம் இதுதான் நாட்டின் பெரும் விடுதலை நோக்கி கிளம்பிய படை, போர்பரணி பாடி கிளம்பிய படை வழியில் தங்கசுரங்கத்தை பார்த்துவிடுகின்றது இனி என்ன போர்? தங்கத்தை கொடுத்தே வெற்றியினை அடையலாம் என மல்லாக்க கிடக்கின்றது போர்கருவிகளை வீசிவிட்டு எல்லோரும் நகை பூணுகின்றார்கள், […]

மன்னார்குடி மலைவிழுங்கிகள்

சசிகலா சிறையில், கட்சி அதாளபாதளத்தில் கிடக்கின்றது, தினகரன் மீது பல வழக்குகள் நடக்கின்றன‌ இந்நிலையில் எங்களை என்ன செய்துவிடமுடியும் என தினகரன் சவால்விடுவது அவர்கள் மேல் யாருக்கும் அபிமானத்தை கொண்டுவராது ஜெயாடிவி இப்பொழுதெல்லாம் ஏதோ சிரிய எல்லையில் நடக்கும் சண்டையினை அல் ஜசீரா ஓளிபரப்பு செய்வது போல் இந்த ரெய்டுகளை சொல்கின்றது சில நேரம் அந்நாளைய ரேடியோக்கள் போல அமரகீதம் பாடுகின்றது விரைவில் ஐநா சபையில் புகார் அளித்தாலும் அளிக்கலாம் போல‌ அம்மா சி.ஆ சரஸ்வதி நீர் […]

கொடநாடு எஸ்டேட் 2000 ஆயிரம் ஏக்கராம் …

அமெரிக்காவில் மைக்கேல ஜாக்சன் பண்ணை வீடே ஆயிரம் ஏக்கர்தான் கொடநாடு எஸ்டேட் 2000 ஆயிரம் ஏக்கராம் ஜெயலலிதா அம்மா மைக்கேல் ஜாக்சனை விட அதிகமாக ஆடி சம்பாதித்திருக்கின்றது என நம்பிகொள்ள வேண்டியதுதான், எழுப்பியா கேட்க முடியும்? இப்பக்கம் நோக்கினால் அடுத்த அதிர்ச்சி. தினகரன் பண்ணை வீடு 100 ஏக்கர், ஜாஸ் சினிமா ஆயிரம் கோடி, எங்கு நோக்கினாலும் பென்ஸ் கார்கள் இவர்கள் எல்லாம் எங்கு மைக்கேல் ஜாக்சன் போல ஆடினார்கள்? அல்லது எம்.எஸ் சுப்புலட்சுமி போல பாடினார்கள்? […]

சசிகலா குடும்பம் தப்புவது சிரமம் என செய்திகள்

இந்த பச்சமண்ணுக்கு இன்று பிறந்தநாளாம் ஆனால் நேற்றே பரிசு கொடுத்துவிட்டார்களாம்.. 1990 95ல் சசிகலா பெரும் வில்லங்கத்தில் மாட்ட காரணமான விஷயம் அந்த வளர்ப்பு மகன் திருமணம் அதில் வந்ததுதான் முதல் சிக்கல், அதனை தொடர்ந்து வழக்கு எல்லாம் வந்து, ஜெயாவும் தன் வளர்ப்பு மகனை போ சனியனே என விரட்டி, வழக்கில் தப்பமுடியாமல் இன்று சசிகலா உள்ளேயும், ஜெயா குற்றவாளியும் ஆனது எல்லோருகும் தெரியும் அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் பொழுது, அதாவது 18 வருடம் இழுக்கும் […]