பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் : நடிகை கஸ்தூரி

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் -நடிகை கஸ்தூரி தலைவா, மெர்சல் வெளிவரபட்ட பாட்டிலும், இப்பொழுது ஜிஎஸ்டி வசனங்களை நீக்க ஒப்புகொண்டிருப்பதிலுமே விஜயின் பாய்ச்சல் தெரிகின்றது. மெர்சலுக்கு சர்சை என்றவுடன் கமல் பாட்டை மாற்றி பாடியதிலே அவரின் பாய்ச்சலும் புரிகின்றது இன்னுமா இவர்களை பற்றி பேசுகின்றீர்கள் மேடம்? வேண்டுமானால் இப்படி சொல்லுங்கள், விஜய் 48 அடி பம்மினால் கமல் 8 அடி பதுங்குவார். மிக சரியாக இருக்கும்

மிஸ்டர் சுயமோகன் , இப்பொழுது என்ன சொல்கின்றீர்?

மிஸ்டர் சுயமோகன் இலக்கியம் என்பது பற்றி ஏதாவது 4 அல்லக்கைகளோடு நீர் பேசலாம், சில நேரம் சிங்கப்பூர் சூரியகலா போன்றவர்களோடு கும்மாங்குத்தும் போடலாம் ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் பற்றி கருத்து சொல்ல உமக்கு என்ன இருக்கின்றது? ஏற்கனவே பெரியார் புரட்சியாளர் அல்ல, கலைஞர் எழுத்த்தாளர் அல்ல, பாரதி மகாகவியே அல்ல என மகா பெரும் தீர்ப்புகளை எழுதியவர் நீங்கள் இப்பொழுது என்ன சொல்கின்றீர்? ராமசந்திரன் இல்லாமல் திமுக இல்லை என புலம்புகின்றீர்? என்ன ஆனது உமக்கு? […]

தமிழகம் முழுக்க சுற்றுபயணம் தொடங்குகின்றார் ஸ்டாலின் : செய்தி

தமிழகம் முழுக்க சுற்றுபயணம் தொடங்குகின்றார் ஸ்டாலின் : செய்தி நல்லது, திமுக தலமை எடுத்திருக்கும் மிக சரியான முடிவு. தமிழகம் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கும் வேளையில் மக்களை காக்க திமுக இருக்கின்றது எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் கடமை திமுகவிற்கு இருக்கின்றது ஆனால் சென்றோமா? பார்த்தோமா என்றிருந்தால் அதனால் சுத்த பிரயோசனமில்லை மாறாக மக்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டும், அவர்களை திரட்ட வேண்டும். ஒவ்வொரு தமிழன் மனதிலும் இந்த இருளில் இருந்து திமுக தமிழகத்தை மீட்கும் எனும் நம்பிக்கையினை விதைக்க […]

காலம் தந்த ஒரே நம்பிக்கை குஷ்பூ

அமெரிக்கா ஏதும் போர் தயாரிப்பில் இறங்குகின்றது என்றால் அதன் அடிபொடிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எல்லாம் உடனே தயாராகும் அப்படி சோனியா காந்தி வீட்டில் சலசலப்பு என்றால் தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் விழித்துகொள்ளும், அடுத்த தலைவர் நான் தான் என ஆளாளுக்கு மிக சரியாக 4 பேரோடு சுற்றுவார்கள் அரபு நாட்டு தீவிரவாத குழுக்களை விட அதிக கோஷ்டி உள்ளது தமிழக காங்கிரஸ் என்பதால் இப்போதே கிளம்புகின்றார்கள் கிளம்பட்டும் எங்கள் தலைவி குஷ்பூதான் அடுத்த காங்கிரஸ் தலைவர், அதில் […]

ஜெயமோகன் புலம்புவதில் என்ன ஆச்சரியம்?

திராவிட இயக்க வரலாற்றினை பற்றி ஜெயமோகன் ஏதாவது திரித்து கூறாவிட்டால்தான் ஆச்சரியம் அவர் புலம்புவதில் என்ன ஆச்சரியம்? அதுவும் ஆரிய அடிமையான ராமசந்திரனை எப்படி விடலாம் என சொல்வதிலே அன்னாரின் நோக்கம் தெரியவில்லையா? பெரியாரின் வாரிசு பழனிச்சாமி என சொல்ல விரும்புகின்றார் ஜெயமோகன் , அதில் அவருக்கொரு ஆனந்தம்  

தீபாவளிக்கு நடனம் ஆடினார் மோடியின் தாய் : செய்தி

தீபாவளிக்கு நடனம் ஆடினார் மோடியின் தாய் : செய்தி “நான் டிரம்ஸ் வாசிக்க, எங்க அண்ணன் ஊத, எங்கம்மா ஆட.. குடும்பமே ஒரு கலைகுடும்பம்…”    

ராகுலுக்கு முடிசூட்ட தயாராகின்றார் சோனியா காந்தி

ராகுலுக்கு முடிசூட்ட தயாராகின்றார் சோனியா காந்தி உண்மையில் சோனியா வாழ்ந்தது தியாக வாழ்வு. இந்திராவின் வாரிசை வேரறுப்போம் என கிளம்பிய பல கும்பல்கள் சீக்கிய பெண்ணான மேனகாவினை விட்டுவிட்டன. அவர்கள் குறி ராஜிவ் குடும்பத்தை நோக்கியே இருந்தது இதில் ஈழ சிக்கலும் சேர்ந்தது, ராஜிவின் குடும்பத்தை வேரறுப்பேன் என முதலில் வெறிபிடித்து திரிந்தது ஈழப்போராளி உமா மகேஸ்வரன் இது போக காஷ்மீர், அசாம் என உள்நாட்டு தீவிரவாதிகளும், யாசர் அராபத்தே எச்சரித்த வெளிநாட்டு சக்திகளும் ராஜிவ் குடும்பத்தை […]

இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்?

இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்? , அவர் இல்லாமல் திமுக நடக்காதா ஹிஹிஹி இதுதான் வளர்ச்சியா ஹோஹோ என சிலர் சிரித்துகொள்கின்றார்களாம், சொல்பவர்களில் பாதி பாஜகவினர் மீதி இம்சை கோஷ்டி. இதன் பெயர் எதிர்பார்பு அல்ல, அவர் இல்லாவிட்டால் கட்சி அழிந்துவிடும் என்பதல்ல‌ இதன் பெயர் நன்றிகடன் பாஜக எனும் கட்சியினை வளர்க்க தன் உயிரை பணயம் வைத்த அத்வாணியினை விரட்டிவிட்டு எங்கிருந்தோ வந்த மோடி, யோகி, ராம்நாத் வாழ்க‌ என சொல்லி கொண்டிருப்பவர்களுக்கு நன்றி […]

ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம் : யோகி

ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம் : யோகி ராமனின் ஆட்சிகாலத்தில் சாதி பாகுபாடு இருந்திருக்கின்றது, ராமனே சத்திரிய திலகம் என்றுதான் கொண்டாடபட்டிருக்கின்றான் சீதை தீகுளித்து காட்டுக்கு செல்ல ஒரு சூத்திரன் சொன்ன சொல்தான் காரணம் என்கின்றது ராமாயணம் ஆக பாகுபாடு இல்லா ஆட்சி ராமர் காலத்திலே இல்லை, இவரோ பாகுபாடு இல்லாதது ராமராஜ்யம் என சொல்லிகொண்டிருக்கின்றார் அப்படியும் சாதிபாகுபாடு என சொல்லவில்லை அல்லவா? அதுதான் யோகி ஸ்டைல். கொசுறு நிலவேம்பை எதிர்க்கவில்லை: எதிர்ப்பு வலுத்த நிலையில் கமல் […]

தேசத்தின் காவலர்களுடன் நாட்டின் தலைமகன்

எவ்வளவு சர்ச்சை இருக்கலாம், சில குறைகளும் இருக்கலாம் ஆனால் பாஜக அரசு நாட்டின் பாதுகாப்புக்கும் அதற்குண்டான விஷயங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாராட்டத்தான் வேண்டும் இந்த விஷயத்திற்காக மோடியினை பாராட்டலாம், தேசத்தின் காவலர்களுடன் நாட்டின் தலைமகன் தீபாவளி கொண்டாடுவது வாழ்த்துக்கும் நன்றிக்கும் உரியது இந்த படம் போட்டோஷாப் இல்லை என நம்புகின்றேன்