பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரணாய் விஜயனுக்கு பொன். ராதாகிருஷ்ணன் மிரட்டல்

பாஜகவினர் தாக்கபட்டால் பிரணாய் விஜயன் எங்கும் செல்ல முடியாது : பொன். ராதாகிருஷ்ணன் மிரட்டல் இந்த விஜயன் எங்கு செல்ல வேண்டும்? அவர் செல்ல வேண்டிய ஒரே இடம் டெல்லி ஒரு கூட்டாட்சி தேசத்தில் மாநில முதல்வருக்கு டெல்லியில் பலத்த பாதுகாப்பு கொடுக்கபடும், அவர் மீது துரும்பு பட்டாலும் அது இந்திய இறையாண்மை சவாலாகும் நான் முதல்வராக இருப்பதால் வரும் அவசியம் இருக்கின்றது, கேரளா இந்தியாவில் இருப்பதால் மட்டும் அது அவசியமாகின்றது என விஜயன் சொன்னால் பொன்னார் […]

அங்கிள் சைமன் “மண்டை பத்திரம்” பிளீஸ்

இது எவனோ மிக நுணுக்கமாக சீமானை மிரட்ட போட்ட படம் ஆனால் அறிவே இல்லாத அங்கிளின் மங்கிகள் இதனையும் பெரும் விஷயமாக சொல்லிகொண்டிருக்கின்றன‌ துப்பாக்கியில் இனத்தை காத்தானாம் பிரபாகரன், துப்பாக்கியில் வனத்தை காத்தானாம் வீரப்பன், அப்படி துப்பாக்கி முனையில் தமிழை காப்பாராம் சீமான் அதாவது பிரபாகரனால் தமிழர்கள் கொல்லபட்டு தமிழினம் காக்கபட்டது போல் (எல்லா தமிழரும் செத்துவிட்டால் ஏது இன சிக்கல்), யானையும் சந்தணமரமும் வெட்டி வீரப்பன் வனத்தை காத்தது போல், நம்மை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு […]

மிஸ்டர் அல்லிநகரத்து பால் பாண்டி பாரதிராஜா

தனிமனித ஒழுக்கம் அரசியலில் இல்லாதவர்களை எதிர்க்கிறேன் : பாரதிராஜா அடுத்தவன் மனைவியினை லவட்டிகொண்டு வந்த ராமசந்திரன் ஆட்சியில் இருந்தபொழுது அண்ணே.. அண்ணே என பின்னால் அலைந்தது இதே பாரதிராஜாதான் கோயிங் ஸ்டடி, கெட் டுகெதர் புகழ் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது கைதட்டியதும் இவர்தான் அப்பொழுதெல்லாம் தனிமனித ஒழுக்கம் எல்லாம் மறந்துவிட்ட பாரதிராஜாவுக்கு இப்பொழுது ஒழுக்கம் கண்டிப்பாய் தேவையும் ஏன் மிஸ்டர் பாரதிராஜா, இந்த நடராஜன், சீமான் இருக்கும் மேடைகளில் எல்லாம் நீரும் இருந்தீர், அவர்கள் ஒழுக்கம் எப்படி […]

ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவாம்!

ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவாம் சரோஜா தேவியினை அழைக்காமல், லதாவினை முன் வரிசையில் அமர வைக்காமல் அது என்ன நூற்றாண்டு விழா? இவர்களை விட ராமசந்திரனின் புகழை யாரால் பாட முடியும்? யாருக்காக புகழ்மிக்க மேலவையினை ராமசந்திரன் கலைத்தாரோ அந்த புகழ்மிக்க வெண்ணிற ஆடை நிர்மலாவினையும் அழைக்கவில்லை. ராமசந்திரன் “அம்மா அம்மா” என அலறிய அம்மா நடிகைகளையும் காணவில்லை ராமசந்திரன் கெஞ்சி நீர் வசனம் எழுதினால்தான் என் வாழ்வு என கண்ணீர்விட்டு அழுத அந்த கலைஞர் கருணாநிதியினையும் அழைக்கவில்லை […]

நடிகர் விஜய் முதலமைச்சர் பழனிச்சாமியினை சந்தித்தார் : செய்தி

நடிகர் விஜய் முதலமைச்சர் பழனிச்சாமியினை சந்தித்தார் : செய்தி “மெர்சல்” என்றொரு படத்தில் நடித்துவிட்டு இந்த விஜய் கடும் “மெர்சலாகி” திரிகின்றார் ஜெயாவோடு தனக்கு இருந்த சில தடங்கல்கள் நீங்கும் என நம்பியிருந்த கணக்கு தவறாகி மனிதர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார் உண்மையில் விஜய் போட்டது தப்புகணக்கு ஜெயாவின் கனவினை நனவாக்கவே ஆள்கின்றோம் என சொல்லிகொண்டிருக்கும் பழனிச்சாமி கோஷ்டி , ஜெயா விஜயினை ஓட அடித்தே தீரவேண்டும் என்ற கனவினை மட்டும் நிறைவேற்றாமல் விட்டுவிடுமா? இந்த விஷயத்தில் […]

ஹிஹிஹிஹீஹ் நாம ஐந்தாவது

நாயகன் படத்தில் ஒரு காட்சி வந்தது, எல்லா கடத்தல்காரர்களும் கூடியிருந்தார்கள். கமலஹாசனும் ஜனகராஜும் வந்தார்கள், ஜனகராஜ் சொன்னார் “வேலு இவனுக 4 பேரும் பெரிய ஆளுங்க, இவனுக கடத்தாத பொருள் கிடையாது, இவனுகள தேடாத போலிஸ் கிடையாது, இவனுக சொத்துக்கு கணக்கே கிடையாது, பொல்லாதனுங்க‌ ஹிஹிஹீஹ்ஹிஹிஹிஹி நாம ஐந்தாவது” இதனை பார்த்தபொழுது அங்கிள் சைமனின் தும்பிகள் இப்படித்தான் அங்கிள் சைமனிடம் சொல்லிகொண்டிருப்பார்கள் என தோன்றியது “அண்ணே இந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக எல்லாம் திருட்டுபயலுக. இவனுக […]

டெங்கு பெரும் சிக்கலாக உருவாகியுள்ளது

டெங்கு பெரும் சிக்கலாக உருவெடுத்தாயிற்று, தமிழக அரசு பூசி மெழுகிய காலமெல்லாம் போய், டெல்லியிலிருந்தே மருத்துவகுழு வந்தாயிற்று தினமும் உயிர்களை காவுவாங்கிகொண்டே இருக்கின்றது டெங்கி. எதிர்பாரா நெருக்கடி இது, அரசியல் பேசிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எல்லோரும் மிக பொறுப்புணர்வுடன் இருந்தாலன்றி டெங்குவினை விரட்ட முடியாது. அரசு மருத்துவமனைகள் தீவிரமாக இயங்கட்டும். பொதுமக்களும் சுற்றுசுற சுகாதாரம் என டெங்கு தடுப்பில் மிக கவனமாக இருக்கட்டும் காரணம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நேரம், மழைக்காலம் தொடங்கிவிட்டால் டெங்கு அசுரவேகத்தோடு எழும்பும் எல்லோரும் […]

டெங்கு இங்கே .. சீமான் எங்கே …

சென்னை வெள்ளத்தில் எல்லோரும் படகுகளில் மீட்புபணி செய்தபொழுது, மூங்கிலும் டயரும் கட்டி விளையாடி செல்பி எல்லாம் எடுத்த சீமான் கோஷ்டியினை டெங்கு விவகாரத்தில் காணவில்லை தமிழ்முறைபடி மூலிகை கொடுக்கின்றோம் என எங்கோ எதனையோ புடுங்கி கொண்டிருக்கின்றார்களோ என்னமோ? அதற்கு முன்பு டெங்கி என்பதற்கு தமிழ்பெயர் என்ன எனும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம், பின் அவர்களாகவே குருதி காய்ச்சல் என பெயர் கொடுத்தாலும் கொடுக்கலாம் ஆனால் விரைவில் “நுளம்பு (அதாவது கொசு) ஒழிப்பில் களமாடியபொழுது” என செல்பி வரும் அப்பொழுது […]

ஆர்ப்பாட்டம் நடத்துவோம் : தமிழிசை

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாக்கபடுவதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் : தமிழிசை அக்கா, மத்தியில் ஆளும் அரசு உங்களது. மாநில ஆட்சியின் நூலும் உங்களிடம்தான் இருக்கின்றது. இதில் யாரை எதிர்த்து சென்னையில் போராட்டம்?, அப்படி கேரள அரசை எதிர்த்து போராட்டம் என்றால் திருவனந்தபுரம் செல்லலாம் அல்லவா? இங்கு உங்கள் ஆட்சி நடக்கும்பொழுது இங்கு இருதுகொண்டே போராடுவது நன்றாகவா இருக்கின்றது??

உலகம் சுற்றும் வாலிபன் எனும் படத்தில் …

உலகம் சுற்றும் வாலிபன் எனும் படத்தில் அந்த ராமசந்திரன் உலக விஞ்ஞானிகள் கூட்டத்தை நடத்துவார், அவரும் ஒரு விஞ்ஞானி. தலைசிறந்த விஞ்ஞானிகள் எல்லாம் அந்த கூட்டத்திற்கு வந்திருப்பர், யாரெல்லாம் தெரியுமா? ஒருவிரல் கிருஷ்ணராவ், பகோடா காதர், அசோகன், தேங்காய் சீனிவாசன் இன்னபிற‌ அங்கு அவர் தன் கண்டுபிடிப்பை விளக்குவதையும் அதற்கு அந்த உலக விஞ்ஞானிகள் கொடுக்கும் ஓவர் பில்டப்பும் பெரும் காமெடிகள். டெங்கு நோயாளி கூட சிரித்துவிடுவார். இந்த அமைச்சரவையினை பார்க்கும்பொழுது அந்த ராமசந்திரன் சொன்ன உலக […]