பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : அமைச்சர்

மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ மாட்டு சாணம் தெளிக்கபடாத வீடுகளில்தான் டெங்கு கொசு வரும் என சொல்லியிருந்தது குறிப்பிடதக்கது இவர்கள் இருவரும் இந்த பெரும் மருத்துவ கருத்தை சொன்ன இடம் எதுவென்றால் ” இந்திய அறிவியல் கண்காட்சி” அட பாவிகளா? அந்த அம்மா அப்பல்லோ போனபின்பு ஒரு வருடமாகத்தானே உங்களுக்கு இந்த பாஜக சகவாசம்? அதற்குள் ஏன் இப்படி முழு சாமியாராய் […]

வேலூர் மாவட்டம், பாலாற்றில் வெள்ளம்

வேலூர் மாவட்டம், பாலாற்றில் வெள்ளம் , ஏராளமான கிராமங்கள் பாதிப்பு : செய்தி வெள்ளம் வருகின்றது, ஆனால் சேர்த்துவைக்க பிரதான அணை என ஏதும் இல்லை. இன்னும் 20 நாளில் வெள்ளம் வற்றியதும் குதிப்பார்கள், “ஏ தெலுங்கனே பாலாற்றில் நீர் விடு, ஏ இந்திய அரசே தமிழரை புறக்கணிக்காதே தமிழ்நாட்டை தனி நாடாக ஆக்க எங்களை தூண்டாதே.. ஏஏஏஏஏஏஏஏ காங்கிரஸ் ஒழிக, பாஜக ஒழிக, தமிழர் தேசியம் ஓங்குக..”

அண்ணே மெர்சல்லா எண்ண அர்த்தம்ணே?

“அண்ணே மெர்சல்லா எண்ண அர்த்தம்ணே?” அடேய் 5 நாள் அந்த அம்மா வெளிய வந்ததுல இந்த பன்னீரும், பழனிச்சாமியும் அரண்டு இருந்தாங்க்ளே, இந்த செல்லூர் ராஜ் கூட தன்னை மறந்து ஆட்சி சின்னம்மா போட்ட பிச்சைன்னு சொன்னாரே அதுதாண்டா மெர்சல் கோமுட்டி தலையா”  

மோடி அரசால் பெரும் பொருளாதார வீழ்ச்சி : வை.கோ

மோடி அரசால் பெரும் பொருளாதார வீழ்ச்சி : வை.கோ பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் முதலில் இடம்பிடித்து, மோடி உருவில் காந்தியினை காண்கின்றேன் என சொன்னது இவர்தான். மன்மோகனை விட பெரும் பொருளாதார திட்டம் மோடியிடம் உண்டு என கூசாமல் சொன்னதும் இவர்தான் இன்று ஒப்பாரி வைப்பதும் இவர்தான். இப்படி எல்லாம் குழம்பி திரியும் இவரை ஐ.நாவில் சிங்களன் என்ன? இனி தமிழகத்தில் தமிழனே ஓட அடிப்பான்    

ராகுல் காந்தியுடன் குஷ்பூ சந்திப்பு

ராகுல் காந்தியுடன் குஷ்பூ சந்திப்பு, தீவிர அரசியலில் இறங்க திட்டம் கோடான கோடி ரசிகர்களை கொண்ட குஷ்பூவினை அந்த ராகுல்காந்திதான் வந்து சந்தித்திருக்கவேண்டும். ஆனால் மிக பெருந்தன்மையாக தலைவி அவரை சந்தித்திருக்கின்றார் இனியும் அந்த ராகுல்காந்தி காலம் தாழ்த்தாமல் தலைவியினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி தமிழகத்தில் காங்கிரஸை மறுமலர்ச்சி செய்யும் வழியினை தொடங்கவேண்டும். வீணாய் போன காங்கிரசின் கோஷ்டி தலைவர்களின் ஆலோசனையில் ராகுல் அதற்கு தயங்குவாரானால், தமிழக காங்கிரசை பிடித்திருக்கும் ராகு திசைக்கு விடிவே இல்லை ராகுல் […]

உடன்பிறப்பே

உடன்பிறப்பே எதை தின்றால் பித்தம் தெளியும், யாரை பிடித்தால் பெரியார் இன்னும் காவலிருக்கும் திராவிட நாட்டை பிடிக்கலாம் என சிந்தை கலங்கிய கூட்டமொன்று, விந்தையான வேடிக்கை பேச்சுக்களை எல்லாம் சொல்ல தொடங்கிற்று திராவிட தலைமகனாம், வாராது வந்த மாமணியாம் நமது அண்ணாவினை பற்றி சிலர் கருத்துசொல்ல வந்துவிட்டார்கள் அண்ணா இருந்திருந்தால் பாஜகவினை ஆதரிப்பாராம், சிரிக்காமல் மட்டுமல்ல சிந்திக்காமலும் சொல்கின்றார்கள் மந்தி மூளைக்காரர்கள் அண்ணாவின் கைபிடித்து வளர்ந்தவன் என்ற வகையிலே, அண்ணாவின் சிந்தை எல்லாம் அறிந்தவன், அவரை நெஞ்சமெல்லாம் […]

இந்த தேசத்தை விட உயர்ந்தவரா அமைச்சர் ஜெயக்குமார்?

அமைச்சர் ஜெயக்குமார் பற்றியும் அவர் குடும்பத்தார் பற்றியும் தொடர்ந்து முகநூலில் எழுதி வந்த Sathish Kumar என்பவர் கைது செய்யபட்டிருக்கின்றாராம் அரசியலில் அதுவும் பதவியில் இருப்பவர்களை விமர்சிப்பது வழக்கமானது, யாரும் தப்பமுடியாது. இது சம்பந்தமாக ஜெயாவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கொட்டு வாங்கியிருந்தார் ஆனால் ஜெயக்குமாரின் குடும்பத்தாரை பற்றி எழுதியிருந்தால் அது நிச்சயம் கண்டிக்கதக்கது. ஒரு விஷயம் கவனிக்கபட வேண்டும். இதே முகநூலில் கலைஞரை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள், எவ்வளவு அவமானமாக எழுதுகின்றார்கள் சைமன் போன்றவர்கள் […]

டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது.

டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது. நிலவேம்பு விற்பபனை, பப்பாளி இலை, கொசுமருந்து, கொசுவலை என திடீர் வியாபாரம் பெருகிவிட்டது சுகாதார துறை வேறு ஆங்காங்கு சோதனை செய்து தேங்கி நிற்கும் நீரை கண்டுவிட்டால் அந்த கட்டட உரிமையாளர்களிடம் கடும் வசூலில் இறங்கியிருக்கின்றது இதில் எவ்வளவு வெள்ளை வசூல், எவ்வளவு கருப்பு வசூல் என ஒரு காலமும் தெரியாது. அந்த அபராத வசூல் கொட்டுகின்றது, இதுதான் சாக்கு என கறந்துவிடுகின்றார்களாம் ஆக டெங்குவினால் […]

அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம்

தந்தி டிவி முதல் புதிய தலைமுறை, நியூஸ் 7 என ஒரு பயலும் இந்த அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம் அட பாஜகவிலிருந்து ஒருவனும் வருவதாக தெரியவில்லை. தடாலடி தமிழிசை கூட இந்த விஷயத்தில் குளோராபாம் குடித்த அளவிற்கு அமைதியாகிவிட்டார் இந்த டிவிக்களின் பத்திரிகா தர்மம் உண்மையென்றால், எங்கள் தங்க தலைவி குஷ்பூவினை அழைத்து இந்த விஷயத்தை அலச சொல்லலாம் தலைவி கேட்கும் கேள்வியில் அமித்ஷாவே இந்தியாவினை விட்டு ஓடிவிடுவார், அப்படி […]

பெங்களூர் புறப்பட்டார் சசிகலா

சசிகலாவின் நகர்வுகளை உளவுதுறை மிக துல்லியமாக கண்காணித்து முதல்வருக்கு அனுப்பியது : செய்தி வடகொரிய உளவுதுறை தென்கொரிய ராணுவ கம்பியூட்டர்களில் ஊடுருவியிருக்கின்றது, இஸ்ரேலிய உளவுதுறை ஈரானின் அணுசக்தி விஷயத்தில் புகுந்து கலங்கடித்துகொண்டிருக்கின்றது இன்னும் எத்தனையோ உளவுதுறைகள் பெரும் அசாத்தியங்களை நிகழ்த்துகின்றன‌ தமிழக உளவுதுறை வடிவேல் காமெடி போல ஓவர் ஓவர் என சொல்லிகொண்டு சசிகலாவினை சுற்றி வந்திருக்கின்றது. ராம ஜெயம் கொலை வழக்கு முதல் எத்தனையோ மர்மங்கள் தமிழகத்தில் உண்டு, அவை எல்லாம் உளவுதுறை ஒத்துழைப்பின்றி மர்மம் […]