பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நியாயமான , தைரியமிக்க ஸ்டாலினின் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்

ஸ்டாலின் கடல் அலை போல தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றார். ஜெயலலிதா மர்மம் தொடர்பான விஷயத்தை அவர் இனி விடுவதில்லை என்றே தெரிகின்றது. அட்டகாசமான பார்மிற்கு வந்துவிட்டார். சீனிவாசன் முதல் ஆளுநர் வரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை உண்மையில் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழும் கேள்விகள் அவை. மருத்துவமனையில் இருந்தது ஒரு முதல்வர், அவரை சந்திக்க சென்றது ஆளுநர். அந்த ஆளுநர் தான் ஜெயாவினை பார்த்ததாக சொல்லியிருந்தார். இப்பொழுது அமைச்சரும் தினகரனும் ஜெயாவினை யாரும் பார்க்கவேயில்லை […]

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி காந்தி பிறந்தநாள் என்றால் இவருக்கு கதர் நினைவுக்கு வருகின்றது, சுதேசி கொள்கையாம் எங்கே? இந்திய தயாரிப்பு காரில் செல்லட்டும் பார்க்கலாம், அப்படி ஒரு கார் இல்லையென்றால் இந்திய தயாரிப்பு மாட்டுவண்டியில் செல்வாரா? இவர்கள் பயன்படுத்தும் ஒரே இந்திய தயாரிப்பு ரூபாய் நோட்டு மட்டுமே… காந்தி மதுவிலக்கு வேண்டுமென்றார், அதனை ஏன் பழனிச்சாமி செய்யவில்லை?

மாபெரும் தலைவர்களின் மரண ரகசியம்

நேதாஜி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற மாபெரும் தலைவர்களின் மரண ரகசியமே இன்னும் வெளிவராத நாட்டில் அதனை தெரிந்துகொள்ள யாருக்கும் ஆசையில்லை, கேள்வியுமில்லை ஆனால் ஜெயா சாவுக்கு நீதிவேண்டுமாம் ஜெயா செத்தது மர்மமே, ஆனால் ஜெயா தான் மர்மமாக சாகும் சூழலை நிச்சயம் அவரேதான் ஏற்படுத்தினார். ஜெயா வழக்கு விசாரணையில் முதல் குற்றவாளி அந்த மரித்துபோன ஜெயலலிதாதாவே தான். ஜெயா விசாரணை சுத்த அரசியல். அது முடிவு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆக போவது ஒன்றுமேயில்லை. தான் இப்படித்தான் சாவோம் […]

ஏராளமான விஷயங்கள் அந்த திராவிட கோஷத்தில் உண்டு

திராவிடத்தை காக்க வந்தவரும், இந்தியா என ஒன்று இல்லை என ஒருகாலத்தில் சொன்னவரும், இந்து மதம் ஒழிக்கபடவேண்டியது என சொன்னவருமான அண்ணா எழுதிய நாடகம் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” அதனை காண சென்றது இந்தியாவில் திராவிடன் இணையமுடியாது என சொன்ன பெரியார், இந்து மதத்தின் விரோதியான பெரியார் அந்த கணேசனின் நடிப்பில் சிவாஜியினை கண்டதாக அவனுக்கு சிவாஜி என்றே பெயரிட்டாராம் அந்த பெரியார். திராவிட நாடு மதமற்றது, இந்துக்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்றவர்களும் அந்த […]

குஷ்பூ தமிழக காங்கிரசின் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை

எவனோ தலை குழம்பிய கிறுக்கன், சாலையோரத்தில் வேலையற்று இருப்பவன், குதர்க்க சிந்தனையில் சீழ்பிடித்த சிறுபுத்திக்காரன் கிளப்பிவிட்டிருக்கின்றான் ஒரு வதந்தியினை அதாவது தலைவி குஷ்பூ காங்கிரசில் இருந்து விலகி விட்டதாக பெரும் பரபரப்பினை கிளப்பிவிட்டிருக்கின்றான் தலைவி தமிழக காங்கிரசின் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை. அவர் இல்லாத காங்கிரஸ் கவுன்சிலர் பதவிக்கு கூட வராது என்பது உலகறிந்த உண்மை. இது காங்கிரசுக்கும் நன்றாக தெரியும். ஆளைவிட்டால் போதும் என தலையினை பிய்த்து கொண்டிருக்கும் மோடியே, அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு […]

ஜெயா மரணத்தில் சசிகலா சர்ச்சையானவர் …..

ஜெயா மரணத்தில் சசிகலா சர்ச்சையானவர் என்றொரு கோஷ்டியும், இல்லை இல்லை டெல்லியின் நடவடிக்கைகளும் மர்மமானவை என இன்னொரு கோஷ்டியும் சொல்லிகொண்டிருக்கின்றது சசிகலாவின் பலம் ஜெயலலிதா, ஜெயலலிதா இல்லாவிட்டால் சசிகலா வெறும் மண்பொம்மை என்பது சசிகலாவிற்கு தெரியாததல்ல, ஜெயாவின் மரணத்தை சசிகலா நிச்சயம் விரும்பமாட்டார். டெல்லிக்கும் அதிமுகவிற்கும் உள்ள ரகசிய இழைகள் புரிந்துகொள்ளமுடியாதவை. ராஜிவ்காந்திதான் ஜெயா தமிழக அரசியல் சக்தியாக மாற முழு உதவி செய்தவர். பாஜகவிற்கும் ஜெயாவிற்கும் இடையில் நிறைய புரிந்துணர்வு உண்டு ஆக விசாரணையின் முடிவிலே […]

சிவாஜி மணி மண்டப திறப்பு விழா

எகிப்தின் கர்ணல் நாசர் அவரை சிறந்த நடிகன் என்றபின்புதான் இந்தியா சிவாஜி கணேசனை நோக்கிற்று. ராமசந்திரனுக்கு பாரத் விருது கொடுத்து அந்த விருதையே டெல்லி கேவலபடுத்தியபொழுதும், சிவாஜிக்கு ஒன்றுமில்லை பிரான்ஸ் அரசாங்கம் செவாலியே பட்டம் கொடுத்தபின்புதான் இந்திய அரசு பால்கே விருதே வழங்கிற்று. அந்த மனிதனுக்கு புறக்கணிப்பு என்பது அவன் வாழ்வு முழுக்க நடந்துகொண்டே இருந்தது. அவனை ஏன் அப்படி பழிதீர்த்தார்கள் என இன்றுவரை தெரியாது. இன்று தமிழக முதல்வரும் அவர் மணி மண்டப திறப்பு விழாவிற்கு […]

நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சி

நடிகர் நாகேஷின் ஆக சிறந்த நடிப்பு என்றொரு வீடியோ தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது. அதில் நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சியும் ஓடியது, பிணமாக அவ்வளவு அட்டகாசமாக நடித்திருந்தார் நாகேஷ். அந்த காட்சிதான் அப்பல்லோ நாடகளுக்கு மூல திட்டத்தை கொடுத்திருக்க வேண்டும். நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சிதான், பின் அப்பல்லோவில் பிணத்தை வைத்து அவர்கள் ஆடிய நாடகத்திற்கு அடி எடுத்து கொடுத்தது.

அது நிச்சயம் மோடியின் வெற்றி, உறுதியாக சொல்ல முடியும்.

மோடியின் திட்டம் தோல்வி, கள்ள‌ பண ஒழிப்பு தோல்வி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அதிருப்தி என பல குரல்கள் எழுகின்றன‌ ஜிஎஸ்டி என்பது காங்கிரசால்தான் வரையறுக்கபட்டது, இன்று காங்கிரஸ் அரசு தொடர்ந்திருந்தாலும் அது வந்திருக்கத்தான் செய்யும். அதே நேரம் ஜிஎஸ்டியால் பல பொருட்கள் விலை குறைந்திருப்பதை பற்றி யாரும் பேசவே இல்லை. அது கவனிக்க வேண்டியது. ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதில் இந்திய பொருளாதாரம் படுத்துவிட்டது என்கின்றார்கள். உண்மையில் எந்த தொழில் படுத்திருக்கின்றது என்றால் எதெல்லாம் கள்ள கருப்பு […]

ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா?

ஒருவழியாக தமிழகத்திற்கு கவர்ணரை நியமித்துவிட்டார்கள், அந்த அதிமுக அரசினை நீட்டிக்கவா, இல்லை சனியனை விரட்டிவிட்டு கவர்ணர் ஆட்சியினை நிறுத்தவா என்பது இனிதான் தெரியும். இரண்டாவது விஷயத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.. ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா? எங்கே? ஜெயலலிதா பற்றி ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கேள்விகளை எல்லாம் தேசிய கட்சியான பாஜக கேட்டு சிபிஐக்கு விசாரணையிட்டால் எப்படி இருக்கும்? பாஜக மீது எவ்வளவு மரியாதை வந்திருக்கும்? அப்படி செய்ய்யாமல் […]