பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறை அமைச்சர் ஆனார்

நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறை அமைச்சர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவி கிடைத்ததை வரவேற்கின்றோம், சக்திவாய்ந்த இந்த பதவி மூலம் ராமேஸ்வரம் மீணவர்களை வானதி காப்பாரா? அந்த கொடூரங்களுக்கு முடிவு கட்டபடுமா? என்பது இனிதான் தெரியும் தமிழர் ஒருவர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருக்கும் பொழுது அந்த எதிர்பார்ப்பு கூடவே செய்யும். ஆனால் கட்சிக்கு பெரும் உழைப்போ அல்லது பெரும் அடையாளமாகவோ இல்லாத நிர்மலா சீத்தாராமன், திடீரென உச்சம் பெற்றிருப்பது ஆச்சரியம்தான். பொன்னார் இனி பொற்காசு துறையினையும் […]

தமிழக போராட்டங்களில் வழக்கறிஞர்கள் பங்கு மறக்கமுடியாதது

பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தியது வழக்கறிஞர்கள். காந்தி, வ.உ.சி முதல் வெள்ளையனை சட்டபூர்வமாக எதிர்த்த எல்லோரும் வழக்கறிஞர்களே. சமூக உரிமைக்காக போராடிய நீதிகட்சி பன்னீசெல்வமும் வழக்கறிஞரே. ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக சட்டம் ஆளும் நாட்டில் வழக்கறிஞர்களின் குரல் இன்றியமையாதது. முன்பெல்லாம் தமிழக போராட்டங்களில் வழக்கறிஞர்கள் பங்கு மறக்கமுடியாதது, பல போராட்ட வெற்றிகளின் காரணகர்த்தாக்கள் அவர்கள்தான். இன்று அவர்கள் அமைதியாகிவிட்டார்கள், அநியாய சாவுகள் அதிகரிக்கின்றன. வழக்கறிஞர்கள் உரிமைகுரல் எழுப்பாத எந்த‌ ஜனநாயக நாடு எதுவும் […]

இது தற்கொலை அல்ல, நிர்பந்த கொலை

அந்த அபலை அனிதா இனி இல்லை, தன் குடிசையில் இருந்தபடி பல ஆண்டுகளாக மருத்துவ கனவு கண்ட அவரின் கனவும் இனி இல்லை. தன் கூட்டில் ஒரு குருவி திரும்பி வரமுடியாத இடத்திற்கு சென்றதை எண்ணி அந்த கூடே அலறி துடிக்கின்றது, பார்க்க முடியா சோகமது. குனிந்த முதுகையும், உழைத்து ஓய்ந்த உடலையும் சுமந்து திரியும் அந்த கிராமம். இந்த மண்ணின் மகள் கல்வியால் உயர்வாள், பெருமை சேர்ப்பாள் என எண்ணியிருந்த அந்த அப்பாவி கூட்டம் தன் […]

கலைஞர் அமைதியானார், எல்லாம் அடங்கிபோயிற்று

ராஜாஜியின் கல்வி திட்டத்தை, குல கல்வி திட்டம் என பெயர்வைத்து போராடி, அவர் ஆட்சியினையே விரட்டி உரிமைகளை காத்த தமிழகம் இது இன்று நீட் தேர்வால் மாணவர் தற்கொலை அளவு நிலமை சென்றாலும் பெரும் எதிர்ப்பு ஏதுமில்லை திமுகவினை அடக்கினால் தமிழக உரிமை குரல்களை அடக்கலாம் என டெல்லி அன்றே திட்டமிட்டது மிக சரியான கணக்கு என்பதை காலம் சொல்லிற்று. பெரியார் , அண்ணா, கலைஞர் வரிசையில் ஒருவரும் உருவாகி வராததும் தமிழக சோகம்.. பெரியார் இறந்தார் […]

அனிதா எனும் மாணவிக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி…

அனிதா எனும் மாணவிக்கு ஏற்பட்டிருப்பது அநீதிதான், சந்தேகமே இல்லை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்றால் இந்த நுழைவு தேர்வுகள் எல்லாம் தேவையே இல்லை. இன்று நுழைவுதேர்வு வந்துவிட்டதால் ஒரு ஏழைபெண்ணின் மருத்துவ கனவும் தகர்ந்துவிட்டது என கொதிக்கும் தமிழகத்தில்தான், எத்தனையோ உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு உயர் கல்விகள் அவர்கள் உயர்சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக மறுக்கபட்டது என்பதை வசமாக மறைத்துவிடுகின்றார்கள். இட ஒதுக்கீடால் பாதிக்கபடும் மாணவர்களுக்கு இழைக்கபடுவதும் அநீதியே, இம்மாதிரி போதிய மதிப்பெண் இருந்தும் நுழைவு தேர்வு […]

அனிதா : தற்கொலைகள் ஒரு தீர்வினையும் தராது

அந்த பெண் நிச்சயம் புத்திசாலி , நன்றாக படித்திருக்கின்றார், மதிப்பெண்களை அள்ளியிருக்கின்றார். மிகபெரும் தைரியமும் இருந்திருக்கின்றது, நீட் தேர்வினை எதிர்த்து வழக்கு எல்லாம் தொடுத்திருக்கின்றார். ஆனால் தன்னம்பிக்கை என்றால் என்ன என தெரியாமலும், இச்சிக்கல் எல்லாம் கடந்து செல்லகூடியது என்பதும், படிப்பு மட்டும் வாழ்கை அல்ல என்பதும் தெரியாமல் இருந்திருக்கின்றது. கனவு படிப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்வதெல்லாம் ஏற்றுகொள்ள கூடியது அல்ல, பள்ளி தேர்வுகளில் தோல்வியுற்றதற்காக சிலர் தற்கொலை செய்வது போலத்தான் இதனை கருதமுடியும். இந்த […]

மு.க ஸ்டாலினே போதும்

காலத்தின் கடுமையினை பொறுத்துதான்  தலைவர்கள் தமிழகத்தில் உருவாகுவார்கள் போல.. கடும் பிராமண அதிகார காலத்தில் பெரியார் உருவானார். குமாரசாமி ராஜா, ராஜாஜி காலத்தில் அண்ணா, கலைஞர், ஜீவா எல்லோரும் உருவானார்கள். இந்திரா காலத்தில் கலைஞர் மிக பெரும் எதிர்ப்பு சக்தியாக நின்றார். இப்படி இருந்த தமிழகத்தில் இந்த மோடி, அமித்ஷா, தமிழிசை, எடப்பாடி காலங்களுக்கு மு.க ஸ்டாலினே போதும் என காலம் முடிவு செய்திருக்கலாம்

உண்மைபேசும் ஒரே ஊடகம் ஜெயா டிவி !

அகில உலகிலே இந்த நொடியில் உண்மைபேசும் ஒரே ஊடகம் இந்த ஜெயாடிவிதான். யார் என்ன சொன்னாலும் இதனை என்னால் உறுதியாக சொல்லமுடியும், இப்பொழுது அதுதான் மகா உண்மையினை சொல்கின்றது அதாவது இந்தியாவில் மத்திய அரசும் சரியில்லையாம் , மாநில அரசு மகா மோசமாம். தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழலாம். மாநில முதல்வருக்கு பொறுப்பே இல்லையாம், சுயநலத்தில் மாநில நலனை விட்டுவிட்டாராம். தமிழநலன் இந்த அரசால் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றதாம். இப்படி மிக துணிவாக சொல்கின்றது ஜெயாடிவி […]

மிக மிக தடுமாறுகின்றார்

வருகின்ற பல செய்திகள்படி சொல்வதென்றால், நாடு மோசமான நிலையினை எட்டிகொண்டிருக்கின்றது. ரூபாய் நோட்டு ஒழிப்பு இன்னபிற நடவடிக்கை எல்லாம் ஒரு விளைவினையும் ஏற்படுத்தவில்லை, மாறாக பல முன் தயாரிப்பில்லா பல திட்டங்கள் நாட்டை பல சிக்கல்களில் ஆழ்த்தியிருக்கின்றது தொழில் முடக்கம் ஏற்படுகின்றது, வேலை வாய்பில்லா சிக்கல் பெருகுகின்றது, பொருளாதாரம் சரிகின்றது. இது முன்பே சொல்லபட்ட விஷயங்கள்தான். இந்தியா மிகபெரிய நாடு, பெரும் மக்கள் தொகை உள்ள நாடு. எல்லா மாற்றங்களும் தேவைதான், ஆனால் அவையெல்லாம் ஒரே நாளில் […]

உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை

சசிகலா மீதான வழக்குகளை காட்டி, தினகரன் மீதான வழக்குகளில் மிரட்டி, பன்னீரையும் பழனிச்சாமியினையும் பார்வையிலே கதறவைத்து பாஜக மிரட்டலாம் அதன் மூலம் அதிமுகவினை விரல் நுனியில் ஆட்டலாம் ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கினை, தயாநிதி மாறன் வழக்கினனை காட்டி கலைஞர் குடும்பத்தையும் மிரட்டி திமுகவினை ஆட்ட நினைத்தால் அக்குடும்பத்தை ஒதுக்கிவிட்டு திமுகவினை காக்க உண்மையான திமுகவினர் முன்வருவார்கள் எனறொரு குரல் எங்காவது கேட்கின்றதா என்றால் இல்லை உண்மையான திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்கும், ஆனால் தளபதி ஜால்ரா, […]