பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அணிகள் இணைந்ததாக பன்னீர் செல்வம் டிவிட்டரில் அறிவிப்பு

அப்பொழுதே அந்த மக்களுக்கு கிணறு இல்லை, முடிந்தால் பலகோடி கொடுத்து வாங்குங்கள் என சொன்னவர் பன்னீர் செல்வம் இப்பொழுது துணை முதலமைச்சர் வேறு, இனி அந்த மக்களுக்கு ஏதும் நியாயம் கிடைக்கும்? கிடைக்கவே கிடைக்காது. சதா பன்னீரின் தோளை தட்டி பேசும் மோடியும், ஆளுநரும் கூட அந்த கிணற்றை கொடுத்துவிடு என சொல்லவும் மாட்டார்கள். நிச்சயமாக அந்த மக்கள் பாவம், அவர்கள் என்ன? மொத்த தமிழக மக்களுமே பரிதாபம் தான்.     “போடா எல்லாம் விட்டுதள்ளு […]

இந்தியாவின் கென்னடி

ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது. இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை, பெரும் சொத்துக்களும்,பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் அவர். 16 […]

இங்கும் அங்கும் …

இதுதான் மோடி இந்தியா வளம்பெற உலகெல்லாம் நடையாய் நடந்ததில் கிழிந்த செருப்பு, இன்னமும் மோடி இந்த கிழ்ந்த செருப்பைத்தான் வைத்திருக்கின்றார். இதனை தூர எறியாமல் தனக்கு தந்தால் உபயோகமாக இருக்குமென்று உ.பி முதல்வர் யோகி கடிதம் எழுதியிருப்பதாகவும் சில பாஜகவினர் சொல்லிகொண்டிருக்கின்றனர். ரஜினி திருநாவுக்கரசர் சந்திப்பு மோடி சந்தித்தே சிக்காத ரஜினி திருநாவுக்கரசருக்கு மசிந்துவிடுவாரா? காங்கிரசில் இருந்து ஒருவர் சந்தித்தால், பாஜகவில் இருந்து ஒருவர் ரஜினியினை சந்திக்கவேண்டும் என்பது விதி அடுத்து தமிழிசை திடீரென ரஜினியினை சந்திக்கலாம். […]

பல முகமுடிகள் கிழியலாம்

உலகில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அலெக்ஸாண்டர் கால சமாதான பேச்சுக்கள் முதல், ஜெர்மனி இணைப்பு, அமெரிக்க ரஷ்ய அணுகுண்டு பேச்சுவார்த்தை, இப்பொழுது நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன் பேச்சு, இந்திய பாகிஸ்தான் பேச்சுக்கள், மிக சிக்கலான ஈரான் மேற்குலக பேச்சு, அமெரிக்க வடகொரிய பேச்சு, சிரிய அமைதி பேச்சு என ஏராளம் ஆனால் இந்த பன்னீரும் எடப்பாடியும் பேசுவது போல ஒரு நாடும் பேசவில்லை. பேசினார்கள், பேசுகின்றார்கள், இன்னும் பேசுவார்கள் எனும் அளவில் பேசிகொண்டே இருக்கின்றாகள், இன்னும் முடிவு […]

ஜெ. மரணம் குறித்து விசாரணை : எடப்பாடி பழனிசாமி

ஜெ. மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் எந்த விசாரணை ஆணயம் தன் முடிவினை அறிவித்தது? ஒன்றுமேயில்லை. இதில் ஜெயலலிதா மரணத்தில் மட்டும் உண்மை வந்துவிடுமா? எல்லாம் நாடகம். அந்த அப்பல்லோ நாடகம் நடக்கும் பொழுது பார்த்துகொண்டிருந்தவர்கள் இன்று அடுத்த நாடகத்தில் இறங்கிவிட்டார்கள். அன்புமணி போன்ற சிலர் சொல்வது போல சிபிஐ விசாரணைதான் சிறந்தது, அதனைத்தான் செய்யவேண்டும் ஆனால் மோடியில் கால், வால் என அதிமுக இருக்கும்பொழுது அதெல்லாம் சாத்தியமில்லை. சரி இந்த […]

மயிலை பார்த்து வான்கோழி அல்ல, காகம் ஆடினால்….

மயிலை பார்த்து வான்கோழி அல்ல, காகம் ஆடினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு பேட்டியினை கொடுத்திருக்கின்றார் தமிழிசை. ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றார்கள். அங்கு சென்று கட்சி பற்றியோ, மோடி சாதனை பற்றியோ பேசியிருக்கலாம். அப்படி ஏதும் இருந்தால்தானே பேச அதனால் அம்மையார் தடாலடி விஷயங்களில் இறங்கிவிட்டார் அதாவது குஷ்பூ கொசுதொல்லை போன்றவர் என பேசியிருக்கின்றார். இதற்கு முதலில் சிரிக்கவேண்டும். அதன் பின் தமிழிசையிடம் சில கேள்விகளை கேட்க வேண்டும். எங்கிருந்தோ தமிழகம் வந்து, மக்கள் மனதை […]

குஷ்புவிற்கு ஒரு நியாயம்… மோடிக்கு ஒரு நியாயமா?

ஆச்சரியமாக மோடி ஆட்சியில் இந்த திராவிட சிகாமணிகளுக்கு இந்து தெய்வத்தை பற்றிய திடீர் அக்கறை வந்திருக்கின்றது அதாகபட்டது பல பெண்கள் இந்து கடவுள் படத்தினை டாட்டூ குத்தியிருக்கின்றார்களாம், அது பெரும் தவறாம் முன்பு குஷ்பூ அணிந்த சேலையில் இந்துகடவுள் படம் இருந்து அதற்கு இந்துத்வ காலர்கள் சூலம் ஏந்தி கிளம்பியதை சுட்டி காட்டுகின்றார்களாம். ஆனால் இதே பகுத்தறிவு சுடர்கள், குஷ்பூ கற்பு சர்ச்சையில் சிக்கியபொழுது பெரியார் அன்றே சொன்ன கற்பு பற்றிய செய்திகளை சொல்லி குஷ்பூவிற்கு துணை […]

சசிகலா பிறந்த நாள்

சசிகலாவிற்கு இன்று பிறந்தநாள், சட்டம் இடம் கொடுத்தால் சிறையில் பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கபடும் என சசிகலா ஆதரவாளர்கள் பேட்டி சட்டத்திற்கு இவர்கள் என்று இடம் கொடுத்தார்கள்? கொடுக்க வேண்டியதைத்தான் கொடுத்தார்கள். ஒருவேளை அனுமதிகிடைத்தால் சசிகலா சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கி என்ன சொல்வார்? ” உங்களோடு நான், உங்களுக்காக நான், உங்களால் நான்” என்னசொன்னாலும் ஒரு உண்மையினை ஏற்றுகொள்ளவேண்டும், ராஜாஜிக்கு பின் அப்படியே பிராமணருக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் ஜெயலலிதா. ஜெயாவின் ஆட்சி , ராஜாஜி […]

போயஸ் வீட்டை தரமாட்டேன் : தீபா மற்றும் சில

போயஸ் வீட்டை தரமாட்டேன் : தீபா. கிணற்று நீரை கூட சொந்த ஊர் மக்களுக்கு கொடுக்கமாட்டேன் : பன்னீர். கட்சி, ஆட்சி, ஜெயா சொத்து, கட்சி, சிறை என எல்லாம் எங்களுக்கே, : மன்னார்குடி குடும்பம், எது எப்படி போனாலும் பதவி எனக்கே : பழனிச்சாமி இவர்கள்தான் பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்திற்கும் தங்களை அர்பணித்திருக்கும் அதிமுக தலமைகள், இவர்களா பலன் எதிர்பாரா அரசியல் சேவை செய்வார்கள்? இவர்களிடம் சிக்கினால் தமிழகம் என்ன ஆகும்? எதனையாவது விட்டு வைப்பார்களா? ஆனாலும் […]

உயிரிழந்த வீரர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று வைகோ ஆறுதல்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வீரர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று வைகோ ஆறுதல் மிஸ்டர் வைகோ, உங்கள் நிலைப்பாடுதான் என்ன? இந்திய ராணுவத்தை அந்நிய நாட்டு தீவிரவாத கும்பல் ஈழத்தில் சுட்டுகொன்றபொழுது , அந்த கும்பலை ஆதரித்துத்தான் நீங்கள் கடல் கடந்து விசா இல்லாமல் கள்ளதோணியில் எல்லாம் சென்றீர்கள். அதனை வீரசாகசமாக இன்றுவரை மேடையில் மட்டுமல்ல‌ கழிவறையில் கூட உங்களுக்கு நீங்களே சொல்கின்றீர்கள். சொந்த நாட்டு ராணுவத்தை எப்படி எல்லாம் அவமானமாக பேசினீர்கள். இந்நாட்டில் […]