பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கமல் ட்வீட்ஸ்…

இவர் தமிழில் எழுதியே தலைகீழாக நின்றாலும் ஒரு மண்ணும் புரியவில்லை, இதில் ஆங்கிலத்தில் எழுதி புரியவைக்க போகின்றாராம்.     கொஞ்சம்பேர் இந்த “ஒட்டடை குச்சி ஓவியா” அடுத்த குஷ்பூ என சொல்லி கொண்டிருக்கின்றான், அவனுக்கெல்லாம் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யலாம் என்ற கோரிக்கை பரிசீலிக்கபடுகின்றது தமிழிசை இந்திராகாந்தி ஆக முடியாது, ஓவியா குஷ்பூ ஆக முடியாது ஓவியா சின்னதம்பி குஷ்பூ மாதிரி என எந்த பயலாவது கிளம்பினால் சும்மா விடமாட்டோம் ..

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 04

எமபாதகனும் ஹிட்லரிடம் பயிற்சிபெற்றவருமான ஈச்மெனை கண்காணிப்பது சுலபமான விஷயம் அல்ல. 12 பேர் கொண்ட மொசாத் குழு எப்படி ஈச்மெனை அவருக்கு சந்தேகம் வராத அளவு கண்காணித்தது என்பது இன்றுவரை புரியவில்லை. 12 பேர்தான் சுற்றி சுற்றி வந்திருக்கவேண்டும். அதுவோ புறநகர் பகுதி, அவ்வளவாக மக்கள் நடமாடாத பகுதி. ஒரு காக்கா பறந்தாலே தனியாக தெரியும், இதில் 8 மாதம் எப்படி கண்காணித்தார்கள்? கடவுளுக்கே வெளிச்சம். சரி 70% இவர் ஈச்மென் என தெரிகின்றது தூக்கிவிடலாமா? அதிலும் […]

சசிகலாவின் சட்ட மீறல் மற்றும் சட்ட வளைப்பு

பெங்களூர் சிறையில் சசிகலாவின் சட்ட மீறல் மற்றும் சட்ட வளைப்பு மிகபெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கின்றது சிறையில் இருப்பேனே தவிர, சிறையின் எந்த சட்டதிட்டத்திற்கும் கட்டுபட‌ மாட்டேன் என பல காரியங்களை லஞ்சத்தை விட்டெறிந்து செய்திருக்கின்றார் சசிகலா, கிட்டதட்ட சிறை அவருக்கு ஓய்வெடுக்கும் அறைபோலவே இருக்கின்றது மற்றபடி போயஸ்கார்டன் சமையல்காரி முதல் அங்கு சமையலுக்கு அமர்த்தியிருக்கின்றார், தன்னை தனிமைபடுத்தியிருக்கின்றார், டிஜிபி எனும் பிக்பாஸின் கேமராக்களை பிடுங்கி எறிந்திருக்கின்றார், எப்பொழுது வேண்டுமானாலும் பெங்களூர் முழுக்க சுற்றிவிட்டு எந்நேரமும் அவரால் சிறைக்கு […]

ஈச்மென் மொசாத் :03

சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன். அவரும் ஒரு ஐரோப்பிய யூதர். ஹிட்லர் சோம்பல் முறித்து எழும்பி யூதர்களை பார்த்து கண்களை உருட்டும்பொழுதே ஐரோப்பாவை விட்டு வெளியேறியவர். அதாவது ஒரு நாசி கும்பலால் தாக்கபட்டு பிழைத்தவர். மொத்த ஐரோப்பவும் ஹிட்லருக்கு என பலர் அஞ்சி வேறு கண்டக்களுக்கே தப்பிய காலம், பெரும்பான்மையனவர்கள் யூதர்கள். பொறுமையாக மகளிடம் விசாரித்தார், அவன் பெயர் என்ன? அவள் சொன்னாள் “குளோஸ் ஈச்மென்”. சரி அந்த சனியனை பெற்ற பெரிய சனியன் பெயர் என்ன? […]

சாதி என்பது அரசியல்வாதிகளாலே வாழ்கின்றது…

மிக பெரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் இது, அருவருக்கதக்க, கொஞ்சமும் பகுத்தறிவே இல்லாத, ஏன் அறிவே இல்லாத விஷயம் இது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம், ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம், அதற்காக இப்படி எல்லாம் வன்ம் சர்ச்சை வளர்ப்பது இத்தேசத்திற்கு நல்லது அல்ல‌ ஒன்று கடவுள் இல்லை என சொல்லவேண்டும் அல்லது அம்பேத்கர் புத்தமதம் பக்கம் ஒதுங்கியது போல ஒதுங்க வேண்டும் மாறாக இப்படி அந்த மதத்தை சீண்டுவது என்பது கண்டிக்கதக்க இன்று, தண்டிக்கதக்க கூடியது. பன்றி […]

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு இப்போது மனம் வெறுத்து திரியும் ஒரு நபர் யாரென்றால் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுதான் அந்த பாஜகவிலே இருந்திருந்தால் நிச்சயம் நல்லவாய்ப்பினை பெற்றிருக்கலாம் , இப்பொழுது காங்கிரசில் வந்து சிக்கிகொண்டார், விதி வலியது என்பது இதுதான் துணை ஜனாதிபதியான பின்பாவது “அதிமுக அரசினை கலைக்கமாட்டோம்” போன்ற கருத்துக்களை அவர் பழக்க தோஷத்தில் பேசாமல் வெங்கய்யா நாயுடு நிறுத்தட்டும். பதவிக்கு ஒரு பொறுப்பு உண்டல்லவா? தமிழகத்துக்கு தண்ணீர் தர மழை பெய்விக்க […]

கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்!

கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்! அன்றே சொன்னதுதான், சித்தராமையா நாடகம் ஆடுகின்றார், சசிகலா தரப்பிற்கு காங்கிரஸின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை நீதிபதி குன்ஹா தலமையில் விசாரணை நடக்காமல் உண்மை வெளிவராது உண்மை வருகின்றதோ இல்லையோ, இப்பொழுது வந்திருக்கவேண்டிய காவேரி வரவில்லை. அணை கதவுகளை இறுக்கிவிட்டது கர்நாடகா. சிறையில் சசிகலாவிற்கு வசதிகள் பெருக பெருக, காவேரியினை திற எனும் எடப்பாடி அரசுக்கு வாய்பூட்டு போட்டாயிற்று, எங்கோ எழுதபடாத ஒப்பந்தம் துண்டைபோட்டு விரலை பிடித்து நடந்திருக்கலாம், சசிகலாவிற்கு […]

சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம்

சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம் கொஞ்ச நாளாகவே அவருக்கு மிரட்டல் வருவது செய்திகள், இதனையும் இன்னும் சில காரியங்களுக்காகவும் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் அவர் சத்தியராஜ் ஒரு இனமான பச்சை தமிழர், தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்ற முழக்கம் கொண்டவர் இப்பொழுது எழும் கேள்வி என்ன? பச்சை தமிழன் எடப்பாடி கல்லுமாதிரி தில்லாக கோட்டையில் இருக்கும்பொழுது, இந்தபெண் தமிழ் முதல்வருக்கு கடிதம் எழுதாமல் ஒரு குஜராத்தியரான மோடிக்கு ஏன் கடிதம் எழுதவேண்டும்? பச்சை தமிழன் ஆட்சியில் ஒரு […]

ஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை

ஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை அதியமானை பல மன்னர்கள் அடிக்க கிளம்பும்பொழுது ஓளவையார்தான் தூது சென்று காத்தாராம், அப்படி இந்த வீக்பாடி அரசினை இன்னும் விட்டுவைத்திருக்கும் கவர்ணர் மாளிகையில் அவ்வையாரின் சிலையினை சரியான நேரத்தில் வைத்திருக்கலாம் அதனை விட இன்னொரு கோணம் முக்கியமானது “குடி உயர கோன் உயரும்” என சொன்னவர் அல்லவா? குடியில்தானே தமிழக அரசு ஓடிகொண்டிருக்கின்றது, அவ்வையார் மக்கள் என சொன்ன குடியினை, இவர்கள் டாஸ்மாக் குடியாக எண்ணி, “அன்றே சொன்னார் அவ்வை” என […]

கமலுக்கு ஆதரவாக குஷ்பூவின் குரல்

கமலஹாசனை அரசு வம்புக்கு இழுக்கின்றது, எந்த நடிகனும் சத்தமே இல்லை, முன்னாள் எதிர்கட்சி தலைவரான விஜயகாந்தின் “சேரை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” “த்த்தூ” போன்ற முத்திரைகளையும் காணவில்லை கமலுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் குரல் வரும் நிலையில் சினிமாக்காரர்கள் குரல் வரவில்லை, வரவும் வராது ஆனால் ஒரே ஒரு குரல் மிக தைரியமாக ஒலிக்கும், விரைவில் ஒலிக்கும் அது குஷ்பூவின் குரல் என்று சொல்ல தேவையில்லை, அவரை தவிர அவ்வளவு தைரியம் யாருக்கும் சாத்தியமில்லை Iron Lady […]