பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம்…..

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம், அவாளை பார்ப்பான் என சொல்ல கூடாதாம், அது நல்ல சொல் இல்லையாம்.. பார்ப்பான் என்ற சொல்லை பாரதியாரே பயன்படுத்தியிருக்கின்றார், அவரே பிராமணர்தான். பஞ்சாங்கம் பார்ப்பவன், ஜாதாகம் பார்ப்பவன் கூடவே அதனை வைத்து நல்ல வருமானம் பார்ப்பவன் எனும் வகையில் அது பார்ப்பணம் ஆயிற்று, இது பாரதிக்கு முன்பிருந்த சொல் இப்பொழுது அது எஸ்.வீ சேகருக்கு வசைச்சொல் ஆயிற்றாம், அப்படி சொல்ல கூடாதாம் பின் அய்யா என்ன எதிர்பார்க்கின்றார்? பிராமணர்களை அய்யர்வாழ், […]

செத்தும் சுருட்டுகின்றார் ஜெயலலிதா….

ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாக் கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிஸ்டர் பழனிச்சாமி, அவ்வளவு தைரியமிருந்தால் ஜெயா வாழ்ந்த வீடு நினைவுசின்னம் ஆக்கபடும், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களாக்கள் அரசுடமையாகக்பட்டு ஜெயா நினைவு மண்டபமாக மாற்றபடும் என சொல்லுங்கள் பார்க்கலாம். செய்ய வேண்டியது அதுதான், மக்கள் சொத்தை உறிஞ்சி ஜெயா கட்டிய மாளிகையினை பாரீர் என அப்படித்தான் உலகிற்கு காட்ட வேண்டும்.. மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர் என நீதிமன்றமே தீர்ப்பிட்டவருக்கு, […]

குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி அமைச்சர், காவலர் பெயர் இந்த குற்றசாட்டில் இருக்கின்றது, அவர்கள் மாநில அரசின் அங்கம், இது மாநில அரசின் மீதே பெரும் அவமானமான, அதிர்ச்சிகரமான குற்றசாட்டு இதில் மாநில அரசே விசாரிக்கும் என்றால், குற்றவாளி தன்னைத்தானே விசாரிக்கட்டும் என விட்டுவிடுவது போலாகும், விட முடியுமா? ஸ்டாலின் இதனைத்தான் சொல்கின்றார், இது சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு, மாநில அரசே சிக்கியிருக்கும் வழக்கு ஸ்டாலின் சொன்னதில் அர்த்தம் […]

கிறிஸ்துவின் சுரூபங்களில் ரத்தம் வடியும்…

குழந்தை ஏசு ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் மக்களின் எதிர்ப்பினை மீறி கல்யாண மண்டபம் கட்ட முயன்ற ஆயரை முற்றுகையிட்டமக்கள், திருச்சி ஆயர் தலைமறைவு அதாவது மக்கள் ஆலயத்தை விரிவாக்க சொன்னால், ஆயர் நான் மண்டபம் தான் கட்டுவேன் என பிரச்சினை செய்ததால் மக்களுக்கு கோபம் வந்து விரட்டுகின்றார்களாம் இயேசு நாதர் சாய இடமின்றி அந்தரத்தில் கோவணமின்றி இறந்தவர், அக்கால போதகர்கள் மாற்று உடையின்றி கையில் சிலுவையும் ஜெபமாலையுமாக இந்தியா வந்தார்கள். அக்கால கிறிஸ்தவ துறவி எவனுக்கும் அரை […]

சாராயம் விற்கின்றது தமிழக‌ அரசு

சாராயம் விற்கின்றது தமிழக‌ அரசு, அதுதான் தமிழக வருமானத்தில் முதலிடம் என அதுவே ஒப்புகொள்கின்றது. அந்த பணத்தில்தான் ஜெயலலிதாவிற்கு மெரீனாவில் மணி மண்டபம் கட்டபோகின்றார்களாம்.. இந்த லட்சணத்தில் போதை பாக்குகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு அது அனுமதித்தது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? இரட்டை இலையினை மீட்பது முதல் எவ்வளவு லஞ்சம் அவர்கள் கொடுக்க துணிந்தார்கள் என்றால் இப்படி அனுமதித்துதான். கூவத்தூரில் பணமழை கொட்டியது என்றால் காரணம் இம்மாதிரி மேகங்கள் தான் மது ஆறாக ஓடும் மாநிலத்தில், […]

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: சீமான்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: சீமான் இதோ இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் சொல்லிவிட்டார் அல்லவா?, ரஜினி எச்சரிகையாக இருப்பது நல்லது. அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தினை பிடித்துகொண்டு இவர் அரசியலுக்கு வரலாமாம், ஆனால் இந்நாட்டு குடிமகன் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாமாம் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் சீமான்? உங்களால் என்ன செய்துவிட முடியும்? சயனைடு கடிக்கத்தான் முடியும்.. அதனை முன்னமே செய்வது நல்லது.  

ஒவ்வொரு சிக்கலிலும் கலைஞரை தமிழகம் நினைவு கூர்ந்தே தீரும்…

மிசா காலங்களை பற்றி எல்லோரும் எழுதிகொண்டிருக்கின்றார்கள் இந்திய ஜனநாயகத்து கருப்பு நாட்கள் அவை, சஞ்சய் மீதான சர்ச்சை, தன் மீதான தீர்ப்பு இவைகளை திசை திருப்ப இந்திரா அதனை செய்தார் என்பதில் மாற்றுகருத்து இல்லை இந்திய நாட்டிற்கு ஆபத்து வந்ததாகவும், அதனால் மிசா அறிவிக்க பட்டதாகவும் சொன்னார் இந்திரா முதல் எதிர்ப்பு கலைஞரிடமிருந்துதான் வந்தது, “ஆபத்து வந்தது நாட்டிற்கா? இந்திரா காந்தி வீட்டிற்கா?” என கேட்டது அவர்தான், அது இந்தியா முழுக்க எதிரொலித்தது காமராஜரை கலைஞர் அப்படி […]

இஸ்லாம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் : மோடி

பல இனம் வாழும் பன்முக தன்மையே இந்தியாவின் சிறப்பு, இஸ்லாம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் : மோடி இந்தியா பல இனம் வாழும் நாடு என்ற மிக பெரும் உண்மையினை சொல்லி, அதனை ஒப்புகொண்ட மோடிக்கு மனமார வாழ்த்துக்கள். நமது பிரதமர் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆவல், மிக சரியான வார்த்தைகளை சொல்லி ரமலான் வாழ்த்துக்களை மோடி தெரிவித்திருக்கின்றார் வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி, இப்படிபட்ட மோடியாக நீங்கள் இருந்தால் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி […]

மோடி எனது உண்மையான நண்பன் : டிரம்ப்

மோடி எனது உண்மையான நண்பன் : டிரம்ப் நல்ல உலக தலைவர்கள் யாரும் டிரம்பினை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை, ஐரோப்பா அவரை ஒதுக்கியே வைத்திருக்கின்றது, உலகில் பெரும் அதிருப்தியினை சம்பாதித்திருப்பவர் டிரம்ப். ஐரோப்பா என்ன? உலகின் பெரும் தலைவர்கள் யாரும் அவரை சந்திப்பதை கூட தவிர்த்தே வருகின்றார்கள், டிரம்பின் இமேஜ் அப்படி அவர் மோடியினை உண்மையான நண்பன் என சொல்வது ஒரு வகையில் மோடிக்க்கு நெருடல்தான், பெருமை அல்ல‌ உலகமே டிரம்பினை ஒரு மாதிரி பார்க்கும் நிலையில் […]

ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்…

ரமலான் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும், “தமிழகத்தின் தங்க மங்கை” குஷ்பூவின் ரசிகர்களான “தங்கத்தின் தங்கங்கள்” சார்பாக‌ மனமார்ந்த வாழ்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். அன்பும், அமைதியும் எல்லோருக்கும் உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் உலகெல்லாம் நிலவட்டும் ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்… (ஓய்வு நேரமும், விடுமுறைகளும் குஷ்பூ படங்களின்றி அமையகூடாது என்பது வாழ்வின் விதி.. இந்த விடுமுறையில் குறைந்தது 25 குஷ்பூ படங்களை பார்த்துவிடுவது என முடிவு செய்திருக்கின்றேன், சீரியல்களும், அரசியல் பேட்டிகளும் தனி கணக்கு)