சிறு குறுச் செய்திகள்..
ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர் அதாவது பாஜகவின் தமிழக கிளைச்செயலாளர்கள் இருவர் முன்மொழிந்திருக்கின்றனர், இதிலென்ன அதிசயம் இவர்கள் ஆட்சியினை காப்பாற்றிகொள்ள தமிழிசையினை கூட முதல்வராக முன்மொழிய தயாராக இருப்பவர்கள், இதில் ராம்நாத் கோவிந்தனை முன்மொழிந்ததா ஆச்சரியம்? இனி தமிழக பாஜக வரிசை பொன்னார், தமிழிசை என்பதை தாண்டி பன்னீர், பழனிச்சாமி, தம்பிதுரை தினகரன் என நீளும்.. மிஸ்டர் பன்னீர் செல்வம், அம்மா மரணத்திற்கு நீதிவிசாரணை கோரும் உங்கள் தர்மயுத்தம் என்னாயிற்று? […]