பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

2019 தேர்தல் வெற்றிக்காக தலித் ஒருவரை ஜனாதிபதியாக்கியுள்ளது பாஜக : திருமாவளவன்

2019 தேர்தல் வெற்றிக்காக தலித் ஒருவரை ஜனாதிபதியாக்கியுள்ளது பாஜக : திருமாவளவன் தலித் ஒருவர் ஜனாதியாக்க வேண்டும் என சொன்னவரும் இவர்தான், இப்பொழுது பாஜகவின் தலித் வேட்பாளரை எதிர்ப்பவரும் இவர்தான். எங்கள் கோரிக்கையினை ஏற்ற பாஜகவிற்கு நன்றி என சொல்லலாம் அல்லவா? சொல்லவில்லை சரி, பாஜகவினை எதிர்க்க என்ன செய்யவேண்டுமாம்? எதிர்கட்சிகள் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தவேண்டுமாம் அதனைத்தான் பாஜகவே நிறுத்திற்றே, பின் எதற்கு எதிர்கட்சிகள் நிறுத்தவேண்டும் என்றால் இவர் சொல்பவர்தான் உண்மையான தலித்தாம் சீமானும் பாரதிராஜாவும் […]

கஸ்தூரி ரஜினியினை சந்திக்கின்றார்….

கஸ்தூரி ரஜினியினை சந்திக்கின்றார், அடுத்து இந்து அமைப்பு பிரதிநிதிகள் சந்திக்கின்றனர், ஏதோ செய்திகள் ரஜினிக்கு சொல்லபடுவது தெரிகின்றது அந்த செய்திகள் கசியவிடபடுகின்றன‌ எம்ஜிஆரை முன்பு டெல்லி மிரட்டி வழிக்கு கொண்டு வந்த அந்த காட்சிகள் தெரிகின்றன.. தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலே பெரும் சிக்கல் வந்துவிடும் போலும், அடித்து மிரட்டி அரசியலுக்கு இழுத்து வந்துவிடுகின்றார்கள், ரஜினி இனி அரசியலுக்கு வந்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார் தமிழக சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருப்பது அவ்வளவு ஆபத்தா? அதனால்தான் சிம்பு சூப்பர் […]

அசைவம் உண்டால் புற்றுநோய் வரும் : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

அசைவம் உண்டால் புற்றுநோய் வரும் : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சைவராக இருந்து ஆத்திகம் பேசிய ரமண மகரிஷிக்கு கூட புற்றுநோய் வந்தது, அசைவத்தால் புற்றுநோய் வராது என்றால் பூனூல் பிராமணர் உட்பட சைவ உணவுக்காரர் யாருக்கும் வந்திருக்க கூடாது 96 வயதுவரை வாழ்ந்த பெரியார் உண்ணாத அசைவ உணவு கிடையாது இந்த அமைச்சர் எந்த கல்லூரியில் இந்த ஆராய்ச்சியினை செய்தார் என தெரியவில்லை, 60 வருடமாக பெரும் போராட்டத்தை புற்றுநோய்க்கு எதிராக எடுக்கும் விஞ்ஞானிகளுக்கு தெரியாததெல்லாம் […]

ஸ்டாலினுக்கு உள்ள தகுதி எனக்கும் உள்ளது!” – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

“ஸ்டாலினுக்கு உள்ள தகுதி எனக்கும் உள்ளது!” – முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி இருக்கின்றது பெரியார் கைகளில் தவழ்ந்து, அண்ணா மடியில் விளையாடி, எம்ஜிஆர் தோளில் விளையாடி, கலைஞர் கைபிடித்து வளர்ந்தவன் நான் என மு.க ஸ்டாலின் சொல்லலாம் காலம் அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கிற்று அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் என எல்லோரையும் அருகிருந்து பார்த்து வளர்ந்தவர் ஸ்டாலின், நிச்சயம் அது பெரும் வரம் காமராஜர் மிசா காலம் , எம்ஜிஆர் காலம் , ஜெயாகாலம் என […]

குஷ்பூவின் பேட்டியில் அவர் தமிழ் சரியில்லை

குஷ்பூவின் பேட்டியில் அவர் தமிழ் சரியில்லை, உச்சரிப்பு சரியில்லை, ரஜினியின் உச்சரிப்பு சரியில்லை என பலர் சொல்லிகொண்டிருக்கின்றான் அந்த ம.கோ ராமசந்திரன் என்ன தமிழில் சீர்காழி கோவிந்தராஜன் குரலிலா பேசினார் ஒரு வார்த்தை ஒழுங்காக பேசினானா அந்த மனிதன்? ஏதாவது புரிந்ததா? ஜெயலலிதா தெள்ளு, துள்ளு தமிழிலா பேசினார்? அடுத்த முதல்வர் பன்னீர் வாய் திறந்தாவது பேசினாரா? அவரை எல்லாம் விட்டுவிட்டு ரஜினிக்கு தமிழ் சரியாக தெரியவில்லை, குஷ்பூவிற்கு தமிழ் உச்சரிப்பில் பிழை என ஆளாளுக்கு சொல்ல […]

இன்று ராகுல்காந்திக்கு பிறந்தநாள்

இன்று ராகுல்காந்திக்கு பிறந்தநாள் பெரும் பாரம்பரிய குடும்பத்து வாரிசு, இன்றைய காங்கிரசின் உச்ச தலைவர், இளம் தலைவர் காங்கிரஸ் கட்சி பெரும் பாரம்பரியம் கொண்டது, கடந்த தேர்தலில்ல் அதற்கு பின்னடைவு என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிலிர்த்து எழும் ஆற்றல் கொண்ட கட்சி அது. அந்த கட்சியினை வழிநடத்தி செல்கின்றார், சுருக்கமாக சொன்னால் தேசத்தின் ஒரு எதிர்பார்ப்பு ராகுல் பாட்டியோ, தந்தையோ இவருக்கு அரசியல் சொல்லிகொடுக்கவில்லை, அன்னையின் சில ஆசிகள் உண்டு, மற்றபடி தன்னை தானே செதுக்கி வளரும் […]

இந்த பழநெடுமாறன் தமிழகத்தின் சாபம்..

அதிமுக ஆட்சியினை நீக்க கோரும் ஸ்டாலின் கோரிக்கை பேரவை மரபுக்கு எதிரானது: பழ. நெடுமாறன் முன்பு அடுத்த நாட்டு பிரச்சினைக்காக கலைஞரை பதவி விலக இந்த பழ.நெடுமாறன் சொன்னது எந்த மரபு? அடுத்த நாட்டு பிரச்சினைக்கு கலைஞர் பதவி விலக வேண்டும் என சொன்னது மரபாம், ஆனால் சொந்த மாநிலத்தில் காட்டாட்சி வேண்டாம் என சொல்வது மரபுக்கு எதிராம் இந்த பழநெடுமாறன் தமிழகத்தின் சாபம்..

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 03

சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், […]

இதுதான் சீமானிசம்

பெரியாரை, தந்தை என்று அழைக்கின்றீர்களே உங்களுக்கு ரெண்டு அப்பனா : சீமானிஸ்டுகள் இதற்கு பலர் பக்கம் பக்கமாக விளக்கம் அளிக்கின்றனர், சிம்பிளாக சொல்லிவிடலாம் அண்ணன் பிரபாகரன் என அடிக்கடி சொல்கின்றார் சீமான், தம்பி பிரபாகரன் என அடிக்கடி சொல்கின்றார்கள் வை.கோ, பழ. நெடுமாறான் கோஷ்டி அப்படியானால் அவர்களுக்கெல்லாம் இரு தகப்பனா? பெரியாரை “தந்தை” என அழைத்தால் கோபம் வருமாம், அங்கொரு கட்சி அதுவும் ஆளும் கட்சி “அம்மா அம்மா” என அழைத்தால் சத்தம் வராதாம், இதுதான் சீமானிசம்