பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி – மெர்க்கல் : இதைதான் பேசுகிறார்களோ ?

“கோயில், மாட்டுகறி, மதம், இட ஒதுக்கீடு , யோகா, சமஸ்கிருதம் மதவெறி, இரும்புகரம், சாமியார்கள், ஆசிரமம் இவை எல்லாம் இல்லாமல் எப்படி உங்கள் நாட்டில் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள்?? நாங்கள் கோட்சேயினை கூட மறக்கவில்லை, ஆனால் நீங்கள் இனவெறியன் ஹிட்லரை மறந்துவிட்டீர்களாமே? எப்படி?? ஆச்சரியமாக இருக்கின்றது? அவனை மறந்துவிட்டு என்ன அரசியல்??? எங்கள் நாட்டில் அதெல்லாம் சாத்தியமே இல்லை, அப்படிபட்ட விஷயங்கள் எல்லாம் இல்லாவிட்டால் நான் பிரதராக முடியுமா? இல்லை உங்களை எல்லாம் வந்து பார்க்கத்தான் முடியுமா? […]

கலைஞரின் அந்த முழு கவிதைதான் என்ன?

அந்த கலைஞரின் முழு கவிதை என்ன? என பலர் கேட்டார்கள், எங்கோ தேடியதில் சிக்கியது கலைஞர் நெடுமாறனை குறித்து எழுதிய வரிகள் என இன்று சொல்லபடுவது இதுதான், கலைஞருக்கு எதிரிகள் அதிகம், அவர்கள் கல்லெறி எல்லை மீறும்பொழுதெல்லம் கலைஞரின் சொல்லெறி இப்படி நிறைய வரும், அப்படி நாம் வாசித்து மனதில் தங்கிய வரிகளைத்தான் முன்பு சொல்லியிருந்தோம், அது பழநெடுமாறனுக்கு மட்டுமல்ல பலருக்கு எழுதிய வரிகளின் கலவை, நினைவில் நின்ற வரிகளை கொஞ்சம் குழப்பிவிட்டேன், பொருத்தருள்வீர் தசரதன் கதை […]

உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்..

பொதுவாக பக்கத்து மாநில முதல்வர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்வார்கள், அல்லது வருத்தம், இரங்கல் என ஏதாவது சம்பிரதாயங்களை சொல்வார்கள் முதன் முதலாக பக்கத்து மாநில முதல்வர் செவிட்டில் அடித்தாற்போல் பழனிச்சாமிக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார் இது நிச்சயமாக பெரும் அவமானம், “உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்..” என்ற ரீதியில் சொல்லபட்டிருக்கும் செய்தி பெரியார் கேரளா சென்று போராடிய காலம் மாறி, இன்று அவர்கள் நமக்கு மானம் ஊட்ட வந்திருக்கின்றார்கள் பச்சை தமிழன் ஆட்சியில், […]

பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?

கலைஞர் உடல்நலத்தோடு இருந்தபொழுது ஏன் சட்டமன்றம் வரவில்லை என பழ.நெடுமாறன் கிண்டல் செய்கின்றாராம், அன்னாருக்கு கலைஞரை சீண்டுவதில் அபார பிரியம் அப்படி ஒருமுறை சொன்னார், தசரத மகராஜா கண்ணாடியில் தன் முகத்தை கண்டானாம், தன் தலைமயிரில் ஒன்று நரைத்திருப்பதை கண்டு, உடனே தனக்கு வயதாயிற்றென்று மகனுக்கு பட்டம் சூட விளைந்தானாம், கலைஞருக்கு ஏன் அப்படி தோன்றவில்லை” கலைஞர் மறுநாள் முரசொலியில் எழுதினார் “குன்றனைய குமரி அனந்தன் புகழ்மறைத்த துரோகி வரிபுலிமேல் அமர்ந்தவாறு உறிஞ்சி தின்னும் ஒட்டுண்ணி ….. […]

சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை நாட்டின் அறிவு கோவில்களாக கருதபடுபவை அந்த ஐஐடிக்கள், அரசு அதற்கு அள்ளிகொடுக்கும் பணமும், மாணவர்களுக்கு அதன் மீதான கனவும் சாமான்யமல்ல‌ உலகளவில் மதிக்கபடும் இந்திய அறிவுநிலையங்களில் அதுவும் ஒன்று அங்கு ஏன் அரசியல்? அங்கு ஏன் மாட்டுகறி அரசியல்? அந்த அறிவு கோவிலில் ஐன்ஸ்டீன் வாசகர் வட்டம், நியூட்டன் வாசகர் சதுரம், ராமானுஜம் வாசகர் முக்கோணம், கெப்ளர் ஆயிலர் வாசகர் கன சதுரம் […]

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு, அப்படி மெரீனா சம்பவம் கூடுதலான ஒரு வழக்கு பல வழக்குகள் பாயும் ஒருவன் குண்டர் சட்டத்தில் அடைபடுவது நடைமுறை, அதுதான் நடந்தது இது தெரிந்தும் ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் இந்த பிரிவினைவாதிகளை ஆதரிக்க தொடங்கியாயிற்று இனி திமுக புலிகள் உறவு எந்த அளவு இருந்தது? எந்த எல்லை வரை இருந்தது? ஏன் திமுகவினை உணர்வாளர்கள் துரோகி என சொன்னார்கள்??? இப்படி பல விஷயங்கள் உண்டு, கலைஞரின் பெயர் […]

இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர்

இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர் கலைஞருக்கு நியாபக மறதி ஏற்பட்டது என செய்தி வந்தது, திமுக அதனை மறுத்தது, உடல்நலம் சரியில்லை என்றது, அப்படியே விட்டிருக்கலாம் கலைஞர் தன் சுண்டுவிரலை அசைக்க முடிந்தாலும் எழுதும் ரகம், அவரது எழுத்து வரவில்லை என்றால் சகாப்தம் முடிந்தது விஷயம் என்பதுதான் அர்த்தம், இது எல்லோருக்கும் புரியும் ஆனால் அப்படி அல்ல என மறுத்துவிட்டு, விழா எடுத்து, பின் கலைஞருக்கு அழைப்பு எல்லாம் கொடுத்து அழிச்சாட்டியம் செய்தார்கள் இப்பொழுது நேற்றுதான் கலைஞர் பேசினார் […]

திருமுருகன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

திருமுருகன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் இந்த திமுக மீது இருக்கும் கோபம் இதுதான், இம்மாதிரி நபர்களை முழுக்க விலக்கவும் மாட்டார்கள், சேர்க்கவும் மாட்டார்கள் ஒரு கேவலமான அரசியல் இது, மிஸ்டர் ஸ்டாலின் 2009ல் உங்கள் தந்தை சீமானை பிடித்து உள்ளே போட்டார் அல்லவா? அதன் அர்த்தம் என்ன? அவரையும் கண்டிக்கின்றீர்களா? அவன் திமுகவினை எப்படி எல்லாம் பேசினான்? இந்த நாட்டை எப்படி எல்லாம் வசைபாடினான்? ஆனால் இன்று ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கின்றாராம் ஆக திருமுருகன் சொன்னது எல்லாம் […]

நாவை அடக்க வேண்டியது குஷ்பூ அல்ல…

மாட்டுகறி சர்ச்சை வலுக்கின்றது, அதிமுக, பாஜக தவிர‌ எல்லோரும் குரலெழுப்புகின்றார்கள் முன்பொரு காலத்தில் மாட்டுகறி தின்னும் பாப்பாத்தி என ஜெயா மீது சர்ச்சை வந்தது, முதலில் மறுத்தாலும் பின் அப்படித்தான் நான் என்பது போல நடந்துகொண்டார் ஜெயா, பெரிதான எதிர்ப்பு ஏதும் பின்னாளில் இல்லை, உலகமும் அப்படி நம்பிகொண்டது ஜெயாவிற்கு மாட்டுகறி உண்ணும் பழக்கம் உண்டு என்பது பின் சாதரண விஷயமாயிற்று அதெல்லாம் இப்பொழுது அக்கட்சினர் நினைவுக்கு வராது, அவர்கள் அப்படித்தான் நன்றி கெட்டவர்கள் கூவத்தூரில் மாட்டுசூப் […]

கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்சாமிக்கு ஒரு நியாயமா?

  இதோ திருமுருகன் எனும் தேசவிரோதியினை பச்சை தமிழன் பழனிச்சாமி அரசு உள்ளே தள்ளியிருக்கின்றது எங்கிருந்தாவது இந்த அரசு ஒழியட்டும், இது தமிழர் துரோகம் , சிறை உடைப்போம் என சத்தம் வருகின்றதா? வைகோ, நெடுமாறன்,சீமான், வேல் முருகன், திருமா என யாராவது ஒரு கண்டனம் , ஒரு சத்தம் போடுகின்றார்களா? இன்னமும் கேட்டால் தமிழனை தமிழ் முதல்வர் கைது செய்யாமல், அடுத்த மாநிலத்து முதல்வனா கைது செய்வான்? என சீரியசாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் இதே காங்கிரசும், […]