பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாககிடக்கும் ஏர் இந்தியாவினை கொல்வதுதான் சரி

சாககிடக்கும் ஏர் இந்தியாவினை கொல்வதுதான் சரி, உலகெல்லாம் பட்ஜெட் ஏர்வேஸ் வந்தபின் பல நாடுகளின் ஏர்வேஸ் இப்படித்தான் கதை முடிக்கபடுகின்றது பாரத் பெட்ரோலியத்தில் ஒவ்வொருவனும் வாங்கும் சம்பளம் அரேபிய எண்ணெய் கிணறையே வாங்கும் அளவு பெரியது, அதை குறைத்து முயற்சிக்கலாம் ஆனால் கொடிபிடிப்பார்கள் போராடுவார்கள் இல்லா அழிச்சாட்டியம் எல்லாம் செய்வார்கள், மிக நிதானித்த அரசு சரியான காரியங்களை செய்திருகின்றது ஏர் இந்தியா நிச்சயம் வேறுவழி இல்லா விஷயம், உலக நிலவரம் இது. இந்த பாரத் பெட்ரோலியம் என்பதை […]

இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது

இப்பொழுது நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லை தகறாறு முட்டி கொண்டிருக்கின்றது, இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது இந்தியாவின் வட எல்லையாக இமயமலையில் படர்ந்திருக்கும் நாடு நேபாளம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் ஒரே ஒரு இந்துநாடாக அது அரணாக இருந்தது, எதையுமே சரியாக செய்ய தெரியாத காங்கிரஸ் அரசு ஈழத்தில் குழப்பியது போல் நேபாளத்திலும் குழப்ப, அந்த குழப்பத்தை சீனா மிக சரியாக தன் கம்யூனிஸ்ட் அடிபொடிகள் மூலம் பயன்படுத்தி அங்கு தன் பிடியினை இறுக்கிவிட்டது பழைய நம்பகமான […]

கருணாநிதி தமிழரா இல்லையா

கருணாநிதி தெலுங்கர், அவரின் பூர்வீகம் ஆந்திராவின் ஓங்கோல் பக்கம் கிராமம் என்றெல்லாம் செய்திகள் கசியதொடங்கிவிட்டன, அங்கொரு கிராமத்தார் கருணாநிதி எங்கள் ஊர்க்காரர் என பெருமைபடுகின்றார்களாம், ஆனால் முக ஸ்டாலினை பற்றி ஒன்றுமே சொல்லமாட்டார்கள் போல, விஷயமுள்ள கிராமமக்களாக இருக்கலாம் கருணாநிதி தமிழரா இல்லையா எனும் வாதத்துக்கு காரணம் யாரென்றால் சாட்சாத் அவரேதான் ராம்சந்திரனை மலையாளி என அவர் அழைக்க தொடங்க, இவர் அவரை தெலுங்கர் என சொல்ல விஷயம் வெடித்தது ஒரு கட்டத்தில் ராமசந்திரான் நான் தமிழக […]

வ.உ.சிதம்பரனாரின் உயில் இது

வ.உ.சிதம்பரனாரின் உயில் இது மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்து இருக்கிறேன், ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 லாபம் கிடைக்க கூடும் ஆனால் ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 கடன் பெற்றுள்ளேன்; கடனுக்கும் லாபத்திற்கும் சரியாக போகும். 2 கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியம் கட்டப்படவில்லை அது கட்டப்பட வேண்டும். எனது பாகத்திற்கு ஒட்டப்பிடாரத்தில் பெரிய […]

நயன் தாரா

அந்த பெண் கிட்டதட்ட 16 வருடங்களுக்கு முன்பு நடிக்க வரும்பொழுது அப்பெண் லட்சணமாக இருக்கின்றது அவ்வளவுதான் என்றார்கள் ஒரு சில படங்களுக்கு பின் அப்பெண் கவர்ச்சி வேடங்களிலும் பலூன் போல ஊதியும் திசைமாறி போனபின் அவ்வளவுதான் என்றார்கள் பின் காதலும் வந்தது அதுவும் ஒன்றல்ல சில பல‌ தமிழகத்தில் திறமையான நடிகைகளின் வீழ்ச்சி இந்த கட்டத்தில்தான் நடக்கும் அது சாவித்திரியோ இல்லை வேறு யாரெல்லாமோ அப்படித்தான் தோற்றார்கள் அதுவும் ஆணாதிக்கமிக்க திரையுலகம் அத்தோடு ஒதுக்கிவிடும், இந்த மாபெரும் […]

அழகாக செய்துகொண்டிருக்கின்றது துருக்கி

இம்சை அரசன் வடிவேலுவிடம் “அக்கா மாலா” விற்க வந்த கோஷ்டி போல துருக்கி அதிபரிடம் நிற்கின்றது அமெரிக்கா சில பல காரணங்களுக்காக அவர்களை தாஜா செய்ய எர்டோகனை அமெரிக்காவுக்கே அழைத்த்து சென்றது அமெரிக்கா, ஓட்டை காலணாவுக்காக செந்திலை தாஜா செய்யும் கவுண்டமணி போல ஏக காட்சிகள் விஷயம் ஒன்றுமில்லை, ரஷ்யாவின் எஸ் 400 வாங்க கூடாது என்றும் அதற்கு பதிலாக அமெரிக்கா பேட்ரியாட் சிஸ்டமும் எப் 35 விமானமும் வழங்கபடும் என்றும் ஆசைகாட்டியது விடா கொண்டனான எர்டோகன் […]

இது வழக்கமான பயிற்சி அல்ல‌

இந்திய ராணுவம் தன் மிகபெரிய போர் பயிற்சியினை பாகிஸ்தான் எல்லையில் நடத்தியிருக்கின்றது, இது வழக்கமான பயிற்சி அல்ல‌ வழக்கமான பயிற்சி என்றால் சுடுவார்கள் ஓடுவார்கள், பதுங்குவார்கள் ஒருமாதிரி பயிற்சி பெற்றுவிட்டு திரும்பிவிடுவார்கள் இந்த பயிற்சி அப்படி அல்ல, ஒரு நாட்டை கைபற்றுவது எப்படி என்பதும், அதை கைபற்றி தக்க வைப்பது எப்படி என்பதுதான் பயிற்சி பீரங்கி டாங்கி விமானபடை உட்பட பல பிரிவுகள் எல்லாம் களமிறங்கியிருக்கின்றன, கப்பல் படையும் இணையுமாம் பாகிஸ்தான் எல்லை, நாட்டை கைபற்றும் பயிற்சி […]

வ.உ.சி தமிழ்நாட்டின் மாபெரும் சுதந்திர போராட்ட வடிவம்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம் என வரிசை பெரிது, அவற்றில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம். அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு. ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பது அவர்கள் ஆசை, அவர்கள் நாசமாய் போகவேண்டும் என்பது […]

வேறு வழி இல்லா அளவு நிலமை மோசமாகின்றது

இனியும் தாக்குபிடிக்க முடியாஅளவு ஈரானின் பொருளாதார தடைகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கா எதிர்பார்த்தது இதுதான் கடுமையான தடைகள் காரணமாக அந்நாடு தவிக்கின்றது, ஈரானின் உள்நாட்டில் சிக்கல் எழுந்து இப்பொழுது விலைவாசியினை அதிகரிக்க தொடங்கிவிட்டார்கள் பெட்ரோலின் விலை 50% அதிகரிப்பு உட்பட பல அவசர நடவடிக்கைகளில் அத்தேசம் இறங்க மக்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டனர், துப்பாக்கி சூட்டில் ஒருவர் இறந்திருகின்றார் அமெரிக்கா எதிர்பார்த்தது இதுதான், யானையினை அடக்கமுடியாவிட்டால் வேலிபோட்டு பட்டினி போடு அது அடங்கி ஒடுங்கி தனாய் வழிக்கு […]

ராஜபக்சே குடும்பம் இரும்பு ஆட்சி கொடுக்கும் , அரசு சரியாக இருக்கும்

இலங்கையில் சஜித் பிரேமதாச எப்படி தோற்றிருக்கின்றார் என்றால் தமிழ் மற்றும் இஸ்லாமிய ஆதரவு கிடைத்தால் போதும் சிங்கள வாக்கு தானாக கிடைக்கும் என மிதப்பில் இருந்திருக்கின்றார் இதுவே சிங்களருக்கு அதிருப்தியாகி மொத்தமாக வாக்கு கோத்தபாயாவுக்கு விழுந்தது என்கின்றார்கள் இது இந்தியாவில் காங்கிரஸ் போட்ட கணக்குக்கும் பாஜகவின் கணக்குக்குமான தொடர்பு அன்றி வேறல்ல‌ இப்படி எல்லாம் அனுமானம் இருந்தாலும் ராஜபக்சே குடும்பம் இரும்பு ஆட்சி கொடுக்கும் , அரசு சரியாக இருக்கும், இந்த ஆளும் தரப்பு அவ்வளவு நல்ல […]