பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்பூ சங்கத்திற்கு ஒரு “தியாக தலைவர்” கிடைத்துவிட்டார்

யாரோ ஒரு நண்பர் குஷ்பூ நினைவாக திருமணம் செய்யாமலே இருக்கின்றார் என்றொரு செய்தி படிக்க நேர்ந்தது. இது முழுக்க அவரின் அறியாமை, அவருக்கு அன்று வழிநடத்த யாருமில்லை போல‌, இது காற்றை வெறும் கையில் பிடிப்பதற்கு சமம். ஆனாலும் குஷ்பூவினால் அவர் வாழ்க்கை பாழாயிற்று என்பது சங்கத்து உறுப்பினர்கள் நெஞ்சில் எல்லாம் ஈட்டியாக பாயும் வலி. தலைவி குஷ்பூ யார் வாழ்வினையும் கெடுப்பவர் அல்ல, பாழக்குவர் அல்ல. இது நண்பருக்கு புரியவில்லை அவரை உடனடியாக கண்டுபிடித்து சில […]

எரிமலை எப்படி பொறுக்கும்…..

கோடிகணக்கான குஷ்பூ ரசிகர்கள் உலகெல்லாம் இருந்து ஓரணியில் திரளுகின்றார்கள், மிகுந்த ஆதரவு பெருகுகின்றது தலைவியின் கரங்களை வலுபடுத்தவவும், யாராவது அவரை சீண்டினால் அவன் கராத்தே கற்றவனோ குங்பூவில் குதிப்பவனோ எவனாக இருந்தாலும் தூக்கி போட்டு மிதிக்க்கும் பெரும் படை தயாராகின்றது ஒரு குஷ்பூ ரசிகனுக்கு இதனை விட என்ன மகிழ்ச்சி வேண்டும் , ம்ம் படை கிளம்பட்டும், எதிர்ப்பவன் எல்லோரும் ஓடட்டும் எரிமலை எப்படி பொறுக்கும்…..  

கனிகளிலே அவள் மாங்கனி மலர்களிலே அவள் மல்லிகை…

தனக்கு மிக பிடித்த படம் இதுவென தலைவி இன்று காலை 12.29 மணிக்கு அறிவித்துவிட்டார் இனி இப்படம் சங்கத்து முத்திரையாக அறிவிக்கபடுகின்றது, ரசிக கண்மணிகள் வீட்டை எல்லாம் அலங்கரிக்க போகும் படமிது. ரவிவர்மன் வரைந்த ஓவியத்தின் சாயலில் இதனை படமெடுத்தார்களாம், ரவி வர்மன் இவ்வளவு அழகான ஓவியத்தை வரைய முடியாமல் ஏதோ வரைந்திருக்கின்றான் ஆக ரவிவர்மனாலும் வரைய முடியாத பெரும் அழகு பெட்டகம் குஷ்பூ என வரலாறு குறித்துகொள்கின்றது. சங்கம் இதனை எண்ணி பெரு மகிழ்ச்சி கொள்கின்றது. […]

சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி

குஷ்பூ காங்கிரசை விட்டு போகின்றாராமே அப்படியா? என பலர் கேட்கின்றார்கள் சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி அல்லது அசோகவனம் என்பார்கள். எந்த கட்சியில் இருந்தால் என்ன? சொந்த கட்சி கண்டால்தான் என்ன? பிரச்சினையே இல்லை. சங்கம் அதனை முழுமனதோடு ஆதரிக்கும், அதில் சந்தேகமே இல்லை ஏ காவி பயங்கரவாதமே இந்தியாவின் ஒரு தாஜ்மகாலை நீங்கள் மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மகாலை என்ன செய்துவிட முடியும்? இந்த “தமிழகத்து நடமாடும் தாஜ்மஹால்” ஆக்ராவின் ஆயிரம் தாஜ்மஹாலுக்கு […]

குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி!

குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி!   மிக பெரும் சொதப்பல்களை செய்து வந்த விகடன் பத்திரிகை, தலைவி குஷ்பூ பற்றி பிறந்தநாள் வாழ்த்து கட்டுரை எழுதி தன் களங்கத்தை தீர்த்துகொண்டது. சங்கத்தின் சார்பாக விகடனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் அந்த கட்டுரையாளர் சுகுணா திவாகரன் என்பவர், நாம் குஷ்பூ நமஹ தொடரில் சொல்லிபடி உண்மையினை எழுதியிருக்கின்றார், மறுபடியும் வாழ்த்துக்கள் ஆனால் குஷ்பூ சிறந்த நடிகையல்ல என்றொரு வரியினை சேர்த்திருக்கின்றார், இதற்கு சங்கம் மென்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது. அவரை கடத்தி […]

எல்லோரும் கொண்டாடுவோம்…

கல்வி, செல்வம், வீரம் என மூன்றின் அருளுக்கும் முப்பெருந்தேவியரை உலகம் வணங்கும், நவராத்திரி திருவிழா என்று அதனைத்தான் கொண்டாடிகொண்டிருக்கின்றது ஆனால் அழகு என்றொரு நான்காம் விஷயத்திற்கு யார் இலக்கணம்? முழு அழகு என்றால் என்ன‌ இந்த உலகிற்கே தெரியாது, அதனை உலகிற்கு சொல்ல வந்தவர்தான் எங்கள் தலைவி. அழகு என்றால் என்ன‌ என்பதற்கு அரிச்சுவடி அவர். மற்றவர்கள் முப்பெருந்தேவியரின் விழா என தசராவினை கொண்டாடட்டும், நாங்கள் ரம்பை, மேனகை, ஊர்வசி முப்பெரும் அழகிகளின் திருவிழாவினையும் குஷ்பூவில் ஒன்றாக […]

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குஷ்பூ!

கல்விக்கொரு தெய்வமுண்டு, அவளருள் கம்பனுண்டு செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு வீரத்திற்கோர் தெய்வமுண்டு வீராதி வீரருண்டு அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ? மனக்குறை பட்ட‌ கடவுள் மனதார துடித்திட்டான் மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான் ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான் அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான் அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி புதிதாய் பல வண்ணம் கலந்தே  இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான் மங்கையர் விளக்கே, மரகரத […]

வேதங்கள் அறைகின்ற உலகங்கள் யாவிலும் உயர்ந்தது உன் பாதங்கள்

“வேதங்கள் அறைகின்ற உலகங்கள் யாவிலும் உயர்ந்தது உன் பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ “ என்பது கம்பனின் வரிகள். அதாவது மந்திரங்கள் முழங்கும் மூவுலகிலும் மிக உயர்ந்தது இந்த கால்களே. கால்களே இப்படி என்றால் முழு வடிவம் எப்படி இருக்கும் என பாடலை தொடங்குகின்றான் கம்பன். நாம் திரையில் குஷ்பூவினை காணும்பொழுது அவன் வரிகளே நினைவுக்கு வருகின்றது. தலைவி காலை மறைத்து, விரல் மட்டுமே தெரியும் படம் இது, அட அட என்ன அழகு? கம்பன் […]

“குஷ்பூ டே” கொண்டாட்டம்

“குஷ்பூ டே” கொண்டாட்டம் உலகெல்லாம் களை கட்டியாயிற்று, டிவிக்களில் குஷ்பூ படமாக ஓளிபரப்புகின்றார்கள். நாமும் நவநாட்கள் குஷ்பூ படம் பார்ப்பது என்பது சங்கத்தால் எடுக்கபட்ட முடிவு அப்படியாக இன்று சிங்கார வேலன் படம். குஷ்பூவின் கம்பீர அழகு கொட்டி கிடக்கும் படம். படத்தில் ஒரே இம்சை இந்த கமல்ஹாசன் என்பவர் ஒரு பாத்திரத்தில் வந்து அவரை காதலிப்பதாக சுற்றிகொண்டே இருப்பார். அந்த காட்சிகளை மட்டும் எறும்பு கடிப்பதை போல பொறுத்துகொண்டால் , அது ஒரு அற்புதமான குஷ்பூ […]

முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை

நவராத்திரி விழாவிற்காக ஊரெல்லாம் கொலு வைக்கின்றார்களாம். அழகான பொம்மைகள் வாங்கி அடுக்குகின்றார்களாம் இதனை விடவா அழகிய கொலுபொம்மை உலகில் கிடைத்துவிடும்? “தெய்வீக கொலு” பொம்மை இதுதான். இந்த பொம்மையினை வைக்காமல் எந்த கொலுவும் முழு நிறைவு அடையவே அடையாது. முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை, சங்கத்தின் கொலுவின் எல்லா சிலைகளும் இது மட்டும்தான். இந்த உலகிற்கு மிக அழகிய கொலு பொம்மையினை அடையாளம் காட்டியதில் சங்கம் பெருமையடைகின்றது.