என்னை பற்றிய வதந்தி….
இது வதந்தி என்பது பாகம்பிரியாளுக்கும் தெரியும், நிச்சயம் நம்பமாட்டார் காரணம் அவர் கணக்குபடி இந்த வதந்தியின் அளவு மிக மிக குறைவு (எனினும் .இது பாகம்பிரியாள் கண்ணில் படாமல் இருப்பது வரைதான் உயிருக்கு உத்திரவாதம்…)
சுத்தமான இந்து இந்தியன்….
இது வதந்தி என்பது பாகம்பிரியாளுக்கும் தெரியும், நிச்சயம் நம்பமாட்டார் காரணம் அவர் கணக்குபடி இந்த வதந்தியின் அளவு மிக மிக குறைவு (எனினும் .இது பாகம்பிரியாள் கண்ணில் படாமல் இருப்பது வரைதான் உயிருக்கு உத்திரவாதம்…)
நகை கொள்ளை தொடர்பான விசாரணையில் தமிழகத்தில் திருட்டு நகைகளை வாங்கிய பிரபலநகைகடை முதலாளி கைதுசெய்யபட்டிருக்கின்றார் விசாரித்ததில் அவருக்கு 15 வருடமாக திருடி கொடுத்தவர் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதியாம் அந்த திருடன் இன்னும் அகபடவில்லை என்பதால் போலிசார் கடும் வேகத்தில் தேடி வருகின்றனர் இது ஒரு செய்தி அவ்வளவுதான் நீங்கள் அங்கிள் சைமனின் கழுத்தில் கிடக்கும் பெரும் தங்க சங்கிலியினை பார்த்து புன்னகைத்தால் சங்கம் பொறுப்பல்ல
இலங்கையில் நிர்வாண விருந்து நடத்திய ஆடவர்களும், ஏராளமான இளம்பெண்களும் கைது, முகநூல் மூலம் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தகவல் : செய்தி இந்த தமிழக, இந்திய நண்பர்களை எல்லாம் அவசரமாக அன்பிரண்ட் செய்து விட வேண்டும் கிராதகர்கள். இவர்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு இலங்கையர்களை நண்பர்களாக ஆக்கிவிட வேண்டியதுதான் “கனியிருப்ப காய்கவர்ந்தற்று..” என இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொல்லி இருக்கின்றார்
இந்தியா எங்கும் லாரி ஸ்டைரக் தீவிரமடைந்திருப்பது நல்லதல்ல, அரசு உடனே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் லாரிகள் இந்நாட்டின் ரத்த நாளங்கள், எல்லா வித சரக்கு போக்குவரத்தும் அதன் மூலமே பரிவர்த்தனை செய்யபடும் லாரிகள் ஸ்டிரைக்கினை தொடங்கி பல இடங்களில் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர், வியாபாரிகள் படு மோசமான விலை வீழ்ச்சியினையும் சிக்கலையும் சந்திக்கின்றனர் காய்கறி முதல் பால் வரை அத்தியாவசிய பொருட்கள் கெட்டுபோய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் இருகின்றார்கள் இதில் இப்பொழுது டேங்கர் லாரியும் சேர்ந்துகொள்ள போகின்றதாம் இதனால் பெட்ரோல் […]
சென்னையில் மின்சார ரயில் விபத்தில் நேற்று இருவர் உயிரிழந்தார்கள், அந்த அதிர்ச்சி விலகும் முன்பே இன்று 5 பேர் இறந்திருக்கின்றார்கள் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் இதற்கு ஒரே காரணம் சம்பந்தபட்ட தரப்பின் அஜாக்கிரதையே பேருந்துகளிலும், கார்களிலும், ஆட்டோ, பைக்களில் அனுமதிக்கபட்டவர்களை தவிர கூடுதல் நபர் இருந்தால் உடனே பிடிக்கின்றார்கள், அது நல்ல விஷயமும் கூட ஆனால் மின்சார ரயியில் இதனை கண்டுகொள்வார் யாருமில்லை, இதனால் காலை நேர நெருக்கடி நேரத்தில் தொங்கி கொண்டுசென்ற இந்த மாணவர்கள் […]
எத்தனை வாரியங்கள், எத்தனை போராட்டங்கள், அரசியல் செய்தாலும் காவேரி சிக்கலை தீர்க்கும் சக்தி வருண பகவான் என்பவரிடம் மட்டுமே இருக்கின்றது ஆடிமாத காவேரி என்பது எப்படி இருக்கும் என்பதை சில வருடங்களுக்கு பின் இப்பொழுதுதான் காண முடிகின்றது, கல்லணை திறக்கபட இருக்கின்றது நீண்ட காலத்திற்கு பின் ஆடிமாத புதுவெள்ளத்தில் ஆடிபெருக்கு கொண்டாட பட இருக்கின்றது. காவேரி பெருகி வருவது மனதிற்கு நிறைவான செய்தி, காவேரி கரைவாழ் மக்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் ஊரில் இருக்கும்பொழுதே அதை உணரமுடிந்தது, ஆம் நீண்ட […]
இந்த கொடும் கடினமான நாட்களில் நான் நினைக்க வேண்டியவர்கள் ஏராளம் உண்டு அதில் முக்கியமானவர் Midhun Chakkaravarthy திருச்சியில் இருந்து வாகனமும், இன்னும் பல உதவிகளையும் செய்த மறக்கமுடியாதவர் Periya Samy. அந்த உதவியால்தான் சரியாக சென்று காரியம் நிறைவேற்ற முடிந்தது Senthil Kumar Chennai, Kennady இருவரும் சென்னையில் இருந்து வந்திருந்தார்கள் போனில் விசாரித்த நண்பர்கள் ஏராளம், கிட்டதட்ட 1 வாரம் முழுக்க போன் ஒலித்துகொண்டே இருந்தது அதில் முகநூல் பிரபலம் முதல் கட்சி பிரபலம் வரை எராளமானோர் […]
அந்த கருப்பு வியாழன் மகா துயரமாக விடிந்தது, எதை நினைத்து அச்சபடுகொண்டிருந்தேனோ அது நடந்தே விட்டது. தந்தை மறைந்தார் எனும் அந்த கொடும் செய்தி வாழ்வின் மிக பயங்கரமான தருணமாக நெஞ்சை கிழித்து போட்டது யாருக்கும் வாய்க்க கூடாத வினோத விதி அவருடையது. அவரின் 4 சகோதரகளில் ஒருவர் நிச்சயம் தர்மன் ஆனால் அவர் ஓரளவிற்கு மேல் உதவமுடியாதபடி விதி பிரித்தது. மீதி மூவரில் ஒருவன் துரியோதனன் ஒருவன் சகுனி இன்னொருவன் எந்த வகையிலும் வராத வகையறா. […]
கொஞ்சமும் வேலையே செய்யாமல், ஊரான் பணத்தில் உடம்பு வளர்ந்தால் என்னாகும் என்றால் இப்படித்தான். இதுதான் அண்ணன் பிரபாகரன் காட்டிய வழி, அவரை போலவே அங்கிளும் உடல் பருத்தாயிற்று யார் சாவது பற்றியும் கவலைபடாமல் ஆமைகறியும் மூன்று வகை இறாலும், கணவாய் மீனும், உடும்பு கறியுமாக மாறி மாறி தின்றால் இப்படித்தான் சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ் கடவுள் என்பவர் மதம், இனம், மொழிகளை கடந்தவர். அந்த பரம்பொருளில் இருந்தே எல்லாமும் உதித்தன ஜக்கி இப்படி […]
வாழ்த்திய வாழ்த்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, ஓடிபோன ஒரு அகதிக்கு இத்தனை பேர் வாழ்த்துவது என்பது நெகிழ்ச்சியான விஷயம். நன்றிகள் உண்மையில் இன்று பிறந்தநாள் என்பதே எல்லோரும் வாழ்த்திய பின்புதான் நினைவுக்கு வந்தது, காரணம் வேறு ஒன்றுமில்லை இவனுக்கு வரவு வரும்பொழுதெல்லாம் செலவும் வரட்டும் என்பது இறைவன் எமக்கு எழுதிய விதி, சில நேரம் வரவு வருவதற்கு முன்பே செலவுக்கு கணக்கினை அவன் வைத்திருப்பான் அது பணம் என்றால் தாங்கலாம், உறவென்றால்? மகன் கைவிரலை பிடிக்கும் நேரம், தந்தை […]
We would like to show you notifications for the latest news and updates.