பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த சங்கருக்கு ஆழ்ந்த அஞ்சலி

  வீரமும் காதலும் நிரம்பியது தமிழன் வாழ்வு. சங்க இலக்கியம் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன‌ இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு இடமிருந்தது, அது ராமாயணம் ஆனாலும் சரி, சாகுந்தலை போன்ற காவியமானாலும் சரி. காதல் அதில் கலந்திருந்தது மீராவின் காதலும், ஆண்டாளின் காதலும் , பக்தி மிஞ்சிய விஷயங்கள் என‌ கருதபட்டது. சந்தேகமிருப்பின் வைரமுத்துவிடமோ ஜீயரிடமோ […]

பெரியவர், அனுபவசாலி, கிடைத்தற்கரிய மாமனிதர் : மாணிக்கவாசகம் முத்துசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்க்கையில் ஒரு சில பெரியவர்களை பார்க்கும்பொழுது மரியாதை வரும், மிக உயரத்தில் இருந்து கொண்டு அவர்கள் வாழும் எளிய வாழ்வும், எளிதாய் பழகும் குணத்தை கண்டால் சிலிர்ப்பும் வரும் அவ்வளவு பெரியவர்கள் அமைதியாய் ஆர்பாட்டமின்றி இருக்கையில் நமக்கெல்லாம் எதற்கு ஆட்டம் என யாரோ செருப்பால் அடித்தது போல் சர்வநாடியும் ஒடுங்கும் நாமும் அப்படி வாழவேண்டும் என்ற எண்ணம் உருவாகும் அப்படிபட்ட பெரியவர்களில் ஒருவர் Manickavasagam Muthuswamy அவர்கள். எங்கள் பகுதியின் முதல் மருத்துவர் அவர்தான். தாழ்த்தபட்ட குலத்தில் இருந்து மருத்துவராக […]

சைமன் மகளிர் தினவிழாவில் பேசுவாராம்

அந்த விஜயலட்சுமி, டியூசன் சென்டர் தும்பிகள் எல்லாம் ஏன் இந்த விழாவிற்கு அழைக்கபடவில்லை? சைமன் செய்ததே “குழந்தை திருமணம்”, அவர் மகளிர் தினவிழாவில் பேசுவாராம்

அப்பா இன்னைக்கு Women’s Day யா?

“அப்பா இன்னைக்கு Women’s Day யா? ஆமாம்மா அப்போ GentleMen’s என்னைக்குப்பா? அப்படி ஒரு நாளே கிடையாதும்மா ஏம்பா, அவங்கல்லாம் பாவம் இல்லியா? உனக்கு தெரியுது, இந்த உலகத்துக்கு தெரியலியம்ம்மா” (அருகிருந்த பாகம்பிரியாள் அது ஏப்ரல் 1ம் தேதிடி என சொல்லிவிடுவாளோ என அச்சமாக இருந்தது, நல்ல வேளையாக சொல்லவில்லை) “நிமிர்ந்த நன்னடை நேர்க்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” “நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” […]

தேவி சோமசுந்தரம் அவர்களை   முகநூல் உலகம் வரவேற்கின்றது

இந்த Devisomasundaram என்பவர் திரும்ப வந்துவிட்டார், எப்படி காணாமல் போனாரோ அப்படியே வந்துவிட்டார் அவரை முகநூல் உலகம் வரவேற்கின்றது. வாம்மா மின்னல் இனி திராவிட சித்தாந்தம், மகளிர் உரிமை இன்னபிற விஷயங்கள் எல்லாம் கண்ணில் பட்டுகொண்டே இருக்கும், பல புதிய விஷயங்கள் கிடைக்கும்.அதில் தஞ்சை பகுதி பழங்கதைகள் முதல் ஏராளம் உண்டு. தேவி தொலைந்தார் என இருந்தவர்களுக்கு எல்லாம் இப்படித்தான் சொல்ல வேண்டும். “சோமசுந்தரம் மகா ஒத்தையில நிக்கா, தில் இருந்தா மோதி பாருங்கல‌..” (அப்பாடா எங்கே அந்த சீனனை […]

இந்த ஹேர் ஸ்டைல் கொண்டுவர முடியுமா?

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது டார்க்கஸ்ட் ஹார் என்பவருக்கு வழங்கபட்டது அந்த டார்கஸ்ட் என்பவருக்கு இந்த ஹேர் ஸ்டைல் கொண்டுவர முடியுமா? அவர் தலைகீழாக முயன்றாலும் நடக்குமா? அப்படியானால் அந்த விருது யாருக்கு வழங்கபட்டிருக்க வேண்டும்? இம்மாதிரி பெரும் அநீதிகள் நடப்பதாலே ஆஸ்கர் விருதுகளை நாம் புறக்கணிக்கின்றோம்  

சிறு குறு செய்திகள் ….

ரஜினி-கமல் செய்த சேவை என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி அன்னார் நாட்டிற்காக பல வருடம் சிறைசென்றவரும், தன் சேவை தொண்டால் ஐ.நா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது மிஸ்டர் ராஜூ, ராமசந்திரனும் ஜெயலலிதாவும் கேமரா முன் என்ன தொண்டு செய்தார்களோ, அதற்கு சற்றும் குறையாதது ரஜினி, கமல் செய்த தொண்டுகள் ராமசந்திரன் ஜெயா, மஞ்சுளா போன்றோரோடு சேர்ந்து எப்படி அளப்பரிய தொண்டு செய்தாரோ அதனையே ஶ்ரீதேவி, ஶ்ரீபிரியாவுடன் சேர்ந்து இவர்களும் மாபெரும் சேவை செய்தனர் போதுமா? […]

புஷ்பவனம் குப்புசாமி கோபசாமி ஆகிவிட்டார்

தமிழக இசையியல் மற்றும் கவின்கலை பலகலைகழகதுறை துணைவேந்தர் பதவி கைவிட்டு போனதிலிருந்து புஷ்பவனம் குப்புசாமி கோபசாமி ஆகிவிட்டார். தென்னகத்து சுடலைமாட சாமியாக ஆடிக்கொண்டிருப்பவரை கண்டால் கொஞ்சம் அச்சமாகவே இருக்கின்றது அவரின் மனைவியோ மாரியம்மா என பக்தர்கள் ஆடுவது போல கடும் சீற்றம் தம்பதி சகிதமாக இருவரும் ஆக்ரோஷ பேட்டி கொடுப்பதை பார்த்தால் விரைவில் கோவன் ஸ்டைலில் புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பாடலோடு கிளம்பினாலும் ஆச்சரியமில்லை. “கோட்டையில இருக்குதொரு  நன்றி கெட்ட சாமி அதனை போல துரோகி உண்டா  […]

ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி

என்னதான் என்பீல்டு புல்லட், ஹீரோ ஹோண்டா , பஜாஜ் என பல பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கபட்டாலும் , பணக்காரர்கள் இறக்குமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி இவை எல்லாம் வெளிநாட்டுதயாரிப்புகள் அவற்றிற்கான சந்தை இந்திய பெரும் பணக்காரர்களுக்கானது, இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய அரசு இறக்குமதி வரியினை 70% வரை வைத்திருக்கின்றது வெளிநாட்டிலிருந்து பைக் வாங்க வசதி இருக்கின்றதல்லவா? கட்டு வரியினை என கேட்பது இந்திய நிலைப்பாடு, இதில் குறிப்பிட்ட […]

தொடரும் ஆலய தீ …..

தொடரும் ஆலய தீ விபத்துக்களில் மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் நேற்று தீ பிடித்தது : செய்தி ஜெயா ஆன்மா சாந்தி அடையாததால்தான் இப்படி ஆலயங்கள் கொதிக்கின்றன என்றோ, சின்னம்மா சிறையில் இருப்பதால் கடவுளுக்கு பொறுக்கவில்லை என்றோ இன்னும் சிலர் கிளம்பாதது ஆச்சரியமாக இருக்கின்றது எமக்கென்னமோ முப்பாட்டன் முருகன் என சூரபத்மன் சிலையினை வேலோடு நிறுத்தி ஒரு கும்பல் தெய்வகுற்றம் செய்வதால் இப்படி நடக்கலாம் என தோன்றுகின்றது.