பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பார்த்தாலே நமக்கு “மெர்சலாகின்றது” … இன்னும் பிற….

இதனை பார்த்தாலே நமக்கு “மெர்சலாகின்றது” முன்பு பைரவா எனும் இம்சையினை ஜல்லிகட்டு போராட்டம் வந்து காப்பாற்றியது, அந்த பெரும் ஆர்ப்பாட்டத்தில் பைரவா படத்தின் தோல்வி மறக்கபட்டது, விஜயும் சத்தமில்லாமல் ஆர்ப்பாட்டக்காரர் நடுவில் அமர்ந்து ஜல்லிகட்டு வேண்டும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார், எல்லாம் சுபம் இந்த மெர்சலுக்கும் ஒரு போராட்டம் வந்து மானம் காக்கமலா போய்விடும்? ஏற்கனவே தமிழகம் ஒரு மாதிரி மெரசலில் தான் இருக்கின்றது, அதிமுக அதனை விட மெரசலில் இருக்கின்றது, அரசியல் அழுத்தில் மெர்சல், சசிகலா […]

இந்தியன் காண கூடாத‌ பாகிஸ்தான் அதிரடி

இந்த ஞாயிற்று கிழமை மாலை எல்லா தெய்வத்திடமும் ஜெபித்துவிட்டு, பாரதமாதாவிடமும் இந்திய அணிக்காக வேண்டிகொண்டு டிவி பக்கம் செல்லும்பொழுதுதான் அந்த அபாய அழைப்பு வந்தது சில தமிழக‌ போதகர்கள் வந்திருப்பதாகவும், தமிழில் ஜெபிப்பதாகவும் என்னை அழைத்தார்கள். அதாகபட்டது இங்குள்ள லோக்கல் ஜெபவீரர்கள் சபையில் தமிழ் பேசுவார்களே அன்றி தமிழை வாசிக்க சரிவர தெரியாது, அதனால் நம்மை அழைத்து வாசிக்க வைப்பார்கள், இந்த தமிழக போதகர்கள் போதிக்கும் பொழுது நீர் இருநதே ஆகவேண்டும் என அழைத்ததால் மறுக்க முடியவில்லை. நாம் […]

திரு AVT ஜனார்தனன் அவர்கள் பதில்

 திரு.Stanley Rajan … முகநூல் நட்பில் அனைவரும் அறிய வேண்டிய நல்ல அறிவாளி, இந்தியாவிலிருந்து மலேஷியா செல்லும் நட்புகள் அவரை காண்பதற்காகவே நேரம் ஓதுக்கி சந்தித்து வருகிறார்கள், பொலிவியா பற்றி எழுதுவார், ட்ரம்ப்பை விமர்சிப்பார், மோடியின் டிமான்டேஷன் ராஜபக்சேவின் கையலாகாத்தனம் சைனாவின் அத்துமீறல் பாக் .கின் சித்துவிளையாட்டு மலேஷியாவின் அரசியலமைப்பு மதங்களின் அத்துமீறல்கள், நம் சாதீய சண்டைகள் அரபு நாடுகளின் வளம், சிரியா இஸ்ரேல் தென்கொரிய அரசியல் அத்தனையும் அத்துப்படி. சீமானையும், வைகோவையும் கலாய்ப்பார்,திமுக வின் அதிலும் […]

பெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா வந்திருந்தார்

பெரியவர் Avt Janardhanan மலேசியா வந்திருந்தார், நேற்று கிளம்பிவிட்டார், கிட்டதட்ட 1 மாதம் தங்கியிருந்தார் வேகமான இந்த வாழ்க்கையில் அவ்வப்போதுதான் அவரை சந்திக்க முடிந்தது, அற்புதமான மனிதர் அவர் அவரின் தந்தை கோவை கம்யுனிஸ்ட் தலைவராக இருந்திருக்கின்றார், இவர் ஜனதா தளத்தில் ஒரு காலத்தில் மிக வேகமான தொண்டராக இருந்திருக்கின்ரார் தமிழக அரசியல் வரலாறு அவரிடம் கொட்டி கிடக்கின்றது, பேசும் பொழுது அவ்வளவு தகவல்கள் வருகின்றன, இந்த அரசியலை கவனித்து வளர்ந்த ஒருவராலன்றி அது சாத்தியமில்லை, அவ்வளவு தகவல்கள் எல்லா […]

புழல் சிறைக்கு மாற்றகோரி நளினி உண்ணாவிரதம் இன்னும் பிற …

புழல் சிறைக்கு மாற்றகோரி நளினி உண்ணாவிரதம் அம்மணிக்கு புழல்சிறையினை பற்றி சரியாக தெரியாது போல, தெரிந்தால் இப்படி எல்லாம் உண்ணாவிரம் இருக்கமாட்டார். ராம்குமார் அறையின் பக்கத்து அறை வேண்டுமா என கேட்டால் அதன் பின் அம்மணி புழல் சிறைக்கு வருவார்? அம்மா பெயரில் பெட்ரோல் பங்குகள் அமைக்கபடும் : தமிழக அரசு ஏற்கனவே பெட்ரொல் பங்குகளில் மோசடி, கலப்படம், பதுக்கல் என பல சர்ச்சைகள் இருப்பதால் அதற்கு அம்மா பெயரை தவிர இன்னொரு பொருத்தமான பெயர் கிடைக்காது […]

நீங்கள் தமிழரா? வ‌டஇந்தியனா? சமஸ்கிருதக்காரனா?

திருக்குறள் தமிழர் வள்ளுவரால் தமிழில் எழுதப்பட்டது ஆனால் இராமயணம் எழுதிய வால்மீகி வட இந்தியர், மகாபாரதம் சமஸ்கிருதத்தில் வடக்கத்திய வியாசர் எழுதினார் நீங்கள் தமிழரா? வ‌டஇந்தியனா? சமஸ்கிருதக்காரனா? இப்படி ஒரு அபத்த பதிவு சுற்றி வருகின்றது, இது அங்கிள் சைமனின் கோஷ்டியாகத்தான் இருக்கும் மின்சாரம் கண்டு பிடித்தவன் பாரடே லண்டன்காரன், கணிப்பொறி அமெரிக்க தயாரிப்பு, முகநூல் ஒரு யூதனுடையது முகநூலில் இப்படி எல்லாம் பதிவு எழுதும் நீ லண்டன்காரனா? அமெரிக்கனா? யூதனா? என பதிலுக்கு கேட்கலாம் தமிழன் […]

தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சீனி

தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சீனி கலப்படம் வந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இன்னும் அரசு சார்பில் சத்தமில்லை, அவர்கள் இது கள்ளா? பாலா? நீ சொல்லு நந்த லாலா? என்ற பால் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கின்றார்கள் இப்பொழுது பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை சர்ச்சை வந்தவுடன் ஒரு தரப்பு சமாளிக்கின்றது, அது நுகர்வோர் அமைப்பாம், ஆனால் கிட்டதட்ட தெர்மாகோல் செல்லூர் ராஜூ பாணியில் பதில் சொல்கின்றது எப்படி? பிளாஸ்டிக் அரிசி,சீனி செய்வது எளிதல்ல, அதற்கு நிறைய செலவாகும் அதனால் […]

என்னை கொல்ல தேடுகின்றார்கள் : காந்தியவாதியான “ராக்கெட் ராஜா”

என்னை கொல்ல தேடுகின்றார்கள் என செய்திகளை பரப்பிய தேசத்தின் கடைசி காந்தியவாதியான “ராக்கெட் ராஜா” என்பவர் பற்றி அதன் பின் தகவல் இல்லை அந்த தியாகியின் கோரிக்கையினை சில நாடார் சங்கம் மட்டும் ஏற்றுகொண்டு பதிலளித்தது , மற்ற சங்கங்கள் சத்தமே இல்லை தமிழகத்தில் மூலைக்கொரு நாடார் சங்கம் உண்டென்பது குறிப்பிடதக்கது.. சிலர் அவருக்காக போராட்டம் நடத்துவார்களாம், அந்த ராக்கெட் ராஜா எனும் மாபெரும் விஞ்ஞானியினை சுட்டால் எப்படி? அந்த ஐன்டீன் போன்ற விஞ்ஞானியினை அவமதித்தால் எப்படி, […]

இனி வானமும் நமக்கு வசப்படும்

அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கின்றது இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது பெரும் வெற்றி இஸ்ரோ இந்திராகாந்தி காலத்தில் தொடங்கபட்டது, பின் பிஎஸ்ல்வி எனபடும் குறைந்த சக்தி கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கினொம் பெரும் சக்திகொண்ட ஜிஎஸ்எல்வி எனப்படு ராக்கெட்டுகள் இன்றி அடுத்தகட்டத்திற்கு நகரமுடியாது என கருதபட்ட காலத்தில்தான் ராஜிவ் பிரதமரானார் கோர்பவேவுடன் அவர் செய்த ஒப்பந்தத்தில் அதனைத்தான் கேட்டிருந்தார், சோவியத் ரஷ்யாவும் சம்மதித்திருந்தது ரஷ்ய உடைவும், ராஜிவின் மரணமும் அந்த கனவில் […]