பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கண்ணகி கோயிலில் ….

சித்திரை மாத முழுநிலவன்று தமிழக கேரள எல்லையிலுள்ள தமிழக கண்ணகி கோயிலில் தமிழக பக்தர்கள் கூடுவது வழக்கம். இன்னும் சாலை வசதி தமிழக அரசால் ஏற்படுதபட்டதா என்றால் இல்லை? கேரளா வழியாக தான் வாகனத்தில் வரமுடியும், கோயில் இடம் எங்களுக்கு என்ற கேரள சர்ச்சையும் உண்டு, தமிழர் இடம்தான் ஆனால் கேரள ஆதிக்கம். கண்ணகி விண்ணகம் சென்ற இடமான இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு, தமிழகம் வழியாக செல்ல வேண்டும் என்றால் பக்தர்களுக்கு ஆபத்தான நடைபயணம். கோயிலும் […]

லா நினோ எனும் குட்டி மகளே வருக‌! மழை வரம் தருக!!

கடும் வறட்சியில் தமிழகம் சிக்கி இருக்கும் காலத்தில், சில செய்திகள் வித்தியாசமாக வருகின்றன, முன்பே வானிலை அறிக்கைகள் சொன்னதுதான் இப்பொழுது காட்சியாகின்றது அதாவது மழைபொழிவினை நிர்மானிப்பது கடலின் நீரோட்டோட்டங்கள், அவற்றின் சுழற்சியும் காற்றையும் பொருத்தே மழைபொழிவு இருக்கும் கடலோட்டத்தில் வல்லுனர்களான‌ ஸ்பெயின் மாலுமிகள் இந்த நீரோட்டத்தை அன்றே கணித்தனர், இந்த சுழற்சி இன்றும் அவர்கள் வைத்த பெயரிலே உலகெல்லாம் அழைக்கபடுகின்றது, முன்பே வங்க கடலில் தமிழன் கண்டதுதான், அவனும் அப்படி சில பெயர்களை வைத்திருந்தான், செய்ததை தொடரதவன் […]

இங்கும் அங்கும் …..

தமிழிசைக்கு எதிராக தமிழக பாஜகவில் போர்கொடி, விரைவில் தலமை மாறலாம், பொன்னார் கோஷ்டி கடும் முயற்சி : செய்தி தமிழக காங்கிரஸ் எவ்வழியோ, தமிழக பிஜேபியும் அவ்வழி, இது தமிழக தேசிய கட்சிகளின் சாபம் போலிருக்கின்றது, இங்கும் கோஷ்டி சண்டை வந்தாயிற்று ஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற ஏன் இவ்வளவு போட்டி? அங்கு தமிழிசை இருந்தால் என்ன, பொன்னார் இருந்தால் என்ன? ஏன் மோடியே தமிழக பாஜக தலைவராக அமர்ந்தால் கூட‌ இங்கு கட்சி வளர்ந்துவிட […]

மோடி , போயஸ் தோட்டம் , ரஜினி ….

மோடியை விட மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் : அமித்ஷா 10 வருடம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அதற்கு முன்பே பல நாடுகளின் பல்கலைகழகங்களுக்கு பேராசிரியராக சென்ற அந்த மன்மோகன்சிங்கின் மொத்த வெளிநாட்டு பயணமும், 2 வருட மோடி பயணமும் ஒரே தராசில் வருமா? இப்படி ஒரு வாதத்தை வைக்க முடியுமா? 1966 முதல் வெளிநாட்டுக்கு பறக்க தொடங்கிய மன்மோகன் சிங், அதாவது கிட்டதட்ட 46 வருடம் மன்மோகன் சிங் செய்த வெளிநாட்டு […]

தமிழகம் முழுக்க கோடை வெயில் சுட்டெரிக்கின்றது

தமிழகம் முழுக்க கோடை வெயில் சுட்டெரிக்கின்றது என்கின்றார்கள், அப்படி ஒரு வெயிலை இத்தலைமுறை பார்த்திருக்கமுடியாதாம். ஆயிரம் அணுகுண்டு வெடித்தது போன்ற வெப்பம் என்கின்றன தகவல்கள், பள்ளி விடுமுறையினை கூட முன் கூட்டியே விட்டாயிற்று வெயில் அழகுதான் ஆனால் நீர்நிலைகளின் அருகில் இருந்து அனுபவவிக்கும் வெயில்தான் அழகே தவிர, வற்றிவிட்ட குளத்தருகே தாகத்தோடு தவிக்கவிடும் வெயில் ஒரு தண்டனை விரைவில் நல்ல மழை வந்து மக்களை காப்பற்றட்டும் சென்னை, வேலூர் வெப்பநிலை அளவுகளை கண்டால் உள்ளம் பதறத்தான் செய்கின்றது.. […]

Snapchat என்றொரு விஷயம் இருக்கின்றது

https://youtu.be/hZUUyrjzLRQ Snapchat என்றொரு விஷயம் இருக்கின்றது என முன்பு யாருக்காவது தெரியுமா? அப்படி ஒரு அப்ளிக்கேஷன் இருந்திருக்கின்றது, இந்தியா போன்ற பெரும் நாடுகளில் எப்படி மார்கெட்டிங் பிடிப்பது என யோசித்திருக்கின்றார்கள் விளம்பரபடுத்தி செலவு செய்து, அது மக்களை எப்படி சென்றடையுமோ? என யோசித்த அந்த கம்பெனி நிர்வாகிக்கு பளிச்சென ஒரு ஐடியா உதித்திருக்கின்றது இந்தியாவினை ஏதாவது விஷயத்தில் சீண்டி விட்டால்? மக்கள் எல்லாம் கொதிப்பார்கள் அல்லவா? நமது பொருளும் விளம்பரமாகும் என அட்டகாசமாக சிந்தித்துவிட்டார் “இந்தியா ஏழை […]

நாளை தமிழ்புத்தாண்டு

நாளை தமிழ்புத்தாண்டு இந்த காலண்டர் முறைகளில் சில விஷயங்கள் உண்டு அதாவது பருவநிலைகளை கணிக்கத்தான் காலண்டர்கள் உருவாயின, எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது விதைக்கலாம், எப்பொழுது அறுக்கலாம் என சொல்ல அக்கால மக்களுக்கு ஒரு அட்டவணை தேவை இருந்தது எல்லா இனங்களும் அப்படி வகுத்தன, சில இனங்கள் நிலாவினை வைத்து நாட்களை கண்க்கிட்டு மாதம் என்றன, சில இனங்கள் சூரியனை வைத்து பிரித்தன‌ மாதங்கள் வருடங்களாயின, நட்சத்திர கூட்டத்தால் வருடங்கள் அடையாளமிடபட்டன, இந்த காலண்டர்களால் அவர்கள் விவசாயம் […]

அண்ணாசாலையில் சாலை விரிசலில் பேரூந்து ….

https://youtu.be/raFW1URD4Fs மண்ணின் ஈரப்பதம் திடீரென உயரும் பொழுது பள்ளம் ஏற்படும் – அமைச்சர் ஜெயக்குமார் மெரீனாவில் இப்படி ஈரப்பதம் திடீரென உயர்ந்து பள்ளம் ஏற்பட்டு அந்த ராமசந்திரன் சமாதியும் அந்த தியான சமாதியும் மூழ்கிபோனால் எவ்வளவு நன்றாயிருக்கும்.. இந்த போயஸ்கார்டன், அம்மா சமாதி பக்கமெல்லாம் எப்பொழுது ஈரப்பதம் உயரும் அமைச்சரே? இனி அவை மூழ்கினால் ஈரப்பதம் மட்டும்தான் பிரச்சினை என ஒப்புகொள்ளவேண்டும் சரியா?

ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா? சுஷ்மா வேதனை

ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா? சுஷ்மா வேதனை டெல்லியிலும், நொய்டாவிலும் ஆப்ரிக்க மாணவர்கள் மீது நடத்தபடும் தாக்குதல் குறித்து ஆப்ரிக்க நாடுகள் இந்தியா மீது இனவெறி அதிருப்தி தெரிவித்தன‌ உடனே நமது அமைச்சர் சுஷ்மா சுவராஜ் “வேதனை” தெரிவித்துவிட்டார் இனி ஆப்ரிக்காவில் இந்தியர்கள் தாக்கபட்டால், ஆப்ரிக்க அரசும் “வேதனை” தெரிவிக்கும் ஆனானபட்ட சுஷ்மாவே “வேதனை” தெரிவிக்கும்பொழுது நாமும் “வேதனை” தெரிவிக்கலாம்..  

துணுக்ஸ்….

எஸ்.பி.பி.,யின் பாஸ்போர்ட், பணம் அமெரிக்காவில் திருட்டு மனிதருக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை போலிருக்கின்றது, சிக்கல்கள் அவரை தேடி வருகின்றன… எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது: அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை அதாவது எந்த நாட்டுகாரர்களுக்குமே விசா கொடுக்க கூடாது , அப்படி கொடுத்தால் தவறாக பயன்படுத்துகின்றார்கள் என டிரம்ப் அரசு பாய்ந்துவிடும்.