பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இனி யாரை மகா உத்தமன் ஆக்கலாம்?

முன்பொருமுறை கஜினி முகமது பற்றி எங்கேயோ எழுதியவுடன் வந்து பொங்கினார்கள் கிட்டதட்ட அவன் படையெடுத்தது போலவே வந்து சூழ்ந்தார்கள், அவன் மனிதகுல மாணிக்கம் என ஏக அட்டகாசம் அந்த உத்தமன் ஆப்கானை விட்டு சோமநாதபுரிக்கு ஏன் வந்தான் என்றாலும் விடுவதாக இல்லை….என்ன செய்ய வேறுவழி தெரியவில்லை “கஜினி நல்லவன், சோமநாதரை வணங்கத்தான் வந்தான், திருப்பதி அன்றே விஷேஷமாக இருந்தால் இங்கும் வந்து வணங்கிவிட்டு மொட்டை அடித்து சென்றிருப்பான் சோமநாதர் நிரம்ப ஆசீர்வதித்ததால் அவன் திருப்பதி, பழனி வரும் […]

வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம்!

வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம், நல்ல செய்தி ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சாலை ஓரங்களில் மட்டுமல்ல, எல்லா தெருக்களிலும் இருக்கின்றது, கால்வாயில் இருக்கின்றது, பூங்கா அமைக்கவேண்டிய , மைதானம் வரவேண்டிய பொது இடங்களில் இருக்கின்றது, கோவில் நிலங்களிலும் இருக்கின்றது ஆக அவற்றை எல்லாம் விட்டுவிட்டு சாலை ஓர ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றுவோம் என்றால் அது உள்நோக்கம் கொண்டதும், மற்ற ஆக்கிரமிப்புகளை அங்கீகரித்ததும் போலாகிவிடும். இத்தோடு விட்டுவிடாமல், தெருக்கள், உட்சாலைகள் என‌ எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றபட்டால் நலம், அது […]

மழை யாருக்கு பிடிக்காது, எல்லோருக்கும் பிடிக்கும் …

பெய்யென பெய்யும் மழை என்பார்கள், பேயென பெய்யும் மழை இங்கு கொட்டிகொண்டிருக்கின்றது வருணனுக்கு நம்மீது மேல் என்ன கோபமோ தெரியவில்லை, ஊருக்கு அழைத்து பேசினால் தண்ணீர் பஞ்சம் பற்றி அவர்கள் சொல்லும்பொழுது அழுகையே வருகின்றது 600 அடிவரை தேடிபார்த்தும் ஒரு சொட்டு நீரினை காணவில்லை என கதறல்… போனை வைப்பதற்குள் இங்கு காதோரம் சர்ரென்று இறங்குகின்றார் வருணன், அதுவும் இந்திரனின் ஆயுதங்களோடு வந்து கடும் சீன். எல்லா வேதங்களையும் புரட்டியாயிற்று, வருணனை போற்றுவதற்கே வரிகள் இருக்கின்றதே தவிர, […]

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை போயிருக்கின்றது, ஆனால் வேலுர் பக்கம் தமிழக பொலீஸ் மீட்டுவிட்டது, தன் திறமையினை போலீஸ் நிலைநாட்டிற்று இப்பொழுது சிக்கல் என்னவென்றால் ஒரு பத்திர்கை 40 கிலோ எனவும், இன்னொரு பத்திரிகை 37.5 கிலோ எனவும் , இன்னொரு பத்திரிகை 60 கிலொ எனவும் எழுதுகின்றன‌ ஆக கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவு என்ன என்பதே தெரியவில்லை, என் தெரியவில்லை? என கேட்க கூடாது ஏதோ ஒரு படத்தில், எம்.ஆர் ராதா […]

பன்னிரண்டு வயது கேரள சிறுவன்: இந்தியாவின் இளம் வயது தந்தை!

பன்னிரண்டு வயது கேரள சிறுவன்: இந்தியாவின் இளம் வயது தந்தை! குழந்தை பெற்ற பெண்ணிற்கு வயது 17, மரபணு சோதனை மூலமே பையன் சிக்கியிருக்கின்றான் இருவருமே மைனர்கள் என்பதால், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு சட்டபடி இருவரும் கைதுசெய்யபட்டிருக்கின்றார்களாம் இந்த இரு குழந்தைகளும் சேர்ந்து குழந்தைபெற்றபின்னும் இவர்கள் மீது குழந்தை பாலியல் வழக்கு போடபட்டிருக்கின்றது… நிலமை ஏன் இப்படி ஆனது? ஷகீலா “வசுல் ராணி” என கொண்டாடபட்ட கேரளாவில் இப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்… “ஷகீலா எபெக்ட்” எப்படி […]

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம்

 இன்று உலக சிட்டுகுருவிகள் தினம் தமிழர்கள் சிட்டுகுருவியை மிக மிக ரசித்தவர்கள், பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் அவர்களை விடுங்கள் செங்கால் நாரையை கூடத்தான் அழகாக கவிதையில் புனைந்திருப்பார்கள். சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர். லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று […]

திரு.மைக்கேல் பிரான்ச் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

வள்ளியூரின் பண்பாளர்களில் ஒருவரும், பழகுவதற்கு இனிமையானவரும், மக்களின் நன்மதிப்பினை பெற்றிருந்தவருமான திரு.மைக்கேல் பிரான்ச் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றோம். மறக்கமுடியாத மனிதர் ஒருவர் மறைந்திருக்கினார் வள்ளியூர் தன் பண்பான மைந்தனை இழந்திருக்கின்றது, பாத்திமா ஆலயம் தன் பெரும் பக்தனை இழந்திருகின்றது அவரின் குடும்பம் தன் வேரினை இழந்திருகின்றது ஆசிரியை சரோஜா அவர்களின் கரங்களை பற்றிகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம், அண்ணன் அறிவரசு அவர்களுக்கும் நம் கண்ணீரை தெரிவித்துகொள்வோம் அவர் தினமும் வழிபட்ட பாத்திமா அன்னை அவரின் […]

தமிழகத்தை நேசிப்போர் அந்த பட்டினத்தார் சமாதியில் தியானம் செய்யலாம்…

தமிழகத்தில் ஜெயா, அண்ணா, எம்ஜிஆர் சமாதி என சுற்றிகொண்டிருக்கின்றார்கள், அதில் தியானம் எனும் இம்சை வேறு உண்மையில் தியானம் செய்யவேண்டிய சமாதி சென்னை திருவொற்றியூரில் உண்டு, பட்டினத்தாரின் சமாதி அது. பெரும் பணக்காரனான அவர், சொத்துக்களுக்கு ஆசைபட்ட உறவினர் பெண்ணின் நாடக‌ வாழ்வினை வெறுத்து ஞானியாகி பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தார் பெண்ணால் பெரும் அழிவுவரும் என சொன்னது அவர், அதனால் பெண்ணால் பாதிக்கபட்ட மன்னர்கள் எல்லாம் அவருக்கு சீடரானார்கள், பத்ருஹரி மகாராஜாவும் ஒருவர் இன்றும் பட்டினத்தார் பாடல்கள் செல்வத்தால் […]

வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம்

வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம் இவர்களுக்கு செலவழிக்கும் அரசாங்கம் கையினை பிசைந்துகொண்டிருக்கின்றது, அதாவது இந்நாட்டு மக்களை காக்கவேண்டிய மருத்துவர்களின் இந்த மருத்துவர்களின் போராட்டம் அர்த்தமற்றது, பொறுப்பில்லாதது ஓவ்வொரு நொடியும் தேவைபடுவது அவர்களின் சேவை, இப்படி மறுதலித்து நின்றால் ஏழைமக்களின் அவஸ்தை சொல்லமுடியாதது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்திருப்பவர்கள், உயிரை காக்கும் உன்னத பணி அவர்களுடையது. ராணுவமும், காவல்துறையும், மருத்துவதுறையும் ஓய்வெடுக்க முடியாதவை, அவை நின்றால் தேசம் இயங்காது யாரேனும் மருத்துவரின் அருமை தெரியாமல் அவமதித்திருந்தால் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள், […]

கலைஞர் டிவியில் கலியுகம் என்ற நிகழ்ச்சி….

கலைஞர் டிவியில் கலியுகம் என்றொரு நிகழ்ச்சி ஓடுகின்றது, உலக வரலாற்றினை சொல்கின்றார்களாம் அப்படி சோவியத்யூனியனை சொல்கின்றோம் என அதன் பெருமைகளை மறைத்து, ஏதோ ஒரு அமெரிக்க அடிவருடி ஆசிரியர் எழுதிய புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கின்றார்கள். சோவியத் யூனியன் எனும் சமதர்ம பூமிமீது பெரும் நம்பிக்கையும், அபிமானமும் கொண்டிருந்தவர் கலைஞர், செருப்பு தைக்கும் தொழியாளியான ஸ்டாலினை அதிபராக்கிய அந்த சோவியத் அவருக்கு பிடித்திருந்தது, தன் மகனுக்கு கூட ஸ்டாலின் என பெயரிட்டார் அப்படி கலைஞர் மிக விரும்பிய சோவியத் யூனியனைத்தான், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications