பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது

நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது, எங்கள் கிராமங்களில் அதனை காணம் என்பார்கள். குதிரைகளுக்கு அது பிராதான உணவு, இன்றைய மோட்டார்களாக அன்று குதிரைகள் இருந்தவரை அதற்கான விளைச்சல் தேவை இருந்தது அதாவது இன்றைய இஞ்சின் ஆயில்களாக அன்று கொள்ளு இருந்தது, அந்த இடத்தினைத்தான் இன்று எந்திர ஆயில்கள் பிடித்துகொண்டன‌ அக்காலத்தில் அது கிராமங்கள் தோறும் விளையும், ஒரு மழை பெய்துவிட்டால் புஞ்சை நிலத்தில் உழுது விதைத்துவிடுவார்கள், அவ்வப்போது பெய்யும் மழையினிலே அது விளைந்துவிடும் […]

பெரம்பலூரில் ஒரு மந்திரவாதி கைது…

https://youtu.be/G1PcnI9V0XA பெரம்பலூரில் ஒரு மந்திரவாதியினை போலிசார் கைது செய்திருக்கின்றனர் மனிதர் ஏராளமான மண்டையோடுகள், மை, தகடு இன்னபிற பொருட்களுடன் ஒரு இளம்பெண்ணின் சடலத்தையும் வைத்திருந்தாராம், அதாவது குடியிருப்பு நடுவே சுடுகாடு அமைத்திருக்கின்றான் அவரை கைது செய்யும்பொழுது அவன் சொன்னதுதான் பேரதிர்ச்சி “என்னை விடுங்கள், இது சசிகலா வெளிவருதற்கான உச்சகட்ட பூஜை. ஒருவாரம் செய்யவேண்டும், நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன் இது சின்னமாவிற்கான பூஜை, உங்களை விடமாட்டோம்” என ஆடியிருக்கின்றார் கொஞ்சம் அரசியல் தெரிந்த மந்திரவாதி போலிருக்கின்றது, தப்பிக்க வழிதேடியிருக்கின்றான், […]

ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது….

நெடுநாளைக்கு பின் ஒரு நண்பரை மலேசிய தமிழ்நண்பரை சந்திக்கமுடிந்தது, அவர் பேச்சு முழுக்க ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது வடகொரிய பிரச்சினை என எதனை பற்றி பேசினாலும், மனிதர் அப்பல்லோ பற்றியே பேசிகொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் பேச்சு இப்படி மாறியது “அதில் நிறைய மர்மம் இருப்பதாக சொல்கின்றார்களே..” “தெரியாது, ஆனால் அவர் உடல் எடை ஏறியிருந்தது, மிகுந்த உடல் உபாதைகள் அவருக்கு இருந்ததை மறுக்கமுடியாது..” “முன்பு அவர் சிகிச்சை எடுத்த ஒரு செய்தியும் […]

எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் உச்சகட்ட உளறல்

ஒரு உச்சகட்ட உளறல் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் சமீபத்திய சர்ச்சை பேச்சுதான் சாட்சி மனிதர் திருப்பலியில் ஒயின் குடித்தாரா? இல்லை டாஸ்மாக் சரக்கினை ஊற்றி வைத்துவிட்டு பேட்டிக்கு அழைத்தார்களா என தெரியவில்லை, அப்படி ஒரு அபத்தம் இவர் ஆயரோ, மேய்ப்பரோ அது தேவையில்லை, ஆனால் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த இந்தியகுடிமகன், இந்நாட்டு வரலாறு அவசியம் அவர் படித்திருக்கவேண்டும் இந்தியாவில் மொகலாயர் நல்லாட்சி நடத்தினர், ஆங்கிலேயர் நல்லாட்சி நடத்தினர் என அப்படி […]

பாட்ஷா முதல் தனுஷ் வரை….

22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலுக்கு மாற்றபட்டு வெளியான பாட்ஷா படத்துக்கு பெரும் வரவேற்பு, பெரும் வசூலுடன் சில தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடுகின்றது : செய்தி இது என்ன வரவேற்பு? அண்ணாமலை படத்தினை ரீமேக் செய்தால் குஷ்பூவிற்காக‌ தமிழகம் முழுக்க பல‌ மாதம் ஹவுஸ்புல்லாக ஓடும், அவருக்கு இருக்கும் மக்கள் அபிமானம் அப்படி திராவிட மாயையில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் :- கிருஷ்ணசாமி. ஆமாம், இவர் சினிவாச ராமானுஜம் போல ஆங்கிலேயனை தன் அறிவால் வியக்கவைத்து […]

செய்தி சிதறல்கள்….

என்னை ஜக்கி என்று அழைக்காதீர்கள், சத்குரு என்று அழையுங்கள் : ஜக்கி சாமியார். நாங்கள் தமிழர்கள், ஜ எனும் வடமொழி எல்லாம் சொல்லமாட்டோம், தமிழில்தான் சொல்வோம் அதனால் அவரை “சத்துரு” என்றோ “செத்திரு” என்றோ அழைக்கலாம் என்றிருக்கின்றோம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மாநில அரசு திரும்ப பெறவேண்டும்- தமிழிசை மத்திய அரசு பெட்ரோலை கொள்ளை விலையில் விற்றால் அது அம்மணிக்கு பிரச்சினையே இல்லை ஆனால் மாநில அரசு வரிபோட்டுவிட்டால் அம்மணி சும்மா இருக்கமாட்டார், மக்களின் நலன் […]

நண்பர்கள் அமைவதெல்லாம் முகநூல் கொடுத்தவரம்..

நான் கிறிஸ்தவந்தான், இது கிறிஸ்தவர்களுக்கான விரத காலம்தான், ஆனால் வீடியோக்கள் பார்க்கமாட்டேன் என நான் சொல்லவே இல்லை நண்பர் குழாமில் ஒருவர் கூட, தமிழகமே தன்னை மறந்து , உண்ண மறந்து, உறங்க மறந்து பார்த்துகொண்டிருக்கும் வீடியோக்களில் ஒன்று கூட ஒருவரும் அனுப்பவில்லை நமக்கு வாய்த்த நண்பர்கள் அப்படியானவர்கள் என விதியினை நொந்துகொண்டு நகரவேண்டியதுதான் ஏய் நண்பர் குழாமே உன்னை வன்மையாக கண்டிக்கின்றேன், இந்த வீடியோ சாபம் உங்களை சும்மா விடாது. நண்பர்கள் அமைவதெல்லாம் முகநூல் கொடுத்தவரம்.. […]

செய்திகள் அங்கும் இங்கும்…

தனுஷுடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்திரா கணவனை பிரிகின்றார் ஏற்கெனவே அமலாபால், விஜய் ஜோடி பிரிவிற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது சுசித்ராவின் வாழ்க்கையில் தனுஷ் விளையாடியதால் தான் இப்படியொரு விவாகரத்து சம்பவம் நடக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்புவினை மிக மிக நல்லவராக்க தனுஷ் ஒருவரே போதும் போலிருக்கின்றது சிம்பு பலபேரினை விட்டு பிரிந்தாரே அன்றி, அவர் யாரையும் பிரித்ததாக செய்தி இல்லை இந்திய அணியினை எப்படி வீழ்த்தினோம் என ஆஸ்திரேலிய கேப்டன் சொல்லி […]

சின்ன சின்ன செய்திகள் …

தமிழகத்திலும் ஒரு நாள் பாஜக அரசு மலரும்: மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் விவரம் தெரியாத அமைச்சராக இருப்பார் போலும் இப்பொழுது மறைமுகமாக நடந்துகொண்டிருப்பது யார் ஆட்சி? என கூட தெரியாமல் இவர் மத்திய அமைச்சரா?, மனிதர் மிகவும் அப்பாவி போல‌ முதல் இன்னிங்க்ஸில் 105 ரன்களுக்கு இந்திய அணி அதிர்ச்சி ஆல் அவுட். இதில் என்ன அதிர்ச்சி, முன்பே சொன்னதுதான் வங்கதேசத்திடம் வென்றுவிட்ட மதப்பில் ஆஸ்திரேலியாவுடன் மோதினால் இப்படித்தான் ஆகும்..  

இயக்குநர் என்னை “தொல்லை”படுத்தினார் : லீனா மணிமேகலை பரபரப்பு பேட்டி

பிரபல இளம் இயக்குநர் என்னை “தொல்லை”படுத்தினார் : லீனா மணிமேகலை பரபரப்பு பேட்டி என்னடா இது தமிழக பெண் கலைஞர்களுக்கு வந்த சோதனை? வரிசையாக வந்து சொல்லிகொண்டிருக்கின்றார்கள். இதில் ஏதும் கவனத்தை திருப்பும் சதி இருக்குமா? அல்லது நெடுங்காலம் அடக்கி வைக்கபட்டிருந்த விவகாரங்களா? என்பது தெரியவில்லை நேற்று வரலட்சுமி பிரபல தொலைகாட்சி அதிகாரி என்றார், இன்று இவர் பிரபல இயக்குநர் என்கின்றார், நாளை யார் என்ன “பிரபல” புகார் சொல்லபோகின்றார்களோ? சொல்லமுடியாது அக்கால சரோஜா தேவி வரை […]