பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி ஏன் இப்படி சிரிக்கின்றார்?

தலைவி ஏன் இப்படி சிரிக்கின்றார்? சங்கத்தை பற்றி எவனும் சொல்லி தொலைத்து விட்டானோ? தலைவி சிரிப்பினை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது ஆனாலும் அந்திவானம் சிரித்தால் இப்படித்தான் இருக்கும்

தலைவி தலைவி ஏம் என்னை கைவிட்டாய்

ஏதோ தோன்றுவதை எழுதுகின்றோம் என எழுதிகொண்டிருந்தால் விஷயம் பெரிதாகின்றது பலர் பின் தொடர்கின்றார்கள், சிலர் கவனிக்கின்றார்கள் என்றுதான் நினைத்துகொண்டிருந்தோம் ஆனால் இப்பொழுது திசை மாறுவது போல் தோன்றுகின்றது போலி கிறிஸ்துவத்தை அல்லது இந்துக்களின் சில நியாயங்களை எழுதுவோம் என எழுதினால் அது எங்கே செல்கின்றது தெரியுமா? சொல்லவே நடுக்கமாய் இருக்கின்றது ஆம் H. Raaja என்பவரின் பக்கத்திற்கு செல்கின்றது, அதனை பார்க்கும்பொழுதே பகீர் என்கின்றது அவர் ஒருமாதிரியானவர் என்பதால் அடிவயிற்றில் உருளை உருண்டு தொண்டை வரை வருகின்றது. […]

உலகின் பாதுக்காக்க வேண்டிய பகுதி

உலகெல்லாம் சில நாடுகளில் யுத்த சத்தம் கேட்க தொடங்கிவிட்டன‌ இதில் சில நாடுகளில் யுத்தம் வந்தால் தாக்க கூடாத பகுதி என சில இடங்களை, கிடைத்தற்கரிய கலை கூடங்களை உலகத்தார் வைத்திருப்பார்கள். பிரமிடு போன்ற புராதான சின்னங்கள், உலக அதிசய கட்டங்கள், கலை கூடங்கள், அழகு சிலை மாடங்கள் எல்லாம் அதில் வரும் இந்தியாவின் தாஜ்மகாலும் ஒன்று. இரண்டாம் உலகப்போர் காலத்திலும், இந்தியா நடத்திய போர்களிலும் உலகத்தார் கவனம் தாஜ்மகால் மீதே இருந்தது இப்பொழுது தாஜ்மகால் தவிர […]

சர்ச்சையில் இளையராஜா

பொதுவாக இசை கலைஞர்கள் மற்ற விஷயங்களில் அவ்வளவு ஞானம் இல்லாதவர்கள் என்பது பொதுகருத்து, வரலாறு முழுக்க அது காண கிடக்கின்றது எம்.எஸ் விஸ்வநாதனை கண்ணதாசன் கலாய்த்த வலை எல்லாம் வேறு வகை. ஆப்கன், காபூல், சோவியத், லெனின் என எதையும் அறியா விஸ்வநாதன் மாஸ்கோவில் டாரோவோஸ்கியின் நோட்ஸினை கண்டு பியாணோ வாசித்ததில் ரஷ்யர்கள் அவரை கட்டி தழுவி கொண்டாடினர் இசை ஞானிகள் என்பவர்கள் அப்படித்தான் இன்று அந்த சர்ச்சையில் இளையராஜா சிக்கிவிட்டார், அமெரிக்கா சென்ற அவர் இயேசு […]

யுவர் டைம் ஸ்டார்ட் நவ்..

இந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபட்டதாகவும் இன்ன சில சிக்கல்களாலும் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்வதால் இப்பொழுது பேச்சுவார்த்தை நடக்கின்றது இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு பேசிய கூட்டத்தில் நானும் இயக்குநர் என கலந்துகொண்டார் சிம்பு வழக்கமாக வம்பு பேசும் சிம்பு, இப்பொழுது உருப்படியாக பேசியிருக்கின்றார் நடிகர்களுக்கு வெள்ளை பணமாகவும் கருப்பு பணமாகவும் கொடுக்கபடும் சம்பளம் வெள்ளையாக மட்டும் கொடுக்கபட வேண்டும் என ஒரே போடாக போட்டிருக்கின்றார், ஆடி போய் இருக்கின்றது திரையுலகம் ஆம் கருப்பு பணம் சினிமாவில் உண்டு என […]

தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்

“வானவர் கூந்தல் கண்டு மண்ணிடை மனதை விட்டார் மீணவர் விழியை கண்டு மீனென வலையை விட்டார் மானவள் நடையை கண்டு  வேடவர் அம்பை தொட்டார் தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்”

எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம்

திமுகவினருக்கு மூளை அதிகமாக? இல்லையா? என்பது அவர்கள் பிரச்சினை. ஆனால் ரசனை அதிகம் உள்ளவன் மட்டுமே குஷ்பு சங்கத்தில் இருக்க முடியும் நெற்றிணை, கார் கூந்தல் நாற்பது, கண்களாற்றுபடை, குறுநகை, அழகு நானூறு, இனியவை நாற்பது , கனியவை நாற்பது , குறுநகை, பேரழகு பத்து, துறுதுறுநூறு எல்லாம் இந்த முகத்திலே அடக்கம், ஆக எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம் உலகின் மிக அழகிய கவிதை இந்த முகம். ஆக உலகிலே ரசனை அதிகம் கொண்டவர்கள் […]

தலைவியின் புன்னகையே புத்தமதத்தின் எளிமையான தத்துவம்

வழக்கமாக எல்லா தெய்வங்களும் தலைவியினை அவர்கள் வீட்டில் சென்றுதான் வாழ்த்தும் ஆனால் சனி வருவது நல்லதல்ல என சாஸ்திரம் சொல்வதால் தலைவி சனி பகவானை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார் இதெல்லாம் சாதரண விஷயம் இதற்கு போய் குஷ்பு கோவிலுக்கு செல்லலாமா? என பொங்குகின்றார்கள் தலைவி இஸ்லாமியராய் பிறந்தார், பெரியாரிஸ்டாய் வளர்ந்தார், இந்துவினை திருமணம் செய்தார் எம்போன்ற கிறிஸ்தவர்களை சங்கத்தின் முக்கிய பொறுப்பில் அமர்த்தியிருக்கின்றார், வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களிலும் அவருக்கு சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது தலைவியின் புன்னகையே […]

ரஜினி இமயமலையில் இருந்து வந்துவிட்டார், இனி காலா படம் வரும்

ரஜினி இமயமலையில் இருந்து வந்துவிட்டார், இனி காலா படம் வரும் என்கின்றார்கள் படத்தின் கதைபடி ரஜினி கருப்பு தமிழர், சேரிவாழ் தமிழர் இன்னபிற புரட்சி, தலித், தமிழராக இருக்கட்டும் ஆனால் சிக்கல் வேறுவகையில் புகைகின்றது அதாகபட்டது மும்பையின் ரவுடி சாம்ராஜ்யத்தை பெரும்பாலும் ஆண்ட ரவுடிகள் எல்லாம் இஸ்லாம் மதத்தவராக இருந்து தொலைத்துவிட்டார்கள் ஹாஜி மஸ்தானில் இருந்து தாவுத் வரை அப்படித்தான் மும்பை தமிழ் ரவுடிகள் எல்லாம் இந்த ஹாஜி மஸ்தான் போன்ற ரவுடிகளுக்கு அடங்கிய கூலி ரவுடிகளாகவே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications