பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார் ரஜினி

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார் ரஜினி ஆனால் லதா வைத்திருக்கும் வாடகை பாக்கி பற்றி மட்டும் மனிதர் பேசமாட்டார், அது வேறு வகை இப்படி மடத்திற்கு கோடிகளை அள்ளிகொடுக்கும் ரஜினி முன்பு லிங்கா போன்ற படங்கள் மிகுந்த நஷ்டமளித்த போது விநியோகிஸ்தர்களுக்கு ஒன்றுமே கொடுக்க முன்வரவில்லை இச்சம்பவம் சொல்வது ஒன்றுதான் இனி மடங்களே ரஜினியின் படங்களை விநியோகித்தால் நல்லது, லாபத்திலும் பங்குகொடுப்பார் ரஜினி

நடிகர் ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம்..

நாட்டில் இருக்கும் சிக்கல் நாட்டில் போதாது என்றால், ஊடகங்கள் சொல்படி பார்த்தால் புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது சிக்கல் என்னவென்றால்,ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம், “என்னை திருமணம் செய்து யாராவது எனக்கு வாழ்வுகொடுங்கள்..” என கெஞ்சிகொண்டிருக்கின்றார் நடிகர் ஆர்யா என்னாச்சி மனிதருக்கு? அந்த அளவு கிராக்கி இருந்திருந்தால் சினிமா நடிகைகளே தூக்கியிருப்பார்கள், ஆக மனிதரை திருமணம் செய்துகொள்ள நடிகைகள் ஒருவர் கூட தயாரில்லை இப்பொழுது ஊரெல்லாம் நம்பர் கொடுத்து என்னை கட்டிகொள்ளுங்கள் என சொல்வதாக செய்திகள் அப்படியும் ஒன்றும் சிக்கவில்லையாம் […]

பத்மாவதி என்பது நடந்த கதை

பத்மாவதி என்பது நடந்த கதை, ஒரு வரலாற்று சம்பவம். அதனை அடிப்படையாக கொண்டு ஏகபட்ட திரைபடங்களும், புத்தகங்களும் வந்தாயிற்று இப்பொழுது குதியோ குதி என குதிக்கின்றார்கள், எப்படியும் குதிக்கட்டும் நடந்த வரலாற்றை மறக்கடிக்கவா முடியும்? இதற்காக தீபிகா படுகோனேவினை கொல்வோம் என்பதும், தலைவெட்டுவோம் என்பதும் என்ன மாதிரி தேசம்? அந்த தீபிகாவின் அழகினை கூட ரசிக்க தெரியாத காட்டுமிராண்டி தேசம் ஆகிவிட்டதா? கொல்லவேண்டிய நபரா அவர்? அட பதர்களா? ஒருவன் நாக்கை வெட்டுவேன் என்கின்றான், ஒருவன் தலையினை […]

வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம்

வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம் தமிழக குழப்பம், இருக்கும் சிக்கல் போதாதென்று மோடியும் கவிதை படித்துவிட்டாராம் எங்கெங்கு நோக்கினாலும் கவிதை சிக்கலாகிவிட்டது, ஒரே குழப்பம் அதனால் சிலப்பதிகார கவிதை வரிகளுக்கு சென்று வாசித்தாகிவிட்டது, ஆனால் ஆச்சரியம் அந்த அளவு குஷ்புவிற்கு பொருந்தும் வரிகளை எழுதியிருக்கின்றார் “மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே!  அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே மலையிடைப் பிறவா மணியே அலையிடைப் பிறவா அமிழ்தே” குஷ்புவின் முகத்தைபற்றி அன்றே எழுதியிருக்கின்றார் இளங்கோவடிகள், குஷ்பு […]

என்ன வெட்டு? என்ன குத்து?

இவருக்கு நான் ஜென்மவிரோதியென்றால் என்னை கீழ்பாக்கம் வரிசையில் உலகம் சேர்க்காதா? என்னை எப்போது அய்யா வெள்ளை ஆக்கினாய்? நான் இன்னும் கருப்பாகத்தானே இருக்கின்றேன்? என்ன வெட்டு? என்ன குத்து? அதற்கு பாபுராவு ஏன் பருப்பு விற்க வேண்டும்? வெள்ளிகிழமை காலையிலே துபாய் பாலாவிற்கு உச்சி மண்டையில் நரம்பு சுளுக்கிகொண்டது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது மோடி மீது சசிகலா கும்பல் கொண்டிருப்பது போல எம்மீது கொலைவெறியில் திரியும் துபாய் பாலா எம்மை அடிக்க நாம் தமிழர் தும்பிகளை […]

சாதனையை முறியடிக்கும் ஒரே ஓவியம்…

லியானர்டோ டா வின்சி வரைந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடத்திலேயே 450.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது : செய்தி இச்சாதனையினை வருங்காலத்தில் முறியடிக்கும் ஒரே ஓவியம் இதுதான். அது ஏற்படுத்த போகும் சாதனையினை எந்த டாவின்சி வந்து வரைந்தாலும் உடைக்க முடியாது. ஆக உலகத்தாரே தலைவியின் படத்தினை வரைந்து லாக்கரில் பத்திரபடுத்தி வைத்தால் உங்கள் தலைமுறைக்கு பெரும் செல்வம் சேர்த்தவர்கள் ஆவீர்கள்.  

நடிகை புவனேஸ்வரி பெரும் சிக்கலில் ….

நடிகை புவனேஸ்வரி பெரும் சிக்கலில் சிக்கியிருக்கின்றார், அதாவது இலங்கையினை சேர்ந்த பெண்ணை வேலைக்கு வரவழைத்து போதைக்கு அடிமையாக்கியதாக செய்திகள் வந்தன. அந்த பெண் இன்னும் மீட்கபட்டதாக தெரியவில்லை என்னது இலங்கை தமிழ்பெண்ணுக்கு ஆபத்தா? பச்சை தமிழன் ஆட்சியில் தமிழக பெண்ணுக்கு சிக்கலா? அப்படி தமிழகம் பொங்காதா என்றால் பொங்காது அதாவது இலங்கை தமிழ்பெண்ணுக்கு சிங்களனாலோ அல்லது வட இந்தியனாலோ சிக்கல் வந்தால்தான் இங்கு பொங்குவார்கள், தமிழச்சி புவனேஸ்வரியால் சிக்கல் வந்தால் கண்டுகொள்ளமாட்டார்கள் இது என்னய்யா தமிழச்சி தமிழச்சியினை […]

சங்கத்து ஆள அடிச்சவன் எவன்?

“சங்கத்து ஆள அடிச்சவன் எவன்?” என தெரிந்துகொள்ள‌ Sadhu Sadhathஎன்பவரை தேடினால் மனிதர் சிக்கவில்லை இதனால் ரகசிய உளவாளிகள் சகிதம் தேடமுனைந்தபொழுது கிடைத்த தகவல் அதிர்ச்சியளிக்கின்றது தலைவி அறுவை சிகிச்சை செய்ததை தாங்க முடியாத Sadhu Sadhath , தானும் வயிற்றை கிழித்துகொண்டு எங்கோ அதே வலிக்கு சிகிச்சை பெற்று கொண்டிருக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌. தலைவி பெற்ற வலியில் தானும் பங்கெடுக்க வேண்டும் என நினைத்து, இந்த துணிகர செயலை செய்திருக்கின்றார். சங்கம் தலைவி சிரித்தால் சிரிக்கும், […]

நேற்றைய அதிர்ச்சி லட்சுமி, இன்றைய அதிர்ச்சி ஜோதிகா

உதிரி பூக்களில் ஒரு காட்சி உண்டு உடல்நலமில்லா மனைவியிடம் விஜயன் சொல்வார் “உனக்கு உடம்பு சரி இல்ல, இனி உன்னோட வாழ்ரதுல அர்த்தம் இல்ல. அதனால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்ணு இருக்கேன்” அந்த அஸ்வினி மனதிற்குள் சொல்வார் “இதே நிலமையில நீங்க இருந்து, நான் இப்படி சொன்னா இந்த சமூகம் என்னை பற்றி என்ன சொல்லும்?” சாட்டையடி வசனம் அது. உதிரி பூக்கள் காலத்தை வென்று நிற்பது இம்மாதிரி வசனங்களால்தான், அந்த மகேர்ந்திரனிடம் முதிர்ச்சி இருந்தது. இப்போது […]

லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது

லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது, ஊடகங்கள் எல்லாம் விவாதிக்க தொடங்கிவிட்டன‌ இதெல்லாம் எதனை சொல்கின்றன என்றால், விரைவில் சிம்புவின் “லெட்சுமணன்” என்றொரு படம் வரவிருப்பதை சொல்கின்றன. சும்மாவே மனிதர் ஆடுவார், இம்மாதிரி விஷயம் கிடைத்தால் விடுவாரா? மனிதர் மணிரத்னத்திடம் சிக்கிகொண்டார் போல, அந்த மதம் கொண்ட யானைக்கு மணிரத்னம் இந்நேரத்தி சங்கிலி போட்டு வைத்துவிட்டார் இதனால் “லெட்சுமணன்” என்றொரு ஆண் உரிமை படைப்பு தள்ளி போய்கொண்டிருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications