பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நயன்தாராவை தோழர் என்றார் பா. ரஞ்சித்: செய்தி

நயன்தாராவை தோழர் என்றார் பா. ரஞ்சித்: செய்தி எங்கே முடிந்தால் ரஜினியினையோ, ரஜினி மனைவியினையோ காலா படத்து தயாரிப்பாளரையோ இவர் தோழர் என அழைக்கட்டும் பார்க்கலாம் மிஸ்டர் ரஞ்சித், ரஜினி மகள் சவுந்தர்யாவினை தோழர் என அழைத்துவிடுங்கள் பார்க்கலாம். அடுத்த படத்திற்கு நயன் கால்ஷீட் வேண்டுமென்றால் நேரடியாக கேட்க வேண்டியதுதானே, ஏன் தோழர் என்றேல்லாம் கெஞ்ச வேண்டும்? (தோழர் என்ற சமத்துவத்தை குறிக்கும் புரட்சிமிக்க‌ சொல் இவரிடம் சிக்கி இந்த பாடு படுகின்றது)

குஷ்பு ஏதும் சொன்னால் அதனை திரித்து கட்டி….

குஷ்பு ஏதும் சொன்னால் அதனை திரித்து கட்டி அவர் கலாச்சாரத்தை கொச்சைபடுத்துகின்றார் என வழக்கு தொடுத்தவர்களை, குறிப்பாக இந்த திருமாவளவன் போன்ற சில‌ அல்லக்கைகளை லட்சுமி படம் வந்திருக்கும் பொழுது காணவே இல்லை எத்தனை கலாச்சார காவலர்கள் அப்பொழுது வந்தார்கள், இந்து அமைப்புகள், தமிழ் அமைப்புகள், தாழ்த்தபட்டோரை தூக்கிவிட வந்தவர்கள் என எல்லோரும் கொதித்தார்கள் நீதிமன்றம் இருக்குமிடமெல்லாம் அவர் மீது வழக்கு பாய்ந்தது ஆனால் இப்பொழுது லட்சுமி என்ற தமிழரின் புதுகலாச்சாரத்தை பாரதி பாடலோடு சொன்னவர்கள் மீது […]

அறம் படமும் தலைவிக்குரியது…

முதல்வன் படத்தில் நடிக்க முதலில் ரஜினியினைத்தான் அழைத்தார்களாம், ஆனால் அடிக்கடி அரசியல் ஆட்டம் ஆடும் ரஜினி அந்தபடத்தில் நடித்தால் தன் அரசியல் கூடும், சரிவராது என மறுத்தார் என செய்திகள் சொல்லும் இந்த அறம் படமும் தலைவிக்குரியது, தலைவி அரசியலில் தீவிரமாக இருப்பதால் இப்படம் தனக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் என்பதால் மறுத்துவிட்டார் அதில்தான் நயன் நடித்துவிட்டார் இதுதெரியாமல் Babu Rao என்பவர் குதிக்கின்றார் பெண்ணியம் பேசும் படங்கள் ஏராளம் உண்டு, அவ்வையார் படம் அந்த வகையில் வராது, காரணம் […]

அறம் என்றொரு நயன் படம் வந்திருக்கின்றதாம்

இரு நாட்கள் இந்த முகநூல் பக்கம் வரமுடியாது போல, இந்த அறம் என்றொரு நயன் படம் வந்திருக்கின்றதாம் Babu Rao என்பவர் அழிச்சாட்டியம் தாளவில்லை. அடுத்தவன் வீட்டை விற்றாவது தலைவியினை வைத்து படமெடுத்து பழிதீர்க்கலாம் என்றால் அவருக்கும் நலம் இல்லை என்ன செய்யலாம்? ஏதாவது செய்யவேண்டும் இந்த அறம் படத்தில் மோடியினை விமர்சிக்கின்றார்கள், இந்த‌ சுஷ்மா ஸ்வராஜினை , உமா பாரதியியினை விமர்சிக்கும் சாயலில் நயன் பாத்திரம் வடிவமைக்கபட்டிருக்கின்றது. சில இடங்களில் சிறையில் ஒரு பெண் அரசை நோக்கி […]

நலந்தானா.. நலந்தானா …

சென்னை எப்படி யுனெஸ்கோவின் கவனத்தை பெற்றது என்றால் இவரால்தான்.. தலைவி முகமே கோடி ராகங்களுக்கு சமம் தலைவி இருக்கும் ஊருக்கு கிடைக்காத புகழ் ஏது?   நலந்தானா.. நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா “கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்  புண்பட்ட செய்தி கேட்டவுடன் சங்கம் பட்ட பாட்டை யாரறிவார்.. நலம்பெற வேண்டும் நீரென்று நாளும் எம்நெஞ்சில் நினைவுண்டு”

சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் தலைவி பெயர் ஏன் இல்லை…

இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் தலைவி பெயர் இல்லை ஏன் இல்லை? வானத்து நட்சத்திரங்களை எண்ணும்பொழுது சூரியனை மறந்துவிடுவது போல தவறவிட்டிருக்கின்றார்கள். அப்பட்டியலில் பிரியங்கா காந்தி பெயரும் இல்லை என்பது வேறு விஷயம். தலைவி பெயர் பட்டியலில் இல்லாதது சங்கத்தின் பொதுகுழுவில் விவாதிக்கபட்டு, “கருத்துகணிப்பில் சங்கத்திற்கு நம்பிக்கை இல்லை..” என தீர்மானம் நிறைவேற்றியாயிற்று

ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..

தெய்வங்கள் கண்மூடிய நேரத்தில் ஒரு தேவதை முகம் சோர்ந்த நேரம் ஆண்டவா, இந்த முகத்தை பார்க்க உனக்கே வருத்தமாக இல்லை? சோர்ந்துவிட்ட அந்த கண்களை கண்டு உனக்கு கண்ணீர் வரவில்லை? எங்கள் சிங்கமே.. “ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..” என சங்கம் காத்திருக்கின்றது.

கமலஹாசனின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்கள்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் சீனிவாச கமலஹாசன். கடந்த வருடம் வரை அப்படித்தான் இருந்தார், இப்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர். பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜாம்பவான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). அக்காலத்தின் எல்லா நடிகர்களோடும் நடித்தார் இந்த இடைகாலத்தில் அவர் நடனம்,இயக்கம்,எடிட்டிங்,கவிதை,பன்மொழி என சகலத்தையும் […]

அமலா பால் ஜிம்மில் இருக்கும்பொழுது எடுத்த செல்பி

கார்ட்டூன் வெளியிட்டால்தான் கைது செய்வார்களா? இப்படி மக்களை பயமுறுத்தும் தன் சுயபடத்தினை வெளியிடும் அமலா பால் என்பவரை எல்லாம் கைது செய்ய மாட்டார்களா? அம்மணி ஜிம்மில் இருக்கும்பொழுது எடுத்த செல்பி இதுவாம் இப்பொழுதெல்லாம் ஜிம்மில் இருந்து வரும் செல்பி படம் தான் ரொம்ப பேமஸ், ஆனால் ஸ்டாலினை தொடர்ந்து ஏன் அமலா பால் ஜிம் படம் வெளியிட்டிருக்கின்றார்? அவரை கலாய்க்கின்றாரா? ஆக அம்மணி இப்பொழுதே தன் படம் ஹிட் அடிக்க ரகசியமாக பாஜ்கவினரின் ஆதரவினை பெற விரும்புக்கின்றார் […]

கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு

நன்றாக இருக்கின்றேன் என ஒருவார்த்தை சொன்னால் போதாதா? இந்த வீடியோ அனுப்பாவிட்டால் என்ன? முகத்தில் களைப்போடு, முடியாத நிலையில் ரசிகர்களுக்காக நன்றி சொல்லும் தலைவியினை பார்க்க கண்ணீர் வருகின்றது. இதையெல்லாம் நெஞ்சம் தாங்குமா? ரத்தம் நெஞ்செல்லாம் வழியாதா? “கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு” வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி.. நியாயத்திற்கு வெற்றி, தர்மத்திற்கு வெற்றி, தமிழக எதிர்காலத்தின் வெற்றி, காலத்தின் வெற்றி வெற்றிமேல் வெற்றி ஆம், தலைவிக்கு நடந்த அறுவை சிகிச்சை மிக வெற்றிகரமாக நடந்து அவர் […]