பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி நலம்பெற்று வர எல்லா ஆலயங்களிலும் பிரார்த்திப்போம்

தலைவிக்கு அறுவை சிகிச்சை என செய்திகள் சொல்கின்றன, இருக்கும் தலைவர்களின் அலுவலர்களிலே மகா மோசமானவர்கள், அல்லது ஒரு மாதிரியானவர்கள் குஷ்பூ அலுவலக‌ ஊழியர்கள் ஏதோ முன்னாள் போயஸ் தோட்ட ஊழியர்கள் போல அப்படி ஒரு இறுமாப்பு. தலைவி பற்றி கேட்டால் ஏதோ அவர்களின் சொத்துகணக்கினை கேட்டது போல குதிக்கின்றார்கள். தலைவி சிகிச்சை குறித்து அவர்களிடம் கேட்டால் அப்படி ஒன்றும் இல்லையே, உங்களுக்கெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்பது போன்ற பதில்கள் வருகின்றன‌ ஆனால் பத்திரிகை செய்திகள் […]

என்ன மாதிரி சமூகம் இது?

பழைய வரலாற்றை வீரர்களை, தலைவர்களை எல்லாம் சொன்னால் நன்றாக இருக்கின்றது இப்படி சொல்லுங்கள் என்கின்றார்கள். ஆனால் வருங்கால வரலாறு, வருங்கால புரட்சி தீபம், வருங்கால டாக்டர் குஷ்பு பற்றி சொன்னால் முகத்தை திருப்புகின்றார்கள் என்ன இவர்கள்? நாம் இன்று எழுதாவிட்டால் இன்னொருவன் வருங்காலத்தில் குஷ்பூ பற்றி பக்கம் பக்கமாக எழுதத்தான் போகின்றார்கள் நாம் நாஸ்டர்டாமஸ் போல முந்திகொன்டோம் அவ்வளவுதான் இப்பொழுதே குஷ்பு பற்றி படிக்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது, இல்லாவிட்டால் வருங்கால சந்ததிக்குத்தான் வாய்ப்பு இது கூட […]

அமலாபால் கார்

“அண்ணே இந்த அமலாபால் கார் ஏதோ பாண்டிச்சேரிகாரன் பெயர்ல இருக்காம்ணே அதுக்கென்னடா? அதிலதாண்ணே சந்தேகம்? என்னடா சந்தேகம்? அண்ணே, கார் பாண்டிச்சேரிகாரன் பெயர்ல இருக்கு.. அந்த அமலா பால்……… டேய் அடுத்தால நீ என்ன கேக்கபோறேண்ணு தெரியும், ஓடிரு”  

திருமணம் செய்ய நயன் தாரா முடிவு?

இயக்குநர் விக்னேஷ் சிவனை  ரகசிய திருமணம் செய்ய நயன் தாரா முடிவு? : செய்தி அப்பாடா ஒருவழியாக‌ இந்த Babu Rao என்பவர் சயனைடை தேடியும், இந்த Chandran Kannan என்பவர் கடலை தேடியும் ஓடும் நேரம் வந்துவிட்டது. ஆயினும் பென்ஸ்கார் வாங்க எவனோ ஒருவன் முகவரியினை அமலாபால் கொடுத்தது போல, தன் முகவரியினை திருமண பதிவு அலுவலகத்தில் நயன் கொடுக்க மாட்டாரா? என்ற கடைசி  நம்பிக்கையில் இன்னும் சயனைடை கடிக்காமல் இருக்கின்றார் Babu Rao

குஷ்பு ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர்

சென்னை கடும் மழை அச்சமூட்டும் விஷயம்தான், குஷ்பு அங்கிருப்பதால் உலகெல்லாம் உள்ள ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர் ஆனால் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், ரசிக கண்மணிகள் பாகுபலி பிரபாஸ் போல நின்றுகொள்வார்கள், அவர்கள் மேல் கால் வைத்து தலைவி அட்டகாசமாக வெள்ளத்தை கடந்து செல்லலாம் என்ற திட்டம் Sadhu Sadhath அவர்களால் கொடுக்கபட்டு சங்கத்தால் பரிசீலிக்கபடுகின்றது ஒருவேளை நிலமை சிக்கலானால் அது நடைமுறைபடுத்தபடும் என சங்கத்து சார்பில் தெரிவிக்கபடுகின்றது  

குஷ்பூ எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்

தலைவி எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார் என்பது இன்னும் வெளியிடபடவில்லை தமிழிசை போன்ற வெளிகட்சியினர், சில உட்கட்சியினர் இன்னும் ஏராளமான எதிரிகளை கொண்ட தலைவி குஷ்பு தங்கியிருக்கும் மருத்துவமனை ரகசியமாக‌ இருப்பது நல்லது என சங்கம் திருப்தி கொள்கின்றது ஒருவேளை அந்த மருத்துவமனை பெயர் அறிவிக்கபட்டால், திரளும் கூட்டத்தினை கட்டுபடுத்தி தகுந்த பாதுகாப்பினை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என எச்சரிக்கின்றோம். தேவைபட்டால் வெளிநாட்டு மருத்துவம் அளிக்கவும் சங்கம் கோரிக்கை வைக்கின்றது. தலைவி நலம்பெற்று திரும்பும் வரை, […]

சன்னி லியோன் சீற்றம்

என் கணவர் இல்லாதபொழுது என்னை இரவில் மிரட்டுகின்றார்கள், கதவினை தட்டுகின்றார்கள், கையில் கத்தியோடு சுத்துகின்றேன், அவன் கையில் கிடைத்தால் சொருகி விடுவேன் : சன்னி லியோன் சீற்றம் ஏராளமான‌ நடிகைகள் திரையுலகில் என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லும் பொழுது, சன்னிக்கு அப்படி சொல்லமுடியாது, காரணம் அவரின் “நடிப்பு” அப்படி. என்னையும் கையினை பிடித்து இழுத்தார்கள் என சன்னி சொன்னால், உலகம் வாய்விட்டு சிரிக்கும். அம்மணி வேறு என்ன செய்ய முடியும், இப்படித்தான் சொல்லிகொள்ள முடியும் […]

தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள்

தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஞ்ச காலமாகவே அவரின் காலில் அடிபட்டு வருவது கவலையளிக்கும் விஷயம், பொதுவாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி ஆகும் என்பார்கள். தலைவி அடுத்த தேர்தலில் அமைச்சர், தமிழக காங்கிரஸ் தலைவர் என பெரும் பொறுப்புக்களை ஏற்க இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் திருஷ்டி ஏற்பட்டு, விரும்பதகாத சம்பவங்கள் நடக்கின்றன‌ தலைவி விரைவில் நலம்பெற வேண்டியும், அவரின் கம்பீர நடை திரும்ப வரவேண்டியும் சங்கமும், சங்க உறுப்பினர்களும் உலகெல்லாம் உள்ள […]

நான் உயர்வடைய இஸ்லாமிய நண்பர்களே காரணம் : ரஜினிகாந்த்

என் வாழ்வில் நான் உயர்வடைய இஸ்லாமிய நண்பர்களே காரணம் : ரஜினிகாந்த் என்ன இவர்? சுபாஷ்கரன் எனும் ஈழ பணக்காரர் நட்பு கிடைத்தபின்புதான் ஈழமும் அங்கு நடந்த படுகொலைகளும் அவருக்கு நினைவு வருகின்றன‌ இப்பொழுது எந்திரன் 2.0 துபாய் மார்க்கெட்டை குறி வைத்ததால் இஸ்லாமிய நண்பர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றார்கள் இனி வசூலை கூட்ட தமிழக அரசியல் அறிவிப்பு குழப்பமும், ரசிகர்களும் நினைவுக்கு வருவார்கள் எல்லாம் சுபமாக முடிந்துவிட்டால் இமயமலை நினைவுக்கு வருகின்றது ராமசந்திரன் மீது ஆயிரம் […]

நேரம் இன்னுமா வரவில்லை

நேரம் இன்னும் வரவில்லை என சொல்லிகொண்டே இருந்தது எமிஜாக்சனுடன் இப்படி நிற்கத்தானா மிஸ்டர் ரஜினி? ரஜினி களத்தில் சந்திக்க போருக்கு தயாரனபொழுது எடுத்த படம் (ஏம்பா வேல்முருகன். லைக்கா சுபாஷ்கரன் ஸ்டைலா கெத்தா ரஜினி அருகே நிற்பது தெரிகின்றதா இல்லையா?)