பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

ஒரு குழந்தை உருவாக 10 மாதம் ஒரு பட்டதாரி உருவாக 4 வருடம் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆனால் ஒரு குஷ்பூ உருவாக பல‌ யுகம் ஆகும் அது ஏண்டா உங்களுக்கு புரியவே மாட்டேங்குது? கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம்

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம் வெற்றி..வெற்றி..மாபெரும் வெற்றி என தமிழிசை கைதட்டும் நேரம் ஆக தமிழிசைக்கு அஞ்சும் நிலைக்கு விஜய் சென்றுவிட்டார், இனி எவனாவது தளபதி தலைவலி என பேசட்டும் பார்க்கலாம் ஆனாலும் அன்று பராசக்தி முதல் ராமசந்திரனின் பல இம்சை காட்சிகளை அனுமதித்த காமராஜர், பக்தவக்சலம் போன்றோரின் பெருந்தன்மை தெரியும் நேரமிது அவர்கள் அன்றே இப்படி கழுத்தை நெறித்திருந்தால் இந்த ராமசந்திரன் எல்லாம் வந்திருக்க முடியுமா? இருக்கட்டும் “கலையின் வடிவம் சினிமா, அதுல […]

தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி திரைப்படம்

இந்த வட இந்தியர்கள் மகா வித்தியாசமான ரசனை கொண்டவர்கள் , மகா மட்டமான படங்களை எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள், கைதட்டி கொள்வார்கள் ஆனால் பழம் வரலாற்று படங்களில் எங்காவது இந்து முஸ்லீம் உறவுகள், சண்டைகள் என வந்தால் போதும் கொதித்துவிடுவார்கள் கதை, நடிப்பு, இயக்கம் ,பிரமாண்டம் என எதுவும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது, இந்துக்களை சீண்டுகின்றார்கள் என்ற ஒற்றை சிந்தனை கண்ணை மறைக்க கிளம்புவார்கள் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் நடித்த ஜோத்பாய் எனும் படம் […]

ஶ்ரீ வித்யா : அழகிய ராகம்.. அதிசய ராகம்… ஆனந்த ராகம் ….

உண்மையில் உலகெல்லாம் பெரும் ரசிகர்களை ஶ்ரீவித்யா சம்பாதித்திருக்கின்றார் மலேசிய வானொலியில் அவரின் பாடல்கள் தொடர்ந்து வருகின்றன, அதுவும் அவரின் பிரத்யோக அடையாளமான ” சின்னதாயவள்..” எனும் பாட்டை கேட்கும் பொழுது மனம் கலங்கத்தான் செய்கின்றது “கற்பூர முல்லையொன்று கை வீசும் தென்றல் ஒன்று..” என அடுத்தபாடல் வரும்பொழுது கண்ணீர் துளிர்க்கத்தான் செய்கின்றது உலகெல்லாம் அவரை தமிழர்கள் நினைக்கத்தான் செய்கின்றார்கள், அவரின் முத்தாய்ப்பான பாடல்களை இசைக்கவிட்டு அந்த நினைவில் இருந்து வெளிவராமல் பார்த்துகொள்கின்றார்கள் அந்த கண்ணதாசன் நிச்சயம் தெய்வீக […]

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது ..

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது வாழ்வின் மிக மிக கொடுமையான தருணம் என்ன செய்வது? இவ்வுலகில் சில மதங்கள் இருப்பதுதான் காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இன்னும் சில மதங்கள் அவசியம் நாம் பல மதம் பரப்ப முடியாது, ஒரே ஒரு மதம் மட்டும் தொடங்கி வருங்கால சந்ததி நம்மை வாழ்த்தும்படி செய்துவிடலாம் விரைவில் குஷ்பூ மதம் தொடங்கி, “குஷ்பூ அவதார திருவிழா”, “குஷ்பூ தமிழகம் வந்த விழா” என சில பண்டிகைகளை வருங்காலம் கொண்டாட […]

ஶ்ரீவித்யா இறந்த நாள் இதே அக்டோபர் 19

தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள் அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும் சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் பேசியவர் அந்த […]

நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான்

Actress Khushboo Talks About Victory | Magudam Awards | News18 Tamil Nadu   நியூஸ் 18, பெண்களில் சாதித்தோரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றது. ஜெயா செத்துவிட்டதாலும் சசிகலா சிறையில் இருப்பதாலும் அவரை அழைக்கவில்லை இன்னும் மெடிக்கிள் மிராக்கிளாக விளங்கும் உஷா ராஜேந்தரையும் அழைக்கவில்லை இதுதவிர மற்ற சாதனை பெண்களை அழைத்திருக்கின்றார்கள், அதில் தலைவி தவிர்க்க முடியாதவர் என்பதால் அவரும் கவுரவிக்கபட்டிருக்கின்றார் நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான் தன் நெடிய போராட்டத்தை சில நொடிகளில் […]

தீராத விளையாட்டு பிள்ளை ஹாலிவுட் ஹார்வி வெய்ன்ஸ்டீன்

இந்த பாவனா விவகாரம் கேரளாவினை புரட்டிவிட்டு தமிழகத்தில் லேசான புயலாக கடந்தது நினைவிருக்கலாம் பாவனா வாய் திறந்தபின் ஆளாளுக்கு என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என தொடங்கினார்கள், இப்பொழுது கூட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்னமோ சொல்லியிருந்தார் இந்த என்னை கையை பிடித்து இழுத்தார்கள் எனும் புயல் இப்பொழுது மையம் கொண்டிருக்கும் இடம் ஹாலிவுட் அங்கும் ஒரு தயாரிப்பாளர் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்திருக்கின்றார், நெற்றிகண் ரஜினியாக, மன்மத லீலை கமலஹாசனாக ஆடி தீர்த்திருக்கின்றார் அவர் பெயர் […]

என்ன பெரிய தீப ஒளி பண்டிகை?

என்ன பெரிய தீப ஒளி பண்டிகை? கோடி தீபம் எரிந்தாலும் இந்த முகத்தின் ஒளி வருமா? வரவே வராது ஆக தீபாவளி கொண்டாடும் இந்தியாவின் ஒளியும் அழகும் மிகுந்த ஒரே தீபம் இந்த முகம்.

மெர்சல் படம் வெளிவர என்ன சிக்கல்?

மெர்சல் படம் வெளிவர என்ன சிக்கல்? பழனிச்சாமியினை ஏன் விஜய் சந்தித்தார் : பரபரப்பு செய்திகள் இதில் என்ன பரபரப்பு? விஷயம் இதுதான் பச்சை தமிழன் பழனிச்சாமி ஆள, அவருக்கு உதவியாக படுபயங்கர பச்சை தமிழன் பன்னீர் துணைமுதல்வராக ஆண்டுகொண்டிருக்க‌.. இவர் “ஆளப்போறான் தமிழ்ன்ன்னு” ஆடிகொண்டிருந்தால் பழனிச்சாமிக்கு கோபம் வராமல் என்ன வரும்? பின் படம் எப்படி வரும்? விஜயிடம் பழனிச்சாமி என்ன கேட்டிருப்பார்? “ஏம்பா ஆளபோறான் தமிழன்னா?, ஆண்டுகொண்டிருக்கும் நான் தமிழன் இல்லையா? பன்னீர் இல்லையா? […]