பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கருப்பு வெள்ளையிலும் இவரைக் காண கண்கோடி வேண்டும்

கருப்பு வெள்ளை காலத்தில் தலைவி நடிக்க வந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார். பத்மினி, சரோஜா தேவி, பானுமதி , தேவிகா என யாரும் வந்திருக்க முடியாது. அன்றே பெரும் புகழை ஈட்டி, ராமசந்திரனை எல்லாம் விரட்டி அன்றே அரியாசனம் ஏறியிருப்பார். ஆனால் காலம் பிந்தி விட்டது கருப்பு வெள்ளையிலும் அவரை காண கண்கோடி வேண்டும் “கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே”  

திரையரங்க உரிமையாளருக்கு கட்டுபடி ஆகவில்லையாம்…

திரையரங்க உரிமையாளருக்கு கட்டுபடி ஆகவில்லையாம், ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்டால் இப்படித்தான் சொல்கின்றார்கள். “ஏன் கட்டுபடி ஆகவில்லை வரி கட்டவேண்டும், அதுதான் சிக்கல். சரி அதுபோக என்ன சிக்கல்? படபெட்டிக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கின்றது, அதனால் வரி கட்ட மாட்டோம். எம்படம் என் உரிமை. படபெட்டிக்கு ஏன் அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கின்றது? தயாரிப்பாளர் வட்டிக்கு எல்லாம் வாங்கி படமெடுப்பார், வட்டி என்ன தெரியுமா? ஐயோ பாவம். வட்டிக்கு வாங்கி படமெடுக்க என்ன அவசியம்? நடிகர் […]

தியேட்டர் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம்

திரையுலகம் என மொத்தமாக சொல்லிவிட்டாலும் ஏகபட்ட சங்கங்கள் உண்டு, அவர்களுக்குள் கும்மாங்குத்தும் உண்டு அப்படி இப்பொழுது தியேட்டர் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்கின்றதாம் அவர்களுக்கு வரி கட்டி முடியவில்லையாம், மிகுந்த சிரமபடுகின்றார்களாம் அதனால் வேலை நிறுத்தம் செய்கின்றார்களாம் அதாவது தொழில் நடத்த முடியவில்லை என நிரந்தரமாக மூடவில்லையாம், மூடி எதிர்ப்பை மட்டும் காட்டிகொண்டிருக்கின்றார்களாம் நஷ்டம் என்றால் மொத்தமாக மூடிவிட்டு செல்லலாம் அல்லவா? அப்படி நிரந்தரமாக மூடட்டும். நாட்டில் என்ன குறைந்துவிடும்? அரசு இயங்காதா? சூரியன் உதிக்காதா? […]

கனிகளிலே அவள் மாங்கனி மலர்களிலே அவள் மல்லிகை…

தனக்கு மிக பிடித்த படம் இதுவென தலைவி இன்று காலை 12.29 மணிக்கு அறிவித்துவிட்டார் இனி இப்படம் சங்கத்து முத்திரையாக அறிவிக்கபடுகின்றது, ரசிக கண்மணிகள் வீட்டை எல்லாம் அலங்கரிக்க போகும் படமிது. ரவிவர்மன் வரைந்த ஓவியத்தின் சாயலில் இதனை படமெடுத்தார்களாம், ரவி வர்மன் இவ்வளவு அழகான ஓவியத்தை வரைய முடியாமல் ஏதோ வரைந்திருக்கின்றான் ஆக ரவிவர்மனாலும் வரைய முடியாத பெரும் அழகு பெட்டகம் குஷ்பூ என வரலாறு குறித்துகொள்கின்றது. சங்கம் இதனை எண்ணி பெரு மகிழ்ச்சி கொள்கின்றது. […]

மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை

ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை சொல்லிகொண்டிருந்தார், நிகழ்ச்சி முடியும் பொழுது அறிவுரை பெற்றோருக்கு சென்றது “பெற்றோர்களே, உங்க பையன் ஒரு பெண்ணை மனமார நினைத்தால் அவளுக்கே கட்டிவைத்துவிடுங்கள் இன்னொரு பெண்ணை கட்டிவைத்தால் அவன் அவளோடு வாழமாட்டான் (சொல்லிவிட்டு முறைக்கின்றார்) அந்த பெண்ணும் மகிழ்ச்சியாக வாழமாட்டாள், இப்படி இருவர் வாழ்வும் பாழாகும் இதனை காணும் உங்கள் மனமும் நொந்து போகும். உங்கள் வறட்டு கவுரத்திற்காக பலபேர் வாழ்வை கெடுக்காதீர்கள். மகன் / மகள் விரும்பியது யாராயினும் […]

சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி

குஷ்பூ காங்கிரசை விட்டு போகின்றாராமே அப்படியா? என பலர் கேட்கின்றார்கள் சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி அல்லது அசோகவனம் என்பார்கள். எந்த கட்சியில் இருந்தால் என்ன? சொந்த கட்சி கண்டால்தான் என்ன? பிரச்சினையே இல்லை. சங்கம் அதனை முழுமனதோடு ஆதரிக்கும், அதில் சந்தேகமே இல்லை ஏ காவி பயங்கரவாதமே இந்தியாவின் ஒரு தாஜ்மகாலை நீங்கள் மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மகாலை என்ன செய்துவிட முடியும்? இந்த “தமிழகத்து நடமாடும் தாஜ்மஹால்” ஆக்ராவின் ஆயிரம் தாஜ்மஹாலுக்கு […]

ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2-வில் நடிப்பது உறுதியாகிவிட்டது : செய்தி இம்முறை ஆர்.எஸ்.எஸ் வீர் சாவர்க்கர் வேடத்தில் கமல் நடிக்கலாம், நடப்புகளை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது. சாவர்கரும் சுதந்திர போராளிதான், வெள்ளையன் கப்பலில் சிறு ஓட்டை வழியாக தப்பி கடலில் குதித்த சாகசம் எல்லாம் அவருக்கு உண்டு பின்பு அந்தமான் சிறையில்தான் பாதை மாறி சிந்திக்க தொடங்கிவிட்டார். காந்தி கொள்கை ஹேராம், நேதாஜியின் இந்தியன் தாத்தா வரிசையில் இப்பொழுது அரை டவுசருடன் சாவர்க்கர் கெட்டப்பில் கமல் […]

அதுதான் சிவாஜியின் வெற்றி

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன் நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் […]

தன்மான சிங்கம் டி.ஆர்

ஒருவன் வீட்டில் ஏதும் பேசமுடியா நிலையில், பேசினால் அடிவிழுமோ எனும் நிலையில் வெளியிடத்தில் பொங்கி தீர்ப்பான் என்பது உளவியல். அதற்கும் கீழே சொல்லபடும் விஷயத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக நினைத்துவிட கூடாது. மேல் சொல்லபட்டது ஒரு தத்துவம். சம்பவம் என்னவென்றால், டி.ஆர் ஒரு சினிமா விழாவிற்கு சென்றிருகின்றார், மேடையில் அமர்ந்திருக்கின்றார். அங்கு ஆளாளுக்கு பேசியிருக்கின்றார்கள். படத்தின் நாயகி தன்ஷிகாவும் பேசியின்றார். பலர் பேசும்பொழுது தன்ஷிகாவினை கபாலி நாயகி என சொல்லிகொண்டே இருந்திருக்கின்றார்கள், டி.ஆருக்கு அதிலே கடுப்பு போல‌ அடுத்து […]

குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி!

குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி!   மிக பெரும் சொதப்பல்களை செய்து வந்த விகடன் பத்திரிகை, தலைவி குஷ்பூ பற்றி பிறந்தநாள் வாழ்த்து கட்டுரை எழுதி தன் களங்கத்தை தீர்த்துகொண்டது. சங்கத்தின் சார்பாக விகடனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் அந்த கட்டுரையாளர் சுகுணா திவாகரன் என்பவர், நாம் குஷ்பூ நமஹ தொடரில் சொல்லிபடி உண்மையினை எழுதியிருக்கின்றார், மறுபடியும் வாழ்த்துக்கள் ஆனால் குஷ்பூ சிறந்த நடிகையல்ல என்றொரு வரியினை சேர்த்திருக்கின்றார், இதற்கு சங்கம் மென்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது. அவரை கடத்தி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications