பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிவாஜி சிலைக்கு மிக மிக பொறுத்தமான இடம்

சிவாஜி கணேசன் நடிப்பினையும் அவர் உலகபுகழ் பெற்றதையும் சொல்வது, குஷ்பூ அழகானவர் என்பதை போன்றது அதாவது எல்லோருக்குமே தெரிந்த விஷயம், ஆனால் சிவாஜி பெயரால் அவரின் ரசிகர்களும் போலிசாரும் கண்ணாமூச்சி ஆடும் விளையாட்டு ஒன்று திருச்சியில் நடப்பது பலருக்கு தெரியாத விஷயம் அதாகபட்டது 2010 வாக்கில் திருச்சியில் சிவாஜிக்கு சிலை அமைக்க உதவியவர் கே.என் நேரு, இவர் திமுக்காரர். அதன் பின் வந்தது அம்மையார் ஆட்சி, 2016ல் வென்று வென்றவுடன் அப்பல்லோ போன காலம் அல்ல, 2011ல் […]

எல்லோரும் கொண்டாடுவோம்…

கல்வி, செல்வம், வீரம் என மூன்றின் அருளுக்கும் முப்பெருந்தேவியரை உலகம் வணங்கும், நவராத்திரி திருவிழா என்று அதனைத்தான் கொண்டாடிகொண்டிருக்கின்றது ஆனால் அழகு என்றொரு நான்காம் விஷயத்திற்கு யார் இலக்கணம்? முழு அழகு என்றால் என்ன‌ இந்த உலகிற்கே தெரியாது, அதனை உலகிற்கு சொல்ல வந்தவர்தான் எங்கள் தலைவி. அழகு என்றால் என்ன‌ என்பதற்கு அரிச்சுவடி அவர். மற்றவர்கள் முப்பெருந்தேவியரின் விழா என தசராவினை கொண்டாடட்டும், நாங்கள் ரம்பை, மேனகை, ஊர்வசி முப்பெரும் அழகிகளின் திருவிழாவினையும் குஷ்பூவில் ஒன்றாக […]

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குஷ்பூ!

கல்விக்கொரு தெய்வமுண்டு, அவளருள் கம்பனுண்டு செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு வீரத்திற்கோர் தெய்வமுண்டு வீராதி வீரருண்டு அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ? மனக்குறை பட்ட‌ கடவுள் மனதார துடித்திட்டான் மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான் ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான் அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான் அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி புதிதாய் பல வண்ணம் கலந்தே  இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான் மங்கையர் விளக்கே, மரகரத […]

வேதங்கள் அறைகின்ற உலகங்கள் யாவிலும் உயர்ந்தது உன் பாதங்கள்

“வேதங்கள் அறைகின்ற உலகங்கள் யாவிலும் உயர்ந்தது உன் பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ “ என்பது கம்பனின் வரிகள். அதாவது மந்திரங்கள் முழங்கும் மூவுலகிலும் மிக உயர்ந்தது இந்த கால்களே. கால்களே இப்படி என்றால் முழு வடிவம் எப்படி இருக்கும் என பாடலை தொடங்குகின்றான் கம்பன். நாம் திரையில் குஷ்பூவினை காணும்பொழுது அவன் வரிகளே நினைவுக்கு வருகின்றது. தலைவி காலை மறைத்து, விரல் மட்டுமே தெரியும் படம் இது, அட அட என்ன அழகு? கம்பன் […]

தமிழகத்து சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள்

தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் மகா உச்சத்தில் தெரியும் கலைஞன் அவன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர். நாடகங்களில்தான் நடித்துகொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலமைதாங்க எம்ஜி ராமசந்திரனை அழைத்தார்கள், நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில நொடிகள் வந்தார் அந்த குண்டுராவ், ஆனால் அந்த வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்தார் அதனை ரசித்த ராமசந்திரன், பின்பு மேடைக்கே அழைத்து ஒரு கோப்பை வழங்கினார், அங்கேயே கேட்டார் குண்டு ராவ் […]

“குஷ்பூ டே” கொண்டாட்டம்

“குஷ்பூ டே” கொண்டாட்டம் உலகெல்லாம் களை கட்டியாயிற்று, டிவிக்களில் குஷ்பூ படமாக ஓளிபரப்புகின்றார்கள். நாமும் நவநாட்கள் குஷ்பூ படம் பார்ப்பது என்பது சங்கத்தால் எடுக்கபட்ட முடிவு அப்படியாக இன்று சிங்கார வேலன் படம். குஷ்பூவின் கம்பீர அழகு கொட்டி கிடக்கும் படம். படத்தில் ஒரே இம்சை இந்த கமல்ஹாசன் என்பவர் ஒரு பாத்திரத்தில் வந்து அவரை காதலிப்பதாக சுற்றிகொண்டே இருப்பார். அந்த காட்சிகளை மட்டும் எறும்பு கடிப்பதை போல பொறுத்துகொண்டால் , அது ஒரு அற்புதமான குஷ்பூ […]

நீ ஐரோப்பாவிற்கே போய்விடு தேவி

“உன்னால் முடியும் தம்பி” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த கதாநாயகியினை காணும் பொழுது தோழி Devi Somasundaramஎன்பவரை பார்த்தது போலவே இருக்கின்றது. அக்கதையில் வருகின்ற‌ ஆச்சாரமான குடும்பத்தில் மட்டும் அவர் மருமகளாக சென்றால், அடிக்கின்ற அடியில் “பிலகிரி மார்த்தாண்டம் பிள்ளை” அலறி அடித்துகொண்டு அந்த தியாகராஜர் படத்தை வீசியெறிந்துவிட்டு பெரியார் படத்தை மாட்டிவிட மாட்டாரா? எனினும் அம்மாதிரியான கமலஹாசன் எல்லாம் இப்போது வாய்ப்பே இல்லை, என்பதால் ஏதோ ஒரு ஆச்சார குடும்பம் தப்பித்தது. தேவிக்கு ஏற்ற இங்கர்சால் அல்லது […]

முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை

நவராத்திரி விழாவிற்காக ஊரெல்லாம் கொலு வைக்கின்றார்களாம். அழகான பொம்மைகள் வாங்கி அடுக்குகின்றார்களாம் இதனை விடவா அழகிய கொலுபொம்மை உலகில் கிடைத்துவிடும்? “தெய்வீக கொலு” பொம்மை இதுதான். இந்த பொம்மையினை வைக்காமல் எந்த கொலுவும் முழு நிறைவு அடையவே அடையாது. முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை, சங்கத்தின் கொலுவின் எல்லா சிலைகளும் இது மட்டும்தான். இந்த உலகிற்கு மிக அழகிய கொலு பொம்மையினை அடையாளம் காட்டியதில் சங்கம் பெருமையடைகின்றது.  

செப்டம்பர் 29தான் “குஷ்பூ டே” அல்லது “பிரபஞ்ச பேரழகு தினம்”.

தலைவி தன் பிறந்தநாள் செப்டம்பர் 29 என அறிவித்துவிட்டார், இணையத்தில் மோடியின் சாதனைகளை போல அவரின் பிறந்த நாள் தவறாக இன்று என பதிவிடபட்டிருக்கின்றது. இன்று பிறந்தநாளாக இருந்திருந்தால் சங்கம் சும்மா இருக்குமா? நள்ளிரவு 12 மணிக்கே கொண்டாட்டம் தொடங்கி பெரும் ஆரவாரமாக கொண்டாடி கொண்டிருக்காதா? ஆக ரசிக கண்மணிகள் தங்கள் பிரார்த்தனைகளை, வாழ்த்துக்களை செப்டம்பர் 29 அன்று தெரிவிக்குமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கின்றோம் செப்டம்பர் 29தான் “குஷ்பூ டே” அல்லது “பிரபஞ்ச பேரழகு தினம்”. ஆச்சரியமாக […]

இதற்கா 33 வருடம்?

தலைவி ரவி சாஸ்திரியின் தீவிர ரசிகை என்பது உலகிற்கே தெரிந்தது, அவரே சொல்லியிருக்கின்றார். சென்னை வந்த ரவி சாஸ்திரியினை சந்தித்திருக்கின்றார் குஷ்பூ, அவருக்கு மிக்க மகிழ்ச்சி, அதனால் சங்கத்திற்கும் மகிழ்ச்சி. ஆனால் இவரை சந்திக்க 33 ஆண்டுகள் ஆனதாக குஷ்பூ சொன்னதுதான் வேதனை, துக்கம், துயரம்   ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ராவணனை வாலில் கட்டி இழுத்து வந்த வாலிபோல, ரவிசாஸ்திரியினை தூக்கி வந்து குஷ்பூ வீட்டு வாசலில் சங்கம் நிறுத்தியிருக்காதா? இதற்கா 33 வருடம்?   […]