பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேரளாவில் சன்னிலியோனை பார்க்க பெரும் கூட்டம்

சன்னிலியோனை பார்க்க பெரும் கூட்டம் கேரளாவில் திரண்டது, சன்னிக்கு இவ்வளவு ஆதரவா என மக்கள் வியப்பபு இதிலென்ன வியப்பு? ஷகிலாவே கேரளத்தை ஒரு காலத்தில் கலக்கிகொண்டிருந்தார். அப்படிபட்ட கேரளாவில் சன்னிக்கு ஆதரவு இல்லை என்றால்தான் ஆச்சரியம். ஷகிலாவினை கொண்டாடி தீர்த்த கேரளம் , வழக்கம் போல சன்னிக்கு சிகப்பு கம்பளம் விரித்திருக்கின்றது அவ்வளவுதான் விரைவில் ஷகிலாவும் சன்னியும் இணையும் மலையாள படங்கள் வரலாம் “இணைந்த கைகள் நாம் ஆனால் இருவருக்கேதான் எதிர்காலம்” என்ற டைட்டில் சாங் ஒலிக்க […]

அக்கட.. இக்கட.. எக்கட…

தெலுங்கில் திரைப்படமாகிறது பிரபாகரன் தலைமையிலான ஈழப்போர் அங்கிள் சைமன், உங்களுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது .. என்ன தைரியமிருந்தால் தமிழரை தமிழ்நாட்டில் ஒடுக்கிய தெலுங்கன், இலங்கையில் சிங்களனோடு சேர்ந்த தெலுங்கன் உங்கள் அண்ணன் கதையினை படமாக எடுப்பான்? திருப்பதிக்கு சிங்கள அதிபரை வரவேற்கும் தெலுங்கனுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்? ம்ம். உங்கள் வீர தமிழ் எளிய பிள்ளைகளை கூட்டிகொண்டு கிளம்புங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் இல்லையென்றால் கன்னடம் அணைகட்டலாம் : உச்ச நீதிமன்றம் யோசனை […]

பழையகாலத்து நடிகர் சன்முக சுந்தரம்

பழையகாலத்து நடிகர் அவர், கண்ணதாசனின் கறுப்புபணம் படத்திலே நடித்திருந்தவர் சன்முக சுந்தரம். அவரின் அக்கா சந்திரகாந்தாவும் பிரபல நடிகை, சிவாஜி கணேசனின் கர்ணன் படத்திலே சல்லியனாக நடித்திருந்தார், பாலசந்தரின் நிறைய படங்களில் நடித்திருந்தார் சுந்தரம். மிக அருமையான யதார்த்த நடிகர். இக்காலம் வரை நடித்துகொண்டுதான் இருந்தார். “வயசாயிடுச்சில்ல…” எனும் அவரின் பிரபலமான வார்த்தையுடன் அவரின் மரணத்தை நோக்க முடிகின்றது. நல்ல கலைஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவரின் முன்னாள் மனைவி ராம்பிரபாவும், நடிகர் சரத்பாபுவும் அவரின் அஞ்சலிக்கு வருவார்களா […]

குஷ்புவே நமஹ! :  6

  குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்!   எடப்பாடியும் பன்னீரும் என்ன ஆனால் என்ன? சீனா போர் முரசு கொட்டினால்தான் என்ன? வடகொரியா என்ன ஏவுகனை சோதனை செய்தால் நமக்கென்ன? நம் கடன் குஷ்பூ புகழ் பாடிகொண்டிருப்பதே, அதுவே நம் சுதர்மம். மணவாழ்வில் புகுந்த குஷ்பூவும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். கொங்குநாட்டு மருமகள் ஆகியிருந்தார். அவ்வகையில் ஜோதிகாவுக்கு குஷ்பூதான் சீனியர். முதல் குழந்தை பிறந்தபின் அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் “திருமணமான பெண்ணிடம் யாரும் சொத்து எவ்வளவு? வருமானம் எவ்வளவு? […]

தனுஷின் விஐபி 2 படம் ஊத்தி மூடிகொண்டது

தனுஷின் விஐபி 2 படம் ஊத்தி மூடிகொண்டது. முதல்பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கதை தொடர்பு இல்லாமல், அந்த பரபரப்பிலே படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தால் இப்படித்தான் முடியும். மருமகன் கப்பல் கவிழ்ந்துவிட்டது அவரின் மாமனாரும் “கபாலி” எனும் தோல்வி படத்தின் இரண்டாம் பாகத்தினை, இப்பொழுது “காலா” என எடுத்துகொண்டிருக்கின்றார். கொஞ்சம் சுதாரித்தால் மாமனார் தப்பலாம், இல்லாவிட்டால் நிச்சயம் மருமகன் வழிதான்

குஷ்புவே நமஹ ! : 5

 குஷ்பு இதயக்கனி ஆனது இப்படிதான் !   இந்த உலககில் எது நடந்தாலும், ஏன் அது அழிந்தால் கூட, நம் கடமையினை நாம் செய்து கொண்டே இருக்கவேண்டும்.. இந்த காலகட்டத்தில் தமிழில் குஷ்பூ நம்பர் 1 நடிகையாக இருந்தபொழுதிலும் மற்ற தென்னக மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்துகொண்டே இருந்தார். சுருக்கமாக சொன்னால் தென்னிந்திய சினிமா உலகின் ராணியாக அவர் முடிசூட்டபட்ட நேரம் அது. அந்த கிரீடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கின்றது. அவர் நடிக்க வந்த […]

சினி மினிகள்…

நான் போகும்பொழுது எதனையும் கொண்டு போகபோவது இல்லை : தனுஷ் பேட்டி ஆனால் மாமனார் போகும்பொழுது பாதி சொத்து இவருக்கு வரும், அதனை இவர் வேன்டாம் என்றேல்லாம் சொல்ல மாட்டார். புதுகட்சி தொடங்கும் பணியில் ரஜினி : செய்தி விரைவில் அவர் படம் ரிலீசாக போகின்றது என்பதுதான் அர்த்தம், வேறோன்றுமேயில்லை. வேலைக்காரன் படத்தில் சிவகார்திகேயனோடு நடிக்கின்றார் நயன் தாரா இவ்வளவுதான் நயனின் நிலை, அடுத்து பரோட்டா சூரியின் நாயகியாவார், அப்படி மலிந்துவிட்டது அவர் மார்க்கெட் ஆனால் 100 […]

மன்னாதி மன்னன்

மன்னாதி மன்னன் படம் ஓடிக்கொண்டிருக்கின்றது, நடன பந்தயம் நடக்கின்றது. பத்மினி ஆடுகின்றார், ராமசந்திரன் குதிக்கின்றார் பத்மினியின் நடனம் எவ்வளவு அழகு, எவ்வளவு நளினம்? எவ்வளவு அழகான முகபாவமும் அசைவுகளும். அருகே கழுத்து வெட்டபட்ட கோழிபோல ராமசந்திரன் குதிப்பதை காண சகிக்கவில்லை. பவர் ஸ்டாரெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. அந்த நடன இம்சையினை கூட பொறுக்கலாம், ஆனால் குடைராட்டினத்தில் சுற்றும் குழந்தை போல அந்த ராமசந்திரன் ஈஈஈஈஈஈ என இளித்துகொண்டே ஆடுவதைத்தான் சகிக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் ராமசந்திரன் வெற்றிபெற்றதாக […]

நடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா

நடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா, நெல்லையில் சிலை அமைக்கபடுகின்றது அஜித் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாம், அதனால் சிலையாம், தஞ்சையில் காவேரி காய்ந்து மக்கள் படாதபாடு படும்பொழுது இது மகா அவசியமா என யாரும் கேட்கவில்லை நெல்லையிலும் சிலையாம், அது வெண்ணிற ஆடை மூர்த்திசிலைபோல் இருக்கின்றது என விஜய் ரசிகர்கள் சொல்லிகொள்கின்றார்கள் (அப்படித்தான் இருக்கின்றது, ஷாலினி பார்த்துவிட்டாரா என்பது தெரியவில்லை, விஷயம் தெரிந்தால் அவர் விவாகரத்து வரை செல்ல வாய்பிருக்கின்றது) இனி விஜய்,தனுஷ் […]

குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான்

அலெக்ஸாண்டர் கதையின் அடுத்த பாகத்தை பலர் கேட்கின்றார்கள் குஷ்பூ தொடரை நீங்கள் படிக்காததால் , அந்த அலக்ஸாண்டர் என்ன ஆனால் என்ன? அவன் குதிரை செத்தால் என்ன? டேரியஸ் எங்கு ஓடினால் என்ன? போரஸ் எந்த யானைகாலில் மிதிபட்டால் எங்களுக்கு என்ன? குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான், இல்லாவிட்டால் அவனை அந்த கருப்பு குதிரையோடு விரட்டிவிடலாம்