பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ என்ன சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கின்றார் என்றால் , டிவிட்டர் அவரின் நேரத்தை விழுங்குகின்றதாம், அவர் வாசிப்பில் கவனம் செலுத்தபோகின்றாராம், இது தற்காலிகம் என சொல்லியிருக்கின்றார் அவர் இப்படி சொல்லியிருந்தாலும் கடந்த இரு நாட்களாக சுருதிஹாசனை போட்டு காய்ச்சிகொண்டிருந்தார், சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய காரணத்தை தவறாக ஸ்ருதி சொல்லிகொண்டிருக்க, குஷ்பூவிற்கு கோபம் வந்துவிட்டது, விளாசிவிட்டார் ஸ்ருதியும் என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றார் பதிலுக்கு பதில் பேசவேண்டியிருக்கும் என்பதால் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்க வெளியேறியிருக்கலாம் என […]

காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று?

காவிய தலைவன் படத்திற்கு விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி : இயக்குனர் வசந்தபாலன் உண்மையில் தமிழக அரசு இதனை தெரிந்து செய்ததா? தெரியாமல் செய்ததா என்று தெரியவில்லை, தெரியாமல் செய்திருந்தாலும் நல்ல விஷயம் தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டார்கள். அந்த காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று? சாட்சாத் அந்த ராமசந்திரனை பாய்ஸ் நாடக கம்பெனி ஆகட்டும், இன்னும் சில நாடக கம்பெனிகளாகட்டும், நாடக நடிகரான ராமசந்திரன் அந்த ராஜபாட்டை வேடத்திற்கு ஏங்கியிருக்கின்றார் அது கிடைக்காமல் துக்கடா வேடத்தில் எல்லாம் நடித்திருக்கின்றார், […]

குஷ்பூ பெயர் ஒலித்துகொண்டேதான் இருக்கும்

படிக்கத் தவராதீர்கள்…. ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை, அலை அடித்துகொண்டே தான் இருக்கும், குஷ்பூ பெயர் ஒலித்துகொண்டேதான் இருக்கும் குஷ்புவே நமஹ 2 ஸ்டான்லி ராஜன் ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு – New Tamil Cinema வருஷம் 16 படம் அந்த காலத்தில் பிய்த்துகொண்டு ஓடியது. பெரு வெற்றிபெற்று சாதனை படைத்தது அந்த படத்தின் நாயகன் கார்த்திக். இன்று அவர் காணாமல் போனாலும்,… NEWTAMILCINEMA.COM படிக்கத் தவராதீர்கள்…        

ரகுமான் பற்றிய பதிவில் நடந்தது இதுதான்

ரகுமான் பற்றிய பதிவில் நடந்தது இதுதான், உள்ளூர் பத்திரிகைகள் பொங்கிய அடிப்படையில் எழுதினோம், பலர் பொங்கினார்கள், சரி லண்டன் நண்பர்களிடம் கேட்டுவிட்டு சீர்படுத்தலாம் என்றால் மணி இரவு 11 ஆகியிருந்தது, சரி சனியனை காலையில் பார்க்கலாம் என்றே எடுத்துவிட்டோம் லண்டன்வாசிகள் சொன்னது இதுதான், இது வெள்ளையன் நகரம் , இந்தியர்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகம், தமிழரில் ஈழதமிழர் எண்ணிக்கை அதிகம், இந்திய தமிழர்கள் குறைவு ரகுமானின் 25ம் ஆண்டுவிழா என்றுதான் முதலில் அறிவித்தார்கள், ரகுமான் இந்திய […]

புருஷோத்தமனின் புல்லாங்குழல் அமைதியான நாள் இன்று

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர். தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் சுருக்கமாக எம்.எஸ் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்து, 7 வயதிலே திருவனந்தபுரம் தெருக்களில் போராடி, ஏகபட்ட அவமானங்களை சந்தித்து, நாடக கம்பெனி ஆபீஸ் பையனாக வாழ்க்கை தொடங்கி, இசைகற்று பின் சக்கரவர்த்தியாக முடிந்துவிட்ட வரலாறு அவர். சுப்புராமன் குழுவில் தொடங்கி, பின் தன் ஆர்மோனியத்தை ராமமூர்த்தியின் […]

அற்புத கவிஞனுக்கு குஷ்பு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும் எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம் எத்தனையோ முறை தேசியவிருதினை வென்றிருக்கும் அற்புத கவிஞன், கற்பக கவிஞன் அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம். அதற்கு பெரும் காரணமும் இருக்கின்றது அழியா பாடல்கள் , அற்புதமான கிராமத்து கதைகளை அவர் எழுதியதை விட நமக்கெல்லாம் பெரும் […]

திலீப் எனும் மலையாள தாவுத் இப்ராஹிம்

பாவனா விவகாரத்தில் திலீப் எனும் மலையாள தாவுத் இப்ராஹிம் கைது செய்யபட்டிருப்பது ஏராளமான கேள்விகளை எழுப்பிவிட்டது, இனி பிரணாயி விஜயன் கூட சிக்கலில் மாட்டலாம் அதாகபட்டது கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்களே தவிர, அரசியல்வாதிகள் துணையுடன் ரியல் எஸ்டேட் முதல் எல்லா தொழிலையும் செய்வார்கள், சமீபத்திய சரிதா நாயர் வரை ஏராள உதாரணம் உண்டு அப்படி திலீப்பும் அவர் முன்னாள் மனைவி மஞ்சுவாரியார், பாவனா எல்லோரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் செய்து ஏதோ சர்ச்சை வந்திருக்கின்றது, இதில் […]

முத்துகுமார் பதிவினை பிரசுரித்தவர்களுக்கு நன்றி

நமது பதிவுகள் பலரால் கவனிக்கபடுகின்றது போலும், முத்துகுமார் பதிவினை ஒரு தளத்தில் ஏற்றியிருக்கின்றார்கள் அவர்கள் யாரென தெரியவில்லை, நம்மிடம் கேட்கவுமில்லை, நம் பெயரை போட்டிருக்கின்றார்கள் நன்றி இப்பொழுது நமக்கு எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், முத்துகுமாரின் பதிவினை பிரசுரித்தவர்கள் ஏன் குஷ்பூ பற்றிய பதிவுகளை பதியவில்லை இதுபற்றி சங்கத்தின் பொதுசெயலாளர் Sadhu Sadhath அவரிடம் கேட்டபொழுது, இன்னும் அதிகமாக நிறைய அதிகமான குஷ்பூ பதிவுகள் வரவேண்டும் என்ற அபிப்பிராயம் சொன்னார் அதனை செயல் தலைவரகள் Surin Vijay, Venkatesh Mothilal ஆதரித்தனர் அதுவும் பரீசிலைக்கு […]

குஷ்புவே நமஹ ! : 1

அன்றைய பாம்பேயில் செப்டம்பர் 29, 1970ம் நாளன்று அந்த குழந்தை சாதாரண குழந்தையாகத்தான் பிறந்தது, பின்னொரு நாளில் தமிழக பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகும் என யாருக்கும் தெரியாது. மூன்று சகோதரர்களுடன் அது தவழ்ந்து வளர்ந்தது. நஜ்மா கான் எனும் தனித்து வாழ்ந்த தாய் அந்த 4 குழந்தைகளையும் வளர்த்து வந்தார் நக்கத் கான் எனும் பெயரோடு வளர்ந்த அந்த குழந்தை படிப்பில் கெட்டிதான். அப்பொழுதே ஆங்கிலம் அதன் நுனிநாக்கில் விளையாடியது. நாக்கில் ஆங்கிலம் ஆடியதை விட அந்த […]