பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தாடி பாலாஜி நித்யா ஜோடி

இரு நாட்களாக ஒரு சங்கதி மீடியாவில் ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது உலக புரட்டிய புரட்சியாளரும் , புதிய இந்தியாவினை உருவாக்கி ஒளிகாட்டியவருமான ஒருவரின் செய்தி அது அந்த மாபெரும் தலைவன் , அகில உலகத்தை ஆட்டிய இந்திய பெருமகன் தன் காதல் மனைவியினை நாட்டு நலனுக்காகவும், தான் கொண்ட கொள்கைக்காகவும் பிரிய போகின்றானாம் அவனது உன்னத லட்சிய போராட்ட வாழ்வில், பல்லாயிரம் மக்களுக்கு அவன் வழிகாட்டும் மாபெரும் பணியில் அவன் இருக்க, அவனின் அருமை மனைவி அதாவது கார்ல்மார்க்ஸின் […]

சன்னிலியோன் கவலை

எனக்கு யாருடைய புரு‌ஷனும் தேவை இல்லை ஆனாலும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை : சன்னிலியோன் கவலை இவருக்கு அவரின் கணவனே தேவையில்லை, இதில் அடுத்தவள் கணவன் எதற்கு? அம்மணிக்கு இன்னும் இந்திய மனைவிகள் பற்றி தெரியாது போல, முன்பின் தெரியாதவளை நோக்கினாலே கணவன் விழியினை தோண்டிவிடும் மனைவியர் உள்ள நாடு, மணாளனின் மனமகிழ்வே முக்கியம் என்ற கண்ணகி, நளாயினி எல்லாம் புராணத்தோடு சரி, நிஜத்தில் சாத்தியமே இல்லை புராணத்தில் வேண்டுமானால் சீதை தீகுளித்திருக்கலாம், […]

“நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள்” : ரஞ்சித்

“நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள், இது மும்பையில் நடக்கும் நெல்லை வட்டார கதை படம் என்பதால் காலா என பெயரிட்டோம்” : ரஞ்சித் ஏம்பா நெல்லை மக்கா, கருப்ப சாமி, சுடலைமாடன், இசக்கி தவிர காலாசாமி எங்காவது அந்த பக்கம் இருக்கின்றதா? காலா சாமி கொடை என எங்காவது பார்த்தோமா? எங்காவது “டேய் நான் காலா சாமிடா.. கரும்பு எங்கடா” என சாமி ஆடியிருக்கின்றதா? நெல்லையில் சுடலைதான் பிரதானம், அடுத்து இசக்கியும் கருப்பசாமியும், காலா […]

தொடரும் காலா இம்சைகள்…

நமக்கு என்ன ராசியோ தெரியவில்லை, ஒரு விஷயம் கண்ணில் பட்டால் அதுவே தொடர்ந்து பட்டு தொலையும், அப்படி இப்பொழுது இந்த காலா எனும் இம்சை காலா கருப்பு தமிழர்களின் ஒடுக்குமுறையினை பேசுகின்றதா என கிளம்பிவிட்டார்கள், காரணம் ரஞ்சித் கபாலி வரும்பொழுது உளறிய உளறல் அப்படி “‘மலேசியர்கள் சிவப்பானவர்கள், சீனர்களும் சிவப்பானவர்கள், அங்கே தமிழர்கள் மட்டும் தான் கருப்பாய் இருப்பார்கள். அங்கே கருப்பாய் இருப்பதே பிரச்சையனையாகத் தான் இருக்கிறது. சிவப்பாய் இருப்பவர்கள் பார்வையில் தமிழர்கள் எப்படி பார்க்கப்பட்டிருப்பார்கள் என்பதை […]

காலா ரஜினி யாருக்கு வேண்டும்?

காலா ரஜினி யாருக்கு வேண்டும்?, இந்த படத்தில் குஷ்பூ நடிப்பதாக அறிவிப்பு இருந்தது, படத்தின் பெரும் எதிர்பார்ப்பு அதுதான், உலகம் அதற்குத்தான் காத்துகொண்டிருந்தது, அவரின் கோடிகணக்கான ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தது அதற்காகத்தான்… ஆனால் குஷ்பூவின் படம் எங்கே? அதுதான் முதலில் வந்திருக்க வேண்டும், அதனை கூட மன்னித்துவிட்டோம். இனி பொறுப்பதில்லை… உடனடியாக குஷ்பூ இருக்கும் காலா படத்தை வெளியிடும்படியாக சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி , வற்புறுத்தி கேட்டு கொள்கின்றோம்.,    

காலா : BR என்ற வார்த்தை யாரை குறிப்பது?

இந்த படத்தை பார்த்தவுடன் யாருக்கு புரியாது? BR என்ற வார்த்தை யாரை குறிப்பது? இந்த 1956 வருடம் யார் இறந்த வருடம்? மிக சிறு குழந்தைக்கும் புரியும் இந்த குறியீட்டை டைரக்டர் மிக தந்திரமாக வைத்திருக்கின்றாராமாம். இதற்கு ஏன் காலா, கையா என பெயர் வைக்க வேண்டும் , நேரடியாக கபாலி II என சொல்லிவிட்டு சென்றால் என்ன? இதுவும் அந்த வகை படமே, ரஜினி இப்படி மாட்டிகொள்பவர் அல்ல, ரஜினியின் ஸ்பெஷாலிட்டியே ஜாதியினை கடந்தவர் என்பது, […]

காலா எனும் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு

காலா எனும் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு கரிகாலன் என்பதை சுருக்கி காலா என வைத்தாயிற்றாம், என்னது கரிகாலனா? போதாதா , இப்பொழுது பொங்குவார்கள் பாருங்கள், கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை காய்ந்துகிடக்கும்பொழுது கன்னடன் படத்துக்கு கரிகாலன் பெயரா? அது கூட பரவாயில்லை, எதையுமே செய்யதெரியாத பிரபாகரன் ஒருமுறை வெடிகுண்டு செய்யும்பொழுது அது காலில் விழுந்து கால் கொஞ்சம் மூளை போலவே கருகிற்றாம், உடனிருந்த அலப்பறைகள் நீ “இரண்டாம் கரிகாலன்” என ஏற்றிவிட்டுருக்கின்றன‌ பிரபாகரனுக்கும் அப்படி ஒரு […]

கண்ணு படப் போகுதம்மா குஷ்பூ ….

சங்க் மித்ரா படத்திற்காக கேன்ஸ் சென்ற குஷ்பூ மீது ஜேம்ஸ் கேமரூன் முதல் ஏஞ்சலினா ஜூலிவரை நிறைய கொள்ளிகண்கள் பட்டிருக்கும் அதனால் அந்த கண் திருஷ்டியினை போக்க என்ன செய்யலாம் என சங்கத்தின் சார்பாக ஆலோசிக்கபட்டு வருகின்றது மண்சோறு உண்ண Venkatesh Mothilal , தீக்குழி இறங்க Sadhu Sadhathரெடி, இன்னும் நிறையபேர் வரிசையில் நிற்கின்றார்கள் எல்லோருக்கும் உரிய வாய்ப்பு ஒதுக்கபடும்

அக்டோபர் 6ல் நடிகை சமந்தா திருமணம்

https://youtu.be/85NK119gUpY நிச்சயதார்த்த புகைப்பட ஆல்பம் அக்டோபர் 6ல் நடிகை சமந்தா திருமணம் நேற்றுவந்த நடிகைக்கெல்லாம் திருமணம் நடக்கும்பொழுது என்றோ வந்துவிட்ட நயனுக்கு எப்பொழுது திருமணம்? வடிவேலு சொல்வது போலத்தான் இருக்கின்றது , “எப்பவோ கல்யாணம் ஆகவேண்டியவ, இன்னமும் கோலம் போட்டுட்டே இருக்கா” நயன் திருமணத்திற்கு பின்னர்தான் திருமணம் செய்வேன் என தொடைதட்டி சவால்விட்ட Babu Rao இனி நித்திய சன்னியாசிதான் போலிருக்கின்றது..  

கேன்ஸ் திரைப்பட விழாவில் குஷ்பு

வழக்கமாக கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்திய அழகின் பிரதியாக ஐஸ்வர்யா ராய்தான் அடையாளம் காணப்படுவார், இம்முறை சகலரின் கண்களும் குஷ்பூவினை நோக்கியிருக்கின்றன, அந்த அரங்கில் அப்படியொரு பெண்ணை முன்பின் பார்த்திராத வெள்ளையர்கள் வாயடைத்து நிற்கும் காட்சி படத்தில் தெரிகின்றது இந்தபெண் இருக்கும்பொழுது இந்தியர் ஏன் ஐஸ்வர்யா ராயினை கொண்டாடினார்கள் என்ற குழப்பம் எல்லார் முகத்திலும் தெரிகின்றது உலக திரைப்பட அரங்கில், தமிழ்திரையின் ஒப்பற்ற அடையாளம் அமர்ந்திருந்த தருணம், ஒரு அழகான‌ ஓவியம் தன்னை தானே புகைபடம் எடுக்க்கும் […]