பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக மயிலுக்கு ஆழ்ந்த அஞ்சலி

ஒரு சில நடிகர்களே விவரம் தெரிந்த வயதிலிருந்து கடைசி மூச்சு வரை நடிகர்களாகவே இருந்தார்கள். அவ்விஷயத்தில் எம்.ஆர் ராதா முன்னோடி, கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு இருந்தது, அவரே கெடுத்துகொண்டார். நடிகைகளில் அப்படி வாழ்ந்த ஒரே நடிகை ஶ்ரீதேவி, அதில் சந்தேமே இல்லை, கிட்டதட்ட 4 வயதில் நடிக்க வந்தவர். மிக சிறியவயதிலே வந்த நடிகை அவர்தான். மழலை நட்சத்திரம் , குழந்தை நட்சட்திரம் போன்ற நடிகையாக இருந்தேதான் அவரால் படிக்கவும் முடிந்தது , அதுவும் அதிகமில்லை அவரின் […]

ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம் இன்று…

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டனின் ராணுவம், பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. […]

எம்.ஆர் ராதாவின் பிறந்த நாளில் மனமார்ந்த அறிவார்ந்த அஞ்சலி

ஒரு நடிகனுக்கான எல்லை எது? அவன் எப்படி இருக்க வேண்டும்? சமூகம் உற்று நோக்கும் ஒரு நடிகன் மிக உன்னதமான அரசியல் பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும் அதே நேரம் சமூக பொறுப்பும் இச்சமூகத்தை பாதிக்கும் விஷயங்களை தைரியமாக சொல்லும் அசாத்திய குணமும் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் மிக சிலபேர் சார்லி சாப்ளின் போன்ற ஒரு கை விரல்விட்டு எண்ண கூடிய அந்த வரிசையில் வருபவரே தமிழகம் கண்ட அசாத்திய நடிகன் எம்.ஆர் […]

மலேசியா வாசுதேவன் பிறந்த நாள்

தமிழ் திரையுலகில் சீர்காழி, சவுந்தரராஜன் வரிசையில் ஒரு கணீர் குரல் பாடகர் உண்டு, மகா அற்புதமான பாடகர் அவர். தமிழிசையின் அற்புதமான பாடல்கள், அழியா பாடல்கள் எல்லாம் அவர் குரலில் என்றும் ஒலித்துகொண்டே இருக்கும் அவர் பெயர் வாசுதேவன், அப்படி சொன்னால் தெரியாது மலேசியா வாசுதேவன் என்றால் புரியும் அவர் பிறப்பில் மலையாளி நாயர் குடும்பம், ஆனால் மலேசியாவில் வளர்ந்ததால் மலேசிய தமிழராகவே அறியபட்டவர், மலேசிய ரப்பர் தோட்ட தமிழரில் ஒருவர் நடிப்பு அவர் விரும்பிய விஷயமானது, […]

உ வே சாமிநாதன் பிறந்த தினம் இன்று…

பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 80 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம். எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும். இப்படிஎல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி […]

வங்கம் தந்த தங்க ஞானமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது அவரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் ஆன்மீக வழியில் சென்றாயிற்று. ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன‌ கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு ஏன் பூஜைகள் என்றேல்லாம் சிந்தனை சென்றது கல்கத்தாவின் தெய்வம் அன்னை காளி, அவளிடமே முறையிட்டு […]

“இந்திய மகளிர் தினம்”: சரோஜினிதேவி நாயுடு பிறந்த நாள்

அன்று இந்திய சமூகத்தில் பெண்கள் நிலை அடக்கித்தான் வைக்கபட்டிருந்தது, மிக சில பெண்களே அந்த காலகட்டத்திலும் தங்கள் எதிர்காலம் , சமூகம் போன்ற கட்டுபாடுகளை தகர்த்து பிரகாசித்தனர், அவர்களில் ஒருவர் சரோஜினி நாயுடு அவர் வங்க‌ பிராமண குடும்பத்து பெண், ஆனால் ஆந்திராவில் பிறந்தவர் அதன் பின் அன்றே கலப்பு திருமணமாக நாயுடு ஒருவரை திருமணம் செய்து சரோஜினி நாயுடு என மாறினார் அவர் திருமணம் சென்னையில்தான் நடந்தது. மிக சிறந்த படிப்பாளி , அதுவும் உதவி […]

இன்று உலகம் லிங்கன் எனும் மாமனிதனின் பிறந்த நாளை கொண்டாடுகின்றது

மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை. சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌ அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் […]

அந்த ஞானதமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !

சரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது, டெல்லி என்ன டெல்லி, உலக நாடுகளின் பெரும் பல்கலைகழகங்கள் […]

மாபெரும் அறிவியல் தமிழ்பிதாமகன் பா.வே மாணிக்க நாயக்கர்

தமிழகத்தில் மிக சிறந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள் அவர்களில் மிக சிலரே அப்துல்கலாம் போல தமிழ்பற்றும் இலக்கிய அறிவும் கொண்டிருந்தனர் அவர்களில் ஏராளமானோர் மறைக்கபட்டனர், ஆயினும் தங்கள் ஒப்பற்ற தொண்டால் சிலர் வெளிதெரிவர் அதில் ஒருவர் பா.வே மாணிக்க நாயக்கர் 1870ல் பிறந்தவர் பெரும் படிப்பாளி, அப்பொழுதே பொறியாளர் பட்டம் பெற்ற சிலரில் ஒருவர். கன்னட சிற்பி விஸ்வேஸ்ரய்யாவின் சமகாலத்தவர், அவருக்கு சமமான தகுதி கொண்டிருந்தவர் லண்டன் பொறியாளர் மாநாட்டில் அவர் கண்டுபிடித்த கருவி இன்றும் கட்டட‌ பொறியியல் […]