பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரகுவரன் நினைவு நாள் அஞ்சலிகள்

தமிழகத்தில் மறக்க முடியாத கலைஞர்கள் பலர் உண்டு எனினும், ஆர்பாட்டமில்லா அமைதியான நடிப்பில் பின்னி எடுத்து நிலைத்தவர்கள் மிக சிலர் முகத்திலே எல்லா உணர்ச்சிகளையும் காட்டிவிட்டு அதிகம் பேசாமல் அமைதியாக அட்டகாசமாக ஏற்ற பாத்திரத்தை ஜொலிக்க வைத்த‌ நடிகர்களை தமிழகத்தில் ஒரே விரலில் எண்ணிவிடலாம் அவ்வகையில் முதலிடத்தில் இருந்தவர் நடிகரன் குணசித்திரம் முதல் பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரின் வில்லன் வேடங்களில் மனதில் நின்றார் ஆர்ப்பாட்டமில்லா ஆனால் அட்டகாசமான நடிப்பினை வெளிபடுத்தினார், மிக மிக வித்தியாசமான […]

மாவீரன் ஜூலியஸ் சீசருக்கு வீரவணக்கம்

இந்த உலககிற்கு பல விஷயங்களை கொடுத்தது ரோம், அவர்கள் ஏற்படுத்திய பல விஷயங்கள்தான் பின் ஐரோப்பாவில் வந்தன‌ பார்லிமென்ட், சாலை, செனட் சபை, விளையாட்டு அரங்கம், விவாத அரங்கம் , நவீன போர்முறை எல்லாம் அவர்கள் கொடுத்தது, காலண்டரும் அவர்கள் கொடையே இந்த உலகில் ரோமரின் தாக்கம் பெரிது, உலகை புரட்டிய அந்த ரோம் அரசினை உச்சத்திற்கு கொண்டு சென்றவன் ஜூலியஸ் சீசர் அசாதாரண வீரன், 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தான். போர்முறையினை மாற்றி காட்டி வெல்ல […]

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம்

ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி என கருதபட்ட ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம் அடைந்ததாக அறிவிக்கபட்டிருக்கின்றது மிக பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ்க்கு 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார் அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும் ஆனால் அவரின் அறிவினை […]

இன்று மார்க்ஸின் நினைவு நாள்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

மணியம்மை நினைவு நாள்

என்னதான் திமுக பெண் விடுதலை, பெண் உரிமை என பேசினாலும் ஒரு பெண்ணின் மாபெரும் தியாகத்தை அவ்வளவாக சொல்லமாட்டார்கள், ஒரு மாதிரி நழுவுவார்கள் அப்பெண்ணே திமுக தோன்றுவதற்கு வாய்ப்பாகவும் பின் அது ஆட்சி அளவிற்கு வந்து நிற்க காரணமாகவும் இருந்திருக்கின்றார், அவர் இல்லாவிட்டால் திமுக என்றொரு கட்சி உதயமாகியிருக்க வாய்ப்பு இல்லாமே போயிருக்கும் அவர் மணியம்மை, திகவின் பிரதான தொண்டராக இருந்த வேலூர் கனகசபை என்பவரின் மகள், கனகசபை நீதிகட்சி, சுயமரியாதை தொண்டர் ஆதலால் அன்றே பள்ளி […]

ராணடே எனும் மாமனிதன் நினைவுக்கு வருகிறார்

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும் அப்படியாக பெரியார் சிலைகள் சர்ச்சையில் விவேகானந்தர் மண்டப நினைவும் வந்து போகின்றது அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம் விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் […]

எம்.கே. தியாகராஜ பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் என்ற […]

ரத்னவேல் பாண்டியனின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

“சனி பிணம் தனி போகாது” என்பார்கள், மயிலு விஷயத்தில் சரியாக இருக்கின்றது என்ன யழவோ தெரியவில்லை தொடர்ந்து மரண செய்திகளாக வருகின்றன , சாக வேண்டியவர் ஏராளமானோர் இருக்க, இருக்க வேண்டிய பலர் இருக்கின்றனர் இப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியினை தொடர்ந்து, நீதிபதி ரத்னவேல் பாண்டியனும் இறந்துவிட்டாராம் ஒரு பிற்படுத்தபட்ட வகுப்பில் பிறந்து கல்வி ஒன்றினால் மேல் வந்து வழக்கறிஞராகி பின் நீதிபதியாகி , உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை நீதிபதியாக உயர்ந்தவர் அவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக […]

பல்லறிவு மிக்க எழுத்து ஞானிக்கு அறிவார்ந்த கோடி அஞ்சலிகள்

ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் இவன் மூலம் அறிந்துகொள்ளட்டும்..” என‌ உலகிற்கு , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை முந்தைய […]

சவார்க்கர் என்ற சுதந்திர போராளிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

  அந்த மனிதர் நிச்சயம் நாட்டுபற்றாளர், தேசாபிமானி. இந்த தேசவிடுதலைக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வெறியில் வாழ்வினை அர்பணித்தவர் அந்த சாவர்க்கர். மிக சிறிவயதிலே அப்படி தொடங்கியவர். இந்நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அப்போது இருந்த 30 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மொழியால் அவர்களை இணைக்க முடியாது, ஆட்சி என்றாலும் 600 சமஸ்தானம் இருந்தது. இம்மக்களை இணைக்க மதம் ஒரு வழி என கண்டார் திலகர் அப்படி மத கொண்டாட்டத்தில் தேசவிடுதலையினை கலந்து அவர் தொடங்கியதுதான் […]