பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர்

ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர் மனிதனுக்கு ரசனை இருந்திருக்கின்றது, அவனளவு காதலை ரசித்து சொன்னவர் அவன் காலத்தில் யாருமில்லை, அவனுக்கும் பின்பும் குறைவு ஷேக்ஸ்பியரின் கதைகள் சொந்த சரக்கு அல்ல, ஆனால் நடந்த கதைகளை காதல் ரசமும் சோகமும் சொட்ட சொட்ட சொன்னதில் அவன் நிலைத்துவிட்டான், அவன் கலை உள்ளம் அப்படி இருந்திருக்கின்றது வார்த்தைகளை அப்படி கோர்த்தெடுத்திருக்கின்றான், அவனின் வசனங்கள் உள்ளத்தை தொடுபவை எந்த கதையும், சம்பவமும் சொல்பவனின் சுவாரஸ்யத்திலேதான் இருகின்றது, அதனால்தான் எத்தனையோ […]

ஒரிஜினல் புரட்சி தலைவனும், டூப் புரட்சி தலைவனும்

மானிட வராலாற்றில் மக்களே அரசர்களை ஒழிக்கமுடியும் என முதன் முதலில் உலகிற்கு அறைந்து சொல்லிகொடுத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று பல்லாயிரம் ஆண்டாக தொடர்ந்த அந்த மானிட வரலாற்றினை, அரசர்கள் மட்டுமே ஆளதெரிந்தவர்கள் என்ற பொய்யினை அவன் தான் உடைத்தெறிந்தான் விளாடிமிர் லெனினின் பிறந்தநாள் இன்று, அவன் தான் வரலாற்றாளன், புரட்சியின் தலைமகன் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சி அப்படி கொடுமையாய் இருந்தது, பொறுத்துகொண்டிருக்க அவர்கள் என்ன தமிழக மக்களா? தமிழர்கள் போல் இருந்தால் எப்படி […]

எலிசபெத் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  உலகின் பிரசித்திபெற்ற குடும்பங்களில் முக்கியமானது பிரிட்டன் அரச குடும்பம், அந்த குடும்பத்தின் இன்றைய ராணி எலிசபெத் எப்படிபட்ட அரசகுடும்பம் அது? கிட்டதட்ட 600 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் பாரம்பரியம், உலகில் பல நாடுகளை அவர்கள் ஆண்டார்களே தவிர, அவர்களை அடக்கவோ வெல்லவோ இன்றுவரை யாருமில்லை அமெரிக்கா தொடங்கி நியூசிலாந்துவரை பெரும் சாம்ராஜ்யத்தை ஆண்ட குடும்பம் அது, ஆம் சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்யம் பிரிட்டிஷ் மக்களுக்கு அக்குடும்பம் மிகபெரும் அடையாளம் அதன் மீது அத்தனை மதிப்பு, உதாரணத்திற்கு இந்த […]

ஹிட்லருக்கு வரலாற்றில் பெரும் இடம் உண்டு

பல்லாண்டு கால மானிட வரலாற்றில் சிலரே உலகத்தை பாதித்திருப்பார்கள். சிலரால் இவ்வுலகம் நன்மைகளை பெற்றிருக்கும், சிலரால் கெடுதலை மட்டுமே பெற்றிருக்கும் ஆனால் கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்டு இன்றுவரை முழு நல்லவனும் அல்ல அதே நேரம் கெட்டவனும் அல்ல என அவனை சொல்லமுடியும் இந்த நூற்றாண்டு விஞ்ஞானத்தில் பாய்ச்சல் எடுக்கவும், உலகமே சடுதியில் மாறவும் அவனே காரணம் அடைமழைக்கு பின் பல பயிர்கள் வளர்வது போல, அவனின் அட்டகாசத்திற்கு பின்பே உலகம் மாறிற்று. இந்த நூற்றாண்டின் ஹீரோ மற்றும் […]

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன் சிவந்தி ஆதித்தன்

முன்பொரு காலத்தில் தெற்கு திசை ஆண்ட மன்னர் அவர்தான் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன் தென்னக விளையாட்டு போட்டிகளுக்கும் தடகள போட்டி, கபடி போட்டிகளுக்கும் அவர் உதவியதையும் , விளையாட்டை வளர்த்த விஷயங்களையும் சொல்லியே ஆக வேண்டும் ஆதித்தனாருக்கு பின் தினதந்தியினை தூக்கி நிறுத்தியவர் சிவந்தி ஆதித்தன் என்பதில் மாற்றுகருத்தில்லை, அதன் திராவிட ஆதரவினை இறுதிவரை நிலை நிறுத்தியவர் இன்று அவருக்கு நினைவு நாள், ஆழ்ந்த அஞ்சலிகள்  

அமெரிக்க முன்னாள் முதல் குடிமகள் பார்பரா புஷ் மரணமடைந்தார்

  அமெரிக்க முன்னாள் முதல்குடிமகள் பார்பரா புஷ் மரணமடைந்தார். 92 வயதான அவருக்கு டிரம்ப் கிளிண்டன் ஒபாமா என அந்நாட்டு தலைவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்துகின்றனர் அமெரிக்க கொடி அரைகம்பத்தில் பறக்க உத்தரவிட்டிருகின்றார் டிரம்ப் அவர் அரசுபதவியில் கூட இல்லை, பின் ஏன் மரியாதை என்றால் அமெரிக்காவில் பெண்களை அதிபராக்கவில்லையே தவிர அவர்களுக்கான மரியாதை உண்டு. மனைவி இன்றி பொது இடங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ அதிபர்கள் செல்லமாட்டார்கள் இந்த பார்பராவின் கணவர் சீனியர் புஷ் , இரும்பு ஆசாமி […]

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன் மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல‌ மாறாக ஒரு பேப்பர் ஒரு பென்சில் போதும், அவர் போக்கில் சமன்பாடுகளை எழுதிகொண்டே இருப்பார். ஏதாவது […]

சார்லஸ் சாப்ளின் கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்

அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள் ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி வலியினை , ஏழையின் கதறலை தன் ஒற்றை காட்சியில் நடித்தவன் சார்லஸ் சாப்ளின், கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன் அவன் பிறக்கும்பொழுது அக்குடும்பம் நன்றாக இருந்திருக்கின்றது, அவனுக்கு […]

சன் தொலைக்காட்சி வெள்ளி விழா….

கையெழுத்து பத்திரிகை நடத்தினார் கலைஞர், அதனை அருகிருந்தே பார்த்து உதவி வளர்ந்தார் முரசொலிமாறன் பின்னாளில் முரசொலி என கலைஞரே எழுதி அதனை தலைச்சுமையாக சுமந்து விற்றகாலங்களிலும் உடனிருந்தார் முரசொலிமாறன் சினிமாவில் கலைஞர் எழுத்துபுரட்சி செய்தகாலங்களில் கலைஞருக்கு அருகிலே இருந்து முரசொலி உட்பட பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தார் மாறன் முரசொலி அரசியல் இதழானது, ஆனால் எல்லா விஷயங்களையும் கொடுக்கும் பத்திரிகை கொடுக்க ஆசைபட்ட மாறன் பத்திரிகை உலகிற்கும் வந்தார், பல பத்திரிகைகளை நடத்தினார் அவர் குறிப்பிட்டு சொல்ல […]

மறைமலை அடிகளார் தெரியாதா?

கலைஞருக்கு முன்பு மறைமலை அடிகளார்தான் தமிழருக்கு புத்தாண்டு தைமாதம் என சொன்னார் என்றால் அது யார்? என கேட்கினர் சிலர் அட பதர்களா? மறைமலை அடிகளார் தெரியாதா? திமுகவின் தமிழ்வெறிக்கும் போராட்டத்திற்கும் முதலில் வழிகாட்டியதே அவர்தான், அவர் போட்ட பாதைதான் பின்னாளில் அண்ணா கலைஞர் எல்லாம் தமிழுக்காக போராடவும், இது தமிழ்நாடு என உருவாகவும் காரணமாயிற்று அந்த பெருமகன் பெயர் வேதாச்சலம், நான் தமிழ்பெயர்தான் வைப்பேன் என தன்னை மறைமலை அடிகள் ((வேதம் = மறை, அசலம் […]