பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இரண்டாம் புத்தன் அம்பேத்கர்

இரண்டாம் புத்தன். இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான […]

மொரார்ஜி தேசாய் நினைவு தினம்

நிச்சயம் மொரார்ஜி தேசாய் இந்தியாவின் காங்கிரசல்லா முதல் பிரதமர், காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் காங்கிரசை எதிர்த்து ஒரு மத்திய அரசு சாத்தியம் என அவர் சொல்லிகொடுத்த வழியில் இடையில் விபிசிங் தோற்றாலும் பின்ன்னாளில் பாஜக பெரும் சக்தியாய் வியாபிக்க முடிந்தது ஆனாலும் மொரார்ஜி தேசாயின் சில சர்ச்சைகள் மறுக்க முடியாதவை அவர் மீதான கருப்பு புள்ளிகள் அவை நல்ல நிர்வாகி, மும்பை மகராஷ்ட்ரா பிரச்சினைகளை எல்லாம் தீர்த்தார். மும்பை போன்றவை தனி நிர்வாகம் கொண்ட தொழில்நிலையங்களாக […]

எழுத்துலக பீஷ்மர் ஜெயகாந்தன் நினைவு நாள்

“சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்” என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாளர் ஜெயகாந்தன். அது மகா உண்மையும் கூட, தமிழ் எழுத்துலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தவர்களில் புதுமைபித்தன் போல முன்வரிசையில் நிற்பவர் ஜெயகாந்தன். தொடக்ககல்வி மட்டுமே உண்டு, 20 வயதிற்குள் அவர் கிட்டதட்ட 50 தொழில்களை செய்திருப்பார், இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்தார், அது என்னவோ தெரியவில்லை, இறுக்கமான பொதுநல கொள்கையால் அற்புதமான கலைஞர்களை அக்கால கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிற்று, […]

மீனாட்சி சுந்தரம் பிள்ளைன் பிறந்த நாள் இன்று

அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருச்சிக்காரார். அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் தமிழிலக்கணம் , தமிழ்பாடல்கள் என எல்லாமே தமிழ் இதனால் அவருக்கு தமிழ் இலக்கிய ஆசிரிய‌ உத்தியோகம் கிடைத்தது, தமிழ்பால் இருந்த பற்றால் பல கனவுகளை அவர் வைத்திருந்தார் ஆனால் காலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை அவர் வாழ்ந்த காலத்தில் அதாவது 1850களில் அச்சுகலை பெரிதாக இல்லை தன் கனவுகளை எல்லாம் தன் மாணவன் மீது இறக்கிவிட்டு சென்றார், அந்த மாணவன் அவரின் கனவுகளுக்கு உயிர்கொடுத்து […]

மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் பிறந்தநாள்

அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார். கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை கல்லூரி ஒன்றில் பேராசிரியரானார் அக்கல்லூரி பின் இந்து கல்லூரி ஆயிற்று, இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு. அதன் பின் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார் பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் […]

பீல்டு மார்ஷல் மானெக்க்ஷா பிறந்த நாள்

இந்தியாவில் அரசியவாதிகள் தவிர வாழும் காலத்தில் இந்தியாவின் பிரதமராக கூட வந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர் ஒரே ஒருவர்தான் அவர் நாட்டிற்காய் உழைத்த உழைப்பும் அவரின் சாதனையும் அப்படி பீல்டு மார்ஷல் மானெக்க்ஷா வங்கபோரில் அவர் காட்டிய வியூகமும், அதிரடியும்தான் 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை பிடித்து போரில் வெற்றிபெற வைத்தது அவர் பெயரை கேட்டாலே பாகிஸ்தான் அலறியது, அப்படி மிரட்டி வைத்திருந்தார். வல்லரசு நாட்டு தளபதிகள் கூட பார்த்து வியந்த வியூகம் அது அந்த போருக்குபின் இந்தியா […]

வீர சிவாஜி பிறந்த நாள்

மீள் பதிவுதான், இன்னொரு கோணத்தில் எழுதலாம் இப்போது நேரமில்லை வீர சிவாஜி மீது குறை சொல்ல முடியாதோர் கையில் எடுக்கும் விஷயம் அவரின் பிராமண குரு அவரை அரசராக்க மாட்டேன் நீ அரசகுலம் அல்ல என அடம்பிடித்தார் என்பார்கள் வரலாற்றில் எந்த அரசன் பிராமணனாக இருந்தான்? ஆனானபட்ட ராமனும் கண்ணனுமே பிராமணன் இல்லை விஷயம் அது அல்ல, சிவாஜி முடி சூட ஏற்ற நேரம் அது அல்ல என்றே அனுபவஸ்தர் கருதினார்கள். காரணம் மொகலாய சாம்ராஜ்யமும் அதன் […]

ஆனந்த ரங்க பிள்ளை

17ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை இங்கிருந்த சிற்றரசர்கள் வாரிசு சண்டையில் அவர்கள் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர் முதலில் இருவரும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள் இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது பிரான்ஸ் படை […]

அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று பிறந்தநாள்

மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கருக்கு பட்டு துணி மீது படுபிரியம், அதனை நெய்து கொடுக்கவே சில‌ சவுராஷ்ட்டிரா குடும்பங்களை கொண்டு வந்து மதுரையில் குடியமர்த்தினார் அவர்கள் பலுகி பெருகினர், மங்கா பல அடையாளங்கள் அதில் உருவாயினர் அதில் ஒருவர்தான் டி.எம், சவுநத்ரராஜன் தன் வெண்கல குரலால் கிட்டதட்ட 30 ஆண்டுகாலம் தமிழகத்தை கட்டி போட்ட பாடகர், தியாகராஜ பாகவதர் எனும் மாபெரும் பாடக பிம்பம் டி.எம். சவுந்தர ராஜன் பாடல்கள் வந்தபின் மங்கி போயிற்று ராமசந்திரன், சிவாஜி […]

மாவீரன் பகத் சிங்கிற்கு வீர வணக்கம்…

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த அந்த‌ தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர். 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன், அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று. சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் […]