பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பல‌ வகையான திருமா

பல‌ வகையான திருமா உண்டு ஒருவர் தேர்தல் காலத்தில் சிதம்பரம் நடராஜர் ஆலயம் முதல் கோவில் கும்பாபிஷேகம் வரை செல்வார், சமத்தாக இருப்பார் இன்னொரு திருமா இப்படி சனாதான ஒழிப்பு இந்துத்வா ஒழிப்பு என திரிவார், புத்தமத அபிமானி இது போக இன்னொரு திருமா இருந்தார், அவர் பிரபாகரனுக்கு கொடிபிடித்துவிட்டு ராஜபக்சேவிடம் பல்லை காட்டுவார், நான்காவது ஒரு திருமா இருந்தார் அவர் கருணாநிதிக்கு வாலாகவும் ஜெயாவுக்கு தலையாகவும் விளங்கினார் இப்படி ஏகபட்ட திருமாக்கள் உண்டு என நம்பியிருந்தோம் […]

குளோப் தியேட்டர் அலங்கார் தியேட்டரான வரலாறு

இந்த விஷயத்துக்கு நம்மிடம் ஆதாரமில்லை, சர்காரியா கமிஷனின் முழு அறிக்கையினை நாம் படிக்கவில்லை இது இப்பொழுது பரபரப்பாக கசியும் செய்தி, மூல பத்திரம், மிசாவில் டூப் போட்டது போல ஒரு நெருக்கடியினை அது கொடுக்கலாம் விஷயம் இதுதான் ஆம் சென்னையின் புராதான தியேட்டரில் ஒன்றான குளோப் தியேட்டர் அலங்கார் தியேட்டரான வரலாறு அது அந்த வரலாற்றில் கருணாநிதி, முரசொலிமாறன் மற்றும் சர்காரியா என பலரின் பெயரும் இப்பொழுது அடிபடுகின்றது. கருணாநிதியும் முரசொலிமாறனும் குளோப் தியேட்டர் விவகாரத்தில் எவ்வளவு […]

ஆலயத்தின் கோபுர சிலைகளுக்கும் குறிவைத்துவிட்டன

ஏன் இவர்கள் திடீரென கர்ப்பகிரகத்தை விட்டுவிட்டு அதாவது ஏன் எல்லோரும் கர்ப்பஹிகரகத்தில் நுழைய கூடாது எனும் கோஷத்தைவிட்டு விட்டு இன்னும் பல வகையான புரட்சி குரல்களை விட்டுவிட்டு ஆலய கோபுரத்து சிலைகளுக்கு சென்றுவிட்டார்கள் என்றால் விஷயமிருக்கின்றது இங்கு எவ்வளவு சிலைகளை கடத்தமுடியுமோ கடத்திவிட்டார்கள், கடத்தியவை மீட்கபடுகின்றன. என்பது வேறுவிஷயம் இனி கடத்த சிலைகள் இல்லை இருக்கும் சிலைகள் பாதுகாப்பாய் இருக்கின்றன என யோசித்த கோஷ்டிகளுக்கு ஆலய கோபுர சிலைகள் நினைவுக்கு வந்தன‌ ஆலயத்தின் உள்ளே மொட்டை அடித்துவிட்டோம், […]

நாமல் ராஜபக்சே கடுமையாக எச்சரித்துள்ளார்

இலங்கையில் ராஜபக்சே குடும்பம் பதவிக்கு வந்ததை கண்டு மனதுக்குள் துள்ளி எழுந்த‌ தமிழக ஈழ வியாபார கும்பல் , அய்யயோ இனி ஈழதமிழருக்கு என்ன பாதுகாப்பு? என ஒப்பாரி வைத்ததை ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே கடுமையாக எச்சரித்துள்ளார் இந்த முதலைகண்ணீர் கோஷ்டி இதுவரை ஈழமக்களுக்கு செய்த நன்மை என்ன? அவர்கள் எங்கள் நாட்டு குடிமக்கள், அவர்களை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் , தமிழக கோஷ்டிகள் அவர்கள் நாட்டு பிரச்சினைகளை பார்ப்பது நல்லது என எச்சரித்திருக்கின்றார் நாமல் ராஜபக்சே […]

இனி எதற்கு சங்கங்கள் என்கின்றார் பிக்கு

இலங்கையில் நேற்று ஆண்கள் தினத்தில் புத்த தேரர் ஒரு மகத்தான அறிவிப்பினை செய்திருக்கின்றார் அதாவது இலங்கையில் ஏகபட்ட புத்த சங்கங்கள் உண்டு அவற்றில் ஒன்று பொதுபல சேனா, சிங்கள மற்றும் புத்த தனித்துவத்தை காக்க அவை போராடுவதாக சொல்லி கொள்ளும், ஈழசிக்கலுக்கு காரணமே இக்கோஷ்டிதான் அந்த சங்கங்களில் பிரதான சங்கமான பொதுபல சேனாவின் தலைமை பிக்கு நேற்று “நாட்டுக்கு சிறந்த ஆண்மகன் சிறுபான்மையினர் ஆதரவின்றி கிடைத்துவிட்டார், தனி சிங்கள புத்த வாக்குகளால் அவரால் வெற்றி பெற முடிந்திருக்கின்றது, […]

எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும் சாக்கடை மிருகங்கள் அதில்தான் புரளும்

பிரான்ஸ் கலாச்சாரம் பெருந்தன்மையும் கொண்டாட்டமும் நிறைந்தது,மரியாதை தெரிந்தது ஆனால் அங்கும் களைகள் இருக்கின்றன, 68 வயது டாக்டர் ஒருவன் ஏராளமான பெண்களை சீரழித்ததுடன் அதை டைரியில் வேறு தினசரி எழுதியும் வைத்திருக்கின்றான் ஒரு பிஞ்சுக்கு நேர்ந்த கொடுமையில் அவன் சிக்க, அவனின் டைரியும் சிக்கியிருக்கின்றது அந்த “ஒரு டாக்டரின் டைரி” இப்பொழுது நீதிமன்றத்தில் இருக்கின்றது, அதை படித்த நீதிபதி கண்ணீர்விட்டு கொண்டிருக்கின்றார். எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும் சாக்கடை மிருகங்கள் அதில்தான் புரளும் என்பது இதுதான்..

ஹாங்காங் போராட்டம் இன்னும் முழுமையாக ஓயவில்லை

ஹாங்காங் போராட்டம் இன்னும் முழுமையாக ஓயவில்லை அல்லது ஓயாது அதன் பின்னணி வேறுநாடுகளில் இருந்து தூண்டிவிடபடுகின்றது எனபது எல்லோருக்கும் தெரியும், அது சீனாவுக்கும் தெரியும் சில விவகாரங்களில் சீனா விட்டுகொடுத்தாலும் ஹாங்காங் பிரிட்டன் காலத்தில் இருந்த சலுகைகளை திரும்ப கேட்கின்றது, சீன அரசு கொடுப்பதாக இல்லை ஹாங்காங் சீனாவின் வடக்கேயோ, கிழக்கேயோ இருந்தால் என்றோ நசுக்கி இருப்பார்கள், கேந்திரமும் பொருளாதாரமும் வல்லரசுகள் பார்வையும் உள்ள இடம் என்பதால் விட்டு ஆடுகின்றது சைனா நேற்று ஹாங்காங் பல்கலைகழகத்தை போராட்ட […]

உனக்கு இருக்குடா ஒருநாளு

அமெரிக்காவின் தடைகள் ஈரானில் அட்டகாசமாக வேலை செய்கின்றது, பசி பட்டினி மற்றும் இதர கொடுமைகளை கெடுபிடிகளை தாளமுடியா ஈரானிய மக்கள் கொதித்தெழுந்து போரட வந்துவிட்டனர், ஈரானிய புரட்சிபடை இரும்பு கரத்தோடு போராடுகின்றது என்னதான் அரசு என்றாலும் மக்கள் கொதிதெழுந்தால் அவ்வளவுதான், இனி சொந்த மக்களை சுடமுடியாது என புரட்சிபடையினர் துப்பாக்கியினை கீழே வைத்தால் இறுக்கமான ஈரான் உடையும் இதை பார்த்துவிட்டு “ம்ம் வெரி குட்.. பென்டாஸ்டிக்.. டிரம்பா கிரேனா (கொக்கா).. தேங்க்ஸ் ஜீசஸ்” என சொல்லியபடியே சோபாவில் […]

பழனிச்சாமி திரையுலகத்தில் இருந்து வராத முதல் முதல்வர்

பழனிச்சாமி திரையுலகத்தில் இருந்து வராத முதல் முதல்வர், அதாவது காமராஜர் காலத்துக்கு பின் அந்த அதிசயத்தை செய்தவர் என்பதில் திரையுலகம் கடும் அப்செட்டில் இருக்கின்றது முன்பு தங்க தாரகைக்கு விழா, பாச தலைவனுக்கு பாராட்டுவிழா என நடத்தி அடிக்கடி குளிரவைப்பார்கள் இப்பொழுது வாய்ப்புமில்லை, அரசும் திரையுலகம் மேல் ஒரு கண் அல்ல காலையும் வைத்திருப்பது தெரிகின்றது இதனால் தமிழக திரையுலகம் தங்கள் பிதாமகன் கருணாநிதி வழியில் தமிழக அரசியலை மறுபடியும் கட்டுபடுத்த முயல்கின்றது ரஜினி, கமல், இந்த […]

விபரீத விளம்பரத்துக்கு ஆசைபட்ட அந்த‌ நபர்

ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு தெற்கே உள்ள நகரம் சமரா, அங்கு ஒரு பெட்ரோலிய நிலையம் ஒன்று புதிதாக திறக்கபட்டிருக்கின்றது, அதன் உரிமையாளருக்கு அதை விளம்பரபடுத்த அதீதமான உத்தி ஒன்று உதித்திருக்கின்றது மானிடன் எங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெல்லாம் இருக்கும் விஷயம் பெண்ணை ரசிப்பது என முடிவு செய்த அவர், கடை திறந்த அன்று முதல் 3 மணிநேரம் நீச்சலுடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் என விளம்பரம் செய்துவிட்டார் பெண்கள் நீச்சலுடையில் காருக்கு பெட்ரோல் நிரப்புவார்கள் அதை காண உலகமே வரும், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications